திருப்புகழ் 944 பந்தப்பொற் பார (அவிநாசி)

Thiruppugal 944 Pandhapporbara

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்தத்தத் தானன தானன
தந்தத்தத் தானன தானன
தந்தத்தத் தானன தானன – தனதான

பந்தப்பொற் பாரப யோதர
முந்திச்சிற் றாடகை மேகலை
பண்புற்றுத் தாளொடு மேவிய – துகிலோடே

பண்டெச்சிற் சேரியில் வீதியில்
கண்டிச்சிச் சாரொடு மேவியெ
பங்குக்கைக் காசுகொள் வேசியர் – பனிநீர்தோய்

கொந்துச்சிப் பூவணி கோதையர்
சந்தச்செந் தாமரை வாயினர்
கும்பிட்டுப் பாணியர் வீணிய – ரநுராகங்

கொண்டுற்றுப் பாயலின் மூழ்கினு
மண்டிச்செச் சேயென வானவர்
கொஞ்சுற்றுத் தாழ்பத தாமரை – மறவேனே

அந்தத்தொக் காதியு மாதியும்
வந்திக்கத் தானவர் வாழ்வுறும்
அண்டத்துப் பாலுற மாமணி – யொளிவீசி

அங்கத்தைப் பாவைசெய் தாமென
சங்கத்துற் றார்தமி ழோதவு
வந்துக்கிட் டார்கழு வேறிட – வொருகோடிச்

சந்தச்செக் காளநி சாசரர்
வெந்துக்கத் தூளிப டாமெழ
சண்டைக்கெய்த் தாரம ராபதி – குடியேறத்

தங்கச்செக் கோலசை சேவக
கொங்கிற்றொக் காரவி நாசியில்
தண்டைச்சிக் காரயில் வேல்விடு – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்தத்தத் தானன தானன
தந்தத்தத் தானன தானன
தந்தத்தத் தானன தானன – தனதான

பந்தம் பொன் பார பயோதரம்
உந்திச் சிற்று ஆடு அகை மேகலை
பண்பு உற்றுத் தாளொடு மேவிய – துகிலோடே

பண்டு எச்சில் சேரியில் வீதியில்
கண்டு இச்சிச்சாரொடு மேவியெ
பங்குக்கைக் காசு கொள் வேசியர் – பனி நீர் தோய்

கொந்துச்சிப்பூ அணி கோதையர்
சந்தச் செந்தாமரை வாயினர்
கும்பிட்டுப் பாணியர் வீணியர் – அநுராகம்

கொண்டு உற்றுப் பாயலில் மூழ்கினும்
மண்டிச் செச்சே என வானவர்
கொஞ்சு உற்றுத் தாழ் பத தாமரை – மறவேனே

அந்தத் தொக்காதியும் ஆதியும்
வந்திக்கத் தான் அவர் வாழ்வு உறும்
அண்டத்துப் பால் உற மா மணி – ஒளி வீசி

அங்கத்தைப் பாவை செய்தாம் என
சங்கத்து உற்றார் தமிழ் ஓத
உவந்துக் கிட்டார் கழு ஏறிட – ஒரு கோடிச்

சந்தச் செக் காள நிசாசரர்
வெந்து உக்கத் தூளி படாம் எழ
சண்டைக்கு எய்த்தார் அமராபதி – குடியேற

தங்கச் செங்கோல் அசை சேவக
கொங்கில் தொக்கு ஆர் அவிநாசியில்
தண்டைச் சிங்கார அயில் வேல் விடு – பெருமாளே.

English

panthappoR pArapa yOthara
munthicchit RAdakai mEkalai
paNputRuth thALodu mEviya – thukilOdE

paNdecchiR chEriyil veethiyil
kaNdicchic chArodu mEviye
pangukkaik kAsukoL vEsiyar – panineerthOy

konthucchip pUvaNi kOthaiyar
santhacchen thAmarai vAyinar
kumpittup pANiyar veeNiya – ranurAkang

koNdutRup pAyalin mUzhkinu
maNdicchec chEyena vAnavar
konjutRuth thAzhpatha thAmarai – maRavEnE

anthaththok kAthiyu mAthiyum
vanthikkath thAnavar vAzhvuRum
aNdaththup pAluRa mAmaNi – yoLiveesi

angaththaip pAvaisey thAmena
sangaththut RArthami zhOthavu
vanthukkit tArkazhu vERida – vorukOdi

santhacchek kALani sAsarar
venthukkath thULipa dAmezha
saNdaikkeyth thArama rApathi – kudiyERath

thangacchek kOlasai sEvaka
kongitRok kAravi nAsiyil
thaNdaicchik kArayil vElvidu – perumALE.

English Easy Version

pantham pon pAra payOtharam
unthic chitRu Adu akai mEkaxlai
paNpu utRuth thALodu mEviya – thukilOdE

paNdu ecchil sEriyil veethiyil
kaNdu icchicchArodu mEviye
pangukkaik kAsu koL vEsiyar – pani neer thOy

konthucchippU aNi kOthaiyar
santhac chenthAmarai vAyinar
kumpittup pANiyar veeNiyar – anurAkam

koNdu utRup pAyalil mUzhkinum
maNdic checchE ena vAnavar
konju utRuth thAzh patha thAmarai – maRavEnE

anthath thokkAthiyum Athiyum
vanthikkath thAn avar vAzhvu uRum
aNdaththup pAl uRa mA maNi – oLi veesi

angaththaip pAvai seythAm ena
sangaththu utRAr thamizh Otha
uvanthuk kittAr kazhu ERida – oru kOdic

chanthac chek kALa nisAsarar
venthu ukkath thULi padAm ezha
saNdaikku eyththAr amarApathi – kudiyERa

thangac chengOl asai sEvaka
kongil thokku Ar avinAsiyil
thaNdaic chingAra ayil vEl vidu – perumALE.