திருப்புகழ் 946 பக்குவ ஆசார (திருப்புக்கொளியூர்)

Thiruppugal 946 pakkuvaAchAra (thiruppukkoLiyUr)

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தன தானான தத்தன தானான
தத்தன தானான – தனதான

பக்குவ வாசார லட்சண சாகாதி
பட்சண மாமோன – சிவயோகர்

பத்தியி லாறாறு தத்துவ மேல்வீடு
பற்றுநி ராதார – நிலையாக

அக்கண மேமாய துர்க்குணம் வேறாக
அப்படை யேஞான – வுபதேசம்

அக்கற வாய்பேசு சற்குரு நாதாவு
னற்புத சீர்பாத – மறவேனே

உக்கிர வீராறு மெய்ப்புய னேநீல
வுற்பல வீராசி – மணநாற

ஒத்தநி லாவீசு நித்தில நீராவி
யுற்பல ராசீவ – வயலூரா

பொக்கமி லாவீர விக்ரம மாமேனி
பொற்ப்ரபை யாகார – அவிநாசிப்

பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான
புக்கொளி யூர்மேவு – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தன தானான தத்தன தானான
தத்தன தானான – தனதான

பக்குவ ஆசார லட்சண சாகாதி
பட்சணமா மோன – சிவயோகர்

பத்தியில் ஆறாறு தத்துவ மேல்வீடு
பற்று நிராதார – நிலையாக

அக்கணமே மாய துர்க்குணம் வேறாக
அப்படையே – ஞானவுபதேசம்

அக்கற வாய்பேசு சற்குரு நாதா
உன் அற்புத சீர்பாத – மறவேனே

உக்கிர ஈராறு மெய்ப்புயனே நீல
உற்பல வீராசி – மணநாற

ஒத்தநி லாவீசு நித்தில நீராவி
உற்பல ராசீவ – வயலூரா

பொக்கமி லாவீர விக்ரம மாமேனி
பொற்ப்ரபை யாகார – அவிநாசிப்

பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான
புக்கொளி யூர்மேவு – பெருமாளே.

English

pakkuva AchAra lakshaNa sAkAdhi
bakshaNa mA mOna – sivayOgar

baththiyil ARAru thaththuva mEl veedu
patru nirAdhAra – nilaiyAga

akkaNamE mAya dhurguNam vERAga
appadaiyE nyAna – upadhEsam

akkaRa vAy pEsu sathguru nAthA un
aRputha seerppaDam – maRavEnE

uggira veerARu mey buyanE neela
uRpala veerAsi – maNa nARa

oththa nilA veesu niththila neerAvi
uRpala rAjeeva – vayalUrA

pokka milA veera vikrama mA mEni
poR prabai yAkAra – avinAsi

poykkali pOmARu meyk karuL seerAna
pukkoLiyUr mEvu – perumALE.

English Easy Version

pakkuva AchAra lakshaNa sAkAdhi
bakshaNa mA mOna – sivayOgar

baththiyil ARAru thaththuva mEl veedu
patru nirAdhAra – nilaiyAga

akkaNamE mAya dhurguNam vERAga
appadaiyE nyAna – upadhEsam

akkaRa vAy pEsu sathguru nAthA un
aRputha seerppaDam – maRavEnE

uggira veerARu mey buyanE neela
uRpala veerAsi – maNa nARa

oththa nilA veesu niththila neerAvi
uRpala rAjeeva – vayalUrA

pokka milA veera vikrama mA mEni
poR prabai yAkAra – avinAsi

poykkali pOmARu meyk karuL seerAna
pukkoLiyUr mEvu – perumALE