திருப்புகழ் 947 மதப்பட்ட விசால (திருப்புக்கொளியூர்)

Thiruppugal 947 Madhappattavisalaga

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தத்தன தானன தானன
தனத்தத்தன தானன தானன
தனத்தத்தன தானன தானன தந்ததான

மதப்பட்டவி சாலக போலமு
முகப்பிற்சன வாடையு மோடையு
மருக்கற்புர லேபல லாடமு – மஞ்சையாரி

வயிற்றுக்கிடு சீகர பாணியு
மிதற்செக்கர்வி லோசன வேகமு
மணிச்சத்தக டோரபு ரோசமு – மொன்றுகோல

விதப்பட்டவெ ளானையி லேறியு
நிறைக்கற்பக நீழலி லாறியும்
விஷத்துர்க்கன சூளிகை மாளிகை – யிந்த்ரலோகம்


விளக்கச்சுரர் சூழ்தர வாழ்தரு
பிரப்புத்வகு மாரசொ ரூபக
வெளிப்பட்டெனை யாள்வய லூரிலி – ருந்தவாழ்வே

இதப்பட்டிட வேகம லாலய
வொருத்திக்கிசை வானபொ னாயிர
மியற்றப்பதி தோறுமு லாவிய – தொண்டர்தாள

இசைக்கொக்கவி ராசத பாவனை
யுளப்பெற்றொடு பாடிட வேடையி
லிளைப்புக்கிட வார்மறை யோனென – வந்துகானிற்

றிதப்பட்டெதி ரேபொதி சோறினை
யவிழ்த்திட்டவி நாசியி லேவரு
திசைக்குற்றச காயனு மாகிம – றைந்துபோமுன்

செறிப்பித்த கராவதின் வாய்மக
வழைப்பித்தபு ராணக்ரு பாகர
திருப்புக்கொளி யூருடை யார்புகழ் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தனத்தத்தன தானன தானன
தனத்தத்தன தானன தானன
தனத்தத்தன தானன தானன தந்ததான

மதப்பட்ட விசால கபோலமு(ம்)
முகப்பில் ச(ன்)ன ஆடையும்
ஓடையும் மருக் கற்புர லேப லலாடமும் – மஞ்சை ஆரி

வயிற்றுக்கு இடு சீகர பாணியு(ம்)
மிதல் செக்கர் விலோசன வேகமு(ம்)
மணிச் சத்த கடோர புரோசமும் – ஒன்று கோல

விதப்பட்ட வெள் ஆனையில் ஏறியு(ம்)
நிறை கற்பக நீழலில் ஆறியும்
விஷத் துர்க்க(ம்) அ(ன்)ன சூளிகை மாளிகை – இந்த்ரலோகம்

விளக்கச் சுரர் சூழ்தர வாழ் தரு
பிரபுத்வ குமார சொரூபக
வெளிப்பட்டு எனை ஆள் வயலூரில் – இருந்த வாழ்வே

இதப் பட்டிடவே கமலாலய
ஒருத்திக்கு இசைவான பொன் ஆயிரம்
இயற்றப் பதி தோறும் உலாவிய – தொண்டர் தாள

இசைக்கு ஒக்க இராசத பாவனை
உ(ள்)ளப் பெற்றொடு பாடிட வேடையில்
இளைப்பு உக்கிட வார் மறையோன் என – வந்து கானில்

திதப்பட்டு எதிரே பொதி சோறினை
அவிழ்த்து இட்ட அவிநாசியிலே வரு
திசைக்கு உற்ற சகாயனும் ஆகி மறைந்து – போம் முன்

செறிப்பு இத்த கரா அதின் வாய்
மகவு அழைப்பித்த புராண க்ருபாகர
திருப்புக் கொளியூர் உடையார் புகழ் – தம்பிரானே

English

mathappattavi sAlaka pOlamu
mukappiRchana vAdaiyu mOdaiyu
marukkaRpura lEpala lAtamu – manjaiyAri

vayitRukkidu seekara pANiyu
mithaRchekkarvi lOchana vEkamu
maNicchaththaka dOrapu rOsamu – monRukOla

vithappattave LAnaiyi lERiyu
niRaikkaRpaka neezhali lARiyum
vishaththurkkana cULikai mALikai – yinthralOkam

viLakkacchurar cUzhthara vAzhtharu
pirapputhvaku mAraso rUpaka
veLippattenai yALvaya lUrili – runthavAzhvE

ithappattida vEkama lAlaya
voruththikkisai vAnapo nAyira
miyatRappathi thORumu lAviya – thoNdarthALa

isaikkokkavi rAsatha pAvanai
yuLappetRodu pAdida vEdaiyi
liLaippukkida vArmaRai yOnena – vanthukAnit

Rithappattethi rEpothi chORinai
yavizhththittavi nAsiyi lEvaru
thisaikkutRasa kAyanu mAkima – RainthupOmun

cheRippiththa karAvathin vAymaka
vazhaippiththapu rANakru pAkara
thiruppukkoLi yUrudai yArpukazh – thambirAnE.

English Easy Version

mathappatta visAla kapOlamu(m)
mukappil sa(n)na Adaiyum Odaiyum
maruk kaRpura lEpa lalAtamum – manjai Ari

vayitRukku idu seekara pANiyu(m)
mithal chekkar vilOchana vEkamu(m)
maNic chaththa kadOra purOsamum – onRu kOla

vithappatta veL Anaiyil ERiyu(m)
niRai kaRpaka neezhalil ARiyum
vishath thurkka(m) a(n)na cULikai mALikai – inthralOkam

viLakkac churar cUzhthara vAzh tharu
piraputhva kumAra sorUpaka
veLippattu enai AL vayalUril – iruntha vAzhvE

ithap pattidavE kamalAlaya
oruththikku isaivAna pon Ayiram
iyatRap pathi thORum ulAviya – thoNdar thALa

isaikku okka irAsatha pAvanai
u(L)Lap petRodu pAdida vEdaiyil
iLaippu ukkida vAr maRaiyOn ena – vanthu kAnil

thithappattu ethirE pothi chORinai
avizhththu itta avinAsiyilE varu
thisaikku utRa sakAyanum Aki – maRainthu pOm

mun seRippu iththa karA athin vAy makavu
azhaippiththa purANa krupAkara
thiruppuk koLiyUr udaiyAr pukazh – thambirAnE.