திருப்புகழ் 948 வனப்புற்றெழு (திருப்புக்கொளியூர்)

Thiruppugal 948 Vanapputrezhu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தத்தன தான தான தானன
தனத்தத்தன தான தான தானன
தனத்தத்தன தான தான தானன – தந்ததான

வனப்புற்றெழு கேத மேவு கோகிலம்
அழைக்கப்பொரு மார னேவ தாமலர்
மருத்துப்பயில் தேரி லேறி மாமதி – தொங்கலாக

மறுத்துக்கடல் பேரி மோத வேயிசை
பெருக்கப்படை கூடி மேலெ ழாவணி
வகுத்துக்கொடு சேம மாக மாலையில் – வந்துகாதிக்

கனக்கப்பறை தாய ளாவ நீள்கன
கருப்புச்சிலை காம ரோவில் வாளிகள்
களித்துப்பொர வாசம் வீசு வார்குழல் – மங்கைமார்கள்

கலைக்குட்படு பேத மாகி மாயும
துனக்குப்ரிய மோக்ரு பாக ராஇது
கடக்கப்படு நாம மான ஞானம – தென்றுசேர்வேன்

புனத்திற்றினை காவ லான காரிகை
தனப்பொற்குவ டேயு மோக சாதக
குனித்தப்பிறை சூடும் வேணி நாயகர் – நன்குமாரா

பொறைக்குப்புவி போலு நீதி மாதவர்
சிறக்கத்தொகு பாசி சோலை மாலைகள்
புயத்துற்றணி பாவ சூர னாருயிர் – கொண்டவேலா

சினத்துக்கடி வீசி மோது மாகட
லடைத்துப்பிசி தாச னாதி மாமுடி
தெறிக்கக்கணை யேவு வீர மாமனும் – உந்திமீதே

செனித்துச்சதுர் வேத மோது நாமனு
மதித்துப்புகழ் சேவ காவி ழாமலி
திருப்புக்கொளி யூரில் மேவு தேவர்கள் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தனத்தத்தன தான தான தானன
தனத்தத்தன தான தான தானன
தனத்தத்தன தான தான தானன – தந்ததான

வனப்பு உற்று எழு கேத(ம்) மேவு(ம்) கோகிலம்
அழைக்கப் பொரு மாரன் ஏவ த(தா)ம் மலர்
மருத்துப் பயில் தேரில் ஏறி மா மதி – தொங்கலாக

மறுத்துக் கடல் பேரி மோதவே இசை
பெருக்கப் படை கூடி மேல் எழா அணி
வகுத்துக் கொ(ண்)டு சேமமாக மாலையில் – வந்து காதிக்

கனக்கப் பறைதாய அளாவ நீள் கன
காமர் கருப்பு சிலை ஓ(ய்)வு இல் வாளிகள்
களித்துப் பொர வாசம் வீசு வார் குழல் – மங்கைமார்கள்

கலைக்குள் படு பேதம் ஆகி மாயும்
அது உனக்குப் ப்ரியமோ கிருபாகரா இது
கடக்கப்படு நாமம் ஆன ஞானம் அது – என்று சேர்வேன்

புனத்தில் தினை காவலான காரிகை
தனப் பொன் குவடு ஏயும் மோக சாதக
குனித்தப் பிறை சூடும் வேணி நாயகர் – நல் குமாரா

பொறைக்குப் புவி போலும் நீதி மா தவர்
சிறக்கத் தொகு பாசி சோலை மாலைகள்
புயத்து உற்று அணி பாவ சூரன் ஆருயிர் – கொண்ட வேலா

சினத்துக் கடி வீசி மோது(ம்) மா கடல்
அடைத்துப் பிசித அசன ஆதி மா முடி
தெறிக்கக் கணை ஏவும் வீர மாமனும் – உந்தி மீதே

செனித்துச் சதுர் வேதம் ஓது நாமனு(ம்)
மதித்துப் புகழ் சேவகா விழா மலி
திருப்புக்கொளியூரில் மேவும் தேவர்கள் – தம்பிரானே

English

vanapputRezhu kEtha mEvu kOkilam
azhaikkapporu mAra nEva thAmalar
maruththuppayil thEri lERi mAmathi – thongalAka

maRuththukkadal pEri mOtha vEyisai
perukkappadai kUdi mEle zhAvaNi
vakuththukkodu sEma mAka mAlaiyil – vanthukAthik

kanakkappaRai thAya LAva neeLkana
karuppucchilai kAma rOvil vALikaL
kaLiththuppora vAsam veesu vArkuzhal – mangaimArkaL

kalaikkutpadu pEtha mAki mAyuma
thunakkupriya mOkru pAka rAithu
kadakkappadu nAma mAna njAnama – thenRusErvEn

punaththitRinai kAva lAna kArikai
thanappoRkuva dEyu mOka sAthaka
kuniththappiRai cUdum vENi nAyakar – nankumArA

poRaikkuppuvi pOlu neethi mAthavar
siRakkaththoku pAsi sOlai mAlaikaL
puyaththutRaNi pAva cUra nAruyir – koNdavElA

sinaththukkadi veesi mOthu mAkada
ladaiththuppisi thAsa nAthi mAmudi
theRikkakkaNai yEvu veera mAmanum – unthimeethE

seniththucchathur vEtha mOthu nAmanu
mathiththuppukazh sEva kAvi zhAmali
thiruppukkoLi yUril mEvu thEvarkaL – thambirAnE.

English Easy Version

vanappu utRu ezhu kEtha(m) mEvu(m) kOkilam
azhaikkap poru mAran Eva tha(a)m malar
maruththup payil thEril ERi mA mathi – thongalAka

maRuththuk kadal pEri mOthavE isai
perukkap padai kUdi mEl ezhA aNi
vakuththuk ko(N)du sEmamAka mAlaiyil – vanthu kAthik

kanakkap paRaithAya aLAva neeL kana
kAmar karuppu silai O(y)vu il vALikaL
kaLiththup pora vAsam veesu vAr kuzhal – mangaimArkaL

kalaikkuL padu pEtham Aki mAyum
athu unakkup priyamO kirupAkarA ithu
kadakkappadu nAmam Ana njAnam athu – enRu sErvEn

punaththil thinai kAvalAna kArikai
thanap pon kuvadu Eyum mOka sAthaka
kuniththap piRai cUdum vENi nAyakar – nal kumArA

poRaikkup puvi pOlum neethi mA thavar
siRakkath thoku pAsi sOlai mAlaikaL
puyaththu utRu aNi pAva cUran Aruyir – koNda vElA

sinaththuk kadi veesi mOthu(m) mA kadal
adaiththup pisitha asana Athi mA mudi
theRikkak kaNai Evum veera mAmanum – unthi meethE

seniththuc chathur vEtham Othu nAmanu(m)
mathiththup pukazh sEvakA vizhA mali
thiruppukkoLiyUril mEvum thEvarkaL – thambirAnE.