திருப்புகழ் 950 மைச் சரோருகம் (பேரூர்)

Thiruppugal 950 Maichcharorugam

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்த தானன தத்த தானன
தானா தானா தானா தானா – தனதான

மைச்ச ரோருக நச்சு வாள்விழி
மானா ரோடே நானார் நீயா – ரெனுமாறு

வைத்த போதக சித்த யோகியர்
வாணாள் கோணாள் வீணாள் காணா – ரதுபோலே

நிச்ச மாகவு மிச்சை யானவை
நேரே தீரா யூரே பேரே – பிறவேயென்

நிட்க ராதிகண் முற்பு காதினி
நீயே தாயாய் நாயேன் மாயா – தருள்வாயே

மிச்ச ரோருக வச்ர பாணியன்
வேதா வாழ்வே நாதா தீதா – வயலூரா

வெற்பை யூடுரு வப்ப டாவரு
வேலா சீலா பாலா காலா – யுதமாளி

பச்சை மாமயில் மெச்ச வேறிய
பாகா சூரா வாகா போகா – தெனும்வீரா

பட்டி யாள்பவர் கொட்டி யாடினர்
பாரூ ராசூழ் பேரூ ராள்வார் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்த தானன தத்த தானன
தானா தானா தானா தானா – தனதான

மைச் சரோருகம் நச்சு வாள் விழி
மானாரோடே நான் யார் நீ யார் – எனுமாறு

வைத்த போதக சித்த யோகியர்
வாழ் நாள் கோள் நாள் வீண் நாள் காணார் – அது போலே

நிச்சமாகவும் இச்சையானவை
நேரே தீரா ஊரே பேரே – பிறவே என்

நிட்கராதிகள் முன் புகாது இனி
நீயே தாயாய் நாயேன் மாயாது – அருள்வாயே

மிச்சரோருக வச்ர பாணியன்
வேதா வாழ்வே நாத அதீதா – வயலூரா

வெற்பை ஊடுருவப் படா வரு
வேலா சீலா பாலா கால் – ஆயுதம் ஆளி

பச்சை மா மயில் மெச்ச ஏறிய
பாகா சூரா ஆகா போகாது – எனும் வீரா

பட்டி ஆள்பவர் கொட்டி ஆடினர்
பாரூர் ஆ சூழ் பேரூர் ஆள்வார் – பெருமாளே.

English

maiccha rOruka nacchu vALvizhi
mAnA rOdE nAnAr neeyA – renumARu

vaiththa pOthaka siththa yOkiyar
vANAL kONAL veeNAL kANA – rathupOlE

niccha mAkavu micchai yAnavai
nErE theerA yUrE pErE – piRavEyen

nitka rAthikaN muRpu kAthini
neeyE thAyAy nAyEn mAyA – tharuLvAyE

miccha rOruka vachra pANiyan
vEthA vAzhvE nAthA theethA – vayalUrA

veRpai yUduru vappa dAvaru
vElA seelA bAlA kAlA – yuthamALi

pacchai mAmayil meccha vERiya
pAkA cUrA vAkA pOkA – thenumveerA

patti yALpavar kotti yAdinar
pArU rAsUzh pErU rALvAr – perumALE.

English Easy Version

maic charOrukam nacchu vAL vizhi
mAnArOdEnAn yAr nee yAr – enumARu

vaiththa pOthaka siththa yOkiyar
vAzh nAL kOL nAL veeN nAL kANAr – athu pOlE

nicchamAkavum icchaiyAnavai
nErE theerA UrE pErE – piRavE en

nitkarAthikaL mun pukAthu ini
neeyE thAyAy nAyEn mAyAthu – aruLvAyE

miccharOruka vasra pANiyan
vEthA vAzhvE nAtha atheethA – vayalUrA

veRpai Uduruvap padA varu
vElA seelA pAlA kAl – Ayutham ALi

pacchai mA mayil meccha ERiya
pAkA cUrA AkA pOkAthu – enum veerA

patti ALpavar kotti Adinar
pArUr A sUzh pErUr ALvAr – perumALE