திருப்புகழ் 951 கலைஞர் எணும் கற்பு (கொடும்பாளூர்)

Thiruppugal 951 Kalaignarenumkarpu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனனந் தத்தத் தனதனனந் தத்தத்
தனதனனந் தத்தத் – தனதான

கலைஞரெணுங் கற்புக் கலியுகபந் தத்துக்
கடனபயம் பட்டுக் – கசடாகுங்

கருமசடங் கச்சட் சமயிகள்பங் கிட்டுக்
கலகலெனுங் கொட்புற் – றுடன்மோதும்

அலகில்பெருந் தர்க்கப் பலகலையின் பற்றற்
றரவியிடந் தப்பிக் – குறியாத

அறிவையறிந் தப்பற் றதனினொடுஞ் சற்றுற்
றருள்வசனங் கிட்டப் – பெறலாமோ

கொலைஞரெனுங் கொச்சைக் குறவரிளம் பச்சைக்
கொடிமருவுஞ் செச்சைப் – புயமார்பா

கொடியநெடுங் கொக்குக் குறுகவுணன் பட்டுக்
குரைகடல்செம் பச்சக் – கரவாளச்

சிலைபகஎண் டிக்குத் திகிரிகளும் பத்துத்
திசைகளினுந் தத்தச் – செகமேழுந்

திருகுசிகண் டிப்பொற் குதிரைவிடுஞ் செட்டித்
திறல கொடும் பைக்குட் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனனந் தத்தத் தனதனனந் தத்தத்
தனதனனந் தத்தத் – தனதான

கலைஞர் எ(ண்)ணும் கற்பு கலி யுக பந்தத்துக்
கடன் அபயம் பட்டு – கசடு ஆகும்

கரும சடங்கம் சட் சமயிகள் பங்கிட்டுக்
கலகல எனும் கொட்பு உற்று – உடன் மோதும்

அலகு இல் பெரும் தர்க்கப் பல கலையின் பற்று
அற்று அரவியிடம் தப்பி – குறியாத

அறிவை அறிந்து அப்பற்று அதனினொடும் சற்று
உற்று அருள் வசனம் கிட்டப் – பெறலாமோ

கொலைஞர் எனும் கொச்சைக் குறவர் இளம் பச்சைக்
கொடி மருவும் செச்சைப் – புய மார்பா

கொடிய நெடும் கொக்குக் குறுகு அவுணன் பட்டுக்
குரை கடல் செம்ப – சக்கரவாளச்

சிலை பக எண் திக்குத் திகிரிகளும் பத்துத்
திசைகளினும் தத்த – செகம் ஏழும்

திருகு சிகண்டிப் பொற் குதிரை விடும் செட்டித்
திறல கொடும்பைக்குள் – பெருமாளே.

English

kalainjareNum kaRpuk kaliyukapan thaththuk
kadanapayam pattuk – kasadAkum

karumasadan gacchat samayikaLpan gittuk
kalakalenum kotput – RudanmOthum

alakilperun tharkkap palakalaiyin patRat
Raraviyidan thappik – kuRiyAtha

aRivaiyaRin thappat Rathaninodunj chatRut
RaruLvasanang kittap – peRalAmO

kolainjarenum kocchaik kuRavariLam pacchaik
kodimaruvunj cecchaip – puyamArpA

kodiyan-edung kokkuk kuRukavuNan pattuk
kuraikadalsem pacchak – karavALac

cilaipakaeN dikkuth thikirikaLum paththuth
thisaikaLinun thaththac – cekamEzhum

thirukusikaN dippoR kuthiraividunj chettith
thiRala kodum paikkut – perumALE.

English Easy Version

kalainjar e(N)Num kaRpu kali yuka panthaththuk
kadan apayam pattu – kasadu Akum

karuma sadangam chat samayikaL pangittuk
kalakala enum kotpu utRu – udan mOthum

alaku il perum tharkkap pala kalaiyin patRu
atRu araviyidam thappi – kuRiyAtha

aRivai aRinthu appatRu athaninodum satRu
utRu aruL vasanam kittap – peRalAmO

kolainjar enum kocchaik kuRavar iLam pacchaik
kodi maruvum cecchaip – puya mArpA

kodiya nedum kokkuk kuRuku avuNan pattuk
kurai kadal sempa sak – karavALac

cilai paka eNdikkuth thikirikaLum paththuth
thisaikaLinum thaththa – sekam Ezhum

thiruku sikaNdip poR kuthirai vidum chettith
thiRala kodumpaikkuL – perumALE.