Thiruppugal 953 Tharangkavarkuzhal
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனந்த தானனத் தனதன – தனதான
தரங்க வார்குழற் றநுநுதல் – விழியாலம்
தகைந்த மாமுலைத் துடியிடை – மடமாதர்
பரந்த மாலிருட் படுகுழி – வசமாகிப்
பயந்து காலனுக் குயிர்கொடு – தவியாமல்
வரந்த ராவிடிற் பிறரெவர் – தருவாரே
மகிழ்ந்து தோகையிற் புவிவலம் – வருவோனே
குரும்பை மாமுலைக் குறமகள் – மணவாளா
குளந்தை மாநகர்த் தளியுறை – பெருமாளே.
பதம் பிரித்தது
தனந்த தானனத் தனதன – தனதான
தரங்க(ம்) வார் குழல் தநு நுதல் – விழி ஆலம்
தகைந்த மா முலைத் துடி இடை – மட மாதர்
பரந்த மால் இருள் படு குழி – வசமாகிப்
பயந்து காலனுக்கு உயிர் கொடு – தவியாமல்
வரம் தராவிடில் பிறர் எவர் – தருவாரே
மகிழ்ந்து தோகையில் புவி வலம் – வருவோனே
குரும்பை மா முலைக் குற மகள் – மணவாளா
குளந்தை மா நகர் தளி உறை – பெருமாளே.
English
tharanga vArkuzhat Ranunuthal – vizhiyAlam
thakaintha mAmulaith thudiyidai – madamAthar
parantha mAlirut padukuzhi – vasamAkip
payanthu kAlanuk kuyirkodu – thaviyAmal
varantha rAvidiR piRarevar – tharuvArE
makizhnthu thOkaiyiR puvivalam – varuvOnE
kurumpai mAmulaik kuRamakaL – maNavALA
kuLanthai mAnakarth thaLiyuRai – perumALE.
English Easy Version
tharanga(m) vAr kuzhal thanu nuthal – vizhi Alam
thakaintha mA mulaith thudi idai – mada mAthar
parantha mAl iruL padu kuzhi – vasamAkip
payanthu kAlanukku uyir kodu – thaviyAmal
varam tharAvidil piRar evar – tharuvArE
makizhnthu thOkaiyil puvi valam – varuvOnE
kurumpai mA mulaik kuRa makaL – maNavALA
kuLanthai mA nakar thaLi uRai – perumALE.