திருப்புகழ் 954 இலைச்சுருட் கொடு (தனிச்சயம்)

Thiruppugal 954 ilaichchurutkodu (thanichchayam)

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் – தனதான

இலைச்சுருட் கொடுத்தணைத் தலத்திருத் திமட்டைகட்
கிதத்தபுட் குரற்கள்விட் – டநுராகம்


எழுப்பிமைக் கயற்கணைக் கழுத்தைமுத் தமிட்டணைத்
தெடுத்திதழ்க் கடித்துரத் – திடைதாவி


அலைச்சலுற் றிலச்சையற் றரைப்பைதொட் டுழைத்துழைத்
தலக்கணுற் றுயிர்க்களைத் – திடவேதான்

அறத்தவித் திளைத்துறத் தனத்தினிற் புணர்ச்சிபட்
டயர்க்குமிப் பிறப்பினித் – தவிராதோ

கொலைச்செருக் கரக்கரைக் கலக்குமிக் ககுக்குடக்
கொடித்திருக் கரத்தபொற் – பதிபாடுங்

குறித்தநற் றிருப்புகழ்ப் ப்ரபுத்துவக் கவித்துவக்
குருத்துவத் தெனைப்பணித் – தருள்வோனே

தலைச்சுமைச் சடைச்சிவற் கிலக்கணத் திலக்கியத்
தமிழ்த்ரயத் தகத்தியற் – கறிவோதுஞ்

சமர்த்தரிற் சமர்த்தபச் சிமத்திசைக் குளுத்தமத்
தனிச்சயத் தினிற்பிளைப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் – தனதான

இலைச் சுருள் கொடுத்து அணைத்தலத்து இருத்தி மட்டைகட்கு
இதத்த புள் குரல்கள் விட்டு – அநுராகம்

எழுப்பி மைக் கயல் கணை கழுத்தை முத்தம் இட்டு அணைத்து
எடுத்து இதழ்க் கடித்து உரத்து – இடை தாவி

அலைச்சல் உற்று இலச்சை அற்று அரைப் பை தொட்டு உழைத்து உழைத்து
அலக்கண் உற்று உயிர்க் களைத் – திடவே தான்

அறத் தவித்து இளைத்து உறத் தனத்தினில் புணர்ச்சி பட்டு
அயர்க்கும் இப் பிறப்பு இனித் – தவிராதோ

கொலைச் செருக்கு அரக்கரைக் கலக்கும் மிக்க குக்குடக்
கொடித் திருக் கரத்த பொன் – பதி பாடும்

குறித்த நல் திருப்புகழ் ப்ரபுத்துவக் கவித்துவக் குருத்துவத்து
எனைப் பணித்து – அருள்வோனே

தலைச் சுமைச் சடைச் சிவற்கு இலக்கணத்து இலக்கியத்
தமிழ் த்ரயத்து அகத்தியற்கு – அறிவு ஓதும்

சமர்த்தரில் சமர்த்த பச்சிமத் திசைக்கு உள உத்தமத் தனிச்சயத்தினில் பி(ள்)ளைப் – பெருமாளே.

English

ilaicchurut koduththaNaith thalaththiruth thimattaikat
kithaththaput kuraRkaLvit – tanurAkam

ezhuppimaik kayaRkaNaik kazhuththaimuth thamittaNaith
theduththithazhk kadiththurath – thidaithAvi

alaicchalut Rilacchaiyat Raraippaithot tuzhaiththuzhaith
thalakkaNut RuyirkkaLaith – thidavEthAn


aRaththavith thiLaiththuRath thanaththiniR puNarcchipat
tayarkkumip piRappinith – thavirAthO

kolaiccheruk karakkaraik kalakkumik kakukkudak
kodiththiruk karaththapoR – pathipAdung

kuRiththanat Riruppukazhp prapuththuvak kaviththuvak
kuruththuvath thenaippaNith – tharuLvOnE

thalaicchumaic chadaicchivaR kilakkaNath thilakkiyath
thamizhthrayath thakaththiyaR – kaRivOthunj

chamarththariR chamarththapac chimaththisaik kuLuththamath
thanicchayath thiniRpiLaip – perumALE.

English Easy Version

ilaic churuL koduththu aNaiththalaththu iruththi mattaikatku
ithaththa puL kuralkaL vittu – anurAkam

Ezhuppi maik kayal kaNai kazhuththai muththam ittu aNaiththu
eduththu ithazhk kadiththu uraththu – idai thAvi

alaicchal utRu ilacchai atRu araip pai thottu uzhaiththu uzhaiththu
alakkaN utRu uyirk kaLaiththidavE – thAn

aRath thaviththu iLaiththu uRath thanaththinil puNarcchi pattu
ayarkkum ip piRappu inith – thavirAthO

kolaic cherukku arakkaraik kalakkum mikka kukkudak
kodith thiruk karaththa pon – pathi pAdum

kuRiththa nal thiruppukazh prapuththuvak kaviththuvak
kuruththuvaththu enaip paNiththu – aruLvOnE

thalaic chumaic chadaic chivaRku ilakkaNaththu ilakkiyath
thamizh thrayaththu akaththiyaRku – aRivu Othum

chamarththaril chamarththa pacchimath thisaikku uLa uththamath
thanicchayaththinil pi(L)Laip – perumALE.