திருப்புகழ் 955 உரைத்த சம்ப்ரம (தனிச்சயம்)

Thiruppugal 955 Uraiththasamprama

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்த தந்தன தனதன தந்தத்
தனத்த தந்தன தனதன தந்தத்
தனத்த தந்தன தனதன தந்தத் – தனதான

உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கிக்
கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சொத்
தொலித்தி டுஞ்செவி செவிடுற வொண்கட் – குருடாகி

உரத்த வெண்பலு நழுவிம தங்கெட்
டிரைத்து கிண்கிணெ னிருமலெ ழுந்திட்
டுளைப்பு டன்தலை கிறுகிறெ னும்பித் – தமுமேல்கொண்


டரத்த மின்றிய புழுவினும் விஞ்சிப்
பழுத்து ளஞ்செயல் வசனம் வரம்பற்
றடுத்த பெண்டிரு மெதிர்வர நிந்தித் – தனைவோரும்

அசுத்த னென்றிட வுணர்வது குன்றித்
துடிப்ப துஞ்சிறி துளதில தென்கைக்
கவத்தை வந்துயி ரலமரு மன்றைக் – கருள்வாயே

திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட்
டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட்
டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் – டிகுதீதோ

திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட்
டிடக்கை துந்துமி முரசு முழங்கச்
செருக்க ளந்தனில் நிருதர் தயங்கச் – சிலபேய்கள்

தரித்து மண்டையி லுதிர மருந்தத்
திரட்ப ருந்துகள் குடர்கள் பிடுங்கத்
தருக்கு சம்புகள் நிணமது சிந்தப் – பொரும்வேலா

தடச்சி கண்டியில் வயலியி லன்பைப்
படைத்த நெஞ்சினி லியல்செறி கொங்கிற்
றனிச்ச யந்தனி லினிதுறை கந்தப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்த தந்தன தனதன தந்தத்
தனத்த தந்தன தனதன தந்தத்
தனத்த தந்தன தனதன தந்தத் – தனதான

உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கி
கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சு ஒத்து
ஒலித்திடும் செவி செவிடு உற ஒள் கண் – குருடாகி

உரத்த வெண் ப(ல்)லும் நழுவி மதம் கெட்டு
இரைத்து கிண் கிண் என இருமல் எழுந்திட்டு
உளைப்புடன் தலை கிறு கிறு எனும் பித்தமும் – மேல் கொண்டு

அரத்தம் இன்றிய புழுவினும் விஞ்சி
பழுத்து உளம் செயல் வசனம் வரம்பு அற்று
அடுத்த பெண்டிரும் எதிர் வர நிந்தித்து – அனைவோரும்

அசுத்தன் என்றிட உணர்வு அது குன்றி
துடிப்பதும் சிறிது உளது இலது என்கைக்கு
அவத்தை வந்து உயிர் அலமரும் அன்றைக்கு – அருள்வாயே

திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட்
டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட்
டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் – டிகுதீதோ

திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட்டு
இடக்கை துந்துமி முரசு முழங்க
செருக் களந்தனில் நிருதர் தயங்க – சில பேய்கள்

தரித்து மண்டையில் உதிரம் அருந்த
திரள் பருந்துகள் குடர்கள் பிடுங்க
தருக்கு சம்புகள் நிணம் அது சிந்த – பொரும் வேலா

தடம் சிகண்டியில் வயலியில் அன்பைப்
படைத்த நெஞ்சினில் இயல் செறி கொங்கில்
தனிச்சயம் தனில் இனிது உறை கந்தப் – பெருமாளே

English

uraiththa samprama vadivu thirangi
kaRuththa kunjiyum veLiRiya panjoth
tholiththi duncevi ceviduRa voNkat – kurudAki

uraththa veNpalu nazhuvima thanket
tiraiththu kiNkiNe nirumale zhunthit
tuLaippu danthalai kiRukiRe numpith – thamumElkoN

daraththa minRiya puzhuvinum vinjip
pazhuththu Lanceyal vasanam varampaR
Raduththa peNdiru methirvara ninthith – thanaivOrum

asuththa nenRida vuNarvathu kunRith
thudippa thunciRi thuLathila thenkaik
kavaththai vanthuyi ralamaru manRaik – karuLvAyE

thiriththi rinthiri riririri rinRit
dududdu duNdudu dudududu duNdud
dikutti kuNdiku dikudiku diNdid – dikutheethO

thimiththi minthimi thimithimi yenRit
didakkai thunthumi murasu muzhangkac
cerukka Lanthanil niruthar thayangac – cilapEykaL

thariththu maNdaiyi luthira marunthath
thiratpa runthukaL kudarkaL pidungkath
tharukku campukaL niNamathu sinthap – porumvElA

thadacci kaNdiyil vayaliyi lanpaip
padaiththa nenjini liyalceRi kongiR
Ranicca yanthani linithuRai kanthap – perumALE.

English Easy Version

uraiththa samprama vadivu thirangi
kaRuththa kunjiyum veLiRiya panjoththu
oliththi duncevi ceviduRa voNkat – kurudAki

uraththa veNpalu nazhuvi mathankettu
iraiththu kiNkiNe nirumale zhunthittu
uLaippu danthalai kiRukiRe numpith – thamumElkoNdu

araththa minRiya puzhuvinum vinji
Pazhuththu uLanceyal vasanam varampatRu
aduththa peNdiru methirvara ninthiththu – anaivOrum

asuththa nenRida vuNarvathu kunRith
thudippa thunciRi thuLathila thenkaikku
avaththai vanthuyi ralamaru manRaik – karuLvAyE

thiriththi rinthiri riririri rinRit
dududdu duNdudu dudududu duNdud
dikutti kuNdiku dikudiku diNdid – dikutheethO

thimiththi minthimi thimithimi yenRittu
idakkai thunthumi murasu muzhangka
cerukka Lanthanil niruthar thayanga – cilapEykaL

thariththu maNdaiyi luthira maruntha
thiratpa runthukaL kudarkaL pidungka
tharukku campukaL niNamathu sinthap – porumvElA

thadacci kaNdiyil vayaliyil anpaip
padaiththa nenjinil iyalceRi kongiR
Ranicca yanthani linithuRai kanthap – perumALE