திருப்புகழ் 956 அலகு இல் அவுணரை (மதுரை)

Thiruppugal 956 Alaguilavunara

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனனத் தந்த தானன
தனதன தனனத் தந்த தானன
தனதன தனனத் தந்த தானன – தந்ததான

அலகில வுணரைக் கொன்ற தோளென
மலைதொளை யுருவச் சென்ற வேலென
அழகிய கனகத் தண்டை சூழ்வன – புண்டரீக

அடியென முடியிற் கொண்ட கூதள
மெனவன சரியைக் கொண்ட மார்பென
அறுமுக மெனநெக் கென்பெ லாமுரு – கன்புறாதோ

கலகல கலெனக் கண்ட பேரொடு
சிலுகிடு சமயப் பங்க வாதிகள்
கதறிய வெகுசொற் பங்க மாகிய – பொங்களாவுங்

கலைகளு மொழியப் பஞ்ச பூதமு
மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன
கரணமு மொழியத் தந்த ஞானமி – ருந்தவாறென்

இலகுக டலைகற் கண்டு தேனொடு
மிரதமு றுதினைப் பிண்டி பாகுடன்
இனிமையி னுகருற் றெம்பி ரானொரு – கொம்பினாலே

எழுதென மொழியப் பண்டு பாரதம்
வடகன சிகரச் செம்பொன் மேருவில்
எழுதிய பவளக் குன்று தாதையை – யன்றுசூழ

வலம்வரு மளவிற் சண்ட மாருத
விசையினும் விசையுற் றெண்டி சாமுக
மகிதல மடையக் கண்டு மாசுண – முண்டுலாவு

மரகத கலபச் செம்புள் வாகன
மிசைவரு முருகச் சிம்பு ளேயென
மதுரையில் வழிபட் டும்ப ரார்தொழு – தம்பிரானே.

பதம் பிரித்தது

தனதன தனனத் தந்த தானன
தனதன தனனத் தந்த தானன
தனதன தனனத் தந்த தானன – தந்ததான

அலகு இல் அவுணரை கொன்ற தோள் என
மலை தொளை உருவச் சென்ற வேல் என
அழகிய கனகத் தண்டை சூழ்வன – புண்டரீக

அடி என முடியில் கொண்ட கூதளம்
என வனசரியைக் கொண்ட மார்பு என
அறுமுகம் என நெக்கு என்பெலாம் உருக – அன்பு உறாதோ

கல கல கல எனக் கண்ட பேரொடு
சிலுகிடு சமயப் பங்க வாதிகள்
கதறிய வெகு சொல் பங்கம் ஆகிய – பொங்கு அளாவும்

கலைகளும் ஒழியப் பஞ்ச பூதமும்
ஒழி உற மொழியின் துஞ்சு உறாதன
கரணமும் ஒழிய தந்த ஞானம் – இருந்தவாறு என்

இலகு கடலை கற்கண்டு தேனொடும்
இரதம் உறு தினைப் பிண்டி பாகுடன்
இனிமையில் நுகர் உற்ற எம்பிரான் ஒரு – கொம்பினாலே

எழுது என மொழியப் பண்டு பாரதம்
வட கன சிகரச் செம் பொன் மேருவில்
எழுதிய பவளக் குன்று தாதையை – அன்று சூழ

வலம் வரும் அளவில் சண்ட மாருத
விசையினும் விசையுற்று எண் திசா முக
மகிதலம் அடையக் கண்டு மாசுணம் – உண்டு உலாவு

மரகத கலபச் செம் புள் வாகன
மிசை வரு முருக சிம்புளே என
மதுரையில் வழிபட்டு உம்பரார் தொழு – தம்பிரானே

English

alakila vuNaraik konRa thOLena
malaithoLai yuruvac chenRa vElena
azhakiya kanakath thaNdai chUzhvana – puNdareeka

adiyena mudiyiR koNda kUthaLa
menavana sariyaik koNda mArpena
aRumuka menanek kenpe lAmuru – kanpuRAthO

kalakala kalenak kaNda pErodu
silukidu samayap panga vAthikaL
kathaRiya vekusoR panga mAkiya – pongaLAvum

kalaikaLu mohzhiyap panja pUthamu
mozhiyuRa mozhiyit Runju RAthana
karaNamu mozhiyath thantha njAnami – runthavARen

ilakuka dalaikaR kaNdu thEnodum
irathamu Ruthinaip piNdi pAkudan
inimaiyi nukarut Rempi rAnoru – kompinAlE

ezhuthena mozhiyap paNdu bAratham
vadakana sikarac chempon mEruvil
ezhuthiya pavaLak kunRu thAthaiyai – yanRuchUzha

valamvaru maLaviR chaNda mArutha
visaiyinum visaiyut ReNdi sAmuka
makithala madaiyak kaNdu mAsuNa – muNdulAvu

marakatha kalapac chempuL vAkana
misaivaru murukac chimpu LEyena
mathuraiyil vazhipat tumpa rArthozhu – thambirAnE.

English Easy Version

alaku il avuNarai konRa thOL ena
malai thoLai uruvac chenRa vEl ena
azhakiya kanakath thaNdai chUzhvana – puNdareeka

adi ena mudiyil koNda kUthaLam ena
vanasariyaik koNda mArpu ena
aRumukam ena nekku enpelAm uruka – anpu uRAthO

kala kala kala enak kaNda pErodu
silukidu samayap panga vAthikaL
kathaRiya veku sol pangam Akiya – pongu aLAvum

kalaikaLum ozhiyap panja pUthamum
ozhi uRa mozhiyin thunju uRAthana
karaNamum ozhiya thantha njAnam – irunthavARu en

ilaku kadalai kaRkaNdu thEnodum
iratham uRu thinaip piNdi pAkudan
inimaiyil nukar utRa empirAn oru – kompinAlE

ezhuthu ena mozhiyap paNdu pAratham
vada kana sikaras sem pon mEruvil
ezhuthiya pavaLak kunRu thAthaiyai – anRu chUzha

valam varum aLavil saNda mArutha
visaiyinum visaiyutRu eN thisA muka
makithalam adaiyak kaNdu mAsuNam – uNdu ulAvu

marakatha kalapac chem puL vAkana
misai varu muruka chimpuLE ena
mathuraiyil vazhipaddu umparAr thozhu – thambirAnE.