திருப்புகழ் 957 ஆனைமுகவற்கு (மதுரை)

Thiruppugal 957 Anaimugavarku

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த – தனதான

ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
ஆறுமுக வித்த – கமரேசா

ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும்
ஆரணமு ரைத்த – குருநாதா

தானவர் குலத்தை வாள்கொடு துணித்த
சால்சதுர் மிகுத்த – திறல்வீரா

தாளிணைக ளுற்று மேவியப தத்தில்
வாழ்வொடு சிறக்க – அருள்வாயே

வானெழு புவிக்கு மாலுமய னுக்கும்
யாவரொரு வர்க்கு – மறியாத

மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க
மாமயில் நடத்து – முருகோனே

தேனெழு புனத்தில் மான்விழி குறத்தி
சேரமரு வுற்ற – திரள்தோளா

தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை
வேல்கொடு தணித்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த – தனதான

ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
ஆறுமுக வித்தக – அமரேசா

ஆதியரனுக்கும் வேதமுதல்வற்கும்
ஆரணமுரைத்த – குருநாதா

தானவர் குலத்தை வாள்கொடு துணித்த
சால்சதுர் மிகுத்த – திறல்வீரா

தாளிணைகள் உற்று மேவிய பதத்தில்
வாழ்வொடு சிறக்க – அருள்வாயே

வானெழு புவிக்கு மாலும் அயனுக்கும்
யாவரொருவர்க்கும் – அறியாத

மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க
மாமயில் நடத்து – முருகோனே

தேனெழு புனத்தில் மான்விழி குறத்தி
சேர மருவுற்ற – திரள்தோளா

தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை
வேல்கொடு தணித்த – பெருமாளே

English

Anaimuka vaRku nEriLaiya baththa
ARumuga viththa – gamarEsA

Adhi aranukkum vEdha mudhal vaRkum
AraNam uraiththa – gurunAthA

dhAnavar kulaththai vALkodu thuNiththa
sAlchathur miguththa – thiRal veerA

thAL iNaigaL utru mEviya padhaththil
vAzhvodu siRakka – aruLvAyE

vAnezhu buvikku mAlum ayanukkum
yAvaroru varkkum – aRiyAdha

mAmadhurai chokkar mAdhumai kaLikka
mA mayil nadaththu – murugOnE

thEnezhu punaththil mAnvizhi kuRaththi
sEramaru vutra – thiraLthOLA

dhEvargaL karuththil mEviya bayaththai
vElkodu thaNiththa – perumALE.

English Easy Version

Anaimuka vaRku nEriLaiya baththa
ARumuga viththaga – amarEsA

Adhi aranukkum vEdha mudhalvarkkum
AraNam uraiththa – gurunAtha

dhAnavar kulaththai vALkodu thuNiththa
sAlchathur miguththa – thiRal veerA

thAL iNaigaL utru mEviya padhaththil
vAzhvodu siRakka – aruLvAyE

vAnezhu buvikku mAlum ayanukkum
yAvaroru varkkum – aRiyAdha

mAmadhurai chokkar mAdhumai kaLikka
mA mayil nadaththu – murugOnE

thEnezhu punaththil mAnvizhi kuRaththi
sEramaru vutra – thiraLthOLA

dhEvargaL karuththil mEviya bayaththai
vElkodu thaNiththa – perumALE