திருப்புகழ் 959 பழிப்பர் வாழ்த்துவர் (மதுரை)

Thiruppugal 959 Pazhipparvazhththuvar

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்த தாத்தன தனதன தனதன
தனத்த தாத்தன தனதன தனதன
தனத்த தாத்தன தனதன தனதன – தனதனத் தனதான

பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை
ஒருத்தர் வாய்ச்சுரு ளொருவர்கை யுதவுவர்
பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர் – அளவளப் பதனாலே

படுக்கை வீட்டினு ளவுஷத முதவுவர்
அணைப்பர் கார்த்திகை வருதென வுறுபொருள்
பறிப்பர் மாத்தையி லொருவிசை வருகென – அவரவர்க் குறவாயே

அழைப்ப ராஸ்திகள் கருதுவ ரொருவரை
முடுக்கி யோட்டுவ ரழிகுடி யரிவையர்
அலட்டி னாற்பிணை யெருதென மயலெனு – நரகினிற் சுழல்வேனோ

அவத்த மாய்ச்சில படுகுழி தனில்விழும்
விபத்தை நீக்கியு னடியவ ருடனெனை
அமர்த்தி யாட்கொள மனதினி லருள்செய்து – கதிதனைத் தருவாயே

தழைத்த சாத்திர மறைபொரு ளறிவுள
குருக்கள் போற்சிவ நெறிதனை யடைவொடு
தகப்ப னார்க்கொரு செவிதனி லுரைசெய்த – முருகவித் தகவேளே

சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்
திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து
சயத்த யோத்தியில் வருபவ னரிதிரு – மருமகப் பரிவோனே

செழித்த வேற்றனை யசுரர்க ளுடலது
பிளக்க வோச்சிய பிறகம ரர்கள்பதி
செலுத்தி யீட்டிய சுரபதி மகள்தனை – மணமதுற் றிடுவோனே

திறத்தி னாற்பல சமணரை யெதிரெதிர்
கழுக்க ளேற்றிய புதுமையை யினிதொடு
திருத்த மாய்ப்புகழ் மதுரையி லுறைதரும் – அறுமுகப் பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்த தாத்தன தனதன தனதன
தனத்த தாத்தன தனதன தனதன
தனத்த தாத்தன தனதன தனதன – தனதனத் தனதான

பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை
ஒருத்தர் வாய்ச்சுருள் ஒருவர் கை உதவுவர்
பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர் – அளவளப் பதனாலே

படுக்கை வீட்டினுள் அவுஷதம உதவுவர்
அணைப்பர் கார்த்திகை வருது என உறு பொருள்
பறிப்பர் மாத்தையில் ஒருவிசை வருக என – அவரவர்க்கு உறவாயே

அழைப்பர் ஆஸ்திகள் கருதுவர் ஒருவரை
முடுக்கி ஓட்டுவர் அழிகுடி அரிவையர்
அலட்டினால் பிணை எருது என மயல் எனும் – நரகினில் சுழல்வேனோ

அவத்தமாய்ச் சில படு குழி தனில் விழும்
விபத்தை நீக்கி உன் அடியவர் உடன் எனை
அமர்த்தி ஆட் கொள மனதினில் அருள் செய்து கதி – தனைத் தருவாயே

தழைத்த சாத்திர மறை பொருள் அறிவு உள
குருக்கள் போல் சிவ நெறி தனை அடைவொடு
தகப்பனார்க்கு ஒரு செவி தனில் உரை செய்த – முருக வித்தக வேளே

சமத்தினால் புகழ் சனகியை நலிவு செய்
திருட்டு ராக்கதன் உடல் அது துணி செய்து
சயத்து அயோத்தியில் வருபவன் அரி திரு மருமகப் – பரிவோனே

செழித்த வேல் தனை அசுரர்கள் உடல் அது
பிளக்க ஓச்சிய பிறகு அமரர்கள் பதி
செலுத்தி ஈட்டிய சுர பதி மகள் தனை – மணம் அது உற்றிடுவோனே

திறத்தினால் பல சமணரை எதிர் எதிர்
கழுக்கள் ஏற்றிய புதுமையை இனிதொடு
திருத்தமாய்ப் புகழ் மதுரையில் உறை தரும் அறுமுகப் – பெருமாளே

English

pazhippar vAzhththuvar silasila peyarthamai
oruththar vAycchuru Loruvarkai yuthavuvar
paNaththai nOkkuvar piNamathu thazhuvuvar – aLavaLap pathanAlE

padukkai veettinu Lavushatha muthavuvar
aNaippar kArththikai varuthena vuRuporuL
paRippar mAththaiyi loruvisai varukena – avaravark kuRavAyE


azhaippa rASthikaL karuthuva roruvarai
mudukki yOttuva razhikudi yarivaiyar
alatti nARpiNai yeruthena mayalenu – narakiniR chuzhalvEnO

avaththa mAycchila padukuzhi thanilvizhum
vipaththai neekkiyu nadiyava rudanenai
amarththi yAtkoLa manathini laruLseythu – kathithanaith tharuvAyE

thazhaiththa sAththira maRaiporu LaRivuLa
kurukkaL pORchiva neRithanai yadaivodu
thakappa nArkkoru sevithani luraiseytha – murukavith thakavELE

samaththi nARpukazh sanakiyai nalivusey
thiruttu rAkkatha nudalathu thuNiseythu
sayaththa yOththiyil varupava narithiru – marumakap parivOnE

sezhiththa vEtRanai yasurarka Ludalathu
piLakka vOcchiya piRakama rarkaLpathi
seluththi yeettiya surapathi makaLthanai – maNamathut RiduvOnE

thiRaththi nARpala samaNarai yethirethir
kazhukka LEtRiya puthumaiyai yinithodu
thiruththa mAyppukazh mathuraiyi luRaitharum – aRumukap perumALE.

English Easy Version

pazhippar vAzhththuvar silasila peyarthamai
oruththar vAycchuruL oruvar kai uthavuvar
paNaththai nOkkuvar piNamathu thazhuvuvar – aLavaLap pathanAlE

padukkai veettinuL avushatham uthavuvar
aNaippar kArththikai varuthu ena uRu poruL
paRippar mAththaiyil oruvisai varuka ena – avaravarkku uRavAyE

Azhaippar ASthikaL karuthuvar oruvarai
mudukki Ottuvar azhikudi arivaiyar
alattinAl piNai eruthu ena mayal enum – narakinil suzhalvEnO

avaththamAyc chila padu kuzhi thanil vizhum
vipaththai neekki un adiyavar udan enai
amarththi Ad koLa manathinil aruL seythu – kathi thanaith tharuvAyE

thazhaiththa sAththira maRai poruL aRivu uLa
kurukkaL pOl siva neRi thanai adaivodu
thakappanArkku oru sevi thanil urai seytha muruka – viththaka vELE

samaththinAl pukazh sanakiyai nalivu sey
thiruttu rAkkathan udal athu thuNi seythu
sayaththu ayOththiyil varupavan ari thiru – marumakap parivOnE

sezhiththa vEl thanai asurarkaL udal athu
piLakka Occhiya piRaku amararkaL pathi
Seluththi eettiya sura pathi makaL thanai – maNam athu utRiduvOnE

thiRaththinAl pala samaNarai ethir ethir
kazhukkaL EtRiya puthumaiyai inithodu
thiruththamAyp pukazh mathuraiyil uRai tharum – aRumukap perumALE