திருப்புகழ் 960 சீத வாசனை மலர் (மதுரை)

Thiruppugal 960 Ceedhavasanaimalar

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தானதன தத்ததன தத்ததன
தான தானதன தத்ததன தத்ததன
தான தானதன தத்ததன தத்ததன – தத்ததான

சீத வாசனைம லர்க்குழல்பி லுக்கிமுக
மாய வேல்விழிபு ரட்டிநகை முத்தமெழ
தேமல் மார்பினிள பொற்கிரிப ளப்பளென – தொங்கலாரஞ்

சேரு மோவியமெ னச்சடமி னுக்கிவெகு
வாசை நேசமும்வி ளைத்துஇடை யுற்றவரி
சேலை காலில்விழ விட்டுநடை யிட்டுமயி – லின்கலாபச்

சாதி யாமெனவெ ருட்டிநட மிட்டுவலை
யான பேர்தமையி ரக்கவகை யிட்டுகொடி
சாக நோய்பிணிகொ டுத்திடர்ப டுத்துவர்கள் – பங்கினூடே


தாவி மூழ்கிமதி கெட்டவல முற்றவனை
பாவ மானபிற விக்கடலு ழப்பவனை
தாரு லாவுபத பத்தியிலி ருத்துவது – மெந்தநாளோ

வாத வூரனைம தித்தொருகு ருக்களென
ஞான பாதம்வெளி யிட்டுநரி யிற்குழுவை
வாசி யாமெனந டத்துவகை யுற்றரச – னன்புகாண

மாடை யாடைதர பற்றிமுன கைத்துவைகை
யாறின் மீதுநட மிட்டுமணெ டுத்துமகிழ்
மாது வாணிதரு பிட்டுநுகர் பித்தனருள் – கந்தவேளே

வேத லோகர்பொனி லத்தர்தவ சித்தரதி
பார சீலமுனி வர்க்கமுறை யிட்டலற
வேலை யேவியவு ணக்குலமி றக்கநகை – கொண்டசீலா

வேத மீணகம லக்கணர்மெய் பச்சைரகு
ராம ரீணமயி லொக்கமது ரைப்பதியின்
மேவி வாழமரர் முத்தர்சிவ பத்தர்பணி – தம்பிரானே.

பதம் பிரித்தது

தான தானதன தத்ததன தத்ததன
தான தானதன தத்ததன தத்ததன
தான தானதன தத்ததன தத்ததன – தத்ததான

சீத வாசனை மலர்க் குழல் பிலுக்கி முகம்
மாய வேல் விழி புரட்டி நகை முத்தம் எழ
தேமல் மார்பின் இள பொன் கிரி பளப்பள என – தொங்கல் ஆரம்

சேரும் ஓவியம் எனச் சடம் மினுக்கி வெகு
ஆசை நேசமும் விளைத்து இடை உற்ற வரி
சேலை காலில் விழவிட்டு நடை இட்டு – மயிலின் கலாபச்

சாதியாம் என வெருட்டி நடம இட்டு வலையான
பேர் தமை இரக்க வகை இட்டு கொடி
சாக நோய் பிணி கொடுத்து இடர் படுத்துவர்கள் – பங்கினூடே

தாவி மூழ்கி மதி கெட்டு அவலம் உற்றவனை
பாவமான பிறவிக் கடல் உழப்பவனை
தார் உலாவு பத பத்தியில் இருத்துவதும் – எந்த நாளோ

வாதவூரனை மதித்து ஒரு குருக்கள் என
ஞான பாதம் வெளி இட்டு நரியின் குழுவை
வாசியாம் என நடத்து உவகை உற்று அரசன் – அன்பு காண

மாடை ஆடை தர பற்றி முன் நகைத்து வைகை
ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து மகிழ்
மாது வாணி தரு பிட்டு நுகர் பித்தன் அருள் – கந்த வேளே

வேத லோகர் பொன் நிலத்தர் தவ சித்தர் அதி
பார சீல முனி வர்க்க(ம்) முறை இட்டு அலற
வேலை ஏவி அவுணக் குலம் இறக்க நகை – கொண்ட சீலா

வேதம் மீண கமலக் க(ண்)ணர் மெய் பச்சை ரகு
ராமர் ஈண மயில் ஒக்க மதுரைப் பதியில்
மேவி வாழ் அமரர் முத்தர் சிவ பத்தர் பணி – தம்பிரானே

English

ceetha vAsanaima larkkuzhalpi lukkimuka
mAya vElvizhipu rattinakai muththamezha
thEmal mArpiniLa poRkiripa LappaLena – thongalAram

sEru mOviyame nacchadami nukkiveku
vAsai nEsamumvi Laiththuidai yutRavari
sElai kAlilvizha vittunadai yittumayi – linkalApac

chAthi yAmenave ruttinada mittuvalai
yAna pErthamaiyi rakkavakai yittukodi
sAka nOypiNiko duththidarpa duththuvarkaL – panginUdE

thAvi mUzhkimathi kettavala mutRavanai
pAva mAnapiRa vikkadalu zhappavanai
thAru lAvupatha paththiyili ruththuvathu – menthanALO

vAtha vUranaima thiththoruku rukkaLena
njAna pAthamveLi yittunari yiRkuzhuvai
vAsi yAmenana daththuvakai yutRarasa – nanpukANa

mAdai yAdaithara patRimuna kaiththuvaikai
yARin meethunada mittumaNe duththumakizh
mAthu vANitharu pittunukar piththanaruL – kanthavELE

vEtha lOkarponi laththarthava siththarathi
pAra seelamuni varkkamuRai yittalaRa
vElai yEviyavu Nakkulami Rakkanakai – koNdaseelA

vEtha meeNakama lakkaNarmey pacchairaku
rAma reeNamayi lokkamathu raippathiyin
mEvi vAzhamarar muththarsiva paththarpaNi – thampirAnE.

English Easy Version

ceetha vAsanai malark kuzhal pilukki mukam
mAya vEl vizhi puratti nakai muththam ezha
thEmal mArpin iLa pon kiri paLappaLa ena – thongal Aram

sErum Oviyam enac chadam minukki veku
Asai nEsamum viLaiththu idai utRa vari
sElai kAlil vizhavittu nadai ittu mayilin – kalApac

chAthiyAm ena verutti nadam ittu valaiyAna
pEr thamai irakka vakai ittu kodi
sAka nOy piNi koduththu idar paduththuvarkaL – panginUdE

thAvi mUzhki mathi kettu avalam utRavanai
pAvamAna piRavik kadal uzhappavanai
thAr ulAvu patha paththiyil iruththuvathum – entha nALO

vAthavUranai mathiththu oru kurukkaL ena
njAna pAtham veLi ittu nariyin kuzhuvai
vAsiyAm ena nadaththu uvakai utRu arasan – anpu kANa

mAdai Adai thara patRi mun nakaiththu vaikai
ARin meethu nadam ittu maN eduththu makizh
mAthu vANi tharu pittu nukar piththan aruL – kantha vELE

vEtha lOkar pon nilaththar thava siththar athi
pAra seela muni varkka(m) muRai ittu alaRa
vElai Evi avuNak kulam iRakka nakai – koNda seelA

vEtham meeNa kamalak ka(N)Nar mey pacchai raku
rAmar eeNa mayil okka mathuraip pathiyil
mEvi vAzh amarar muththar siva paththar paNi – thampirAnE