திருப்புகழ் 963 ஏலப் பனி நீர் (மதுரை)

Thiruppugal 963 Elappanineer

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானத்தன தானன தானன
தானத்தன தானன தானன
தானத்தன தானன தானன – தனதான

ஏலப்பனி நீரணி மாதர்கள்
கானத்தினு மேயுற வாடிடு
மீரத்தினு மேவளை சேர்கர – மதனாலும்

ஏமக்கிரி மீதினி லேகரு
நீலக்கய மேறிய னேரென
ஏதுற்றிடு மாதன மீதினு – மயலாகிச்

சோலைக்குயில் போல்மொழி யாலுமெ
தூசுற்றிடு நூலிடை யாலுமெ
தோமிற்கத லீநிக ராகிய – தொடையாலும்

சோமப்ரபை வீசிய மாமுக
சாலத்திலு மாகடு வேல்விழி
சூதத்தினு நானவ மேதின – முழல்வேனோ

ஆலப்பணி மீதினில் மாசறு
மாழிக்கிடை யேதுயில் மாதவ
னானைக்கினி தாயுத வீயருள் – நெடுமாயன்

ஆதித்திரு நேமியன் வாமன
னீலப்புயல் நேர்தரு மேனியன்
ஆரத்துள வார்திரு மார்பினன் – மருகோனே

கோலக்கய மாவுரி போர்வையர்
ஆலக்கடு வார்கள நாயகர்
கோவிற்பொறி யால்வரு மாசுத – குமரேசா

கூர்முத்தமிழ் வாணர்கள் வீறிய
சீரற்புத மாநக ராகிய
கூடற்பதி மீதினில் மேவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தானத்தன தானன தானன
தானத்தன தானன தானன
தானத்தன தானன தானன – தனதான

ஏலப் பனி நீர் அணி மாதர்கள்
கானத்தினுமே உறவு ஆடிடும்
ஈரத்தினுமே வளை சேர் கரம் – அதனாலும்

ஏமக் கிரி மீதினிலே கரு
நீலக் கயம் ஏறிய நேர் என
ஏதுற்றிடு மா தன மீதினும் – மயலாகி

சோலைக் குயில் போல் மொழியாலுமெ
தூசு உற்றிடு நூல் இடையாலுமெ
தோம் இல் கதலீ நிகர் ஆகிய – தொடையாலும்

சோம ப்ரபை வீசிய மா முக
சாலத்திலும் மா கடு வேல் விழி
சூது அ(த்)தினும் நான் அவமே தினம் – உழல்வேனோ

ஆலப் பணி மீதினில் மாசு அறும்
ஆழிக்கு இடையே துயில் மாதவன்
ஆனைக்கு இனிதாய் உதவீ அருள் – நெடுமாயன்

ஆதித் திரு நேமியன் வாமனன்
நீலப் புயல் நேர் தரு மேனியன்
ஆரத் துளவார் திரு மார்பினன் – மருகோனே

கோலக் கய மா உரி போர்வையர்
ஆலக் கடு ஆர் கள(ர்) நாயகர்
கோவில் பொறியால் வரு மா – சுத குமரேசா

கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய
சீர் அற்புத மா நகர் ஆகிய
கூடல் பதி மீதினில் மேவிய – பெருமாளே

English

Elappani neeraNi mAtharkaL
kAnaththinu mEyuRa vAdidu
meeraththinu mEvaLai sErkara – mathanAlum

Emakkiri meethini lEkaru
neelakkaya mERiya nErena
EthutRidu mAthana meethinu – mayalAkic

chOlaikkuyil pOlmozhi yAlume
thUsutRidu nUlidai yAlume
thOmiRkatha leenika rAkiya – thodaiyAlum

sOmaprapai veesiya mAmuka
sAlaththilu mAkadu vElvizhi
cUthaththinu nAnava mEthina – muzhalvEnO

AlappaNi meethinil mAsaRu
mAzhikkidai yEthuyil mAdhava
nAnaikkini thAyutha veeyaruL – nedumAyan

Athiththiru nEmiyan vAmana
neelappuyal nErtharu mEniyan
AraththuLa vArthiru mArpinan – marukOnE

kOlakkaya mAvuri pOrvaiyar
Alakkadu vArkaLa nAyakar
kOviRpoRi yAlvaru mAsutha – kumarEsA

kUrmuththamizh vANarkaL veeRiya
seeraRputha mAnaka rAkiya
kUdaRpathi meethinil mEviya – perumALE.

English Easy Version

Elap pani neer aNi mAtharkaL
kAnaththinumE uRavu Adidum
eeraththinumE vaLai sEr karam – athanAlum

Emak kiri meethinilE karu
neelak kayam ERiya nEr ena
EthutRidu mA thana meethinum – mayalAki

chOlaik kuyil pOl mozhiyAlume
thUsu utRidu nUl idaiyAlume
thOm il kathalee nikar Akiya – thodaiyAlum

sOma prapai veesiya mA muka
sAlaththilum mA kadu vEl vizhi
cUthu a(th)thinum nAn avamE thinam – uzhalvEnO

Alap paNi meethinil mAsu aRum
Azhikku idaiyE thuyil mAdhavan
Anaikku inithAy uthavee aruL – nedumAyan

Athith thiru nEmiyan vAmanan
neelap puyal nEr tharu mEniyan
Arath thuLavAr thiru mArpinan – marukOnE

kOlak kaya mA uri pOrvaiyar
Alak kadu Ar kaLa(r) nAyakar
kOvil poRiyAl varu mA sutha – kumarEsA

kUr muththamizh vANarkaL veeRiya
seer aRputha mA nakar Akiya
kUdal pathi meethinil mEviya – perumALE