திருப்புகழ் 967 முத்து நவரத்நமணி (மதுரை)

Thiruppugal 967 Muththunavarathnamani

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன – தனதான

முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட
மொய்த்தகிரி முத்திதரு – வெனவோதும்

முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள்
முப்பதுமு வர்க்கசுர – ரடிபேணி

பத்துமுடி தத்தும்வகை யுற்றகணி விட்டஅரி
பற்குனனை வெற்றிபெற – ரதமூரும்

பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்
பத்தர்மன துற்றசிவம் – அருள்வாயே

தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு
தெய்த்ததென தெய்தததென – தெனனான

திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு
செச்சரிகை செச்சரிகை – யெனஆடும்

அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ
சித்தியருள் சத்தியருள் – புரிபாலா

அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள
ரற்கனக பத்மபுரி – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன – தனதான

முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம்
மொய்த்த கிரி முத்தி தரு – என ஓதும்

முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருகக் கடவுள்
முப்பது முவர்க்க சுரர் – அடி பேணி

பத்து முடி தத்தும் வகை உற்ற கணி விட்ட அரி
பற்குனனை வெற்றி பெற – ரதம் ஊரும்

பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள்
பத்தர் மனது உற்ற சிவம் – அருள்வாயே

தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு
தெய்த்ததென தெய்தததென – தெனனான

திக்குவென மத்தளம் இடக்கைதுடி தத்ததகு
செச்சரிகை செச்சரிகை – யெனஆடும்

அத்தனுடன் ஒத்த நடநி த்ரிபுவனத்தி
நவசித்தி அருள் சத்தி அருள் – புரிபாலா

அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர்
அல் கனக பத்ம புரி – பெருமாளே

English

muththunava rathnamaNi paththiniRai saththiyida
moyththakiri muththitharu – venavOthum

mukkaNiRai varkkumaruL vaiththamuru kakkadavuL
muppathumu varkkasura – radipENi

paththumudi thaththumvakai yutRakaNi vittAri
paRkunanai vetRipeRa – rathamUrum

pacchainiRa mutRapuya lacchamaRa vaiththaporuL
paththarmana thutRasivam – aruLvAyE

thiththimithi thiththimithi thikkukuku thikkukuku
theyththathena theythathathena – thenanAna

thikkuvena maththaLami dakkaithudi thaththathaku
seccharikai seccharikai – yenaAdum

aththanuda noththanada nithripuva naththinava
siththiyaruL saththiyaruL – puribAlA

aRpavidai thaRpamathu mutRunilai petRuvaLa
raRkanaka pathmapuri – perumALE.

English Easy Version

muththu nava rathna maNi paththi niRai saththi idam
moyththa kiri muththi tharu – ena Othum

mukkaN iRaivarkkum aruL vaiththa murukak kadavuL
muppathu muvarkka surar – adi pENi

paththu mudi thaththum vakai utRa kaNi vitta ari
paRkunanai vetRi peRa – ratham Urum

pacchai niRam utRa puyal accham aRa vaiththa poruL
paththar manathu utRa sivam – aruLvAyE

thiththimithi thiththimithi thikkukuku thikkukuku
theyththathena theythathathena – thenan

Anathikkuvena maththaLam idakkaithudi thaththathaku
seccharikai seccharikai – yenaAdum

aththanudan oththa nadani thripuvanaththi nava
siththi aruL saththi aruL – puribAlA

aRpa idai thaRpam athu mutRu nilai petRu vaLar al
kanaka pathma puri – perumALE.