திருப்புகழ் 968 ஆடல் மதன் அம்பின் (ஸ்ரீ புருஷமங்கை)

Thiruppugal 968 Adalmadhanambin

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானதன தந்த தந்தன
தானதன தந்த தந்தன
தானதன தந்த தந்தன – தனதான

ஆடல்மத னம்பின் மங்கைய
ராலவிழி யின்பி றங்கொளி
யாரமத லம்பு கொங்கையின் – மயலாகி

ஆதிகுரு வின்ப தங்களை
நீதியுட னன்பு டன்பணி
யாமல்மன நைந்து நொந்துட – லழியாதே

வேடரென நின்ற ஐம்புல
னாலுகர ணங்க ளின்தொழில்
வேறுபட நின்று ணர்ந்தருள் – பெறுமாறென்

வேடைகெட வந்து சிந்தனை
மாயையற வென்று துன்றிய
வேதமுடி வின்ப ரம்பொரு – ளருள்வாயே

தாடகையு ரங்க டிந்தொளிர்
மாமுனிம கஞ்சி றந்தொரு
தாழ்வறந டந்து திண்சிலை – முறியாவொண்

ஜாநகித னங்க லந்தபின்
ஊரில்மகு டங்க டந்தொரு
தாயர்வ சனஞ்சி றந்தவன் – மருகோனே

சேடன்முடி யுங்க லங்கிட
வாடைமுழு தும்ப ரந்தெழ
தேவர்கள்ம கிழ்ந்து பொங்கிட – நடமாடுஞ்

சீர்மயில மஞ்சு துஞ்சிய
சோலைவளர் செம்பொ னுந்திய
ஸ்ரீபுருட மங்கை தங்கிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தானதன தந்த தந்தன
தானதன தந்த தந்தன
தானதன தந்த தந்தன – தனதான

ஆடல் மதன் அம்பின் மங்கையர்
ஆல விழியின் பிறங்கு ஒளி
ஆரம் அது அலம்பு கொங்கையில் – மயலாகி

ஆதி குருவின் பதங்களை
நீதியுடன் அன்புடன் பணியாமல்
மனம் நைந்து நொந்து உடல் – அழியாதே

வேடர் என நின்ற ஐம்புலன்
நாலு கரணங்களின் தொழில்
வேறு பட நின்று உணர்ந்து – அருள் பெறுமாறு

என்வேடை கெட வந்து சிந்தனை
மாயை அற வென்று துன்றிய
வேத முடிவின் பரம் பொருள் – அருள்வாயே

தாடகை உரம் கடிந்து ஒளிர்
மா முனி மகம் சிறந்து ஒரு
தாழ்வு அற நடந்து திண் சிலை – முறியா ஒண்

ஜாநகி தனம் கலந்த பின்
ஊரில் மகுடம் கடந்து ஒரு
தாயர் வசனம் சிறந்தவன் – மருகோனே

சேடன் முடியும் கலங்கிட
வாடை முழுதும் பரந்து எழ
தேவர்கள் மகிழ்ந்து பொங்கிட – நடமாடும்

சீர் மயில மஞ்சு துஞ்சிய
சோலை வளர் செம் பொன் உந்திய
ஸ்ரீபுருட மங்கை தங்கிய – பெருமாளே.

English

Adalmatha nampin mangaiya
rAlavizhi yinpi RangoLi
yAramatha lampu kongaiyin – mayalAki

Athiguru vinpa thangaLai
neethiyuda nanpu danpaNi
yAmalmana nainthu nonthuda – lazhiyAthE

vEdarena ninRa aimpula
nAlukara Nanga Linthozhil
vERupada ninRu NarntharuL – peRumARen

vEdaikeda vanthu sinthanai
mAyaiyaRa venRu thunRiya
vEthamudi vinpa ramporu – LaruLvAyE

thAdakaiyu rangka dinthoLir
mAmunima kamsi Ranthoru
thAzhvaRana danthu thiNsilai – muRiyAvoN

jAnakitha namka lanthapin
Urilmaku damka danthoru
thAyarva sanamci Ranthavan – marukOnE

sEdanmudi yumka langida
vAdaimuzhu thumpa ranthezha
thEvarkaLma kizhnthu pongida – nadamAdum

seermayila manju thunjiya
sOlaivaLar sempo nunthiya
sreepuruda mangai thangiya – perumALE.

English Easy Version

Adal mathan ampin mangaiyar
Ala vizhiyin piRangu oLi
Aram athu alampu kongaiyil – mayalAki

Athi guruvin pathangaLai
neethiyudan anpudan paNi
yAmal manam nainthu nonthu udal – azhiyAthE

vEdar ena ninRa aimpulan
nAlu karaNangkaLin thozhil
vERu pada ninRu uNarnthu aruL – peRumARu

envEdai keda vanthu sinthanai
mAyai aRa venRu thunRiya
vEtha mudivin param poruL – aruLvAyE

thAdakai uram kadinthu oLir
mA muni makam siRanthu oru
thAzhvu aRa nadanthu thiN silai – muRiyA oN

jAnaki thanam kalantha pin
Uril makudam kadanthu oru
thAyar vasanam siRanthavan – marukOnE

sEdan mudiyum kalangida
vAdai muzhuthum paranthu ezha
thEvarkaL makiznthu pongida – nadamAdum

seer mayila manju thunjiya
sOlai vaLar sem pon unthiya
Sripuruda mangai thangiya – perumALE