திருப்புகழ் 969 கார் குழல் குலைந்து (ஸ்ரீ புருஷமங்கை)

Thiruppugal 969 Karkuzhalkulaindhu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானதன தந்த தந்த தானதன தந்த தந்த
தானதன தந்த தந்த – தனதானா

கார்குழல்கு லைந்த லைந்து வார்குழையி சைந்த சைந்து
காதலுறு சிந்தை யுந்து – மடமானார்

காமுகர கங்க லங்க போர்மருவ முந்தி வந்த
காழ்கடிய கும்ப தம்ப – இருகோடார்

பேர்மருவு மந்தி தந்தி வாரணஅ னங்க னங்க
பேதையர்கள் தங்கள் கண்கள் – வலையாலே

பேரறிவு குந்து நொந்து காதலில லைந்த சிந்தை
பீடையற வந்து நின்ற – னருள்தாராய்

ஏர்மருவு தண்டை கொண்ட தாளசைய வந்த கந்த
ஏகமயி லங்க துங்க – வடிவேலா

ஏமனுமை மைந்த சந்தி சேவலணி கொண்டு அண்டர்
ஈடெறஇ ருந்த செந்தில் – நகர்வாழ்வே

தேருகள்மி குந்த சந்தி வீதிகள ணிந்த கெந்த
சீரலர்கு ளுந்து யர்ந்த – பொழிலோடே

சேரவெயி லங்கு துங்க வாவிக ளிசைந்தி ருந்த
ஸ்ரீபுருட மங்கை தங்கு – பெருமாளே.

பதம் பிரித்தது

தானதன தந்த தந்த தானதன தந்த தந்த
தானதன தந்த தந்த – தனதானா

கார் குழல் குலைந்து அலைந்து வார் குழை இசைந்து
அசைந்து காதல் உறு சிந்தை உந்து – மடமானார்

காமுகர் அகம் கலங்க போர் மருவ முந்தி வந்த
காழ் கடிய கும்ப(ம்) தம்ப(ம்) இரு – கோடார்

பேர் மருவு மந்தி தந்தி வாரணம் அனங்கன் அங்கம்
பேதையர்கள் தங்கள் கண்கள் வலையாலே

பேர் அறிவு (உ)குந்து நொந்து காதலில் அலைந்த சிந்தை
பீடை அற வந்து நின்றன் அருள் தாராய்

ஏர் மருவு தண்டை கொண்ட தாள் அசைய வந்த கந்த
ஏக மயில் அங்க துங்க வடிவேலா

ஏ மன் உமை மைந்த சந்தி சேவல் அணி கொண்டு அண்டர்
ஈடு எ(ஏ)ற இருந்த செந்தில் நகர் வாழ்வே

தேருகள் மிகுந்த சந்தி வீதிகள் அணிந்த கெந்த சீர் அலர்
குளுந்து உயர்ந்த பொழிலூடே

சேரவெ இலங்கு துங்க வாவிகள் இசைந்து இருந்த
ஸ்ரீபுருடமங்கை தங்கு(ம்) பெருமாளே

English

kArkuzhalku laintha lainthu vArkuzhaiyi saintha sainthu
kAthaluRu sinthai yunthu – madamAnAr

kAmukara kanga langa pOrmaruva munthi vantha
kAzhkadiya kumpa thampa – irukOdAr

pErmaruvu manthi thanthi vAraNA nanga nanga
pEthaiyarkaL thangaL kaNkaL – valaiyAlE

pEraRivu kunthu nonthu kAthalila laintha sinthai
peedaiyaRa vanthu ninRa – naruLthArAy

Ermaruvu thaNdai koNda thALasaiya vantha kantha
Ekamayi langa thunga – vadivElA

Emanumai maintha santhi sEvalaNi koNdu aNdar
eedeRai runtha senthil – nakarvAzhvE

thErukaLmi kuntha santhi veethikaLa Nintha kentha
seeralarku Lunthu yarntha – pozhilOdE

sEraveyi langu thunga vAvika Lisainthi runtha
sreepuruda mangai thangu – perumALE.

English Easy Version

kAr kuzhal kulainthu alainthu vAr kuzhai isainthu asainthu
kAthal uRu sinthai unthu – madamAnAr

kAmukar akam kalanga pOr maruva munthi vantha
kAzh kadiya kumpa(m) thampa(m) – iru kOdAr

pEr maruvu manthi thanthi vAraNam anangan angam
pEthaiyarkaL thangaL kaNkaL – valaiyAlE

pEr aRivu (u)kunthu nonthu kAthalil alaintha sinthai
peedai aRa vanthu ninRan – aruL thArAy

Er maruvu thaNdai koNda thAL asaiya vantha kantha
Eka mayil anga thunga – vadivElA

E man umai maintha santhi sEval aNi koNdu aNdar
eedu e(E)Ra iruntha senthil – nakar vAzhvE

thErukaL mikuntha santhi veethikaL aNintha kentha
seer alar kuLunthu uyarntha – pozhilUdE

sErave ilangu thunga vAvikaL isainthu iruntha
sree purudamangai thangu(m) – perumALE.