Thiruppugal 972 Kondhalavolaikulu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தந்தன தான தனந்தன தானத்
தந்தன தான தனந்தன தானத்
தந்தன தான தனந்தன தானத் – தனதான
கொந்தள வோலை குலுங்கிட வாளிச்
சங்குட னாழி கழன்றிட மேகக்
கொண்டைகள் மாலை சரிந்திட வாசப் – பனிநீர்சேர்
கொங்கைகள் மார்பு குழைந்திட வாளிக்
கண்கயல் மேனி சிவந்திட கோவைக்
கொஞ்சிய வாயி ரசங்கொடு மோகக் – கடலூடே
சந்திர ஆர மழிந்திட நூலிற்
பங்கிடை யாடை துவண்டிட நேசத்
தந்திட மாலு ததும்பியு மூழ்குற் – றிடுபோதுன்
சந்திர மேனி முகங்களு நீலச்
சந்த்ரகி மேல்கொ டமர்ந்திடு பாதச்
சந்திர வாகு சதங்கையு மோசற் – றருள்வாயே
சுந்தரர் பாட லுகந்திரு தாளைக்
கொண்டுநல் தூது நடந்தவ ராகத்
தொந்தமொ டாடி யிருந்தவள் ஞானச் – சிவகாமி
தொண்டர்க ளாக மமர்ந்தவள் நீலச்
சங்கரி மோக சவுந்தரி கோலச்
சுந்தரி காளி பயந்தரு ளானைக் – கிளையோனே
இந்திர வேதர் பயங்கெட சூரைச்
சிந்திட வேல்கொ டெறிந்துநல் தோகைக்
கின்புற மேவி யிருந்திடு வேதப் – பொருளோனே
எண்புன மேவி யிருந்தவள் மோகப்
பெண்திரு வாளை மணந்திய லார்சொற்
கிஞ்சியளாவு மிலஞ்சிவி சாகப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தந்தன தான தனந்தன தானத்
தந்தன தான தனந்தன தானத்
தந்தன தான தனந்தன தானத் – தனதான
கொந்தளம் ஓலை குலுங்கிட வாளிச்
சங்குடன் ஆழி கழன்றிட மேகக்
கொண்டைகள் மாலை சரிந்திட – வாசப்பனி நீர்
சேர் கொங்கைள் மார்பு குழைந்திட வாளிக்
கண் கயல் மேனி சிவந்திட கோவைக்
கொஞ்சிய வாய் இரசம் கொடு மோகக் – கடலூடே
சந்திர ஆரம் அழிந்திட நூலில்
பங்கு இடை ஆடை துவண்டிட நேசம்
தந்திட மாலு(ம்) ததும்பியும – மூழ்குற்றிடு போது
உன் சந்திர மேனி முகங்களு(ம்) நீலச்
சந்த்ரகி மேல் கொடு அமர்ந்திடு பாதச்
சந்திர வாகு சதங்கையுமோ சற்று – அருள்வாயே
சுந்தரர் பாடல் உகந்து இரு தாளைக்
கொண்டு நல் தூது நடந்தவர் ஆகத்
தொந்தமொடு ஆடி இருந்தவள் ஞானச் – சிவகாமி
தொண்டர்கள் ஆகம் அமர்ந்தவள் நீலச்
சங்கரி மோக சவுந்தரி கோலச்
சுந்தரி காளி பயந்து அருள் ஆனைக்கு – இளையோனே
இந்திர வேதர் பயம் கெட சூரைச்
சிந்திட வேல் கொடு எறிந்து நல் தோகைக்கு
இன்புற மேவி இருந்திடு வேதப் – பொருளோனே
எண் புனம் மேவி இருந்தவள் மோகப்
பெண் திருவாளை மணந்து இயல் ஆர் சொற்கு
இஞ்சி அளாவும் இலஞ்சி விசாகப் – பெருமாளே
English
konthaLa vOlai kulungida vALic
changuda nAzhi kazhanRida mEkak
koNdaikaL mAlai sarinthida vAsap – panineersEr
kongaikaL mArpu kuzhainthida vALik
kaNkayal mEni sivanthida kOvaik
konjiya vAyi rasangodu mOkak – kadalUdE
chanthira Ara mazhinthida nUliR
pangidai yAdai thuvaNdida nEsath
thanthida mAlu thathumpiyu mUzhkut – RidupOthun
chanthira mEni mukangaLu neelac
chanthraki mElko damarnthidu pAthac
chanthira vAku sathangaiyu mOsat – RaruLvAyE
suntharar pAda lukanthiru thALaik
koNdunal thUthu nadanthava rAkath
thonthamo dAdi yirunthavaL njAnac – chivakAmi
thoNdarka LAka mamarnthavaL neelac
changari mOka savunthari kOlac
chunthari kALi payantharu LAnaik – kiLaiyOnE
inthira vEthar payangeda cUraic
chinthida vElko deRinthunal thOkaik
kinpuRa mEvi yirunthidu vEthap – poruLOnE
eNpuna mEvi yirunthavaL mOkap
peNthiru vALai maNanthiya lArchoR
kinjiyaLAvu milanjivi sAkap – perumALE.
English Easy Version
konthaLam Olai kulungida vALic
changudan Azhi kazhanRida mEkak
koNdaikaL mAlai sarinthida vAsappani – neer sEr
kongaikaL mArpu kuzhainthida vALik
kaN kayal mEni sivanthida kOvaik
konjiya vAy irasam kodu mOkak – kadalUdE
chanthira Aram azhinthida nUlil
pangu idai Adai thuvaNdida nEsam
thanthida mAlu(m) thathumpiyum mUzhkutRidu – pOthu
un chanthira mEni mukangaLu(m) neelac
chanthraki mEl kodu amarnthidu pAthac
chanthira vAku sathangaiyumO satRu – aruLvAyE
suntharar pAdal ukanthu iru thALaik
koNdu nal thUthu nadanthavar Akath
thonthamodu Adi irunthavaL njAnac – chivakAmi
thoNdarkaL Akam amarnthavaL neelac
changari mOka savunthari kOlac
chunthari kALi payanthu aruL Anaikku – iLaiyOnE
inthira vEthar payam keda cUraic
chinthida vEl kodu eRinthu nal thOkaikku
inpuRa mEvi irunthidu vEthap – poruLOnE
eN punam mEvi irunthavaL mOkap
peN thiruvALai maNanthu iyal Ar
choRku inji aLAvum ilanji visAkap – perumALE