திருப்புகழ் 974 மாலையில் வந்து (இலஞ்சி)

Thiruppugal 974 Malaiyilvandhu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தனந்த தான தனந்த
தனா தனந்த – தனதான

மாலையில் வந்து மாலை வழங்கு
மாலை யநங்கன் – மலராலும்

வாடை யெழுந்து வாடை செறிந்து
வாடை யெறிந்த – அனலாலுங்

கோல மழிந்து சால மெலிந்து
கோமள வஞ்சி – தளராமுன்

கூடிய கொங்கை நீடிய அன்பு
கூரவு மின்று – வரவேணும்

கால னடுங்க வேலது கொண்டு
கானில் நடந்த – முருகோனே

கான மடந்தை நாண மொழிந்து
காத லிரங்கு – குமரேசா

சோலை வளைந்து சாலி விளைந்து
சூழு மிலஞ்சி – மகிழ்வோனே

சூரிய னஞ்ச வாரியில் வந்த
சூரனை வென்ற – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தனந்த தான தனந்த
தனா தனந்த – தனதான

மாலையில் வந்து மாலை வழங்கு
மாலை அனங்கன் – மலராலும்

வாடை எழுந்து வாடை செறிந்து
வாடை எறிந்த – அனலாலும்

கோலம் அழிந்து சால மெலிந்து
கோமள வஞ்சி – தளரா முன்

கூடிய கொங்கை நீடிய அன்பு
கூரவும் இன்று – வரவேணும்

காலன் நடுங்க வேல் அது கொண்டு
கானில் நடந்த – முருகோனே

கான மடந்தை நாண மொழிந்து
காதல் இரங்கு – குமரேசா

சோலை வளைந்து சாலி விளைந்து
சூழும் இலஞ்சி – மகிழ்வோனே

சூரியன் அஞ்ச வாரியில் வந்த
சூரனை வென்ற – பெருமாளே

English

mAlaiyil vanthu mAlai vazhangu
mAlai yanangan – malarAlum

vAdai yezhunthu vAdai seRinthu
vAdai yeRintha – analAlum

kOla mazhinthu sAla melinthu
kOmaLa vanji – thaLarAmun

kUdiya kongai neediya anpu
kUravu minRu – varavENum

kAla nadunga vElathu koNdu
kAnil nadantha – murukOnE

kAna madanthai nANa mozhinthu
kAtha lirangu – kumarEsA

sOlai vaLainthu sAli viLainthu
sUzhu milanji – makizhvOnE

cUriya nanja vAriyil vantha
cUranai venRa – perumALE.

English Easy Version

mAlaiyil vanthu mAlai vazhangu
mAlai anangan – malarAlum

vAdai ezhunthu vAdai seRinthu
vAdai eRintha – analAlum

kOlam azhinthu sAla melinthu
kOmaLa vanji – thaLarA mun

kUdiya kongai neediya anpu
kUravum inRu – varavENum

kAlan nadunga vEl athu koNdu
kAnil nadantha – murukOnE

kAna madanthai nANa mozhinthu
kAthal irangu – kumarEsA

sOlai vaLainthu sAli viLainthu
sUzhum ilanji – makizhvOnE

cUriyan anja vAriyil vantha
cUranai venRa – perumALE.