திருப்புகழ் 975 ஏடுக்கொத் தாரலர் (திருக்குற்றாலம்)

Thiruppugal 975 Edukkoththaralar

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன – தனதான

ஏடுக்கொத் தாரலர் வார்குழ
லாடப்பட் டாடைநி லாவிய
ஏதப்பொற் றோள்மிசை மூடிய – கரமாதர்

ஏதத்தைப் பேசுப ணாளிகள்
வீசத்துக் காசைகொ டாடிகள்
ஏறிட்டிட் டேணியை வீழ்விடு – முழுமாயர்

மாடொக்கக் கூடிய காமுகர்
மூழ்குற்றுக் காயமொ டேவரு
வாயுப்புற் சூலைவி யாதிக – ளிவைமேலாய்

மாசுற்றுப் பாசம்வி டாசம
னூர்புக்குப் பாழ்நர கேவிழு
மாயத்தைச் சீவியு னாதர – வருள்வாயே

தாடுட்டுட் டூடுடு டீடிமி
டூடுட்டுட் டூடுடு டாடமி
தானத்தத் தானத னாவென – வெகுபேரி

தானொத்தப் பூதப சாசுகள்
வாய்விட்டுச் சூரர்கள் சேனைகள்
சாகப்பொற் றோகையி லேறிய – சதிரோனே

கூடற்கச் சாலைசி ராமலை
காவைப்பொற் காழிவெ ளூர்திகழ்
கோடைக்கச் சூர்கரு வூரிலு – முயர்வான

கோதிற்பத் தாரொடு மாதவ
சீலச்சித் தாதியர் சூழ்தரு
கோலக்குற் றாலமு லாவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன – தனதான

ஏடுக் கொத்து ஆர் அலர் வார் குழல்
ஆடப் பட்டு ஆடை நிலாவிய
ஏதம் பொன் தோள் மிசை மூடிய – கர மாதர்

ஏதத்தைப் பேசு பண ஆளிகள்
வீசத்துக்கு ஆசை கொ(ண்)டு ஆடிகள்
ஏறிட்டு இட்டு ஏணியை வீழ் விடு – முழு மாயர்

மாடு ஒக்கக் கூடிய காமுகர்
மூழ்கு உற்றுக் காயமொடே வரு
வாயுப் புல் சூலை வியாதிகள் – இவை மேலாய்

மாசுற்றுப் பாசம் விடா சமனூர்
புக்குப் பாழ் நரகே விழு
மாயத்தைச் சீவி உன் ஆதரவு – அருள்வாயே

தாடுட்டுட் டூடுடு டீடிமி
டூடுட்டுட் டூடுடு டாடமி
தானத்தத் தானத னா என – வெகு பேரி

தானொத்தப் பூத பசாசுகள்
வாய்விட்டுச் சூரர்கள் சேனைகள்
சாகப் பொன் தோகையில் ஏறிய – சதிரோனே

கூடல் கச்சாலை சிராமலை
காவைப் பொன் காழி வெளூர் திகழ்
கோடைக் கச்சூர் கருவூரிலும் – உயர்வான

கோது இல் பத்தாரொடு மா தவ
சீலச் சித்தாதியர் சூழ் தரு
கோலக் குற்றாலம் உலாவிய – பெருமாளே

English

Edukkoth thAralar vArkuzha
lAdappat tAdaini lAviya
Ethappot ROLmisai mUdiya – karamAthar

Ethaththaip pEsupa NALikaL
veesaththuk kAsaiko dAdikaL
ERittit tENiyai veezhvidu – muzhumAyar

mAdokkak kUdiya kAmukar
mUzhkutRuk kAyamo dEvaru
vAyuppuR cUlaivi yAthika – LivaimElAy

mAsutRup pAsamvi dAsama
nUrpukkup pAzhnara kEvizhu
mAyaththaic cheeviyu nAthara – varuLvAyE

thAduttut tUdudu deedimi
dUduttut tUdudu dAdami
thAnaththath thAnatha nAvena – vekupEri

thAnoththap pUthapa sAsukaL
vAyvittuc cUrarkaL sEnaikaL
sAkappot ROkaiyi lERiya – sathirOnE

kUdaRkac chAlaisi rAmalai
kAvaippoR kAzhive LUrthikazh
kOdaikkac cUrkaru vUrilu – muyarvAna

kOthiRpath thArodu mAthava
seelacchith thAthiyar cUzhtharu
kOlakkut RAlamu lAviya – perumALE.

English Easy Version

Eduk koththu Ar alar vAr kuzhal
Adap pattu Adai nilAviya
Etham pon thOL misai mUdiya – kara mAthar

Ethaththaip pEsu paNa ALikaL
veesaththukku Asai ko(N)du AdikaL
ERittu ittu ENiyai veezh vidu – muzhu mAyar

mAdu okkak kUdiya kAmukar
mUzhku utRuk kAyamodE varu
vAyup pul cUlai viyAthikaL – ivai mElAy

mAsutRup pAsam vidA samanUr
pukkup pAzh narakE vizhu
mAyaththaic cheevi un Atharavu – aruLvAyE

thAduttut tUdudu deedimi
dUduttut tUdudu dAdami
thAnaththath thAnatha nA ena – veku pEri

thAnoththap pUtha pasAsukaL
vAyvittuc cUrarkaL sEnaikaL
sAkap pon thOkaiyil ERiya – sathirOnE

kUdal kacchAlai sirAmalai
kAvaip pon kAzhi veLUr thikazh
kOdaik kacchUr karuvUrilum – uyarvAna

kOthu il paththArodu mA thava
seelac chiththAthiyar cUzh tharu
kOlak kutRAlam ulAviya – perumALE