திருப்புகழ் 976 வேதத்திற் கேள்வி (திருக்குற்றாலம்)

Thiruppugal 976 Vethaththirkelvi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன – தனதான

வேதத்திற் கேள்வி யிலாதது
போதத்திற் காண வொணாதது
வீசத்திற் றூர மிலாதது – கதியாளர்

வீதித்துத் தேடரி தானது
ஆதித்தற் காய வொணாதது
வேகத்துத் தீயில் வெகாதது – சுடர்கானம்

வாதத்துக் கேயவி யாதது
காதத்திற் பூவிய லானது
வாசத்திற் பேரொளி யானது – மதமூறு

மாயத்திற் காய மதாசல
தீதர்க்குத் தூரம தாகிய
வாழ்வைச்சற் காரம தாஇனி – யருள்வாயே

காதத்திற் காயம தாகும
தீதித்தித் தீதிது தீதென
காதற்பட் டோதியு மேவிடு – கதிகாணார்

காணப்பட் டேகொடு நோய்கொடு
வாதைப்பட் டேமதி தீதக
லாமற்கெட் டேதடு மாறிட – அடுவோனே

கோதைப்பித் தாயொரு வேடுவ
ரூபைப்பெற் றேவன வேடுவர்
கூடத்துக் கேகுடி யாய்வரு – முருகோனே

கோதிற்பத் தாரொடு மாதவ
சீலச்சித் தாதியர் சூழ்தரு
கோலக்குற் றாலமு லாவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன – தனதான

வேதத்திற் கேள்வி யிலாதது
போதத்திற் காண வொணாதது
வீசத்தில் தூர மிலாதது – கதியாளர்

வீதித்துத் தேட அரிதானது
ஆதித்தற் காய வொணாதது
வேகத்துத் தீயில் வெகாதது – சுடர்கானம்

வாதத்துக்கே அவியாதது
காதத்திற் பூ இயலானது
வாசத்தில் பேரொளி யானது – மதமூறு

மாயத்திற் காய மதாசல
தீதர்க்குத் தூரமது ஆகிய
வாழ்வை சற் காரமதாஇனி – யருள்வாயே

காதத்திற் காயமதாகும்
மதீ தித்தித் தீதிது தீதென
காதற்பட் டோதியு மேவிடு – கதிகாணார்

காணப்பட் டேகொடு நோய்கொடு
வாதைப்பட்டே மதி தீதக
லாமற்கெட்டேதடுமாறிட – அடுவோனே

கோதைப்பித்தாய் ஒரு வேடுவ
ரூபைப்பெற்றே வன வேடுவர்
கூடத்துக்கே குடி யாய்வரு – முருகோனே

கோதிற்பத்தாரொடு மாதவ
சீலச்சித்தாதியர் சூழ்தரு
கோலக்குற் றாலம் உலாவிய – பெருமாளே.

English

vEthaththiR kELvi yilAthathu
pOthaththiR kANa voNAthathu
veesaththiR RUra milAthathu – kathiyALar

veethiththuth thEdari thAnathu
AthiththaR kAya voNAthathu
vEkaththuth theeyil vekAthathu – sudarkAnam

vAthaththuk kEyavi yAthathu
kAthaththiR pUviya lAnathu
vAsaththiR pEroLi yAnathu – mathamURu

mAyaththiR kAya mathAsala
theetharkkuth thUrama thAkiya
vAzhvaiccaR kArama thAini – yaruLvAyE

kAthaththiR kAyama thAkuma
theethiththith theethithu theethena
kAthaRpat tOthiyu mEvidu – kathikANAr

kANappat tEkodu nOykodu
vAthaippat tEmathi theethaka
lAmaRket tEthadu mARida – aduvOnE

kOthaippith thAyoru vEduva
rUpaippeR REvana vEduvar
kUdaththuk kEkudi yAyvaru – murukOnE

kOthiRpath thArodu mAdhava
ceelacchith thAthiyar chUzhtharu
kOlakkuR RAlamu lAviya – perumALE.

English Easy Version

vEthaththiR kELvi yilAthathu
pOthaththiR kANa voNAthathu
veesaththil thUra milAthathu – kathiyALar

veethiththuth thEda arithAnathu
AthiththaR kAya voNAthathu
vEkaththuth theeyil vekAthathu – sudarkAnam

vAthaththukkE aviyAthathu
kAthaththiR pU iyalAnathu
vAsaththil pEroLi yAnathu – mathamURu

mAyaththiR kAya mathAsala
theetharkkuth thUramathu Akiya
vAzhvai chaR kArama thA ini – yaruLvAyE

kAthaththiR kAyama thAku
mathee thiththi theethithu theethena
kAthaRpat tOthiyumE vidu – kathikANAr

kANappat tEkodu nOykodu
vAthaippattE mathi theethaka
lAmaR kettE thadumARida – aduvOnE

kOthaippith thAyoru vEduva
rUpaippeRRE vana vEduvar
kUdaththuk kEkudi yAyvaru – murukOnE

kOthiRpath thArodu mAdhava
ceelacchith thAthiyar chUzhtharu
kOlakkuR RAlamu lAviya – perumALE.