Thiruppugal 977 Muththolaithanai
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தத்தான தனத்த தத்தன
தத்தான தனத்த தத்தன
தத்தான தனத்த தத்தன – தனதான
முத்தோலை தனைக்கி ழித்தயி
லைப்போரி கலிச்சி வத்துமு
கத்தாம ரையிற்செ ருக்கிடும் – விழிமானார்
முற்றாதி ளகிப்ப ணைத்தணி
கச்சார மறுத்த நித்தில
முத்தார மழுத்து கிர்க்குறி – யதனாலே
வித்தார கவித்தி றத்தினர்
பட்டோலை நிகர்த்தி ணைத்தெழு
வெற்பான தனத்தில் நித்தலு – முழல்வேனோ
மெய்த்தேவர் துதித்தி டத்தரு
பொற்பார்க மலப்ப தத்தினை
மெய்ப்பாக வழுத்தி டக்ருபை – புரிவாயே
பத்தான முடித்த லைக்குவ
டிற்றாட வரக்க ருக்கிறை
பட்டாவி விடச்செ யித்தவன் – மருகோனே
பற்பாசன் மிகைச்சி ரத்தைய
றுத்தாத வனைச்சி னத்துறு
பற்போக வுடைத்த தற்பரன் – மகிழ்வோனே
கொத்தார்க தலிப்ப ழக்குலை
வித்தார வருக்கை யிற்சுளை
கொத்தோடு திரக்க தித்தெழு – கயலாரங்
கொட்டாசு ழியிற்கொ ழித்தெறி
சிற்றாறு தனிற்க ளித்திடு
குற்றால ரிடத்தி லுற்றருள் – பெருமாளே.
பதம் பிரித்தது
தத்தான தனத்த தத்தன
தத்தான தனத்த தத்தன
தத்தான தனத்த தத்தன – தனதான
முத்து ஓலை தனைக் கிழித்து அயிலைப்
போர் இகலிச் சிவத்து முகத்
தாமரையில் செருக்கிடும் – விழி மானார்
முற்றாது இளகிப் பணைத்து அணி
கச்சு ஆரம் அறுத்த நித்தில
முத்து ஆரம் அழுத்து உகிர்க் குறி – அதனாலே
வித்தார கவித் திறத்தினர்
பட்டு ஓலை நிகர்த்து இணைத்து எழு
வெற்பான தனத்தில் நித்தலும் – உழல்வேனோ
மெய்த் தேவர் துதித்திடத் தரு
பொற்பு ஆர் கமலப் பதத்தினை
மெய்ப்பாக வழுத்திட க்ருபை – புரிவாயே
பத்தான முடித் தலைக் குவடு
இற்று ஆட அரக்கருக்கு இறை
பட்டு ஆவி விடச் செயித்தவன் – மருகோனே
பற்பாசன் மிகைச் சிரத்தை
அறுத்து ஆதவனைச் சினத்து
உறு பல் போக உடைத்த தற்பரன் – மகிழ்வோனே
கொத்து ஆர் கதலிப் பழக் குலை
வித்தார வருக்கையின் சுளை
கொத்தோடு உதிரக் கதித்து எழு – கயல் ஆரம்
கொட்டா சுழியில் கொழித்து எறி
சிற்றாறு தனில் களித்திடு
குற்றாலர் இடத்தில் உற்று அருள் – பெருமாளே
English
muththOlai thanaikki zhiththayi
laippOri kalicchi vaththumu
kaththAma raiyiRche rukkidum – vizhimAnAr
mutRAthi Lakippa NaiththaNi
kacchAra maRuththa niththila
muththAra mazhuththu kirkkuRi – yathanAlE
viththAra kaviththi Raththinar
pattOlai nikarththi Naiththezhu
veRpAna thanaththil niththalu – muzhalvEnO
meyththEvar thuthiththi daththaru
poRpArka malappa thaththinai
meyppAka vazhuththi dakrupai – purivAyE
paththAna mudiththa laikkuva
ditRAda varakka rukkiRai
pattAvi vidacche yiththavan – marukOnE
paRpAsan mikaicchi raththaiya
RuththAtha vanaicchi naththuRu
paRpOka vudaiththa thaRparan – makizhvOnE
koththArka thalippa zhakkulai
viththAra varukkai yiRchuLai
koththOdu thirakka thiththezhu – kayalArang
kottAsu zhiyiRko zhiththeRi
chitRARu thaniRka Liththidu
kutRAla ridaththi lutRaruL – perumALE.
English Easy Version
muththu Olai thanaik kizhiththu ayilaip
pOr ikalic chivaththu mukath
thAmaraiyil serukkidum – vizhi mAnAr
mutRAthu iLakip paNaiththu aNi
kacchu Aram aRuththa niththila
muththu Aram azhuththu ukirk kuRi – athanAlE
viththAra kavith thiRaththinar
pattu Olai nikarththu iNaiththu ezhu
veRpAna thanaththil niththalum – uzhalvEnO
meyth thEvar thuthiththidath tharu
poRpu Ar kamalap pathaththinai
meyppAka vazhuththida krupai – purivAyE
paththAna mudith thalaik kuvadu
yitRu Ada arakkarukku iRai
pattu Avi vidac cheyiththavan – marukOnE
paRpAsan mikaic chiraththai
aRuththu Athavanaic chinaththu uRu
pal pOka udaiththa thaRparan – makizhvOnE
koththu Ar kathalip pazhak kulai
viththAra varukkaiyin suLai
koththOdu uthirak kathiththu ezhu – kayal Aram
kottA suzhiyil kozhiththu eRi
chitRARu thanil kaLiththidu
kutRAlar idaththil utRu aruL – perumALE