Thiruppugal 979 Karuppuchchaba
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனத்தத் தான தனன தனதன
தனத்தத் தான தனன தனதன
தனத்தத் தான தனன தனதன – தனதான
கருப்புச் சாப னனைய இளைஞர்கள்
ப்ரமிக்கக் காத லுலவு நெடுகிய
கடைக்கட் பார்வை யினிய வனிதையர் – தனபாரங்
களிற்றுக் கோடு கலச மலிநவ
மணிச்செப் போடை வனச நறுமலர்
கனத்துப் பாளை முறிய வருநிக – ரிளநீர்போற்
பொருப்பைச் சாடும் வலியை யுடையன
அறச்சற் றான இடையை நலிவன
புதுக்கச் சார வடமொ டடர்வன – எனநாளும்
புகழ்ச்சிப் பாட லடிமை யவரவர்
ப்ரியப்பட் டாள வுரைசெ யிழிதொழில்
பொகட்டெப் போது சரியை கிரியைசெய் – துயிர்வாழ்வேன்
இருட்டுப் பாரில் மறலி தனதுடல்
பதைக்கக் கால்கொ டுதைசெய் தவன்விழ
எயிற்றுப் போவி யமர ருடலவர் – தலைமாலை
எலுப்புக் கோவை யணியு மவர்மிக
அதிர்த்துக் காளி வெருவ நொடியினில்
எதிர்த்திட் டாடும் வயிர பயிரவர் – நவநீத
திருட்டுப் பாணி யிடப முதுகிடை
சமுக்கிட் டேறி யதிர வருபவர்
செலுத்துப் பூத மலகை யிலகிய – படையாளி
செடைக்குட் பூளை மதிய மிதழிவெ
ளெருக்குச் சூடி குமர வயலியல்
திருப்புத் தூரில் மருவி யுறைதரு – பெருமாளே.
பதம் பிரித்தது
தனத்தத் தான தனன தனதன
தனத்தத் தான தனன தனதன
தனத்தத் தான தனன தனதன – தனதான
கருப்புச் சாபன் அனைய இளைஞர்கள்
ப்ரமிக்கக் காதல் உலவு நெடுகிய
கடைக் கண் பார்வை இனிய வனிதையர் – தன பாரம்
களிற்றுக் கோடு கலச(ம்) மலி நவ
மணிச் செப்பு ஓடை வனச நறு மலர்
கனத்துப் பாளை முறிய வரு நிகர் – இள நீர் போல்
பொருப்பைச் சாடும் வலியை உடையன
அறச் சற்றான இடையை நலிவன
புதுக் கச்சு ஆர வடம் ஒடு அடர்வன – என நாளும்
புகழ்ச்சிப் பாடல் அடிமை அவர் அவர்
ப்ரியப்பட்டு ஆள உரை செய் இழி தொழில்
பொகட்டு எப்போது சரியை கிரியை செய்து – உயிர் வாழ்வேன்
இருட்டுப் பாரில் மறலி தனது உடல்
பதைக்கக் கால் கொடு உதை செய்து அவன் விழ
எயில் துப்பு ஓவி அமரர் உடல் அவர் – தலை மாலை
எலுப்புக் கோவை அணியும் அவர் மிக
அதிர்த்துக் காளி வெருவ நொடியினில்
எதிர்த்திட்டு ஆடும் வயிர பயிரவர் – நவநீத
திருட்டுப் பாணி இடப முதுகு இடை
சமுக்கு இட்டு ஏறி அதிர வருபவர்
செலுத்துப் பூதம் அலகை இலகிய – படையாளி
செடைக்குள் பூளை மதியம் இதழி வெள்
எருக்குச் சூடி குமர வயலியல்
திருப்புத்தூரில் மருவி உறைதரு – பெருமாளே
English
karuppuc chApa nanaiya iLainjarkaL
pramikkak kAtha lulavu nedukiya
kadaikkat pArvai yiniya vanithaiyar – thanapArang
kaLitRuk kOdu kalasa malinava
maNicchep pOdai vanasa naRumalar
kanaththup pALai muRiya varunika – riLaneerpOR
poruppaic chAdum valiyai yudaiyana
aRacchat RAna idaiyai nalivana
puthukkac chAra vadamo dadarvana – enanALum
pukazhcchip pAda ladimai yavaravar
priyappat tALa vuraise yizhithozhil
pokattep pOthu sariyai kiriyaisey – thuyirvAzhvEn
iruttup pAril maRali thanathudal
pathaikkak kAlko duthaisey thavanvizha
eyitRup pOvi yamara rudalavar – thalaimAlai
eluppuk kOvai yaNiyu mavarmika
athirththuk kALi veruva nodiyinil
ethirththit tAdum vayira payiravar – navaneetha
thiruttup pANi yidapa muthukidai
samukkit tERi yathira varupavar
seluththup pUtha malakai yilakiya – padaiyALi
sedaikkut pULai mathiya mithazhive
Lerukkuc cUdi kumara vayaliyal
thirupputh thUril maruvi yuRaitharu – perumALE.
English Easy Version
karuppuc chApan anaiya iLainjarkaL
pramikkak kAthal ulavu nedukiya
kadaik kaN pArvai iniya vanithaiyar – thana pAram
kaLitRuk kOdu kalasa(m) mali nava
maNic cheppu Odai vanasa naRu malar
kanaththup pALai muRiya varu nikar – iLa neer pOl
poruppaic chAdum valiyai udaiyana .
aRac chatRAna idaiyai nalivana
puthuk kacchu Ara vadam odu adarvana – ena nALum
pukazhcchip pAdal adimai avar avar
priyappattu ALa urai sey izhi thozhil
pokattu eppOthu sariyai kiriyai seythu – uyir vAzhvEn
iruttup pAril maRali thanathu udal
pathaikkak kAl kodu uthai seythu avan vizha
eyil thuppu Ovi amarar udal avar – thalai mAlai
eluppuk kOvai aNiyum avar mika
athirththuk kALi veruva nodiyinil
ethirththittu Adum vayira payiravar – navaneetha
thiruttup pANi idapa muthuku idai
samukku ittu ERi athira varupavar
seluththup pUtham alakai ilakiya – padaiyALi
sedaikkuL pULai mathiyam ithazhi
vel erukkuc cUdi kumara vayaliyal
thiruppuththUril maruvi uRaitharu – perumALE.