திருப்புகழ் 980 வேலை தோற்க விழி (திருப்புத்தூர்)

Thiruppugal 980 Velaithorkavizhi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தாத்த தனத்தத் தானன
தான தாத்த தனத்தத் தானன
தான தாத்த தனத்தத் தானன – தனதான

வேலை தோற்க விழித்துக் காதினில்
ஓலை காட்டி நகைத்துப் போதொரு
வீடு காட்டி யுடுத்தப் போர்வையை – நெகிழ்வாகி

மேனி காட்டி வளைத்துப் போர்முலை
யானை காட்டி மறைத்துத் தோதக
வீறு காட்டி யெதிர்த்துப் போரெதிர் – வருவார்மேல்

கால மேற்க வுழப்பிக் கூறிய
காசு கேட்ட துகைப்பற் றாஇடை
காதி யோட்டி வருத்தப் பாடுடன் – வருவார்போல்

காதல் போற்று மலர்ப்பொற் பாயலின்
மீத ணாப்பு மசட்டுச் சூளைகள்
காம நோய்ப்ப டுசித்தத் தீவினை – யொழியேனோ

ஆல கோட்டு மிடற்றுச் சோதிக
பாலி பார்ப்ப திபக்ஷத் தால்நட
மாடி தாத்தி ரிபட்சித் தாவென – வுமிழ்வாளி

ஆடல் கோத்த சிலைக்கைச் சேவக
னோடை பூத்த தளக்கட் சானவி
யாறு தேக்கி ய கற்றைச் சேகர – சடதாரி

சீல மாப்ப திமத்தப் பாரிட
சேனை போற்றி டுமப்பர்க் கோதிய
சேத னார்த்த ப்ரசித்திக் கேவரு – முருகோனே

சேல றாக்க யல்தத்தச் சூழ்வய
லூர வேற்க ரவிப்ரர்க் காதர
தீர தீர்த்த திருப்புத் தூருறை – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தாத்த தனத்தத் தானன
தான தாத்த தனத்தத் தானன
தான தாத்த தனத்தத் தானன – தனதான

வேலை தோற்க விழித்துக் காதினில்
ஓலை காட்டி நகைத்துப் போத ஒரு
வீடு காட்டி உடுத்தப் போர்வையை – நெகிழ்வாகி

மேனி காட்டி வளைத்துப் போர் முலை
யானை காட்டி மறைத்துத் தோதக
வீறு காட்டி எதிர்த்துப் போர் எதிர் – வருவார் மேல்

காலம் ஏற்க உழப்பிக் கூறிய
காசு கேட்டு அது கை பற்றா இடை
காதி ஓட்டி வருத்தப் பாடுடன் – வருவார் போல்

காதல் போற்று மலர்ப் பொன் பாயலின்
மீது அணாப்பும் அசட்டுச் சூளைகள்
காம நோய்ப் படு சித்தத் தீ வினை – ஒழியேனோ

ஆல கோட்டு மிடற்றுச் சோதி
கபாலி பார்ப்பதி பக்ஷத்தால் நடமாடி
தாத்திரி பட்சித்தா வென – உமிழ் வாளி

ஆடல் கோத்த சிலைக் கைச் சேவகன்
ஓடை பூத்த தளக் கள் சானவி
ஆறு தேக்கிய கற்றைச் சேகர – சடதாரி

சீல(ம்) மாப் பதி மத்தப் பாரிட
சேனை போற்றிடும் அப்பர்க்கு ஓதிய
சேதன அர்த்த(ம்) ப்ரசித்திக்கே வரு – முருகோனே

சேல் அறாக் கயல் தத்தச் சூழ் வயலூர
வேல் கர விப்ரர்க்கு ஆதர தீர
தீர்த்த திருபுத்தூர் உறை – பெருமாளே

English

vElai thORka vizhiththuk kAthinil
Olai kAtti nakaiththup pOthoru
veedu kAtti yuduththap pOrvaiyai – nekizhvAki

mEni kAtti vaLaiththup pOrmulai
yAnai kAtti maRaiththuth thOthaka
veeRu kAtti yethirththup pOrethir – varuvArmEl

kAla mERka vuzhappik kURiya
kAsu kEtta thukaippat RAidai
kAthi yOtti varuththap pAdudan – varuvArpOl

kAthal pOtRu malarppoR pAyalin
meetha NAppu masattuc cULaikaL
kAma nOyppa dusiththath theevinai – yozhiyEnO

Ala kOttu midatRuc chOthika
pAli pArppa thipakshath thAlnada
mAdi thAththi ripatchith thAvena – vumizhvALi

Adal kOththa silaikkaic chEvaka
nOdai pUththa thaLakkat chAnavi
yARu thEkki yakatRaic chEkara – chadathAri

seela mAppa thimaththap pArida
sEnai pOtRi dumappark kOthiya
sEtha nArththa prasiththik kEvaru – murukOnE

sEla RAkka yalthaththac cUzhvaya
lUra vERka raviprark kAthara
theera theerththa thirupputh thUruRai – perumALE.

English Easy Version

vElai thORka vizhiththuk kAthinil
Olai kAtti nakaiththup pOtha oru
veedu kAtti uduththap pOrvaiyai – nekizhvAki

mEni kAtti vaLaiththup pOr mulai
yAnai kAtti maRaiththuth thOthaka .
veeRu kAtti ethirththup pOr ethir – varuvAr mEl

kAlam ERka uzhappik kURiya
kAsu kEttu athu kai patRA idai
kAthi Otti varuththap pAdudan – varuvAr pOl

kAthal pOtRu malarp pon pAyalin
meethu aNAppum asattuc cULaikaL
kAma nOyp padu siththath theevinai – ozhiyEnO

Ala kOttu midatRuc chOthi kapAli
pArppathi pakshaththAl nadamAdi
thAththiri patchiththA vena – umizh vALi

Adal kOththa silaik kaic chEvakan
Odai pUththa thaLak kaL chAnavi
ARu thEkkiya katRaic chEkara – chadathAri

seela(m) mAp pathi maththap pArida
sEnai pOtRidum apparkku Othiya
sEthana arththa(m) prasiththikkE varu – murukOnE

sEl aRAk kayal thaththac cUzh vayalUra
vEl kara viprarkku Athara
theera theerththa thirupuththUr uRai – perumALE