திருப்புகழ் 981 ஊனாரும் உட்பிணியும் (திருவாடானை)

Thiruppugal 981 Unarumutpiniyum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானான தத்ததன தானான தத்ததன
தானான தத்ததன – தனதான

ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுட
லூதாரி பட்டொழிய – வுயிர்போனால்

ஊரார் குவித்துவர ஆவா வெனக்குறுகி
ஓயா முழக்கமெழ – அழுதோய

நானா விதச்சிவிகை மேலே கிடத்தியது
நாறா தெடுத்தடவி – யெரியூடே

நாணாமல் வைத்துவிட நீறாமெ னிப்பிறவி
நாடா தெனக்குனருள் – புரிவாயே

மானாக துத்திமுடி மீதே நிருத்தமிடு
மாயோனு மட்டொழுகு – மலர்மீதே

வாழ்வா யிருக்குமொரு வேதாவு மெட்டிசையும்
வானோரு மட்டகுல – கிரியாவும்

ஆனா வரக்கருடன் வானார் பிழைக்கவரு
மாலால முற்றவமு – தயில்வோன்முன்

ஆசார பத்தியுடன் ஞானாக மத்தையருள்
ஆடானை நித்தமுறை – பெருமாளே.

பதம் பிரித்தது

தானான தத்ததன தானான தத்ததன
தானான தத்ததன – தனதான

ஊனாரு முட்பிணியு மானா கவித்தவுடல்
ஊதாரி பட்டொழிய – வுயிர்போனால்

ஊரார் குவித்துவர ஆவா வெனக்குறுகி
ஓயா முழக்கமெழ – அழுதோய

நானா விதச்சிவிகை மேலே கிடத்தி அது
நாறாது எடுத்து அடவி – யெரியூடே

நாணாமல் வைத்துவிட நீறாமென இப்பிறவி
நாடா தெனக்கு உனருள் – புரிவாயே

மா நாக துத்திமுடி மீதே நிருத்தமிடு
மாயோனும் மட்டொழுகு – மலர்மீதே

வாழ்வாயிருக்குமொரு வேதாவும் எட்டிசையும்
வானோரும் அட்டகுல – கிரியாவும்

ஆனா வரக்கருடன் வானார் பிழைக்க வரும்
ஆலால முற்ற அமுதயில் – வோன் முன்

ஆசார பத்தியுடன் ஞான ஆகமத்தையருள்
ஆடானை நித்தம் உறை – பெருமாளே

English

UnArum utpiNiyum AnAka viththa udal
UdhAri pattozhiya – uyirpOnAl

UrAr kuviththu vara AvA enakkuRugi
OyA muzhakkumezha – azhudhOya

nAnA vidhach sivigai mElE kidaththi adhu
nARAdh eduth atavi – eriyUdE

nANAmal vaiththuvida neeRAm enippiRavi
nAdAdh enak kunaruL – purivAyE

mAnAga thuththi mudi meedhE niruththam idu
mAyOnu mattozhugu – malarmeedhE

vAzhvAy irukkum oru vEdhAvum ettisaiyum
vAnOrum attakula – giriyAvum

AnA arakkarudan vAnAr pizhaikka varum
AlAlam utravamudh – ayilvOnmun

AchAra baththi yudan nyAnAga maththai aruL
AdAnai niththa muRai – perumALE.

English Easy Version

UnArum utpiNiyum AnA kaviththa udal
UdhAri pattozhiya – uyirpOnAl

UrAr kuviththu vara AvA enakkuRugi
OyA muzhakkumezha – azhudhOya

nAnA vidhach sivigai mElE kidaththi adhu
nARAdh eduth atavi – eriyUdE

nANAmal vaiththuvida neeRAm enippiRavi
nAdAdh enak kunaruL – purivAyE

mAnAga thuththi mudi meedhE niruththam
idu mAyOnu mattozhugu – malarmeedhE

vAzhvAy irukkum oru vEdhAvum ettisaiyum
vAnOrum attakula – giriyAvum

AnA arakkarudan vAnAr pizhaikka varum
AlAlam utravamudh – ayilvOn mun

AchAra baththi yudan nyAnAga maththai aruL
AdAnai niththa muRai – perumALE