திருப்புகழ் 982 கற்பக ஞானக் கடவுள் (உத்தரகோசமங்கை)

Thiruppugal 982 Karpagagnanakkadavul

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தன தானத் தனதன தந்தத்
தத்தன தானத் தனதன தந்தத்
தத்தன தானத் தனதன தந்தத் – தனதான

கற்பக ஞானக் கடவுண்மு னண்டத்
திற்புத சேனைக் கதிபதி யின்பக்
கட்கழை பாகப் பமமுது வெண்சர்க் – கரைபால்தேன்

கட்டிள நீர்முக் கனிபய றம்பொற்
றொப்பையி னேறிட் டருளிய தந்திக்
கட்டிளை யாய்பொற் பதமதி றைஞ்சிப் – பரியாய

பொற்சிகி யாய்கொத் துருண்மணி தண்டைப்
பொற்சரி நாதப் பரிபுர என்றுப்
பொற்புற வோதிக் கசிவொடு சிந்தித் – தினிதேயான்

பொற்புகழ் பாடிச் சிவபத மும்பெற்
றுப்பொருள் ஞானப் பெருவெளி யும்பெற்
றுப்புக லாகத் தமுதையு முண்டிட் – டிடுவேனோ

தெற்பமு ளாகத் திரள்பரி யும்பற்
குப்பைக ளாகத் தசுரர்பி ணந்திக்
கெட்டையு மூடிக் குருதிகள் மங்குற் – செவையாகித்

திக்கய மாடச் சிலசில பம்பைத்
தத்தன தானத் தடுடுடு வென்கச்
செப்பறை தாளத் தகுதொகு வென்கச் – சிலபேரி

உற்பன மாகத் தடிபடு சம்பத்
தற்புத மாகத் தமரர்பு ரம்பெற்
றுட்செல்வ மேவிக் கனமலர் சிந்தத் – தொடுவேலா

உட்பொருள் ஞானக் குறமக ளும்பற்
சித்திரை நீடப் பரிமயில் முன்பெற்
றுத்தர கோசத் தலமுறை கந்தப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தன தானத் தனதன தந்தத்
தத்தன தானத் தனதன தந்தத்
தத்தன தானத் தனதன தந்தத் – தனதான

கற்பக ஞானக் கடவுள் முன் அண்டத்தில்
புத சேனைக்கு அதிபதி இன்பக்
கள் கழை பாகு அப்பம் அமுது வெண் – சர்க்கரை பால் தேன்

கட்டு இளநீர் முக்கனி பயறு அம் பொன்
தொப்பையின் ஏறிட்டு அருளிய தந்திக்
கட்டு இளையாய் பொன் பதம் அது இறைஞ்சிப் – பரியாய

பொன் சிகியாய் கொத்து உருண் மணித் தண்டை
பொன் சரி நாதப் பரி புர என்றுப்
பொற்பு உற ஓதிக் கசிவொடு சிந்தித்து – இனிதே யான்

பொன் புகழ் பாடிச் சிவ பதமும் பெற்றுப்
பொருள் ஞானப் பெரு வெளியும் பெற்று
புகல் ஆகத்து அமுதையும் உண்டிட்டு – இடுவேனோ

தெற்பம் உள ஆகத் திரள் பரி உம்பல்
குப்பைகள் ஆகத்து அசுரர் பிணம் திக்கு
எட்டையும் மூடிக் குருதிகள் மங்குல் – செவை ஆகி

திக்(கு) கயம் ஆடச் சிலசில பம்பைத்
தத்தன தானத் தடுடுடு என்கச்
செப்பு அறை தாளம் தகு தொகு என்க – சில பேரி

தடி படு சம்பத்து உற்பனமாக
அற்புத மாகத்து அமரர் புரம் பெற்று
உள் செல்வம் மேவிக் கன மலர் சிந்தத் – தொடு வேலா

உள் பொருள் ஞானக் குற மகள் உம்பல்
சித்திரை நீடப் பரி மயில் முன் பெற்று
உத்தர கோசத் தலம் உறை கந்தப் – பெருமாளே.

English

kaRpaka njAnak kadavuNmu naNdath
thiRputha sEnaik kathipathi yinpak
katkazhai pAkap pamamuthu veNsark – karaipAlthEn

kattiLa neermuk kanipaya Rampot
Roppaiyi nERit taruLiya thanthik
kattiLai yAypoR pathamathi Rainjip – pariyAya

poRsiki yAykoth thuruNmaNi thaNdaip
poRcari nAthap paripura enRup
poRpuRa vOthik kasivodu sinthith – thinithEyAn

poRpukazh pAdic civapatha mumpet
RupporuL njAnap peruveLi yumpet
Ruppuka lAkath thamuthaiyu muNdit – tiduvEnO

theRpamu LAkath thiraLpari yumpaR
kuppaika LAkath thasurarpi Nanthik
kettaiyu mUdik kuruthikaL manguR – cevaiyAkith

thikkaya mAdac cilasila pampaith
thaththana thAnath thadududu venkac
ceppaRai thALath thakuthoku venkac – cilapEri

uRpana mAkath thadipadu sampath
thaRputha mAkath thamararpu rampet
Rutcelva mEvik kanamalar sinthath – thoduvElA

utporuL njAnak kuRamaka LumpaR
ciththirai needap parimayil munpet
Ruththara kOsath thalamuRai kanthap – perumALE.

English Easy Version

kaRpaka njAnak kadavuL mun aNdath
thil putha sEnaikku athipathi inpak
kaL kazhai pAku appam amuthu veN – sarkkarai pAl thEn

kattu iLaneer mukkani payaRu am pon
thoppaiyin ERittu aruLiya thanthik
kattu iLaiyAy pon patham athu iRainjip – pariyAya

pon sikiyAy koththu uruN maNith thaNdai
pon sari nAthap pari pura enRup
poRpu uRa Othik kasivodu sinthiththu – inithE yAn

pon pukazh pAdic civa pathamum petRup
poruL njAnap peru veLiyum petRu
pukal Akaththu amuthaiyum uNdittu – iduvEnO

theRpam uLa Akath thiraL pari umpal
kuppaikaL Akaththu asurar piNam thikku
ettaiyum mUdik kuruthikaL mangul – sevai Aki

thik(ku) kayam Adas silasila pampaith
thaththana thAnath thadududu enkas
seppu aRai thALam thaku thoku enka – sila pEri

uRpanamAka thadi padu sampaththu
aRputha mAkaththu amarar puram petRu
uL selvam mEvik kana malar sinthath – thodu vElA

uL poruL njAnak kuRa makaL umpal
siththirai needap pari mayil mun petRu
uththara kOsath thalam uRai kanthap – perumALE.