திருப்புகழ் 984 வானோர் வழுத்துனது (இராமேசுரம்)

Thiruppugal 984 Vanorvazhuththunadhu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானா தனத்ததன தானா தனத்ததன
தானா தனத்ததன – தனதான

வானோர் வழுத்துனது பாதா ரபத்மமலர்
மீதே பணிக்கும்வகை – யறியாதே

மானார் வலைக்கணதி லேதூ ளிமெத்தையினி
லூடே யணைத்துதவு – மதனாலே

தேனோ கருப்பிலெழு பாகோ விதற்கிணைக
ளேதோ வெனக்கலவி – பலகோடி

தீரா மயக்கினொடு நாகா படத்திலெழு
சேறா டல்பெற்றதுய – ரொழியேனோ

மேனா டுபெற்றுவளர் சூரா திபற்கெதிரி
னூடே கிநிற்குமிரு – கழலோனே

மேகா ரவுக்ரபரி தானே றிவெற்றிபுனை
வீரா குறச்சிறுமி – மணவாளா

ஞானா பரற்கினிய வேதா கமப்பொருளை
நாணா துரைக்குமொரு – பெரியோனே

நாரா யணற்குமரு காவீ றுபெற்றிலகு
ராமே சுரத்திலுறை – பெருமாளே.

பதம் பிரித்தது

தானா தனத்ததன தானா தனத்ததன
தானா தனத்ததன – தனதான

வானோர் வழுத்து உனது பாதார பத்ம மலர்
மீதே பணிக்கும் வகை – அறியாதே

மானார் வலைக் கண் அதிலே தூளி மெத்தையினில்
ஊடே அணைத்து உதவும் – அதனாலே

தேனோ கருப்பில் எழு பாகோ இதற்கு இணைகள்
ஏதோ எனக் கலவி – பல கோடி

தீரா மயக்கினொடு நாகா படத்தில் எழு
சேறு ஆடல் பெற்ற துயர் – ஒழியேனோ

மேல்நாடு பெற்று வளர் சூர அதிபற்கு எதிரின்
ஊடு ஏகி நிற்கும் இரு – கழலோனே

மேகார உக்ர பரி தான் ஏறி வெற்றி புனை
வீரா குறச் சிறுமி – மணவாளா

ஞானா பரற்கு இனிய வேத ஆகமப் பொருளை
நாணாது உரைக்கும் ஒரு – பெரியோனே

நாராயணற்கு மருகா வீறு பெற்று இலகு
ராமேசுரத்தில் உறை – பெருமாளே

English

vAnOr vazhuththunathu pAthA rapathmamalar
meethE paNikkumvakai – yaRiyAthE

mAnAr valaikkaNathi lEthULi meththaiyini
lUdE yaNaiththuthavu – mathanAlE

thEnO karuppilezhu pAkO vithaRkiNaika
LEthO venakkalavi – palakOdi

theerA mayakkinodu nAkA padaththilezhu
chERA dalpetRathuya – rozhiyEnO

mEnA dupetRuvaLar cUrA thipaRkethiri
nUdEki niRkumiru – kazhalOnE

mEkA ravukrapari thAnE RivetRipunai
veerA kuRacchiRumi – maNavALA

njAnA paraRkiniya vEthA kamapporuLai
nANA thuraikkumoru – periyOnE

nArA yaNaRkumaru kAvee RupetRilaku
rAmE suraththiluRai – perumALE.

English Easy Version

vAnOr vazhuththu unathu pAthAra pathma malar
meethE paNikkum vakai – aRiyAthE

mAnAr valaik kaN athilE thULi meththaiyinil
UdE aNaiththu uthavum – athanAlE

thEnO karuppil ezhu pAkO ithaRku iNaikaL
EthO enak kalavi pala – kOdi

theerA mayakkinodu nAkA padaththil ezhu
chERu Adal petRa thuyar – ozhiyEnO

mElnAdu petRu vaLar cUra athipaRku ethirin
Udu Eki niRkum iru – kazhalOnE

mEkAra ukra pari thAn ERi vetRi punai
veerA kuRac chiRumi – maNavALA

njAnA paraRku iniya vEtha Akamap poruLai
nANAthu uraikkum oru – periyOnE

nArAyaNaRku marukA veeRu petRu ilaku
rAmEsuraththil uRai – perumALE