திருப்புகழ் 988 ஆகத்தே தப்பாமல் (காமத்தூர்)

Thiruppugal 988 AgaththEthappAmal (kAmaththUr)

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானத் தானத் தானத் தானத்
தானத் தானத் – தனதானா

ஆகத் தேதப் பாமற் சேரிக்
கார்கைத் தேறற் – கணையாலே

ஆலப் பாலைப் போலக் கோலத்
தாயக் காயப் – பிறையாலே

போகத் தேசற் றேதற் பாயற்
பூவிற் றீயிற் – கருகாதே

போதக் காதற் போகத் தாளைப்
பூரித் தாரப் – புணராயே

தோகைக் கேயுற் றேறித் தோயச்
சூர்கெட் டோடப் – பொரும்வேலா

சோதிக் காலைப் போதக் கூவத்
தூவற் சேவற் – கொடியோனே

பாகொத் தேசொற் பாகத் தாளைப்
பாரித் தார்நற் – குமரேசா

பாரிற் காமத் தூரிற் சீலப்
பாலத் தேவப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானத் தானத் தானத் தானத்
தானத் தானத் – தனதானா

ஆகத்தே தப்பாமல் சேர் இக்கு
ஆர்கை தேறல் – கணையாலே

ஆலப் பாலைப் போலக் கோலத்து
ஆயக் காயப் – பிறையாலே

போகத்து ஏசற்றே தன் பாயல்
பூவில் தீயில் – கருகாதே

போதக் காதல் போகத் தாளைப்
பூரித்து ஆரப் – புணராயே

தோகைக்கே உற்று ஏறித் தோயம்
சூர் கெட்டு ஓடப் – பொரும் வேலா

சோதிக் காலைப் போதக் கூவு அத்
தூவல் சேவல் – கொடியோனே

பாகு ஒத்தே சொல் பாகத்தாளைப்
பாரித்து ஆர் நல் – குமரேசா

பாரில் காமத்தூரில் சீலப்
பாலத் தேவப் – பெருமாளே

English

Akath thEthap pAmaR sErik
kArkaith thERaR – kaNaiyAlE

Alap pAlaip pOlak kOlath
thAyak kAyap – piRaiyAlE

pOkath thEsat REthaR pAyaR
pUvit ReeyiR – karukAthE

pOthak kAthaR pOkath thALaip
pUrith thArap – puNarAyE

thOkaik kEyut RERith thOyac
cUrket tOdap – porumvElA

sOthik kAlaip pOthak kUvath
thUvaR cEvaR – kodiyOnE

pAkoth thEsoR pAkath thALaip
pArith thArnaR – kumarEsA

pAriR kAmath thUriR ceelap
pAlath thEvap – perumALE.

English Easy Version

AkaththE thappAmal sEr ikku
Arkai thERal – kaNaiyAlE

Alap pAlaip pOlak kOlaththu
Ayak kAyap – piRaiyAlE

pOkaththu EsatRE than pAyal
pUvil theeyil – karukAthE

pOthak kAthal pOkath thALaip
pUriththu Arap – puNarAyE

thOkaikkE utRu ERith thOyam
cUr kettu Odap – porum vElA

sOthik kAlaip pOthak kUvu ath
thUval sEval – kodiyOnE

pAku oththE sol pAkaththALaip
pAriththu Ar nal – kumarEsA

pAril kAmaththUril seelap
pAlath thEvap – perumALE