திருப்புகழ் 989 மின்னார் பயந்த (முள்வாய்)

Thiruppugal 989 Minnarbayandha

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தன்னா தனந்த தந்த, தன்னா தனந்த தந்த
தன்னா தனந்த தந்த – தனதான

மின்னார் பயந்த மைந்தர் தன்னா டினங்கு விந்து
வெவ்வே றுழன்று ழன்று – மொழிகூற

விண்மேல் நமன்க ரந்து மண்மே லுடம்பொ ருங்க
மென்னா ளறிந்த டைந்து – உயிர்போமுன்

பொன்னார் சதங்கை தண்டை முந்நூல் கடம்ப ணிந்து
பொய்யார் மனங்கள் தங்கு – மதுபோலப்

பொல்லே னிறைஞ்சி ரந்த சொன்னீ தெரிந்த ழுங்கு
புன்னா யுளுங்க வின்று – புகுவாயே

பன்னா ளிறைஞ்சு மன்பர் பொன்னா டுறங்கை தந்து
பன்னா கணைந்து சங்க – முறவாயிற்


பன்னூல் முழங்க லென்று விண்ணோர் மயங்க நின்று
பண்ணூ துகின்ற கொண்டல் – மருகோனே

முன்னாய் மதன்க ரும்பு வின்னேர் தடந்தெ ரிந்து
முன்னோர் பொருங்கை யென்று – முனையாட

மொய்வார் நிமிர்ந்த கொங்கை மெய்ம்மா தர்வந்தி றைஞ்சு
முள்வாய் விளங்க நின்ற – பெருமாளே.

பதம் பிரித்தது

தன்னா தனந்த தந்த, தன்னா தனந்த தந்த
தன்னா தனந்த தந்த – தனதான

மின்னார் பயந்த மைந்தர் தன் நாடு இனம் குவிந்து
வெவ்வேறு உழன்று உழன்று – மொழி கூற

விண் மேல் நமன் கரந்து மண் மேல் உடம்பு ஒருங்கு
அம் மெல் நாள் அறிந்து அடைந்து – உயிர் போ முன்

பொன் ஆர் சதங்கை தண்டை முந்நூல் கடம்பு அணிந்து
பொய்யார் மனங்கள் தங்கும் – அது போல

பொல்லேன் இறைஞ்சி இரந்த சொல் நீ தெரிந்து அழுங்கு
புல் நாய் உ(ள்)ளும் கவின்று – புகுவாயே

பன்னாள் இறைஞ்சும் அன்பர் பொன் நாடு உற அங்கை தந்து
பன்னாக(ம்) அணைந்து சங்கம் – உற வாயில்

பன்னூல் முழங்கல் என்று விண்ணோர் மயங்க நின்று
பண் ஊதுகின்ற கொண்டல் – மருகோனே

முன்னாய் மதன் கரும்பு வில் நேர் தடம் தெரிந்து .
முன் ஓர் பொரு(ங்)கை என்று – முனை ஆட

மொய் வார் நிமிர்ந்த கொங்கை மெய்ம் மாதர் வந்து இறைஞ்சு
முள்வாய் விளங்க நின்ற – பெருமாளே.

English

minnAr payantha mainthar thannA dinangu vinthu
vevvE RuzhanRu zhanRu – mozhikURa

viNmEl namanka ranthu maNmE ludampo runga
mennA LaRintha dainthu – uyirpOmun

ponnAr sathangai thaNdai munnUl kadampa Ninthu
poyyAr manangaL thangu – mathupOlap

pollE niRainji rantha sonnee therintha zhungu
punnA yuLumka vinRu – pukuvAyE

pannA LiRainju manpar ponnA duRangai thanthu
pannA kaNainthu sanga – muRavAyiR

pannUl muzhanga lenRu viNNOr mayanga ninRu
paNNU thukinRa koNdal – marukOnE

munnAy mathanka rumpu vinnEr thadanthe rinthu
munnOr porungai yenRu – munaiyAda

moyvAr nimirntha kongai meymmA tharvanthi Rainju
muLvAy viLanga ninRa – perumALE.

English Easy Version

minnAr payantha mainthar than nAdu inam kuvinthu
vevvERu uzhanRu uzhanRu – mozhi kURa

viN mEl naman karanthu maN mEl udampu orungu
am mel nAL aRinthu adainthu – uyir pO mun

pon Ar sathangai thaNdai munnUl kadampu aNinthu
poyyAr manangaL thangum – athu pOla

pollEn iRainji irantha sol nee therinthu azhungu
pul nAy u(L)Lum kavinRu – pukuvAyE

pannAL iRainjum anpar pon nAdu uRa angai thanthu
pannAka(m) aNainthu sangam – uRa vAyil

pannUl muzhangal enRu viNNOr mayanga ninRu
paN UthukinRa koNdal – marukOnE

munnAy mathan karumpu vil nEr thadam therinthu
mun Or poru(ng)kai enRu – munai Ada

moy vAr nimirntha kongai meym mAthar vanthu iRainju
muLvAy viLanga ninRa – perumALE.