திருப்புகழ் 990 ஆலையான மொழிக்கு (வாகைமாநகர்)

Thiruppugal 990 Aalaiyanamozhikku

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தான தனத்த, தான தான தனத்த
தான தான தனத்த – தனதான

ஆலை யான மொழிக்கு மாளை யூடு கிழிக்கு
மால கால விழிக்கு – முறுகாதல்

ஆசை மாத ரழைக்கு மோசை யான தொனிக்கு
மார பார முலைக்கு – மழகான

ஓலை மேவு குழைக்கு மோடை யானை நடைக்கு
மோரை சாயு மிடைக்கு – மயல்மேவி

ஊறு பாவ வுறுப்பி லூறல் தேறு கரிப்பி
லூர வோடு விருப்பி – லுழல்வேனோ

வேலை யாக வளைக்கை வேடர் பாவை தனக்கு
மீறு காத லளிக்கு – முகமாய

மேவு வேடை யளித்து நீடு கோல மளித்து
மீள வாய்மை தெளித்து – மிதண்மீது

மாலை யோதி முடித்து மாது தாள்கள் பிடித்து
வாயி லூறல் குடித்து – மயல்தீர

வாகு தோளி லணைத்து மாக மார்பொ ழிலுற்ற
வாகை மாந கர்பற்று – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தான தனத்த, தான தான தனத்த
தான தான தனத்த – தனதான

ஆலை ஆன மொழிக்கும் ஆளை ஊடு கிழிக்கும்
ஆல கால விழிக்கும் – உறு காதல்

ஆசை மாதர் அழைக்கும் ஓசையான தொனிக்கும்
ஆர பார முலைக்கும் – அழகான

ஓலை மேவு குழைக்கும் ஓடை யானை நடைக்கும்
ஓரை சாயும் இடைக்கும் – மயல் மேவி

ஊறு பாவு அவ் உறுப்பில் ஊறல் தேறு(ம்) கரிப்பில்
ஊர ஓடு விருப்பில் – உழல்வேனோ

வேலையாக வளைக்கை வேடர் பாவை தனக்கு
மீறு காதல் அளிக்கும் – முகமாய

மேவு வேடை அளித்து நீடு கோலம்* அளித்து
மீள வாய்மை தெளித்தும் – இதண் மீது

மாலை ஓதி முடித்து மாது தாள்கள் பிடித்து
வாயில் ஊறல் குடித்து – மயல் தீர

வாகு தோளில் அணைத்தும் மாகம் ஆர் பொழில் உற்ற
வாகை மா நகர் பற்று – பெருமாளே.

English

Alai yAna mozhikku mALai yUdu kizhikku
mAla kAla vizhikku – muRukAthal

Asai mAtha razhaikku mOsai yAna thonikku
mAra pAra mulaikku – mazhakAna

Olai mEvu kuzhaikku mOdai yAnai nadaikku
mOrai sAyu midaikku – mayalmEvi

URu pAva vuRuppi lURal thERu karippi
lUra vOdu viruppi – luzhalvEnO

vElai yAka vaLaikkai vEdar pAvai thanakku
meeRu kAtha laLikku – mukamAya

mEvu vEdai yaLiththu needu kOla maLiththu
meeLa vAymai theLiththu – mithaNmeethu

mAlai yOthi mudiththu mAthu thALkaL pidiththu
vAyi lURal kudiththu – mayaltheera

vAku thOLi laNaiththu mAka mArpo zhilutRa
vAkai mAna karpatRu – perumALE.

English Easy Version

Alai Ana mozhikkum ALai Udu kizhikkum
Ala kAla vizhikkum – uRu kAthal

Asai mAthar azhaikkum OsaiyAna thonikkum
Ara pAra mulaikkum – azhakAna

Olai mEvu kuzhaikkum Odai yAnai nadaikkum
Orai sAyum idaikkum – mayal mEvi

URu pAvu av uRuppil URal thERu(m) karippil
Ura Odu viruppil – uzhalvEnO

vElaiyAka vaLaikkai vEdar pAvai thanakku
meeRu kAthal aLikkum – mukamAya

mEvu vEdai aLiththu needu kOlam* aLiththu
meeLa vAymai theLiththu – ithaN meethu

mAlai Othi mudiththu mAthu thALkaL pidiththu
vAyil URal kudiththu – mayal theera

vAku thOLil aNaiththum mAkam Ar pozhil utRa
vAkai mA nakar patRu – perumALE.