Thiruppugal 991 Thiruguserindha
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த – தனதான
திருகுசெ றிந்த குழலைவ கிர்ந்து
முடிமலர் கொண்டொ – ரழகாகச்
செயவரு துங்க முகமும்வி ளங்க
முலைகள்கு லுங்க – வருமோக
அரிவையர் தங்கள் வலையில்வி ழுந்து
அறிவுமெ லிந்து – தளராதே
அமரர்ம கிழ்ந்து தொழுதுவ ணங்கு
னடியிணை யன்பொ – டருள்வாயே
வரையைமு னிந்து விழவெக டிந்து
வடிவெலெ றிந்த – திறலோனே
மதுரித செஞ்சொல் குறமட மங்கை
நகிலது பொங்க – வரும்வேலா
விரைசெறி கொன்றை யறுகுபு னைந்த
விடையரர் தந்த – முருகோனே
விரைமிகு சந்து பொழில்கள்து லங்கு
விசுவைவி ளங்கு – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த – தனதான
திருகு செறிந்த குழலை வகிர்ந்து
முடி மலர் கொண்டு ஒர் – அழகாகச்
செ(ய்)ய வரு(ம்) துங்க முகமும் விளங்க
முலைகள் குலுங்க – வரும் மோக
அரிவையர் தங்கள் வலையில் விழுந்து
அறிவு மெலிந்து – தளராதே
அமரர் மகிழ்ந்து தொழுது வணங்கு(ம்)
உன் அடி இணை அன்பொடு – அருள்வாயே
வரையை முனிந்து விழவெ கடிந்து
வடிவெல் எறிந்த – திறலோனே
மதுரித செம் சொல் குற மட மங்கை
நகில் அது பொங்க – வரும் வேலா
விரை செறி கொன்றை அறுகு புனைந்த
விடையரர் தந்த – முருகோனே
விரை மிகு சந்து பொழில்கள் துலங்கு
விசுவை விளங்கு(ம்) – பெருமாளே
English
thirukuse Rintha kuzhalaiva kiarnthu
mudimalar koNdo – razhakAka
seyavaru thunga mukamumvi Langa
mulaikaLku lunga – varumOka
arivaiyar thangaL valaiyilvi zhunthu
aRivume linthu – thaLarAthE
amararma kizhnthu thozhuthuva Nangu
nadiyiNai yanpo – daruLvAyE
varaiyaimu ninthu vizhaveka dinthu
vadivele Rintha – thiRalOnE
mathuritha senjol kuRamada mangai
nakilathu ponga – varumvElA
viraiseRi konRai yaRukupu naintha
vidaiyarar thantha – murukOnE
viraimiku santhu pozhilkaLthu langu
visuvaivi Langu – perumALE.
English Easy Version
thiruku seRintha kuzhalai vakirnthu
mudiya malar koNdu – orazhakAka
se(y)ya varu(m) thunga mukamum viLanga
mulaikaL kulunga – varum mOka
arivaiyar thangaL valaiyil vizhunthu
aRivu melinthu – thaLarAthE
amarar makizhnthu thozhuthu vaNangu(m)
un adi iNai anpodu – aruLvAyE
varaiyai muninthu vizhave kadinthu
vadivel eRintha – thiRalOnE
mathuritha sem sol kuRa mada mangai
nakil athu ponga – varum vElA
virai seRi konRai aRuku punaintha
vidaiyarar thantha – murukOnE
virai miku santhu pozhilkaL thulangu
visuvai viLangu(m) – perumALE