திருப்புகழ் 993 ஓது முத்தமிழ் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 993 Odhumuththamizh

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன – தந்ததான

ஓது முத்தமிழ் தேராவ்ரு தாவனை
வேத னைப்படு காமாவி காரனை
ஊன முற்றுழல் ஆபாச ஈனனை – அந்தர்யாமி

யோக மற்றுழல் ஆசாப சாசனை
மோக முற்றிய மோடாதி மோடனை
ஊதி யத்தவம் நாடாத கேடனை – அன்றிலாதி

பாத கக்கொலை யேசூழ்க பாடனை
நீதி சற்றுமி லாகீத நாடனை
பாவி யர்க்குளெ லாமாது ரோகனை – மண்ணின்மீதில்

பாடு பட்டலை மாகோப லோபனை
வீடு பட்டழி கோமாள வீணனை
பாச சிக்கினில் வாழ்வேனை யாளுவ – தெந்தநாளோ

ஆதி சற்குண சீலா நமோநம
ஆட கத்திரி சூலா நமோநம
ஆத ரித்தருள் பாலா நமோநம – உந்தியாமை

ஆன வர்க்கினி யானே நமோநம
ஞான முத்தமிழ் தேனே நமோநம
ஆர ணற்கரி யானே நமோநம – மன்றுளாடும்

தோதி தித்திமி தீதா நமோநம
வேத சித்திர ரூபா நமோநம
சோப மற்றவர் சாமீ நமோநம – தன்மராச

தூத னைத்துகை பாதா நமோநம
நாத சற்குரு நாதா நமோநம
ஜோதி யிற்ஜக ஜோதீ மஹாதெவர் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன – தந்ததான

ஓது முத்தமிழ் தேரா வ்ருதாவனை
வேதனைப் படு காமா விகாரனை
ஊனம் உற்று உழல் ஆபாச ஈனனை – அந்தர்யாமி

யோகம் அற்று உழல் ஆசா பசாசனை
மோகம் முற்றிய மோடாதி மோடனை
ஊதியத் தவம் நாடாத கேடனை – அன்றில் ஆதி

பாதகக் கொலையே சூழ் கபாடனை
நீதி சற்றும் இலா கீத நாடனை
பாவியர்க்குள் எலாம் மா துரோகனை – மண்ணின் மீதில்

பாடு பட்டு அலை மா கோப லோபனை
வீடு பட்டு அழி கோமாள வீணனை
பாச சிக்கினில் வாழ்வேனை ஆளுவது – எந்த நாளோ

ஆதி சற்குண சீலா நமோநம
ஆடகத் திரி சூலா நமோநம
ஆதரித்து அருள் பாலா நமோநம – உந்தி ஆமை

ஆனவர்க்கு இனியானே நமோநம
ஞான முத்தமிழ் தேனே நமோநம
ஆரணற்கு அரியானே நமோநம – மன்றுள் ஆடும்

தோதி தித்திமி தீதா நமோநம
வேத சித்திர ரூபா நமோநம
சோபம் அற்றவர் சாமீ நமோநம – தன்ம ராச

தூதனை துகை பாதா நமோநம
நாத சற் குரு நாதா நமோநம
ஜோதியில் ஜக ஜோதி மஹா தெவர் – தம்பிரானே

English

Odhu muththamizh thErA vrudhAvanai
vEdhanaip padu kAmA vikAranai
Unam utruzhal ApAsa eenanai – antharyAmi

yOgam atruzhal AsA pasAsanai
mOha mutriya mOdAdhi mOdanai
Udhiyath thavam nAdAdha kEdanai – andrilAdhi

pAthakak kolaiyE sUzh kapAdanai
neethi satrumilA geetha nAdanai
pAviyarkkuL elA mA dhurOganai – maNNinmeedhil

pAdu pattalai mA kOpa lObanai
veedu pattazhi kOmALa veeNanai
pAsa sikkinil vAzhvEnai ALuvadhu – endhanALO

Adhi saRguNa seelA namO nama
Adagath thirisUlA namO nama
Adharith aruL bAlA namO nama – undhiyAmai

Anavark kiniyAnE namO nama
nyAna muththamizh thEnE namO nama
AraNark ariyAnE namO nama – mandruLAdum

thOdhi dhiththimi theethA namO nama
vEdha chiththira rUpA namO nama
sObam atravar sAmee namO nama – dhanmarAja

dhUthanaith thugai pAdhA namO nama
nAtha saRguru nAthA namO nama
jOthiyiR jagajOthi mahAdhevar – thambirAnE.

English Easy Version

Odhu muththamizh thErA vrudhAvanai
vEdhanaip padu kAmA vikAranai
Unam utruzhal ApAsa eenanai – antharyAmi

yOgam atruzhal AsA pasAsanai
mOha mutriya mOdAdhi mOdanai
Udhiyath thavam nAdAdha kEdanai – andrilAdhi

pAthakak kolaiyE sUzh kapAdanai
neethi satrumilA geetha nAdanai
pAviyarkkuL elA mA dhurOganai – maNNinmeedhil

pAdu pattalai mA kOpa lObanai
veedu pattazhi kOmALa veeNanai
pAsa sikkinil vAzhvEnai ALuvadhu – endhanALO

Adhi saRguNa seelA namO nama
Adagath thirisUlA namO nama
Adharith aruL bAlA namO nama – undhiyAmai

Anavark kiniyAnE namO nama
nyAna muththamizh thEnE namO nama
AraNark ariyAnE namO nama – mandruLAdum

thOdhi dhiththimi theethA namO nama
vEdha chiththira rUpA namO nama
sObam atravar sAmee namO nama – dhanmarAja

dhUthanaith thugai pAdhA namO nama
nAtha saRguru nAthA namO nama
jOthiyiR jagajOthi mahAdhevar – thambirAnE