திருப்புகழ் 997 தோடு மென்குழை (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 997 Thodumenkuzhai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன – தனதானா

தோடு மென்குழை யூடே போரிடு
வாணெ டுங்கயல் போலே யாருயிர்
சூறை கொண்டிடு வேல்போ லேதொடர் – விழிமானார்

சூத கந்தனி லேமா லாயவர்
ஓது மன்றறி யாதே யூழ்வினை
சூழும் வெந்துய ராலே தானுயிர் – சுழலாதே

ஆடு வெம்பண காகோ தாசன
மூறு கண்டிட மேல்வீழ் தோகையி
லாரும் வண்கும ரேசா ஆறிரு – புயவேளே

ஆரு நின்றரு ளாலே தாடொழ
ஆண்மை தந்தருள் வாழ்வே தாழ்வற
ஆதி தந்தவ நாயேன் வாழ்வுற – அருள்வாயே

ஓடு வெங்கதி ரோடே சோமனு
மூழி யண்டமும் லோகா லோகமு
மூரு மந்தர நானா தேவரு – மடிபேண

ஊழி டம்புயன் வேலா வாலய
மூடு தங்கிய மாலா ராதர
வோத வெண்டிரை சூர்மார் பூடுற – விடும்வேலா

வேடு கொண்டுள வேடா வேடைய
வேழ வெம்புலி போலே வேடர்கள்
மேவு திண்புன மீதே மாதொடு – மிகமாலாய்

மேக மென்குழ லாய்நீ கேளினி
வேறு தஞ்சமு நீயே யாமென
வேளை கொண்டபி ரானே வானவர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன – தனதானா

தோடு(ம்) மென் குழை ஊடே போரிடு
வாள் நெடும் கயல் போலே ஆருயிர்
சூறை கொண்டிடு வேல் போலே தொடர் – விழி மானார்

சூதகம் தனிலே மாலாய் அவர்
ஓதும் அன்று அறியாதே ஊழ் வினை
சூழும் வெம் துயராலே தான் உயிர் – சுழலாதே

ஆடு(ம்) வெம் பண காகோதம் அசனம்
ஊறு கண்டிட மேல் வீழ் தோகையில்
ஆரும் வண் குமரேசா ஆறு இரு – புய வேளே

ஆரு(ம்) நின்று அருளாலே தாள் தொழ
ஆண்மை தந்து அருள் வாழ்வே தாழ்வு அற
ஆதி தந்தவ நாயேன் வாழ்வு உற – அருள்வாயே

ஓடு(ம்) வெம் கதிரோடே சோமனும்
ஊழி அண்டமும் லோகா லோகமும்
ஊரும் அந்தர(ம்) நானா தேவரும் – அடி பேண

ஊழிடு அம்புயன் வேலாவாலயம்
ஊடு தங்கிய மாலார் ஆதரவு
ஓத வெண் திரை சூர் மார்பு ஊடுற – விடும் வேலா

வேடு கொண்டு(ள்)ள வேடா வேடைய
வேழ வெம் புலி போலே வேடர்கள்
மேவு(ம்) திண் புன(ம்) மீதே மாதொடு – மிக மாலாய்

மேக மென் குழலாய் நீ கேள் இனி
வேறு தஞ்சமு(ம்) நீயேயாம் என
வேளை கொண்ட பிரானே வானவர் – பெருமாளே

English

thOdu menkuzhai yUdE pOridu
vANe dungkayal pOlE yAruyir
cURai koNdidu vElpO lEthodar – vizhimAnAr

cUtha kanthani lEmA lAyavar
Othu manRaRi yAthE yUzhvinai
cUzhum venthuya rAlE thAnuyir – chuzhalAthE

Adu vempaNa kAkO thAsana
mURu kaNdida mElveezh thOkaiyi
lArum vaNkuma rEsA ARiru – puyavELE

Aru ninRaru LAlE thAdozha
ANmai thantharuL vAzhvE thAzhvaRa
Athi thanthava nAyEn vAzhvuRa – aruLvAyE

Odu vengkathi rOdE sOmanu
mUzhi yaNdamum lOkA lOkamu
mUru manthara nAnA thEvaru – madipENa

Uzhi dampuyan vElA vAlaya
mUdu thangiya mAlA rAthara
vOtha veNdirai cUrmAr pUduRa – vidumvElA

vEdu koNduLa vEdA vEdaiya
vEzha vempuli pOlE vEdarkaL
mEvu thiNpuna meethE mAthodu – mikamAlAy

mEka menkuzha lAynee kELini
vERu thanjamu neeyE yAmena
vELai koNdapi rAnE vAnavar – perumALE.

English Easy Version

thOdu(m) men kuzhai UdE pOridu
vAL nedum kayal pOlE Aruyir
cURai koNdidu vEl pOlE thodar – vizhi mAnAr

cUthakam thanilE mAlAy avar
Othum anRu aRiyAthE Uzh vinai
cUzhum vem thuyarAlE thAn uyir – chuzhalAthE

Adu(m) vem paNa kAkOtham asanam
URu kaNdida mEl veezh thOkaiyil
Arum vaN kumarEsA ARu iru – puya vELE

Aru(m) ninRu aruLAlE thAL thozha
ANmai thanthu aruL vAzhvE thAzhvu aRa
Athi thanthava nAyEn vAzhvu uRa – aruLvAyE

Odu(m) vem kathirOdE sOmanum
Uzhi aNdamum lOkA lOkamum
Urum anthara(m) nAnA thEvarum – adi pENa

Uzhidu ampuyan vElAvAlayam
Udu thangiya mAlAr Atharavu
Otha veN thirai cUr mArpu UduRa – vidum vElA

vEdu koNdu(L)La vEdA vEdaiya
vEzha vem puli pOlE vEdarkaL
mEvu(m) thiN puna(m) meethE mAthodu – mika mAlAy

mEka men kuzhalAy nee kEL ini
vERu thanjamu(m) neeyEyAm ena
vELai koNda pirAnE vAnavar – perumALE.