திருப்புகழ் 999 போதில் இருந்து (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 999 Podhilirundhu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
தானன தந்தன தாத்தன – தனதான

போதிலி ருந்துவி டாச்சதுர் வேதமொ ழிந்தவ னாற்புளி
னாகமு கந்தவ னாற்றெரி – வரிதான


போதுயர் செந்தழ லாப்பெரு வானநி றைந்தவி டாப்புக
ழாளன ருஞ்சிவ கீர்த்திய – னெறிகாண

ஆதர வின்பருள் மாக்குரு நாதனெ னும்படி போற்றிட
ஆனப தங்களை நாக்கரு – திடவேயென்


ஆசையெ ணும்படி மேற்கவி பாடுமி தம்பல பார்த்தடி
யேனும றிந்துனை யேத்துவ – தொருநாளே


காதட ரும்படி போய்ப்பல பூசலி டுங்கய லாற்கனி
வாயித ழின்சுவை யாற்பயில் – குறமாதின்

காரட ருங்குழ லாற்கிரி யானத னங்களி னாற்கலை
மேவும ருங்கத னாற்செறி – குழையோலை

சாதன மென்றுரை யாப்பரி தாபமெ னும்படி வாய்த்தடு
மாறிம னந்தள ராத்தனி – திரிவோனே

சாகர மன்றெரி யாக்கொடு சூரரு கும்படி யாத்திணி
வேலையு ரம்பெற வோட்டிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
தானன தந்தன தாத்தன – தனதான

போதில் இருந்து விடாச் சதுர் வேத(ம்) மொழிந்தவனால் பு(ள்)ளின்
ஆகம் உகந்தவனால் தெரி – அரிதான

போது உயர் செம் தழலாப் பெரு வான(ம்) நிறைந்த விடாப் புக
ழாளன் அரும் சிவ கீர்த்தியன் – நெறி காண

ஆதரவு இன்ப(ம்) அருள் மாக் குரு நாதன் எனும்படி போற்றிட
ஆன பதங்களை நாக் – கருதிடவே என்

ஆசை எ(ண்)ணும்படி மேல் கவி பாடும் இதம் பல பார்த்து அடியேனும்
அறிந்து உனை ஏத்துவது – ஒரு நாளே

காது அடரும்படி போய்ப் பல பூசல் இடும் கயலால் கனி
வாய் இதழின் சுவையால் பயில் – குற மாதின்

கார் அடரும் குழலால் கிரியான தனங்களினால் கலை
மேவு(ம்) மருங்கு அதனால் – செறி குழை ஓலை

சாதனம் என்று உரையாப் பரிதாபம் எனும்படி வாய்த் தடு
மாறி மனம் தளராத் தனி – திரிவோனே

சாகரம் அன்று எரியாக் கொடு சூரர் உகும்படியாத் திணி
வேலை உரம் பெற ஓட்டிய – பெருமாளே

English

pOthili runthuvi dAcchathur vEthamo zhinthava nARpuLi
nAkamu kanthava nAtReri – varithAna


pOthuyar senthazha lApperu vAnani Rainthavi dAppuka
zhALana rumsiva keerththiya – neRikANa

Athara vinparuL mAkkuru nAthane numpadi pOtRida
Anapa thangaLai nAkkaru – thidavEyen

Asaiye Numpadi mERkavi pAdumi thampala pArththadi
yEnuma Rinthunai yEththuva – thorunALE

kAthada rumpadi pOyppala pUsali dumkaya lARkani
vAyitha zhinsuvai yARpayil – kuRamAthin

kArada rumkuzha lARkiri yAnatha nangaLi nARkalai
mEvuma rungatha nARcheRi – kuzhaiyOlai

sAthana menRurai yAppari thApame numpadi vAyththadu
mARima nanthaLa rAththani – thirivOnE

sAkara manReri yAkkodu cUraru kumpadi yAththiNi
vElaiyu rampeRa vOttiya – perumALE.

English Easy Version

pOthil irunthu vidAc chathur vEtha(m) mozhinthavanAl pu(L)Lin
Akam ukanthavanAl theri – arithAna

pOthu uyar sem thazhalAp peru vAna(m) niRaintha vidAp
pukazhALan arum siva keerththiyan – neRi kANa

Atharavu inpa(m) aruL mAk kuru nAthan enumpadi pOtRida
Ana pathangaLai nAk – karuthidavE en

Asai e(N)Numpadi mEl kavi pAdum itham pala pArththu
adiyEnum aRinthu unai Eththuvathu – oru nALE

kAthu adarumpadi pOyp pala pUsal idum kayalAl kani
vAy ithazhin suvaiyAl payil – kuRa mAthin

kAr adarum kuzhalAl kiriyAna thanangaLinAl kalai
mEvu(m) marungu athanAl seRi – kuzhai Olai

sAthanam enRu uraiyAp parithApam enumpadi vAyth thadum
ARi manam thaLarAth thani – thirivOnE

sAkaram anRu eriyAk kodu cUrar ukumpadiyAth thiNi
vElai uram peRa Ottiya – perumALE