மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
உததியிடை கடவுமர கதவருண குலதுரக
வுபலளித கனகரத – சதகோடி சூரியர்கள் – 1
உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை
யுகமுடிவின் இருளகல – ஒருசோதி வீசுவதும் – 2
உடலுமுட லுயிருநிலை பெறுதல்பொரு ளெனவுலக
மொருவிவரு மநுபவன – சிவயோக சாதனையில் – 3
ஒழுகுமவர் பிறிதுபர வசமழிய விழிசெருகி
யுணர்வுவிழி கொடுநியதி – தமதூடு நாடுவதும் – 4
உருவெனவு மருவெனவு முளதெனவு மிலதெனவு
முழலுவன பரசமய – கலையார வாரமற – 5
உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ
வுளபடியை யுணருமவ – ரநுபூதி யானதுவும் – 6
உறவுமுறை மனைவிமக வெனுமலையி லெனதிதய
வுருவுடைய மலினபவ – சலராசி யேறவிடும் – 7
உறுபுணையு மறிமுகமு முயரமரர் மணிமுடியில்
உறைவதுவு முலைவிலது – மடியேன் மனோரதமும் – 8
இதழிவெகு முகககன நதியறுகு தறுகணர
இமகிரண தருணவுடு – பதிசேர் சடாமவுலி – 9
இறைமகிழ வுடைமணியொ டணிசகல மணிகலென
இமையமயில் தழுவுமொரு – திருமார்பி லாடுவதும் – 10
இமையவர்கள் நகரிலிறை குடிபுகுத நிருதர்வயி
றெரிபுகுத வுரகர்பதி – அபிஷேக மாயிரமும் – 11
எழுபிலமு நெறுநெறென முறியவட குவடிடிய
இளையதளர் நடைபழகி – விளையாடல் கூருவதும் – 12
இனியகனி கடலைபய றொடியல்பொரி யமுதுசெயும்
இலகுவெகு கடவிகட – தடபார மேருவுடன் – 13
இகலிமுது திகிரிகிரி நெரியவளை கடல்கதற
எழுபுவியை யொருநொடியில் – வலமாக வோடுவதும் – 14
எறுழிபுலி கரடியரி கரிகடமை வருடையுழை
யிரலைமரை யிரவுபகல் – இரைதேர்க டாடவியில் – 15
எயினரிடு மிதணதனில் இளகுதினை கிளிகடிய
இனிதுபயில் சிறுமிவளர் – புனமீ துலாவுவதும் – 16
முதலவினை முடிவிலிரு பிறையெயிறு கயிறுகொடு
முதுவடவை விழிசுழல – வருகால தூதர்கெட – 17
முடுகுவதும் அருணெறியில் உதவுவதும் நினையுமவை
முடியவரு வதுமடியர் – பகைகோடி சாடுவதும் – 18
மொகுமொகென மதுபமுரல் குரவுவிள வினதுகுறு
முறியுமலர் வகுளதள – முழுநீல தீவரமும் – 19
முருகுகமழ் வதுமகில முதன்மைதரு வதும்விரத
முநிவர்கரு தரியதவ – முயல்வார் தபோபலமும் – 20
முருகசர வணமகளிர் அறுவர்முலை நுகருமறு
முககுமர சரணமென – அருள்பாடி யாடிமிக – 21
மொழிகுழற அழுதுதொழு துருகுமவர் விழியருவி
முழுகுவதும் வருகவென – அறைகூவி யாளுவதும் – 22
முடியவழி வழியடிமை யெனுமுரிமை யடிமைமுழு
துலகறிய மழலைமொழி – கொடுபாடும் ஆசுகவி – 23
முதலமொழி வனநிபுண மதுபமுக ரிதமவுன
முகுளபரி மளநிகில – கவிமாலை சூடுவதும் – 24
மதசிகரி கதறிமுது முதலைகவர் தரநெடிய
மடுநடுவில் வெருவியொரு – விசையாதி மூலமென – 25
வருகருணை வரதனிகல் இரணியனை நுதியுகிரின்
வகிருமட லரிவடிவு – குறளாகி மாபலியை – 26
வலியசிறை யிடவெளியின் முகடுகிழி படமுடிய
வளருமுகில் நிருதனிரு – பதுவாகு பூதரமும் – 27
மகுடமொரு பதுமுறிய அடுபகழி விடுகுரிசில்
மருகனிசி சரர்தளமும் – வருதார காசுரனும் – 28
மடியமலை பிளவுபட மகரசல நிதிகுறுகி
மறுகிமுறை யிடமுனியும் – வடிவேல னீலகிரி – 29
மருவுகுரு பதியுவதி பவதிபக வதிமதுர
வசனிபயி ரவிகவுரி – யுமையாள்த்ரி சூலதரி – 30
வநசைமது பதியமலை விசயைதிரி புரைபுநிதை
வநிதையபி நவையநகை – யபிராம நாயகிதன் – 31
மதலைமலை கிழவனநு பவனபய னுபயசதுர்
மறையின்முதல் நடுமுடிவின் – மணநாறு சீறடியே – 32
பதம் பிரித்தது
உததி இடை கடவும் மரகத அருண குல துரக
உப லளித கனக ரத – சதகோடி சூரியர்கள் – 1
உதயம் என அதிக வித கலப கக மயிலின் மிசை
யுக முடிவில் இருள் அகல – ஒரு சோதி வீசுவதும் – 2
உடலும் உடல் உயிரும் நிலைபெறுதல் பொருள் என உலகம்
ஒருவி வரும் மநுபவன – சிவ யோக சாதனையில் – 3
ஒழுகும் அவர் பிறிது பரவசம் அழிய விழி செருகி
உணர்வு விழி கொடு நியதி – தமது ஊடு நாடுவதும் – 4
உரு எனவும் அரு எனவும் உளது எனவும் இலது எனவும்
உழலுவன பரசமய – கலை ஆரவாரம் அற – 5
உரை அவிழ உணர்வு அவிழ உளம் அவிழ உயிர் அவிழ
உளபடியை உணரும் அவர் – அநுபூதி ஆனதுவும் – 6
உறவு முறை மனைவி மகவு எனும் அலையில் எனது இதயம்
உருவுடைய மலினம் பவம் – சல ராசி ஏற விடும் – 7
உறுபுணையும் அறிமுகமும் உயரி அமரர் மணி முடியில்
உறைவதுவும் உலைவிலதும் – அடியேன் மனோரதமும் – 8
இதழி வெகுமுக ககனநதி அறுகு தறுகண் அரவு
இம கிரண தருண உடுபதி – சேர் சடா மவுலி – 9
இறை மகிழ உடை மணியோடு அணி சகல மணி கலென
இமைய மயில் தழுவும் ஒரு திரு மார்பில் ஆடுவதும் 10
இமையவர்கள் நகரில் இறை குடி புகுத நிருதர் வயிறு
எரி புகுத உரகர்பதி – அபிஷேகம் ஆயிரமும் – 11
எழுபிலமும் நெறுநெறென முறிய வடகுவடு இடிய
இளைய தளர் நடைபழகி – விளையாடல் கூருவதும் – 12
இனிய கனி கடலை பயறு ஒடியல் பொரி அமுது செயும்
இலகு வெகுகட விகட – தட பார மேருவுடன் – 13
இகலி முது திகிரி கிரி நெரிய வளை கடல் கதற
எழு புவியை ஒரு நொடியில் – வலமாக ஓடுவதும் – 14
எறுழி புலி கரடி அரி கரி கடமை வருடை உழை
இரலை மரை இரவு பகல் – இரை தேர் கடாடவியில் – 15
எயினர் இடும் இதண் அதனில் இளகு தினை கிளி கடிய
இனிது பயில் சிறுமி வளர் – புனம் மீது உலாவுவதும் – 16
முதலவினை முடிவில் இரு பிறை எயிறு கயிறு கொடு
முதுவடவை விழிசுழல – வருகால தூதர்கெட – 17
முடுகுவதும் அருள் நெறியில் உதவுவதும் நினையுமவை
முடிய வருவதும் அடியர் – பகைகோடி சாடுவதும் – 18
மொகு மொகு என மதுபம் முரல் குரவு விளவினது
குறு முறியும் மலர் வகுள தள – முழு நீல தீவரமும் – 19
முருகு கமழ்வதும் அகில முதனை தருவதும் விரத
முநிவர் கருத அரிய தவம் – முயல்வார் தபோ பலமும் – 20
முருக சரவண மகளிர் அறுவர் முலை நுகரும்
அறுமுக குமர சரணம் என – அருள் பாடி ஆடி மிக – 21
மொழி குழுற அழுது தொழுது உருகுமவர் விழி அருவி
முழுகுவதும் வருக என – அறை கூவி ஆளுவதும் – 22
முடிய வழி வழி அடிமை எனும் உரிமை அடிமை முழுதும்
உலகறிய மழலை மொழி – கொடு பாடும் ஆசு கவி – 23
முதல மொழிவன நிபுண மதுபம் முகர் இத மவுன
முகுள பரிமள நிகில – கவி மாலை சூடுவதும் – 24
மத சிகரி கதறி முது முதலை கவர் தர நெடிய
மடு நடுவில் வெருவி ஒரு – விசை ஆதி மூலமே என – 25
வரு கருணை வரதன் இகல் இரணியனை நுதி உகிரின்
வகிரும் அடல் அரி வடிவு – குறள் ஆகி மாபலியை – 26
வலிய சிறை இட வெளியின் முகடு கிழி பட முடிய
வளரு முகில் நிருதன் இருபது – வாகு பூதரமும் – 27
மகுடம் ஒருபதும் முறிய அடு பகழி விடு குரிசில்
மருக நிசிசரர் தளமும் – வரு தாரகாசுரனும் – 28
மடிய மலை பிளவு பட மகர சலநிதி குறுகி
மறுகி முறை இட முனியும் – வடிவேலன் நீலகிரி – 29
மருவு குருபதி யுவதி பவதி பகவதி மதுர
வசனி பயிரவி கவுரி -உமையாள் த்ரிசூலதரி – 30
வநசை மதுபதி அமலை விசயை திரிபுரை புநிதை
வநிதை அபினவை அநகை – அபிராம நாயகி தன் – 31
மதலை மலைகிழவன் அநுபவன் அபயன் உபய சதுர்
மறையின் முதல் நடு முடிவின் – மணநாறு சீறடியே – 32