மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தேமா
பூத லோக போக வாசை யேயு ளார்பு கன்ற மந்தி ரங்க ளோதல்
போத சந்த்ர நாடி யோடு போழ்தும் லோக போக மேதும் வேண்டி டாதார்
தீதில் பானு நாடி யோடு போதும் வேத சித்தி முத்தி வேண்டு வோர்கள்
கோதி லங்கி நாடி யோடு போது மென்று கூறு வார்கு கேசர் தாசர். – (142)
கருவிளம் கூவிளம் கூவிளம் கருவிளம் தேமாங்காய்
கருவிளம் கூவிளம் கூவிளம் கருவிளம் தேமாங்காய்
வரதகு கேசவ ணக்கமு னவனது சட்கோண
வரைபொறி செய்துகு ளித்திடு சலமதை வற்றாத
தரமுறு கங்கைகொ தாவரி நருமதை காவேரி
தகையுறு சிந்துச ரச்வதி யமுனைச தாசார
நிரறகு கிட்டிணி தாமிர பருணிநெ டுஞ்சீரே
நிகழொரு பத்திரி யாகவு மவைகணி ஜஞ்சேருஞ்
சரவண தீர்த்தமெ னாவெணி முழுகுக தப்பாது
தவளவி பூதிநி ரம்பிட வணிகுக தக்காரே. – (143)
முதலாம் நான்கா மாறா மொன்பதாஞ் சீர்கள்: கூவிளம்
காலையின் மாலையி லங்கநி யாசமு மஞ்சேறு
கையினி யாசமு நன்குபு ரிந்துயர் காங்கேயன்
மூலம னுச்செபி யாதவர் தஞ்செப முற்றாமன்
முட்டடை யும்பல னுங்குறை வாமயின் மொய்ம்பீசன்
சீலவெ ழுத்துவ ரைந்துதி கழ்ந்திடு சட்கோணஞ்
சேர்வழி பாடும் தேவித மென்பர ருஞ்சேயோன்
போலொரு மெய்ப்பொருண் மெய்க்குரு வுண்டுகொ லென்றோரும்
புண்ணிய நண்ணிய கண்ணிய வின்புபொ லிந்தோரே. – (144)
தேமா விளம் விளம் விளம் மா மா விளம் விளம் விளம் மா
நல்லை யாசன மளித்திடல் கைகழு நீர்தா
னல்கல் கால்கழு நீர்தரன் முக்குடி நீர்தான்
ஒல்லை யீந்திட லொண்சல மாட்டுத லாடை
யுடுத்தன் முப்புரி நூலிடல் சந்தனம் பூசல்
வல்லை மாமலர் சார்த்துத லட்சதை தூவன்
மாசி லாப்புகை தீபிகை வெண்கருப் பூரம்
தொல்லை யில்லமு தந்துவர்க் காய்மனு மலரென்
சோட சங்குக னுக்கிடு நருங்களி துய்ப்பார். – (145)
கூவிளம் கருவிளம் கூவிளம் கூவிளம் கருவிளம் கூவிளம்
கூவிளம் கருவிளம் கூவிளம் புளிமாங்காய்
தத்தன தனதன தந்தன தத்தன தனதன தந்தன
தத்தன தனதன தந்தன தனதானா
மத்தள மணிதுடி துந்துபி கத்திரி திமிலைக டிண்டிமம்
வட்டணை சிறுபறை மண்கணை பலதாமே
தித்திமி திமிதிமி தெந்தன டட்டட டடடட டுண்டுடு
தெய்த்தன வெனவெளி வந்தருள் குகதேவா
நித்தப ரமகுரு சங்கர சித்திர மயில்வரு சுந்தர
நிட்கள சரவண சம்ப்ரம வயிலீசா
இத்தரை யினிலுனை நம்பிய பத்தனெ னதுதுய ரந்துமி
யிட்டம ருவவரு ளென்றறை யெனையாளே. – (146)
பதினொருசீர்க்கழிநெடிலடியான்வருவது
புளிமா கூவிளங்காய் புளிமா கூவிளங்காய்
புளிமா கூவிளங்காய் கூவிளம்
புளிமா தேமா புளிமாங்காய் கூவிளம்
தனன தந்ததன தனன தந்ததன தனன தந்ததன தந்தனா
தனன தந்த தனத்தந்த தானனா
உலக வம்புமன முலவு கின்றவரை யொழிவ தின்றுமல பந்தமே
யுயரு மென்று நினைக்கின்ற வேழையேன்
அலகி றந்தவுன தடிய டைந்துசுக மணுக வந்தருள்வ தெந்தநா
ளறைதி யண்டர் துதிக்கின்ற பாதனே
இலகு தங்கமுடி சுடிகை கிம்புரியி ரதன மஞ்சிகைகள் கண்டமா
விழைசி லம்பு தரிக்கின்ற மேனியோய்
மலர்ந ரந்தமுயர் புழுகு கந்தபொடி மலய சங்கமழ்சு கந்தமே
மலிக டம்பு மணக்கின்ற மார்பனே. – (147)
பன்னிருசீர்க்கழிநெடிலடியான்வருவன
காய்
பிருதிவில் காரமறல் வகரமனல் ரகரமுயிர் பீடுடைய யகரமேலே
பிரபலம் தானவெளி ஹகரமென நிற்கின்ற பீசவிவ ரந்தெரிந்தோர்
திருவுதவு மாமனுவி லனலுடைய பீசமது சேரினல னீங்குமென்று
செப்பிடுவ ரவ்வாறு செப்புமவ ரேபரம சேய்விமல மேனிதானே
பொருவறுபெ ருஞ்சோதி யாயுள்ள தானுமெரி புதல்வனெனு நாமமொன்று
புனிதமுடை யச்சேய வன்பெறுத லானுமெழில் பூக்கின்ற பாவகிப்பேர்ப்
பெருமையுடை யவனாம மனுவிலுள ரகரமொரு பீடையும ளித்திடாது
பேசரிய கறைசீக்கு மருளுதவு மென்பருயர் பெற்றிகள வாவுவோரே. – (148)
உச்சவிசை மந்தவிசை யொத்தவிசை யென்பன
வுணர்ந்துகலி காலமதிலும்
உண்மையரு ளீயுமெங் குமரகுரு மனுவைநனி
யுச்சரிக் கின்றவர்களை
நச்சரவு தீண்டாது ககனவா சிகளாக
நவினிசா சரர்கள்பற்றார்
நமன்றமர் நெருங்கார் பெருந்தீ யெனப்பேய்க
ணண்ணாவெ னாவாகமம்
நிச்சய நிகழ்த்துமென வுங்குகன துருவாக
நிகழுமோ ரக்கரத்தில்
நிலவிடு மகாரமு முகாரமு மகாரமு
நிரப்பற்ற விந்துநாதம்
விச்சைதரு பரமென்னு மாறுமுள வெனவுமவை
வேலிறைவ னாறெழுத்தை
மேவுமொரு சூக்கமென வும்பகர்வ ரிவ்வுலகை
வெல்லுரை விளம்புபவரே. – (149)
கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளங்கனி
கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளங்கனி
தனாதன தனதன தனாதன தனாதன தனதன தனான தனனா
சமானமில் பதாதியு டையாய்நிம லதார்க
சதாநட னஞானமுருகா
சராசர மெலாமரு ளியேநிறு வியீறுசெய்
சதாசிவ நகாரியயிலோய்
விமானசு ரநாயக விரோதந டையாளர்கள்
வினோதவி றனூறுவிறலோய்
விவேகப ரிபூரண விலாசம றைநாயக
வியாகர ணநாதகுழகா
அமானக் ருணாகர வனாரத திவாகர
வதீதகு ருநாதபரிபூ
அபேதநெ றியாளர் கபீடம் மரீசுர
வபூருவ சிகாவௗபரா
குமாரகு ருதாசனி றைவாகுற மடாடவள்
குரோதமி றெய்வானைதலைவா
குரூபமில் குகேசவெ மையாளென வளாவுநர்
கொளார்பிற வியேய்வரமுதே. – (150)
காய் காய் காய் காய் மா மா காய் காய் காய் காய் மா மா
மந்தசபம் பெரிதிதினு மானதம துயர்விதினும் வனப்பு மீக்கொள்
வன்னவுரு வாகவழி படுமூர்த்தி நினைதலுயர் விதினு மாசார்
பந்தமெனுங் கருவிகடந் தொளிர்குகனை யறிந்துணர்வு படர்ந்த வாறே
படரறுச மாதியினைப் பாராது பார்ப்பதுயர் விதுபோ லீசன்
தந்தமுத னூலுநிகழ்த் திடுமிஙனம் விளக்கியச மாதி தன்னைச்
சாரவிய லாதுதயங் கிடுமிளைஞ ரிரவிமதி சரியா வேளை
வந்திடுமோர் சுழுமுனைநிகழ் போதுலக நினைவொழிந்து மதியாய் நின்றால்
மரீஇயிடு வாரந்த வறிதறுச மாதியிஃது பாய மன்னோ. – (151)
கூவிளம் மா மா விளம் மா மா விளம் மா மா விளம் மா மா
சானுமண் டலமீ ரெட்டே மாத்திரை தழைக்கு மீது
சதுத்தச முடனெட் டாகச் சாரொரு பிராணா யாமம்
ஈனமி லுயர்வு பாதி யெனினிழி வாகுங் காலே
யெனினதி யிழிவா மிம்மூன் றினிலெது மேலா தார்க்கு
நூனமின் மூன்றுங் கையி னொடிப்பொழு தளவி னாகு
நுவலரும் பெரிய வாழ்க்கை நுழைவிருப் புதித்த பேர்காள்
வானவ ரெல்லா மேத்து வானவ னான செவ்வேண்
மலரடிப் பரிவி னின்றே மருவுமி னுயர்வா மொன்றை. – (152)
விளம் விளம் மா மா விளம் காய், விளம் விளம் மா மா விளம் காய்
ஆண்டொரு நூறுபி ராணா யாம மயர்ந்தப லத்தினையே
யாசறு குசைநுனி வீழ்நீர் மாத மருந்துந ரெய்துவரே
நீண்டவி வேகபி ராணா யாம நெறிப்படி யொன்றயர்வோர்
நிறைநதி யெக்கியம் விரதந் தானா தியில்வரு நீள்பயனோ
டேண்டரு சொர்க்கமு மேய்வர் பிரத்யா காரநி தம்புரிவோ
ரெழின்மறை யெக்கியம் யாவுநிதந்தா மிழைத்தவ ராகியவை
காண்டொறுங் காண்டொறு மின்பம தேசெய் கடியுயர் சிவலோகிற்
கைக்கொளு வாரெனு மேயா கமமா கந்தனி னைப்போரே. – (153)
புளிமா மா காய் மா மா காய் மா மா காய் மா மா காய்
தெரிதற் கரிய குகதேவைச் சிந்தை நடுவே நாட்டியதிற்
சித்த நனிவைத் திருப்பதுதான் றெளிதா ரணையென் றோர்ந்துதினம்
புரிபொற் புடையார் மூவேழாப் புகலு கின்ற தலைமுறையுட்
புலவார் நரகங் கிடந்தாரைப் பொள்ளென் றெடுத்தே யவர்களுடன்
பெரியற் புதமார் சிவலோகிற் பெரிய போக நுகர்ந்துய்வார்
பிழையில் பொருளைத் தயிலநடை போலத் தியான மேபுரிவோர்
இரிபுற் றளறு கிடக்கின்ற வினமு ழுவதுங் கரையேற்றி
யேய்ந்த வுடம்பு விட்டவர்போ லிருப்பா ரெனுநல் லாகமமே. – (154)
பதின்மூன்றுசீர்க்கழிநெடிலடியான்வருவது
தேமா தேமா தேமா தேமா தேமா தேமா தேமா தேமா
தேமா தேமா தேமா தேமா புளிமாங்காய்
தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த
தத்த தத்த தத்த தத்த தனதானா
எத்த லத்து ருப்பொ ருட்கு மிக்க சித்தி னிற்ப தற்கு
ளிட்ட முற்ற வர்க்க கத்தி லகலாதே
சத்த சத்தி யைப்பெ ருக்கு நிர்த்த னத்த ருக்க ளித்த
சத்தை வர்ச்சி தப்படுத்து னருள்சூழா
முத்தர் சித்தர் பத்தர் மெச்சி யுட்ப டுத்து னற்ப தத்தை
முற்று மெற்க ளப்பில் பக்க முடனேயீ
சித்தி ரக்க லைக்கொடிச்சி யற்பு வைத்த ணைத்த ணைத்து
திக்கு நட்பி னிற்க ளிக்கு முருகோனே. – (155)
பதினான்குசீர்க்கழிநெடிலடியான்வருவன
புளிமா மா மா மா மா மா விளம் புளிமா மா மா மா மா மா விளம்
அரிய மூல மொன்று மேய வாவி கட்கு ளறிவினின்
றருள்செ யன்பு ளானு மந்த மூல மோடு கருமமும்
பிரிவு றாத பிரள யாக லர்க்கு நல்ல மான்மழு
பிறழு கின்ற பெரிய நான்கு புயமொ டால காலமார்
கரிய கண்ட மூன்று கண்க ணிலவ வந்து பொருவிலாக்
கதியை நல்கு கருணை யானு மூல மாயை கருமமும்
விரிய வுள்ள சகலர் கட்கு வினைநி லத்தர் மேனிதான்
மிளிர வந்த னுக்ர கஞ்செய் விமல னுங்கு கேசனே. – (156)
தேமா காய் மா காய் மா காய் விளம் மா காய் மா காய் மா காய் விளம்
அண்ட நேமிவியர் வைபை மானசமொ டைந்தெ னப்புகலும் யோனிசேர்
ஆவி யாவையுமி ரட்ச கம்புரிய னாதி யீசனும்வி ரத்தியே
கொண்ட கண்டகதி நம்பு சீவரது கொள்ளு மாறெளிதின் முன்னைநாள்
குமர னானவுனை யேகு ரங்கிமறை கூறு மோம்பருள்வி ழைந்ததான்
மண்ட லத்துமுயர் விண்ட லத்துமருண் மலிய நிற்குநிலை யெக்கணும்
மருட புத்தருளி யாளு ஞானகுரு மாசி லாநினைய லாதிலை
தொண்ட னேற்குமருள் கென்ற லட்டுமுரை தூய நின்செவிபு காதெனோ
தோகை மஞ்ஞைவரு துய்ய னேயமரர் தொழுசு பாவமுரு கையனே. – (157)
புளிமா கூவிளம் மா கூவிளம் மா கூவிளம் கூவிளம்
புளிமா கூவிளம் மா கூவிளம் மா கூவிளம் கூவிளம்
படவ ராவணி யிடைய னாகிய பரசு பாணித னக்குமா
பரிவ றாமக னாக வுந்துணை படர்ச கோதர னாகவும்
சுடரு ஞானவி லாச மேயசு வாமி யாகவு முள்ளவே
டுகளி னித்திய பிரம சாரிசு சீல மார்கிர கத்தனே
அடவி வாழ்முனி சன்னி யாசியு மாவ னான்குமி லானெனா
வறிவி வேகிக ணெஞ்சி னாளும லங்கு சோதிவி யோமமே
மடமு லாமெனை யாளு மாறெதிர் வருத லின்றுகொ னாளைகொல்
வளர்பு லாலுட னீங்கும் வேளைகொன் மதியி லேனறி யேனரோ. – (158)
கூவிளம் விளம் விளம் விளம் விளம் விளம் காய்
விளம் விளம் விளம் விளம் விளம் விளம் காய்
ஈசனை யுள்ளிட மர்ச்சனை புரிபவ ரெய்துப லத்தினு மேசால
இழிவுறு மேவெளி யர்ச்சனை புரிபவ ரெய்திடு பலனென வேகூறும்
ஆசறு சிவதரு மோத்தர மொழியறி யடியவ ருள்ளிட மேநாளும்
அற்றமி லுன்றனை யர்ச்சனை புரிவத சத்திய மாவது முண்டோசொல்
பாசவு யிர்க்குழு வத்தனை யுஞ்சிவ பதமடை காறுமி ரட்சகனாய்ப்
படர்கிரு பைக்கட லேசுர குஞ்சரி பதியென வருமொரு பரமேசா
நாசமின் ஞானவி னோதமு தால்குடை நாடக வேன்மழ வாகுழகா
நாடெனை யாளிறை யேநறு மாமண நாறடி மான்மக ணாயகனே. – (159)
பதினைந்துசீர்க்கழிநெடிலடியான்வருவது
கூவிளம் கருவிளம் கூவிளம் கருவிளம்
கருவிளம் கருவிளம் கூவிளம் கருவிளம்
கருவிளம் தேமா கருவிளம் தேமா கருவிளம் கூவிளம் தேமா.
தானன தனதன தானன தனதன, தனதன தனதன தானன தனதன்
தனதன தானா தனதன தானா தனதன தானன தானா
(ஒற்றிலாப் பஞ்சபங்கி. இருநூறெழுத்து.)
பூமக டொழுதிரு நாயகி திரிபுரை
பொறையுடை மலையிறை காதலி நிருமலி
புடவிய ரானா வமுதுண வீடீ புகழுடை யீசுரி பூமா
நாமக டுதிபுரி பூரணி சிவையுமை
நறையளி யுழுகுழ லாரணி யரவணி
நடவிறை பீடா ரிடமுறை தேவீ நகைமலி நாரணி வீயா
மாமக ளருடரு நீறணி பரைநல
மறைதரு கவுரிவ ராகிய மரிதிரி
வடிவென வேவீ சொளிவிழி மாதா மகனென வானவ ரேசா
கோமக ளுழைமக ணாயக னெனவரு
குறைவிலி யறிவது நாடொரு பருமணி
குடிலைவி சாகா துடிநட நாதா குகவெனை யேகொள வாவே. – (160)
பொறையுடை மலையிறை காதலி நிருமலி
புடவிய ரானா வமுதுண வீடீ புகழுடை யீசுரி பூமா
நறையளி யுழுகுழ லாரணி யரவணி
நடவிறை பீடா ரிடமுறை தேவீ நகைமலி நாரணி வீயா
மறைதரு கவுரிவ ராகிய மரிதிரி
வடிவென வேவீ சொளிவிழி மாதா மகனென வானவ ரேசா
குறைவிலி யறிவது நாடொரு பருமணி
குடிலைவி சாகா துடிநட நாதா குகவெனை யேகொள வாவே.
இது, பதினொருசீராசிரியவிருத்தம்
புடவிய ரானா வமுதுண வீடீ புகழுடை யீசுரி பூமா
நடவிறை பீடா ரிடமுறை தேவீ நகைமலி நாரணி வீயா
வடிவென வேவீ சொளிவிழி மாதா மகனென வானவ ரேசா
குடிலைவி சாகா துடிநட நாதா குகவெனை யேகொள வாவே.
இது, எழுசீராசிரியவிருத்தம்
புகழுடை யீசுரி பூமா
நகைமலி நாரணி வீயா
மகனென வானவ ரேசா
குகவெனை யேகொள வாவே.
இது, வஞ்சிவிருத்தம்
பூமக டொழுதிரு நாயகி திரிபுரை புகழுடை யீசுரி பூமா
நாமக டுதிபுரி பூரணி சிவையுமை நகைமலி நாரணி வீயா
மாமக ளருடரு நீறணி பரைநல மகனென வானவ ரேசா
கோமக ளுழைமக ணாயக னெனவரு குகவெனை யேகொள வாவே.
இது, வேறு எழுசீராசிரியவிருத்தம் ஆக-5
பதினாறுசீர்க்கழிநெடிலடியான்வருவன
புளிமா விளம் விளம் மா மா விளம் விளம் மா
மா விளம் விளம் மா மா விளம் விளம் மா
சிவமு மாசிவ சத்தியு மெழிலே
திகழ்மும் மூர்த்தியு மவரடி களுமே
சீர்கொ ணீயென மிளிர்முறை மைக்கென்
சென்னி மீதுபன் னிருவிரன் மேலும்
அவமி லேனைய தேவரு நீயென்
றாகு முறைக்குயர் தலையிலு மாசா
னாயி லங்கிடு முறைக்கில லாட
மதிலுந் தந்தையு மரசுமென் முறைக்கு
நவிலும் வாயெதி ராகவு மெய்ம்மை
நண்ணு வேதிய னாமுறை மைக்கு
நாப்பண் மார்பிலு மொய்த்தாய் முறைக்கு
நல்ல மோட்டிலு மாக்கரங் கூப்பி
உவகை யோடுனைத் தாழ்வே னின்னு
முற்ற வன்னைபி தாகுரு தேவென்
றுன்னு முறைக்கிரு நான்குவந் தனமு
முஞற்று வேனருள் வேலுடை யானே. – (161)
கருவிளங்காயும்,கூவிளங்காயும்
தன்னதன் தானதன தன்னதன தானதன்
தன்னதன் தானதன தானதன தானதனா
தலைகுனித லாகநவி றலும்விரல்க ளார்வலது
சயமுடியி லேறுதலு மிருகரமு மாசிரமே
தறுகுதலு மேனவிர முறுமிருகை யோடுபய
சரணவிரு சானுநில முறுதலும லார்சிரமேல்
இலகிருகை சேரவிரு சரணுரமு நேமிதொட
வியைதலும்வி சேடசிக ரமதுமிரு தோள்செவியோ
டிருகழலும் வாணுதலும் விரிதிணையி லேபடலும்
இணையவுன தேசிலடி தொழுதுபுகழ் வேனினும்வீண்
அலைமனதை யேகமென வறுதலமு ளேநிறுவி
யனுதினம்வி டாதுநினை யுழுவலுறு வேன்வெளியாய்
அவிர்திசையெ லாநினது சுயநிஜசொ ரூபமென
வகமகிழ்வொ டேகருதி வழிபடுவ லேயினிமே
னிலையறியு மாறருளி யடிமைகொள வேவருதி
நிமலனெனு மாதிசிவ னுடையகும ராவழகார்
நெடியதமிழ் பாடருண கிரிபுகழ்கொள் காதுசெறி
நிருமலகு கேசநெடு வயிரவடி வேலவனே. – (162)
ஆசிரியப்பாவின முற்றிற்று
2-ஆவது ஆசிரியவியன் முற்றிற்று
கருணையை உதவிட விரைவாய் வருக…!!!
கருமுகில் படிசிகி மலையாய் வருக…!!!
வளரும்

பாம்பன் சுவாமி: முருகனிடம் பக்தி கொண்ட துறவி
தமிழ்நாட்டின் பாம்பனில் 1848 இல் பிறந்த பாம்பன் சுவாமி, முதலில் அப்பாவு என்று பெயரிடப்பட்டவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திறமை பெற்ற சைவக் குழந்தை. 13 வயதில், முருகப்பெருமானின் தரிசனம் அவருக்கு பக்தி கவிதைகள் எழுதத் தூண்டியது. ஆழ்ந்த ஆன்மிகத்திற்கு பெயர் பெற்ற அவர், திருமணத்திற்குப் பிறகும், பிரார்த்தனை மற்றும் பூஜைகளில் தன்னை அர்ப்பணித்து, புனிதமான வாழ்க்கை வாழ்ந்தார்.
சுவாமியின் அசைக்க முடியாத நம்பிக்கை பல அதிசய நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது. அவரது புகழ்பெற்ற பாடல் சண்முக கவசம் பக்தர்களை தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் அவரது பஞ்சாமிர்த வர்ணம் முருகனின் இருப்பை அழைக்கிறது. இரக்கமுள்ள துறவி, அவர் பக்தியைத் தூண்டினார் மற்றும் தன்னலமற்ற செயல்களைச் செய்தார், பெரும்பாலும் தெய்வீக தரிசனங்களால் வழிநடத்தப்பட்டார்.
பாம்பன் சுவாமி சவால்களை எதிர்கொண்டார், ஆனால் எப்போதும் முருகனின் அருளை நம்பியிருந்தார். நோய்வாய்ப்பட்டபோது, அவர் ஜெபத்தின் மூலம் அற்புதமாக குணமடைந்தார். தனிப்பட்ட இழப்புகள் இருந்தபோதிலும், அவர் தனது ஆன்மீக பணியில் கவனம் செலுத்தி, தனிமையில் இருந்தார். ஒரு சிறந்த எழுத்தாளர், சுவாமி தமிழில் 6,666 கவிதைகள் மற்றும் பல படைப்புகளை இயற்றினார், முருகனை 130 க்கும் மேற்பட்ட வடிவங்களில் புகழ்ந்தார்.
அவர் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையே நல்லிணக்கத்தை வலியுறுத்தினார், அவற்றை புனித மொழிகளாகக் கருதினார். அடக்கத்திற்கு பெயர் பெற்ற அவர் எளிமையாக வாழ்ந்தார், அடிக்கடி மௌன வழிபாடு செய்தார். 1929 இல், சுவாமி சமாதியில் நுழைந்தார், பக்தி மற்றும் ஞானத்தின் பாரம்பரியத்தை விட்டுச் சென்றார்.
பாம்பன் சுவாமியின் வாழ்க்கை முருகன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது, எண்ணற்ற பக்தர்களை ஊக்குவிக்கிறது. அவரது போதனைகள் மற்றும் பாடல்கள் ஆன்மீக வழிகாட்டுதலையும் பாதுகாப்பையும் தொடர்ந்து வழங்குகின்றன, உண்மையான தேடுபவர்களுக்கு தெய்வீக அருள் எப்போதும் கிடைக்கும் என்பதை நிரூபிக்கிறது.
Pamban Swami: A Saint Devoted to Lord Murugan
Born in 1848 in Pamban, Tamil Nadu, Pamban Swami, originally named Appavu, was a Saivite child gifted in Tamil and English. At 13, he had a vision of Lord Murugan, inspiring him to write devotional poems. Known for his deep spirituality, he lived a saintly life even after marriage, dedicating himself to prayers and pujas.
Swami’s unwavering faith led to many miraculous events. His famous hymn Shanmuga Kavacam is believed to protect devotees from harm, and his Pancamrita Varnam invokes Lord Murugan’s presence. A compassionate saint, he inspired devotion and performed selfless acts, often guided by divine visions.
Pamban Swami faced challenges but always relied on Lord Murugan’s grace. When ill, he was miraculously cured through prayer. Despite personal losses, he remained detached, focusing on his spiritual mission. A prolific writer, Swami composed 6,666 poems and several works in Tamil, praising Murugan in over 130 forms.
He emphasized harmony between Tamil and Sanskrit, considering them sacred languages. Known for his humility, he lived simply, often performing silent worship. In 1929, Swami entered samadhi, leaving behind a legacy of devotion and wisdom.
Pamban Swami’s life exemplifies unwavering faith in Lord Murugan, inspiring countless devotees. His teachings and hymns continue to offer spiritual guidance and protection, proving that divine grace is always available to sincere seekers.