கொச்சகக்கலி – 03 (3 வது கலியியல்)

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

வளர்தில்லைக் கனகசபை மதுரைவெள்ளிச் சபைசோதி
கிளரால வனரத்ன சபைதளிமங் கெழுநெல்லைத்
தளர்வறுதாம் பிரஞ்சித்ர சபைகுற்றா லநிருத்தம்
அளவின்றிச் செயுமரனு மருணிதியா மறுமுகனே. – (9)

தனதனனா தனதனனா தனதனனா தனதனனா

கடல்கடைமால் விதிமுதனீள் கடவுளரார் மகிமையெலாம்
மடமருவா நினதுமகா மகிமையிலே சிறிதெனவே
அடமறுநூ லறையுமெனா வறிமதியோ ருனதிருதாள்
நடனமதே விழைவரரோ நவைதபுவே லிறையவனே. – (10)

தனதான தனதான தனதான தனதான்

[அட்டாட்டாக்கரம் (அறுபத்துநான் கெழுத்து.)]

நனிநாடு நனிநாடு நனிநாடு நனிநாடு
முனிவேறு நமனாள்கண் முரணாகி யணுகாமுன்
அனியாய நணுகாம லருள்பேணு மெமரீர்பொய்
நுனியாத சுரர்சூழு நுதிவேல னிருபாதம். – (11)

காய்முன் நிரைவரு கலித்தளையே யேந்திசைத் துள்ளலோசை.
மேற்படி, கலித்தளையும் வெண்சீர் வெண்டளையும் பெற்று
அகவற் றுள்ளலோசையான் வருவன.

நமனணுகாச் சிவநிலயங் களிலுமந்த நமனென்பான்
மமதையொடைங் குரோசத்துள் வாராத மாண்புடைய
அமலவவி முத்தங்கா ளத்தியிலு மமர்சிவனார்
குமரனடி நினைவாரைக் குறுகானந் நமன்மாதோ. – (12)

மறலியொரு குரோசமள வுஞ்சரியா மதுரையிலும்
திறமையவ னிருகாவ தஞ்சரியாத் தில்லையிலும்
விறல்வினையர் துயர்தீர்த்து விளங்குசிவ னார்தந்த
அறுமுகனை நினைவாரை யணுகானந் நமன்மாதோ. – (13)

சீர்பூக்கு முயிர்க்குயிராத் திகழ்குகனாஞ் செவ்வேளின்
நார்பூக்கு நிறையருளான் முத்திபெற ஞானமில்லார்
கார்பூக்கு மயிர்வெளுப்புக் கண்டவர்க்கும் பல்லிலர்க்கும்
ஏர்பூக்கு மியோகமிலை முத்தியில்லை யெனவறைவார். – (14)

வேதாக மப்பொருளை மெய்க்குருவி னினிதோர்ந்த
மேதாவி யோருடம்பு மெய்யிலையென் றொருமெய்தேர்
போதாவி யாவுமெந்தப் புரையுடனின் றானுமவை
ஆதார வேலிறைவ னருளடைந்து வாழுமென்பார். – (15)

வாதாந்த வெளிச்சோதீ மயிலேறுந் திருச்சோதீ
நாதாந்த நிலைத்தேவுன் னவையிலரு ளிகழ்வினையின்
வேதாந்தம் படித்தோரு மெய்ந்நூலை மறுத்தோரும்
போதாந்தம் பிடித்தாலும் புகுதுவரோ பவம்போக்கி. – (16)

திருமருவு புயமாயன் றிகழ்கமலத் தயனறியாப்
பெருமைமலி பரசிவனும் பீடுசால் செவ்வேளும்
ஒருபொருளென் றுணர்வார்தம் முணர்விலுணர் வாய்விரவும்
அருணிமல குகனேநல் லறிவாவ தருள்குதியே. – (17)

தனதன தனதனனா தனதன தனதனனா

[ஒற்றிலாச்செய்யுள்.)

திருவறு சுடருருவே தெரிவரு மதியுருவே
அருவரு ளொளியுருவே யறைமறை புகழுருவே
குருவரு டருவுருவே குறுமுனி பரவுருவே
இருடபு முருகுருவே யெனுநல ரிடரிறுமே. – (18)

உலகுளீர்-தளர்வறுநா வதுதழும்பு சாரநிதந் தலைவனார்
உளர்கழல்க டுதிப்பவருக் குதவறமே யுளர்பண்டைக்
களமொழிந்து கதிகாண்ப ரென்றிடுமா கமமதனால்
இளவுருவக் குகனைநித மேத்துநெறி பற்றுதிரே. – (19)

சேவிருக்குங் கைத்தீக்கை செஞ்சரண தீக்கையென்று
தூவிருக்கு நல்லார் சொலுமாறு தண்ணளியிற்
பூவிருக்கு நான்முகனம் பொற்சிரசு குட்டியுடல்
மாவருத்த மேவவுதை தந்தவனெம் மானேயோ. – (20)

வேதற்கு மேலா விளம்புமரிக் கும்மரற்கும்
கோதற்ற வாகனமுங் கொள்கொடியு மோருருவே
பேதற்ற ஞானப் பெருக்கிலமிழ் வாரினிய
காதற்கு ளாமா கருணையிறை யாம்வள்ளி
நாதற்கு வாகனமு நன்கொடியு மீருருவே. – (21)

தொடைமிலைச்சு குழல்முடித்த சூர்மகள்போ னோக்குடையாய்
பெடையனத்தை நிகர்த்துலவு பெண்ணரசீ பேரழகீ
இடைசிறுத்து முகைபெருத்த விளவிழும மலிமங்காய்
சடைதரித்த முனிவரருந் தாழ்ந்துவிழை சிறுநகையாய்.

எனவாங்கு.

உணர்வழிந் தரிவைமோ குழிதரா
திணர்முடிக் குகனடி யேத்துமா னவரே.

சுரிதகத்தரவிணைக் கொச்சகக்கலிப்பா. – (22)

நறுநரலை கடைந்ததே நம்பனெழில் வடிவுகண்டு
பொறிநகிலம் விம்முறுமோ கினியாய பொழுதார்வம்
உறுமுரிமை யான்மாலென் றொருநாமங் கொண்டிடவும்
பொறிவிரும்பி நோற்றதனான் மாதவப்பேர் பொருந்திடவும்.
மூட்டின பொருணீயா முடிசரதம் யாரறிவார்
தாட்டயை கிளர்தாசர் தாமறிவார் சருவவுயிர்
நாட்டிய முனக்குள்ளே நல்வினையுந் தீவினையும்
ஈட்டுயிர்க ளின்கணக்கு மிடுதீர்வு முனக்குள்ளே.

அதனால்.

சேவடி யருளிற் செலுத்தெனைப்
பாவகி யெனும்பேர் படைத்தவெம் பரனே.

வெண்டளையான்வரு நான்கடித்தர விரண்டுகொண்டு முடிகின்ற
இயற்றரவிணைக் கொச்சகக்கலிப்பா.

பாலுந்தி நஞ்சாற் கறுத்தவரி பாம்பணியான்
காலுன்னி நோற்ற கனதவத்தின் மானசமாஞ்
சூலுழிநற் கட்டழகே சோபிக்க வந்தவனைத்
தூலுறுப் புச்செயற்குத் தொன்மைசான் மூலமும்
கோலமுமாய்க் கண்டோ மவனே குலதெய்வம்
ஞாலத்தீர் காண்மினென நாவசைப் போர்கல்லாம்
ஆலடியி லுள்ளூன்றி யத்தனசை வற்றபொழு
தேலுமத னென்செய்தா னென்பார்க ளென்குகனே. – (24)

ஓருருவும் பெயரூரு மிலியாகி யுயர்மேல்கீழ்
நேர்நடுவுங் குறுமையுமின் றகண்டமென நிலவொரு நீ
சீர்மருவும் பசுவெல்லாஞ் சிவகதியை யெளிதுறுமா
றேர்மருவும் பசுபதிக்கோ ரெச்சமெனத் தோன்றினையே.

எனவாங்கு.

உண்மையுண ருன்னடியே னொண்பெயரு முருவிருப்பும்
எண்மையிலை வியனெனவே யெழின்மலர்நீர் கொடுபூசை
பண்ணுநிலை தண்டமிழிற் பரசினது முண்டன்றோ-அதான்று.

சகுணமதே நிர்க்குணமா நிலவுமெனத் தலைநூல்கள்
புகலுரைக ணிசமெனவென் புந்திமதித் தவ்வாறு
திகழுனது திருநாமஞ் செபித்ததுநா னுண்டன்றோ-அதான்று.

நானழைப்பேன் வாவெனவந் நாள்வரலா நீயென்று
போனநின தருள்வாக்குப் பொய்யாதென் றனுதினமுன்
கானளினங் களையேநான் கருதியது முண்டன்றோ.

[பெயர்த்தும், தனிச்சொல்]

அதனால்.

தெய்வச் சோழன் சிந்தைசெய் துற்ற
திருவே தணிகைத் தேவே சுவர்க்கர்
கோவே பரம குருவே குருந்தே
குன்றக் கொடிச்சி கொள்ளருட் டலைவா
சத்தியச் சைவ சமயக் கரும்பே
நெடில்வேன் மன்னே நிகழுன்
னடி யே யடைமா றடியேற் கருளே. – (25)

  1. ( நான்கடித்தரவு ஒன்று ]
    சொல்லானும் பொருளானுஞ் சுட்டரிய விபுவாய்மற்
    றெல்லாமா யல்லவுமா யிருக்குமொரு நிலைநின்று
    பல்லுயிரும் பரமசுகப் பரிவணுகிப் பிழைத்திடுமா
    றல்லறெறு மைம்முகத்தோ டதோமுகமு மானோய்கேள்.

2.[ஈரடித்தாழிசை யாறு]

நுன்னருளிற் றிளைத்துய்யு நுணங்கியோர் வழிச்செல்லா
தின்னலுறு மிழுதைகளோ டிவன்கூட லினிமுறையோ.

விரைகமழுன் னடிமலரே விழைந்துதுதிக் கின்றவொரு
தரமுடையே னருள்விழுமஞ் சாராது முய்வேனோ.

சந்ததமுங் கம்பலையென் சலராசிக் கண்ணாழ்ந்து
சிந்தைமயங் கிடினினிய திருவருளி னலமாமோ.

திருவருளைத் தினமெண்ணித் தெருளின்றிக் கலுழ்வேனேற்
குருவருணன் குடையார்தங் குணநலமு நலமாமோ.

தினமுமன நான்வாடத் திருவருட்குப் பிரிவாயேல்
எனையடைநர்க் கேதுறுக ணென்றதுவும் பொய்யாதோ.

இன்றெனது முகம்வாடி யிளைக்கமறைந் திருப்பாயேல்
அன்றெனது முன்சொன்ன வறைக்கானி யணுகாதோ.

அதனால்.

என்முகம் பார்த்தீண் டிரங்கனின் கடன்காண்
நன்முகத் தறுமீ னகிலப்பா லுண்ட
இளம்பூ ரணனே யிறும்பு
களம்பூ ணெழில்சால் கதிர்வே லிறையே. – (26)

மணிமலி யுவணைவரர் மாமுனிவர் களைநோக்கா
அணிமலி யெமைப்பூசித் தடையரும் பேறனைத்தும்
திணிமலி சரவணவேள் செயற்குரியா னறிமினெனாத்
துணிமலி பிறைமுடியன் சொற்றவுய ருரைக்குரியோய்.

அறுமீனுக் கறுசேயா யன்றிருந்த போழ்தாற்றல்
உறுமரிய திருலீலை யுஞற்றுவா னொருகணத்தே
மறுமேவா வெண்ணிறந்த வடிவங்க டன்கண்ணே
தொறுவுறவே காட்டியவை தோன்றியவா மறைத்தோய்கேள்.

சலசப்போ தமர்செல்வி தான்புகழு முமைகொங்கைக்
கலசப்பா லினிதுண்டு கயிலைபுக் கிருந்தனையால்.

வெண்காந்தள் பற்றைமுத லாயநல் விரைமலர்கொண்
டொண்காந்தித் தாளர்ச்சித் துய்வார்பங் குற்றனையால்.

சிறைபுக்க சயந்தற்குந் தேவர்க்குங் கனவிற்போய்ச்
சிறைமீட்டிக் காப்பலெனச் சொனவண்ணஞ்செய்தனையால்.

விண்ணிருடி களின்முதன்மை மேவவென யாழ்முனிவன்
பண்ணுதவ மோர்ந்தந்தப் படியருடே வாயினையால்.

பிரமன்சொற் படியுன்றன் பேராயி ரந்துதிக்குஞ்
சுரர்மிக்க பொறிபெறீஇச் சுகிக்கவருள் கூர்ந்தனையால்.

அறுவாய்நோன் பாற்றியவோ ரந்தணனை யரியதிருப்
பெறுமனுவாம் வேந்தாகப் பிறங்கவருள் புரிந்தனையால்.

என வாங்கு.

ஆசறு நின்சர ணாசையில் விஞ்செனுண்
மோசமி லந்தர மோகமெ ழுந்தது.
விரிதரு முலகது பருவர லெனநவி
லுரியவ ருரைகளெ னுளநனி மருவின.
தத்துவ ஞானம தித்தழி யாநில
யத்தினை யேநினை புத்தியு மேயது.
அருளைய டைந்திடி னமுதுறு மென்றெணு
மொருமதி விஞ்சிய துணர்வுவி ளைந்தது.

சண்பைநகர்த் திருஞான சம்பந்தற் பார்த்ததுபோற்
கண்குளிர்வி னென்னையுநீ கருதிநிதம் பாராயோ.

வாகீசர் பனுவலெலாம் வள்ளுறையக் கேட்டதுபோல்
ஓகையினென் பனுவலையு முற்றுநீ கேளாயோ.

சுந்தரத்தின் முடியிலடி சூட்டியாட் கொண்டதுபோல்
என்றனக்குஞ் சேவடிப்பூ விரண்டினையுஞ் சூட்டாயோ.

வாதவூ ரடிகளுக்கு மனமுவந்து சொற்றதுபோற்
சீதமலர்ச் செவ்வாயைத் திறந்தெனக்குஞ் சொல்லாயோ.

ஏழாட்டைத் தண்டிதனை யெடுத்தாசீர் வதித்ததுபோற்
கேழாட்டி னென்னையுநின் கிருபைகொளச் செய்யாயோ.

கண்ணப்பு மொருவனைமுன் கரம்பற்றிக் கொண்டதுபோல்
அண்ணலெனை யுங்கரத்தி னாற்பற்றிக் கொள்ளாயோ-அணுவை நீ.

ஆட்டினா லாடாதோ.
ஆட்டாக்கா லாடிடுமோ.
ஊட்டினா லுண்ணாதோ.
ஊட்டாக்கா லுண்டிடுமோ.
ஓட்டினா லோடாதோ.
ஓட்டாக்கா லோடிடுமோ.
காட்டினாற் காணாதோ.
காட்டாக்காற் கண்டிடுமோ.

அதனால்.

எனாது போத மென்ப திணையினுன்
தனாது போத மாகத் தழைத்துநான்
மேம்படு பொருளாய் விளங்க
ஓம்பரு ணிட்டையின் றுதவி யருளே. – (27)

பாம்பன் சுவாமி: முருகனிடம் பக்தி கொண்ட துறவி

தமிழ்நாட்டின் பாம்பனில் 1848 இல் பிறந்த பாம்பன் சுவாமி, முதலில் அப்பாவு என்று பெயரிடப்பட்டவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திறமை பெற்ற சைவக் குழந்தை. 13 வயதில், முருகப்பெருமானின் தரிசனம் அவருக்கு பக்தி கவிதைகள் எழுதத் தூண்டியது. ஆழ்ந்த ஆன்மிகத்திற்கு பெயர் பெற்ற அவர், திருமணத்திற்குப் பிறகும், பிரார்த்தனை மற்றும் பூஜைகளில் தன்னை அர்ப்பணித்து, புனிதமான வாழ்க்கை வாழ்ந்தார்.

சுவாமியின் அசைக்க முடியாத நம்பிக்கை பல அதிசய நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது. அவரது புகழ்பெற்ற பாடல் சண்முக கவசம் பக்தர்களை தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் அவரது பஞ்சாமிர்த வர்ணம் முருகனின் இருப்பை அழைக்கிறது. இரக்கமுள்ள துறவி, அவர் பக்தியைத் தூண்டினார் மற்றும் தன்னலமற்ற செயல்களைச் செய்தார், பெரும்பாலும் தெய்வீக தரிசனங்களால் வழிநடத்தப்பட்டார்.

பாம்பன் சுவாமி சவால்களை எதிர்கொண்டார், ஆனால் எப்போதும் முருகனின் அருளை நம்பியிருந்தார். நோய்வாய்ப்பட்டபோது, ​​அவர் ஜெபத்தின் மூலம் அற்புதமாக குணமடைந்தார். தனிப்பட்ட இழப்புகள் இருந்தபோதிலும், அவர் தனது ஆன்மீக பணியில் கவனம் செலுத்தி, தனிமையில் இருந்தார். ஒரு சிறந்த எழுத்தாளர், சுவாமி தமிழில் 6,666 கவிதைகள் மற்றும் பல படைப்புகளை இயற்றினார், முருகனை 130 க்கும் மேற்பட்ட வடிவங்களில் புகழ்ந்தார்.

அவர் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையே நல்லிணக்கத்தை வலியுறுத்தினார், அவற்றை புனித மொழிகளாகக் கருதினார். அடக்கத்திற்கு பெயர் பெற்ற அவர் எளிமையாக வாழ்ந்தார், அடிக்கடி மௌன வழிபாடு செய்தார். 1929 இல், சுவாமி சமாதியில் நுழைந்தார், பக்தி மற்றும் ஞானத்தின் பாரம்பரியத்தை விட்டுச் சென்றார்.

பாம்பன் சுவாமியின் வாழ்க்கை முருகன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது, எண்ணற்ற பக்தர்களை ஊக்குவிக்கிறது. அவரது போதனைகள் மற்றும் பாடல்கள் ஆன்மீக வழிகாட்டுதலையும் பாதுகாப்பையும் தொடர்ந்து வழங்குகின்றன, உண்மையான தேடுபவர்களுக்கு தெய்வீக அருள் எப்போதும் கிடைக்கும் என்பதை நிரூபிக்கிறது.

Pamban Swami: A Saint Devoted to Lord Murugan

Born in 1848 in Pamban, Tamil Nadu, Pamban Swami, originally named Appavu, was a Saivite child gifted in Tamil and English. At 13, he had a vision of Lord Murugan, inspiring him to write devotional poems. Known for his deep spirituality, he lived a saintly life even after marriage, dedicating himself to prayers and pujas.

Swami’s unwavering faith led to many miraculous events. His famous hymn Shanmuga Kavacam is believed to protect devotees from harm, and his Pancamrita Varnam invokes Lord Murugan’s presence. A compassionate saint, he inspired devotion and performed selfless acts, often guided by divine visions.

Pamban Swami faced challenges but always relied on Lord Murugan’s grace. When ill, he was miraculously cured through prayer. Despite personal losses, he remained detached, focusing on his spiritual mission. A prolific writer, Swami composed 6,666 poems and several works in Tamil, praising Murugan in over 130 forms.

He emphasized harmony between Tamil and Sanskrit, considering them sacred languages. Known for his humility, he lived simply, often performing silent worship. In 1929, Swami entered samadhi, leaving behind a legacy of devotion and wisdom.

Pamban Swami’s life exemplifies unwavering faith in Lord Murugan, inspiring countless devotees. His teachings and hymns continue to offer spiritual guidance and protection, proving that divine grace is always available to sincere seekers.