திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள்

நாதமுனிகள் அருளிச் செய்தது 
குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான் 
நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக
ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத் 
த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி

பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை 
மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால் 
சொன்னார்கழற்கமலம்சூடினோம் – முன்னாள் 
கிழியறுத்தானென்றுரைத்தோம், கீழ்மையினிற்சேரும் 
வழியறுத்தோம் நெஞ்சமே. வந்து 

பாண்டியன்கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று 
ஈண்டியசங்கமெடுத்தூத – வேண்டிய 
வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான் 
பாதங்கள்யாமுடையபற்று.

1 thought on “திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள்”

Leave a ReplyCancel reply