வேல் வேல் வேல் வெற்றி
வேல் வேல் வேல் – ஆகா
வேல் வேல் வேல் வெற்றி
வேல் வேல் வேல்
மயில் வந்து ஆடுது மலைமேலே
குயில் வந்து பாடுது சிலைபோலே
வேல் வந்து மின்னுது கண்ணெதிரே
வேலவனைக் காணேனோ என்னெதிரே? – வேல்
திருப்புகழ் பாடியே கைதொழுதேன்
கருப்புகழ் நீங்கிட மெய்தொழுதேன்
விருப்புடன் வேண்டியே பாடுகின்றேன்
விராலிமலை நோக்கி ஓடுகின்றேன் – வேல்
சோலையில் வந்தால் குறை தீரும் அந்தச்
சுந்தரப் புன்னகை நிறைவாகும்
மாலையில் மயங்கியே வாடுகிறேன்
மையலில் உன்னையெ தேடுகின்றேன் – வேல்
வள்ளிக்கு வாய்த்த வடிவழகா
அள்ளிட ஆவி துடிக்குதப்பா
சொல்லிச் சொல்லி என்ன பயன்? வந்து
நில்லு நில்லு என் கண்ணெதிரே – வேல்
