மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
ஆதவனும் அம்புலியும் மாசுறவி ழுங்கியுமிழ்
ஆலமரு வும்பணியி ரண்டும் அழுதே (1)
ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எங்கடவு
ளாமெனமொ ழிந்தகல வென்று விடுமே (2)
ஆர்கலிக டைந்தமுது வானவர்அ ருந்தஅருள்
ஆதிபக வன்துயில்அ நந்தன் மணிசேர் (3)
ஆயிரம் இருந்தலைக ளாய்விரிப ணங்குருதி
யாகமுழு துங்குலைய வந்த றையுமே (4)
வேதமுழு தும்புகல் இராமன் ஒரு தம்பிமிசை
வீடணன் அருந்தமையன் மைந்தன் இகலாய் (5)
வீசும்அர வஞ்சிதறி யோடவரு வெங்கலுழன்
மேல்இடி எனும்படிமு ழங்கி விழுமே (6)
மேதினிசு மந்தபெரு மாசுணம யங்கநக
மேவுசர ணங்கொடுல கெங்கு முழுமெ (7)
வேலியென எண்டிசையில் வாழும்உர கந்தளர
வேஅழலெ னுஞ்சினமு டன்ப டருமே (8)
போதினில் இருந்தகலை மாதினைம ணந்தவுயர்
போதனை யிரந்துமலர் கொண்டு முறையே (9)
பூசனைபு ரிந்துகொடி யாகிமகிழ் ஒன்றுதுகிர்
போல்முடிவி ளங்கவரும் அஞ்சம் அடுமே (10)
பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர்
பூரணக ணங்களொடு வந்து தொழவே (11)
போரிடுவ வென்றுவெகு வாரணக ணங்களுயிர்
போயினம் எனும்படிஎ திர்ந்து விழுமே (12)
கோதகலும் ஐந்துமலர் வாளிமத னன்பொருவில்
கோலவுட லங்கருகி வெந்து விழவே (13)
கோபமொடு கண்டவிழி நாதர் அணி யும்பணிகள்
கூடிமனம் அஞ்சிவளை சென்று புகவே (14)
கூவியிர வந்தம்உணர் வாழியென நின்றுபொரு
கோழியொடு வென்றிமுறை யும்ப கருமே (15)
கோலமுறு செந்தில்நகர் மேவுகும ரன்சரண
கோகனதம் அன்பொடுவ ணங்கு மயிலே (16)
பதம் பிரித்தது
ஆதவனும் அம்புலியும் மாசு உற விழுங்கி உமிழ்
ஆலம் மருவும் பணி இரண்டும் அழுதே (1)
ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எம் கடவுள்
ஆம் என மொழிந்து அகல வென்று விடுமே (2)
ஆர்கலி கடைந்து அமுது வானவர் அருந்த அருள்
ஆதி பகவன் துயில் அனந்தன் (ஆதிசேஷன்) மணி சேர் (3)
ஆயிரம் இரும் தலைகளாய் விரி படம் குருதி
ஆக முழுதும் குலைய வந்து அறையுமே (4)
வேதம் முழுதும் புகல் இராமன் ஒரு தம்பி மிசை
வீடணன் அரும் தமையன் மைந்தன் இகலாய் (5)
வீசும் அரவம் சிதறி ஓட வரு வெம் கலுழன்
மேல் இடி எனும்படி முழங்கி விழுமே (6)
மேதினி சுமந்த பெரு மாசுணம் மயங்க நகம்
மேவு சரணம் கொடு உலகு எங்கும் உழுமே (7)
வேலி என எண் திசையில் வாழும் உரகம் தளரவே
அழல் எனும் சினமுடன் படருமே (8)
போதினில் இருந்த கலை மாதினை மணந்த உயர்
போதனை இரந்து மலர் கொண்டு முறையே (9)
பூசனை புரிந்து கொடியாகி மகிழ் ஒன்று துகிர்
போல் முடி விளங்க வரும் அஞ்சம் அடுமே (10)
பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர்
பூரண கணங்களொடு வந்து தொழவே (11)
போரிடுவ வென்று வெகு வாரண கணங்கள் உயிர்
போயினம் எனும்படி எதிர்ந்து விழுமே (12)
கோது அகலும் ஐந்து மலர் வாளி மதனன் பொருவில்
கோல உடலம் கருகி வெந்து விழவே (13)
கோபமொடு கண்ட விழி நாதர் அணியும் பணிகள்
கூடி மனம் அஞ்சி வளை சென்று புகவே (14)
கூவி இரவு அந்தம் உணர் வாழி என நின்று பொரு
கோழியொடு வென்றி முறையும் பகருமே (15)
கோலமுறு செந்தில் நகர் மேவு குமரன் சரண
கோகனதம் (தாமரை) அன்பொடு வணங்கு மயிலே (16)
