027 – உள்ளூர்ச் சிவசுப்பிரமணியர் சதகம்

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

திருவேறும் வேதநவி லொருவர்குரு வேநந்தி
தெளியவுரை தந்தகுருவே
சிவமகிமை நாரதற் கோதுகுரு வேபொதிகை
திகழ்முனிக் கருள்செய்குருவே
கருதரிய வொருசொல்லை யாறுபெயர் பக்குவங்
கண்டன்று சொற்றகுருவே
கங்குல்பக லற்றபே ரின்பவீ டடையரா
கவனுக் குரைத்தகுருவே
இருளற வெனச்சுக முனிக்கருள்செய் குருவேயெ
னிதயத் தமர்ந்தகுருவே
ஏதிலுணர் வுயர்வாம தேவர்குரு வேயுலக
மெங்குமவிர் கின்றகுருவே
திருவுள முவந்தருள் புரிந்தென்னை யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – (01)

ஆக்கைக்கு மாவிக்கு மாதார மாயிருந்
தாட்டுவிக் கின்றசிவமே
அறிவினுக் கறிவா யிருந்ததனை யறிவிக்க
வறிவா யியங்குசிவமே
வாக்குக்கு மனதுக்கு மெட்டாத வத்துவித
வத்துவா யுள்ளசிவமே
வளர்பிறவி யாழ்கடல் கடக்குநர் களுக்குறுதி
மல்குபுணை யாகுசிவமே
சூக்குமங் கட்குமொரு சூக்கும மெனப்பனுவல்
சொல்லழிவி லாதசிவமே
தொல்லைவினை யாவுந் துமித்துமதி யமுதச்
சுகானந்த வீடெய்துவான்
சீக்கிர மெனைத்தடுத் தடிமைகொண் டாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – (02)

மானமறு பேரண்ட பகிரண்ட மெங்கணு
மலிந்துள விலாசவொளியே
மாயைநெடு வலிகடிந் தருணெறியி னின்றுளார்
வழிபட் டடைந்தவொளியே
ஞானிகள் புலத்திறையு மணுகாம லிருள்போழு
ஞானவா னந்தவொளியே
நலிவில்பே ரின்பவீ டென்றும்பிர காசிக்க
நாணாளு நிலவுமொளியே
ஊனரம் பென்புரு வினுக்குள்வதி தருமுயிர்க
ளுண்ணிலையி லொளிருமொளியே
உற்றுணர வுரியவிழி யாயவொளி யேயென்ற
னுள்ளத்தை நேர்படுத்தித்
தேனிற் சிறந்ததிரு வருளளித் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 03

போதவெளி யாயுள்ள நாதநிலை மேலொளிசெய்
பொருவறு சுயஞ்சோதியே
பூதப்ர பஞ்சநிலை யெங்கணு நிறைந்தபரி
பூரண வியன்சோதியே
கோதில்சிவ ராசயோ கத்திருவர் முன்னர்க்
குதிக்குஞ் செழுஞ்சோதியே
குன்றாத பேரின்ப மன்றக மிலங்குமொரு
கோலப் பரஞ்சோதியே
மூதறி வெனுங்கடலின் மூழ்கறிஞர் போதத்தை
மூசிமின் னுஞ்சோதியே
மூடவடி யேன்மூல விருளிரிய வென்னுளு
முயங்குசெம் பொற்சோதியே
தீதிலா னந்தமா வருள்புரிந் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 04

அண்டமெனு முண்டைபல வருள்வெளியில் வைத்தகண்
டாகார மானபொருளே
அளவற்ற பெரியவெளி பெரியவெளி யென்றறிஞ
ரறையுமொரு பெரியபொருளே
பண்டுநான் மறையந்த மாகத் திகழ்ந்துமுப்
பாழ்கடந் துள்ளபொருளே
பல்லுரு விலுங்கலந் தறிவீன ரறியப்
படாதவியல் புடையபொருளே
தொண்டர்க ளகப்புலங் குடிகொடெந் நாளுமொரு
துணையின் றியங்குபொருளே
துரியமெய்ஞ் ஞானப் பெருஞ்சோதி யாயேழை
துயர்நூற வந்தபொருளே
செண்டுமுகை யார்மையல் சீத்தென்னை யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 05

முத்தர்க டெவிட்டப் புசித்துக் களிக்குநிஜ
மோனவா னந்தவமுதே
முப்பாழ் கடந்துளவொர் சிற்பர நபத்தினடு
மூலத்து நல்லவமுதே
பத்திமையர் பத்திவயி ராக்கிய நிலைக்குமா
பண்ணுநிலை யின்பவமுதே
பவக்கலி கடக்கவுள் வலித்துத் துறந்தவர்
பசிக்கெடுத் துண்ணுமமுதே
நித்தமுனை நினையுமென் புத்திகரு துற்றபடி
நிலையின்றி யோடுநெஞ்சை
நேர்பட நடத்தியைம் பொறிகளை யடக்குமொரு
நெறிநின் றெனைத்தெரிந்துன்
சித்தொடுங் கூடியினி துய்யவெனை யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணிய தேவே. – 06

நில்லாத பிரபஞ்ச வாழ்விலுழ லாருள
நிறைந்தநித் தியானந்தமே
நிட்டையின் மனோலயங் கண்டபொழு துச்சிமே
னிற்குநித் தியானந்தமே
பொல்லாத மனமருட் டுன்பினை யெருக்குசிவ
போதநித் தியானந்தமே
புகலரிய பதிஞான கதிநாடு நர்க்கருள்
புரக்குநித் தியானந்தமே
பல்லா யிரங்கோடி யண்டங்க ளெங்கணும்
பரவுநித் தியானந்தமே
பத்தனென தெண்ணக் குறிப்பினை யறிந்தினிப்
பருவரல்க ளுள்ளநெறியிற்
செல்லாது செய்துனக் காளாக வாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 07

ஆதார மாறிற்கு மாதார மாயிருந்
தரசுபுரி கின்றவரசே
அண்டவெளி தன்னிலே யானந்த நிர்த்தமி
டகண்டசிவ யோகவரசே
மாதா பிதாவாக நின்றெனை யிரக்ஷித்து
மதியதர் கொடுத்தவரசே
மானாபி மானவச டறவன்பர் பக்கலருள்
வருஷிக்கு முகிலினரசே
சூதா முடங்குகா திடுமொரு மருந்தைச்
சுறுக்கினி லுரைக்குமரசே
தோற்றமே ழையும்வகுத் தாளுமர சேதொண்டர்
தோத்திர மதிக்குமரசே
தீதான செயிர்துமித் தென்னைநீ யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 08

ஈரே ழுலோகமெல் லாம்வகுத் திடையின்றி
யேகநிறை வானபரமே
எளியனை யணைத்தழிவி லாதவனு பூதிதர
வீசனா மருவுபரமே
தீராத கோசபா சப்பின்ன லைத்தொண்டர்
சேதித் தறிந்தபரமே
செப்பரிய பேரின்ப வாரியிறை யாமன்னு
சின்மயா னந்தபரமே
பேரூர் குலங்குடி பிறப்பிறப் பென்பவைகள்
பேசவிசை யாதபரமே
பிண்டநீ டண்டபந் தங்கடந் துன்பதம்
பெற்றுமுட் டாதசெல்வச்
சீரோ டிருக்கவருள் செய்தென்னை யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 09

முக்குண மிலாதசட் குணசாசு வதயோக
முதல்வனா யுள்ளவிறையே
மும்மலங் களுமிலா நின்மல நிராகார
மோனவருண் மூலவிறையே
மிக்களி யுளர்க்கமுத நற்கனியை நல்கருள்
விருக்கமா மன்னுமிறையே
வேதங்க டேடிமுடி வறியாத வற்புத
விலாசப்பிர காசவிறையே
துக்கசுக மொட்டுணர்வு முற்பவ மயக்கமுந்
தொடரா வதீதவிறையே
துவிதத்தை நீக்கியத் துவிதத்தி னினைநெஞ்சர்
தோயின்பி னிற்குமிறையே
திக்கொன் றிலாவென்னை யாதரித் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 10

ஆதித்தர் கடவுளா யவிர்பொருளை யாலம்ப
மற்றுண்மை யுற்றபொருளை
அபிதான வபிதேய நீத்தவொரு பொருளையெனை
யன்பாய் வளர்த்தபொருளை
நாதத்தி னந்தமா யுளபொருளை யிதயத்தி
னடுவே யமர்ந்தபொருளை
ஞானவா னாநிறைந் தெங்குமுள பொருளையென்
னட்புக் குகந்தபொருளை
வாதத்தி னாலளவி டற்கரிய பொருளையென்
மனுவிற் கிரங்குபொருளை
வழியடிய வர்க்கண்மை நொதுமலர்க் கதிதூர
மாகநின் றுள்ளபொருளைச்
சீதத் திருப்பரிவி னல்கியெனை யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 11

சகலபுத் தேள்களு மிறைஞ்சிப் பழிச்சுஞ்
சதானந்த நாயகத்தைச்
சருவபரி பூரண வனாரத சிதாகாச
சபைநடன நாயகத்தைச்
சகமாயை மருவாத மௌனமெய்ஞ் ஞானிகளி
தயமேவு நாயகத்தை
சந்தேகர் நெஞ்சினில் லாதசிவ ஞானோ
தயப்பிரம நாயகத்தைச்
அகரவுயி ரைப்போல விகபர மிரண்டிலு
மளாவியவிர் நாயகத்தை
அறிவதற் கெண்ணினே னறிவுதந் தறிவித்
தருட்பரவை யிடையமிழ்த்தித்
திகழுநின் சேவடியில் வதியவைத் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 12

அடியுநடு முடியுமற் றறிவரிய பெரிதா
யலங்கும் பராபரத்தை
அருவுமற் றுருவுமற் றருவுருவு மற்றெவையு
மறியும் பராபரத்தை
மிடியுமருண் மடியுமற் றதுவிது வெனார்கண்
விளங்கும் பராபரத்தை
மிறைகுறைக ளின்றிச் சிதாகாச மெனமின்னி
விரியும் பராபரத்தைக்
குடியுமரில் வெருவுமற் றெனைநசைஇ யென்னுட்
குதிக்கும் பராபரத்தைக்
கொடியனே னுணராது குவலய மயக்கினனி
குலைகிறேன் குலையாமலே
திடவருளி னின்றுணர வருள்புரிந் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 13

ஓங்கார சத்தத்தி னாதவடி வாகியுள்
ளூமையா நிற்குமொன்றை
ஊமையெனு மாமோன முடிவான பொருளா
யுறங்கா திருக்குமொன்றை
ஆங்கார நோயினை யறுத்தபெரி யோரறிவி
லனுதினம் விளங்குமொன்றை
ஆபாச மிறையுமில் லாதபர வெளிமுழு
தளாவிநிறை வானவொன்றைத்
தூங்காத பக்குவர்க் கருள்செய்ய விறைவடிவு
தூய்மையிற் கொள்ளுமொன்றைத்
துகளற்ற திவ்வியதே சோமயா னந்தவொளி
சுடர்பருதி யாயவொன்றைத்
தீங்கேறி யுழலெனக் கினிதுதவி யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 14

அவலநுவ லபலமுஞ் சபலமுஞ் சலனமு
மசஞ்சலமு மில்லாததை
ஆசையு நிராசையு மடந்தரு மிடம்பமு
மழுக்காறு மில்லாததைத்
துவிதவுரை யேகவுரை கூறுபவர் வாதமுஞ்
சூனியமு மில்லாததைச்
சுத்தமு மசுத்தமுந் துக்கமு மகிழ்ச்சியுஞ்
சுட்டுணர்வு மில்லாததை
அவனெனலு மவளெனலு மவரெனலு மதுவெனலு
மவையெனலு மில்லாததை
அறியாத சிறியே னறிந்துய்ய நின்னையே
யண்டினே னகிலமெனையுஞ்
சிவமா முனக்குரிய தொண்டனென வாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 15

பொய்யாத தாரகப் பொருளா யிருந்தருள்
புரிந்திடு சதாசிவத்தைப்
போதத்தி னிடைநின் றுணர்ச்சிதரு கின்றபரி
பூரண சதாசிவத்தை
மெய்யான வானந்த நிர்த்தன விருஞ்சபை
விளங்கொரு சதாசிவத்தை
வித்தவெளி யென்னவிட னற்றுநிலை யுற்றெங்கு
மேவிய சதாசிவத்தை
நையா வகண்டபதி ஞானச் சுயஞ்சோதி
நடுவவிர் சதாசிவத்தை
நாடா தளப்பிலக நாடிமதி கெட்டகடை
நாயனே னின்னுமதனைச்
செய்யாது னிருபதந் தொழவேவி யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 16

மாசற்ற வுள்ளூர் வெளித்தெருவி லேபொங்கி
வழியுஞா னாமுதத்தை
மாயைக் கடற்குளமி ழாதவ ரெடுத்துண்ணு
மதுரஞா னாமுதத்தை
ஆசைக் கசப்பினை யடித்துத் துரத்திடு
மதீதஞா னாமுதத்தை
அன்பர்க ளகப்புலங் கங்குகரை யில்லா
தலம்புஞா னாமுதத்தை
மாசொட்டு மரணசன னங்களை யறக்களைய
வல்லஞா னாமுதத்தை
மனமகிழ்ந் தேயெனக் கூட்டியூட் டிப்பொலா
மலவிரு ளெலாமிரித்துத்
தேசுற்ற செம்பொற் பதங்கொடுத் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 17

இவ்வள வெனச்சொலற் கமையா தெனாமறை
யியம்புஞ் சுகோதயத்தை
என்றைக்கு வருமோ வெனாவப்பி யாசிகளு
ளெண்ணுஞ் சுகோதயத்தைக்
கவ்வையொடு தெவ்வமு மிலாதபதி நிட்டையிற்
காணொரு சுகோதயத்தைக்
கறையற்ற வருவமன நற்சீவன் முத்தருட்
கனியுஞ் சுகோதயத்தை
ஒவ்வருவ மனமுமில் பரமுத்த ரிடையறா
துறையுஞ் சுகோதயத்தை
உன்னருளின் வலிகொண்டு பெறவென்று கருதினே
னுள்ளுவந் தருளிநாளுஞ்
செவ்விய திருக்கழற் காளாக வாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 18

அட்டாங்க நிட்டையிலு மெட்டாத வத்துவெனு
மத்துவித சின்மயத்தை
ஆனந்த மேயியல்ப தாயகண் டாகார
மானசிவ சின்மயத்தைத்
தட்டாத சுத்தவெளி தன்னினிறை வானசிவ
சாயுச்சிய சின்மயத்தைத்
தானென்ப தின்றியது தானென் றுணர்ந்தவுயிர்
சார்பரம சின்மயத்தைக்
கிட்டாத மட்டியைக் கிட்டவர வொட்டாத
கேடற்ற சின்மயத்தைக்
கிருபையண வாவறிய னேனறிய வென்றுனது
கிருபையை யவாவுகின்றேன்
சிட்டனிவ னெனவந்தவ் வாறுசெய் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 19

இறப்புறு பிறப்பின்றி யென்றுமொரு நீர்கொண்ட
வேகபரி பூரணத்தை
எத்துணை விகாரமு மிலாவமல வறிவா
யிலங்குபரி பூரணத்தை
அறப்பொரு ளருட்பொருள் விரும்புவா ருள்ளுணர்ந்
தருள்செய்பரி பூரணத்தை
அறிஞர்தங் கண்ணே யறிந்தத்து விதமென்
றடைந்தபரி பூரணத்தைக்
குறிப்பினு மதிப்பினு மடங்காத வொருதன்மை
கொண்டபரி பூரணத்தைக்
கோதில்வே தாந்தசித் தாந்தசம ரசநிபுணர்
கூறுபரி பூரணத்தைச்
சிறப்புட னளாவிநான் வாழநீ யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 20

நிலமென்று நீரென்று மனலென்றும் வளியென்றும்
நிறையுமா காயமென்றும்
நிநதமென் றும்பரிச மென்றுமுரு வென்றுமறு
நீர்மைநவி லிரசமென்றும்
நலிகந்த மென்றுமொலி வாக்கென்று நிலைமீ
நடக்கின்ற பாதமென்றும்
நல்கவுள கரமென்று மலவிசர்க் கஞ்செய்யு
நாளவிந் திரியமென்றும்
நிலவுசுக் கிலம்விடு முபத்தமென் றுந்தொனி
நிகழ்ச்சியறி சுருதியென்றும்
நிற்குநிர லறியநினை நித்தலு நினைக்கிறே
னிட்டையி லுணர்த்தியருளித்
திலகமலி யுன்னடிப் போதில்வைத் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணிய தேவே. – 21

தொக்கதென் றுந்துணிகொள் சக்குவென் றுஞ்சுவைக
டுய்க்கின்ற தாலுவென்றும்
துர்க்கந்த நற்கந்த மறிநாடி யென்றுநசை
தொட்டுழலு மனமதென்றும்
தக்கபடி நிச்சயஞ் செய்புத்தி யென்றும்யோ
சனைபணுஞ் சித்தமென்றும்
தன்னக மெழுப்பிடு மகங்கார மென்றுமிவை
தருகின்ற பகுதியென்றும்
நிக்கிரக மாகாத வாணவத் தைச்சிறிது
நீக்குமொரு கருவியென்றும்
நிற்குநிர லறியநினை நித்தலு நினைக்கிறே
னிட்டையி லுணர்த்தியருளித்
திக்கற்ற வென்னையுன் னடியில்வைத் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 22

கலையிலே தோன்றிஞா னத்தினை யெழுப்பரிய
கருமத்து வித்தையென்றும்
கருமவவ் வித்தையி லுதித்திச்சை யின்செயல்
களைத்தரு மராகமென்றும்
கலையொடு பிறந்துகரு மப்பலனை யுள்ளநாள்
காறுமீ நியதியென்றும்
காலமென் றுங்கலா தியினின் றெழும்பியிரு
கன்மநுகர் புருடனென்றும்
நிலைகொண்மோ கினிமாயை யென்றுமைங் கூறாக
நிகழ்சுத்த மாயையென்றும்
நிற்குநிர லறியநினை நித்தலு நினைக்கிறே
னிட்டையி லுணர்த்தியருளிச்
சிலைமதன் செயனணா வடியில்வைத் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 23

சுத்தமா மாயையின் றோற்றமோ ரைந்தில்வினை
சோர்சுத்த வித்தையென்றும்
தொழிலேறி ஞானங் குறைந்ததத் துவமெனச்
சொல்லுமீச் சுவரமென்றும்
உத்தமக் கிரியையு முயர்ந்தவறி வுஞ்சதா
வொத்தவொரு தத்வமென்றும்
ஓவாத கிரியையா யுளசத்தி யென்றுமே
லுணர்வுள்ள சிவமதென்றும்
நித்திய மகாமாயை யென்னும்விந் துவிலே
நிலாவுசிவம் வருவதென்றும்
நிற்குநிர லறியநினை நித்தலு நினைக்கிறே
னிட்டையி லுணர்த்தியருளிச்
சித்திர மலர்ச்சரண வாழ்வில்வைத் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 24

சுத்தமை யசுத்தசுத் தாசுத்த முதல்களிற்
றொழிலைந்து மருள்வலிகொடு
சோர்வறச் செயவருவ நான்குருவ நான்கொன்று
தொந்தமா வுளவென்றுமால்
எத்தலங் களிலுமத் தொழில்கள்செய றன்மையினி
லெங்குநிறை வாகியென்றும்
எதிராகு முன்னிலையி லிச்சைஞா னங்கிரியை
யென்னுமொரு மூன்றினென்றும்
நித்தம் படர்க்கையிற் பத்தெனப் பகர்வதொடு
நிகழைந் திடத்துமென்றும்
நிற்குநிர லறியநினை நித்தலு நினைக்கிறே
னிட்டையி லுணர்த்தியருளிச்
செத்திலடி யார்திருவில் வைத்தென்னை யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 25

பற்றிடு மனாதிகர ணங்களை யெழுத்துக்கள்
பரிவொடு நடத்துமென்றும்
பலமுடை யெழுத்துக்க ளைத்தலைவ ரேதொழிற்
படநடத் திடுவரென்றும்
சொற்றவத் தலைவர்களை யிச்சைஞா னங்கிரியை
சோர்வற நடத்துமென்றும்
துகளிலம் மூன்றுமே லாதிபரை களுமரிய
துரியவரு ளின்கணென்றும்
நெற்றிமே னின்றுவெளி கண்டுளார் தெளிநூ
னிகழ்த்துசரி தப்படிக்கு
நிற்குநிர லறியநினை நித்தலு நினைக்கிறே
னிட்டையி லுணர்த்தியருளிச்
சிற்றறிஞ ரறியாத திருவில்வைத் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 26

ஆணவ மறைப்புள்ள விஞ்ஞான கலருளே
யணுசதா சிவரென்றுமா
அட்டவித் தேசுர ரரிப்பற்ற வேழ்கோடி
யருண்மகா மந்திரரென்றும்
மாணுடைப் பிரளயா கலருளீ ரெண்மர்கண்
வயங்கீ ருருத்திரரென்றும்
வண்மையுந் திண்மையு மமைந்தவுரு விற்றேசு
மல்குசத ருத்திரரென்றும்
நீணிலச் சகலருட் பிரமன்மா லாதியா
நிகழுயி ரனந்தமென்றும்
நிற்குநிர லறியநினை நித்தலு நினைக்கிறே
னிட்டையி லுணர்த்தியருளிச்
சேணமரர் பரசுநின் னடியில்வைத் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ஊரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 27

செம்பிற் களிம்பரிசி யிற்றவிடு போலவே
செறியொரு களங்கமென்றும்
சிதைவின்மா யையினின்று சிட்டியிற் புத்தியைச்
சேர்பழங் கன்மமென்றும்
அம்பார கன்மமே சஞ்சித பிராரத்த
வாகாமி யங்களென்றும்
அதிர்த்தவிரு மலமன்றி மாயையெனு மோர்மல
மசுத்தமொடு சுத்தமென்றும்
நிம்பமுட னின்பமுஞ் செய்யாதி சத்தியென
நிகழுந் திரோதையென்றும்
நிற்குநிர லறியநினை நித்தலு நினைக்கிறே
னிட்டையி லுணர்த்தியருளிச்
சிம்புமரி யங்கழற் றிருவில்வைத் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 28

கிஞ்சிஞ்ஞ னொன்றினுங் கூடா திருப்பதே
கேவல வவத்தையென்றும்
கிளர்தத்து வங்களோ டேகூடி நிற்பதே
கேடற்ற சகலமென்றும்
துஞ்சாது துஞ்சியச் சகலகே வலமற்ற
துறையண்ணல் சுத்தமென்றும்
சுத்தவருள் கொடுதனைக் கண்டபிற கருளிலே
தோய்தல்பரை போகமென்றும்
நெஞ்சற்ற வறிவாகி யருளினுட் பொருளண்ண
னிலையென்று நூல்கள்சொலுமா
நிற்குநிர லறியநினை நித்தலு நினைக்கிறே
னிட்டையி லுணர்த்தியருளிச்
செஞ்சரண மலர்களுக் கடிமையா வாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 29

பூதமுத னாதம்வரை யாறா றெனுஞ்சடப்
பொருளுக் கதீதமென்றும்
போக்கொடு வரத்துமில் லாதவொரு பூரணப்
பொருளாக வுள்ளதென்றும்
சீதமொடு தாபமும் பகைமையொடு கேண்மையுந்
திரிபுலைவு மற்றதென்றும்
சிறுமையொடு பெருமையுஞ் சிந்தைநிர்ச் சிந்தையுஞ்
செயிருமில் யதார்த்தமென்றும்
நீதமறை யெல்லா மிழற்றுவது போலறிவு
நிபுணருஞ் சொல்வரதிலே
நிற்குநிர லறியநினை நித்தலு நினைக்கிறே
னிட்டையி லுணர்த்தியருளிச்
சீதவா ரிசவடித் திருவில்வைத் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 30

காசாசை கொண்டே கலங்குகிற தோஷிநற்
கல்விகல் லாததோஷி
கற்றோர் களைக்கண்டு பணியாத தோஷிகெடு
கயவருற வுற்றதோஷி
ஆசார மொருசிறிது மில்லாத தோஷிமண்
ai ணாசையே கொண்டதோஷி
0318 ஆசானை நிந்தித்த தோஷியரை நிமிடமு
மறத்தைநினை யாததோஷி
பேசாத பேச்சினைப் பேசிடுந் தோஷிவசை
பேசப் பிறந்ததோஷி
பீடுடைய வீடுபெற வுள்கினே னெந்தைநின்
பெரியதிரு வுளமகிழ்ந்து
தேசோ மயானந்த வாழ்வுதந் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணிய தேவே. – 31

எல்லா மறிந்தவ ரெனைப்போல வுலகின்மிசை
யெவரென் றறைந்ததோஷி
எந்நேர முங்குடும் பக்கவலை கொண்டங்கு
மிங்குமலை கின்றதோஷி
உல்லாச வீணர்கதை சொல்லியதி லேகட்
டுரைத்துச் சிரித்ததோஷி
ஊனுடலை வலியகற் கோட்டையா வெண்ணிநல்
லுணர்வற்று நின்றதோஷி
நல்லார்கள் பொல்லார்க ளெல்லார்கள் பாலும்வெறி
நாய்போல் விழுந்ததோஷி
நல்லவழி கூடும் படிக்குள்கி னேனிந்த
ஞாலத் துயர்க்கடற்குள்
செல்லா திழுத்தணைத் தன்பினா லாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 32

வஞ்சிநிக ருக்கமட மங்கையர்க ளின்பமே
மாவின்ப மென்றதோஷி
வாய்க்குருசி யாகப் புசிப்பதே பேரின்ப
வாழ்வென நினைத்ததோஷி
கஞ்சுளி யணிந்துடற் கண்டைமடி புனைவதே
கண்டபல னென்றதோஷி
கந்தகத் தூரிபரி மளவத்தர் திமிர்வதே
கைகண்ட தென்றதோஷி
அஞ்சலின் றிவ்வுலக வுத்தியி லிருப்பதே
யரியபே றென்றதோஷி
அகடவிக டம்புரிந் துய்வதே யென்றைக்கு
மானந்த மென்றதோஷி
செஞ்சரண மடையவென வுள்கினே னாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 33

பொருவற்ற தெய்வமெனல் பொய்யென்ற தோஷியறி
பூதமெய் யென்றதோஷி
புரிவினைப் பிறவியெனல் பொய்யென்ற தோஷியுயிர்
புதிதுமெய் யென்றதோஷி
மருளிலா வறிவுநெறி பொய்யென்ற தோஷிசக
மார்க்கமெய் யென்றதோஷி
மங்காத முத்தியெனல் பொய்யென்ற தோஷியுயிர்
மாய்தன்மெய் யென்றதோஷி
துரியரது வேதகலை பொய்யென்ற தோஷியென்
சொற்கண்மெய் யென்றதோஷி
தோன்றியழி கின்றநிலை மேலறிய வென்றே
தொடர்ந்தே னயர்ந்த வினைகள்
திருவருளி னாலிரிய வன்புசெய் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 34

வேதாக மங்களல் லாதபுன் கதைகளை
விரும்பிப் படித்ததோஷி
வேசையர்க ளாசைகொண் டாசையை யழித்துள்ள
வெட்கமுங் கெட்டதோஷி
மாதரார் மிதுனித்த மார்க்கவகை சொலிவீணர்
மகிழ்கான் மகிழ்ந்ததோஷி
வாசமலர் கொண்டையிற் சூடித் தெருத்தோறு
மதிகெட் டலைந்ததோஷி
கோதுறுங் குத்திரம் புரிவோ ரெவர்க்குமொரு
குருவா யிருந்ததோஷி
குறைவற்ற கைவல்லிய முறவுள்கி னேனெண்
குணம்பெருகு பரதெய்வமே
தீதெலா மோட்டிவழி காட்டியெனை யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 35

வையத்து மாந்தரை யடக்கிநாம் வாழவென
மந்திரங் கற்றதோஷி
மதிளேறி யுட்குதித் தொருவரறி யாதுகர
வடமிக விழைத்ததோஷி
ஐயோ வெனாவலற வகதிக ளகம்புக்
கதட்டிப் பறித்ததோஷி
ஆருக்கு மஞ்சாத மிண்டனா கத்திரிந்
தறிவழகு கெட்டதோஷி
பொய்யிற் பிழைக்குநர்கள் செய்கைக் கிணங்கியே
புகழ்சிறிது மற்றதோஷி
பூரணா னந்தநிலை யுறவுள்கி னேனினிப்
பொய்யாத குற்றேவறான்
செய்யும் படிக்குநனி செய்தென்று மாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 36

பேய்களைப் பூசைசெய் ததுவிதுசெய் வேனென்று
பேசித் திரிந்ததோஷி
பெரியோர்கணூனீதி சொல்லியிற் புலியினது
பெற்றியே கொண்டதோஷி
வாய்மதம் பேசியா காவல் லிடும்பரொடு
வழிநடந் திட்டதோஷி
வாங்கிய கடன்கொடா மல்வழக் கிட்டதனை
வாங்கவிலை யென்றதோஷி
தாய்தந்தை முதலியோர் தமையிகழ்ந் தொழியாத
சஞ்சலங் கொண்டதோஷி
தருமத்தை விற்றுண்ட தோஷிநா னாகலிற்
றகவுடைய வருள்பெருக்கிச்
சேயென வணைத்தா தரித்தருளி யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 37

நன்னெறியி னின்றுபணி கின்றவடி யார்சொத்தை
நட்டமது செய்ததோஷி
நாடோறு நாய்போ லலைந்துபொரு ளாசையா
னாளைக் கழித்ததோஷி
தன்னிலைமை தனைநினைந் தெந்நேர முந்திவ்விய
சஞ்சல மிலாததோஷி
தவமிழைப் போர்களை யிழைக்கவொட் டாமற்
றடுத்துமகிழ் வுற்றதோஷி
கன்னியர் குழுக்கண்டு கைவீசி நடைதந்து
காதலொடு சென்றதோஷி
கருணைவிண் ணானந்த முறவுள்கி னேனினது
கழன்முண்ட கத்தையெனது
சென்னியிற் சூட்டுவித் தடிமைகொண் டாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. 38

எங்கண்மத முங்கண்மத மென்றுபல திறவாத
மிட்டறிவை விட்டதோஷி
இதுதெய்வ மதுதெய்வ மென்றுநிலை கொள்ளாம
லீடழிந் திட்டதோஷி
கொங்கைநிமிர் மங்கையரை யுற்றுற்று நோக்கிவிழி
குருடுபட் டுள்ளதோஷி
குடிகார ரோடுகட் கூடிக் குடித்துக்
குலாவித் திரிந்ததோஷி
கங்குல்பக லுள்ளீர மின்றியுயிர் வதைசெய்து
கறிசமைத் துண்டதோஷி
காவலரை வஞ்சித்த தோஷிநா னாகலிற்
கருணைகொண் டமுதர்புகழுஞ்
செங்கழன் மதர்ப்பினை யளித்தென்று மாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 39

துட்டத் தனங்கட்கு வித்தான தோஷிநர
துதிசதாசெய்ததோஷி
சுந்தரி களைப்புணர வசியமது தேடித்
துரும்பா மெலிந்ததோஷி
கட்டுக் கடங்காத பட்டிமா டொப்பவே
கண்டபடி சென்றதோஷி
காலிகளின் மேலிருஞ் சுமைவைத் தடித்துண்டு
கருணையை யிழந்ததோஷி
மட்டற்ற மித்தைகளை வட்டிக் களித்துநிதம்
வர்த்தக மிழைத்ததோஷி
மாகதி பெறற்காய நெறிதன்னை நேடினேன்
மனமுவந் தருள்வழியில்வாழ்
சிட்டனிவ னென்றுதிரு வடிகொடுத் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 40

எவ்வுயிரு மறிவென் றிராதவ் வுயிர்க்கெலா
மெமனா யிருந்ததுட்டன்
எனக்கீ டுளோருல கிருப்பரோ வென்றிக
லியம்பிய பொலாததுட்டன்
ஒவ்வாத செயல்களுக் கொவ்வாத மக்களையு
மொவ்வவே செய்ததுட்டன்
ஊரார்கள் சொத்தின்மே லாசையுற் றிதமோச
வுரைபல வுரைத்ததுட்டன்
அவ்வியர்க ணேயமுற் றங்காடி நாய்போ
லலைந்துபுக ழற்றதுட்டன்
அத்தனை யிகழ்ந்திட்ட துட்டனா னாதலா
லமலவன் பைப்பெருக்கித்
திவ்விய சதானந்த வீடளித் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 41

வேதநிஜ நூலீறு கேட்டிவை வெறுஞ்சொலென
விட்டுலகி னின்றதுட்டன்
வித்துவா னானென்று கவிதைபல பாடியே
வீணா டொலைத்ததுட்டன்
வாதவினை யாற்பிரவு வாவே னெனாவுலகை
மதியாம னின்றதுட்டன்
வாலிப ருடன்கூடி யரியரன் கோயில்களில்
வனிதைமயல் கொண்டதுட்டன்
பாதகஞ் செய்யப் படாதென்று சொல்லியப்
பாதகஞ் செய்ததுட்டன்
பங்காளி வஞ்சகத் துட்டனா னாகலிற்
பரமவன் பைப்பெருக்கிச்
சேதகப் பாதச் செருக்களித் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 42

பொருணட்பி லாசையுற் றதிகார வவைகளிற்
பொய்யுரை புகன்றதுட்டன்
புண்ணியஞ் செய்கிறே னென்றுபிறர் காணப்
பொருந்தா தளித்ததுட்டன்
ஒருவரு நமக்குநிக ராகாரெ னுன்மத்த
மோயாது கொண்டதுட்டன்
உல்லாச வுடையுடீஇ யெல்லாரும் வீணனென்
றுன்னிட நடந்ததுட்டன்
குருவைப் பணிந்துபொரு ளறியாத துட்டனிடு
கூலிகள் குறைத்ததுட்டன்
குல்லையபி னுண்மருட் டுட்டனா னாகலிற்
குறைவிலன் பைப்பெருக்கித்
திருவளரு மடிமதர்வு வீடளித் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 43

நல்லமனி தன்போ லியம்பியுள் ளுக்குளே
நஞ்சா யிருந்ததுட்டன்
ஞாயத் தலத்திலே பக்ஷபா தம்பேசி
ஞாயங் கெடுத்ததுட்டன்
எல்லிலு மிருட்டிலுங் கள்ளத் தனத்தையே
யிதயத்தில் வைத்ததுட்டன்
ஏழைக் கிரக்கமுற் றையமிடு வோர்களை
யிடாதுதடை தந்ததுட்டன்
புல்லறி வுளாரைச் சினேகித் தடாதவனு
போகத்தில் வீழ்ந்ததுட்டன்
புண்ணியம தில்லாத துட்டனா னாகலிற்
புரணவன் பைப்பெருக்கிச்
செல்லொணா நெறிதடுத் தடியளித் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 44

போய்வருத லோராத நாய்போல வுண்பதே
புத்தியென வோதுதுட்டன்
புறணிபே சிப்பேசி யொருவர்க்கு மாகாத
புல்லர்கட் கானதுட்டன்
பேய்களுக் கடிமையாய் நின்சரண நாடாது
பேயா வுழன்றதுட்டன்
பிறருக்கு நமதுதுயர் வரவென்று கருதிடும்
பெற்றிநனி கொண்டதுட்டன்
நோய்வந்த காலையிற் பேய்களைக் கும்பிட்டு
நோன்மையை மறந்ததுட்டன்
நோலாமை மிக்குடைய துட்டனா னாதலா
னுகைவிலன் பைப்பெருக்கித்
தீயிற் புகார்பெற்ற வடியளித் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 45

கனவாட கப்புதையல் பெறவென்று கோவிலிற்
காலைமா லையும்வணங்கிக்
கருதிய படிக்கது வராதபோ திதுவெறுங்
கல்லென் றுரைத்ததுட்டன்
மனைமகா ரிகுளைகளை மனநோவ விட்டுமறு
மனைதேடி நின்றதுட்டன்
மறநடைய ரைப்புகழ்ந் தவரிடும் பொருள்பலவும்
வாங்கிமகிழ் வுற்றதுட்டன்
மனதின்ன தறிவின்ன தென்றினி துணர்ந்துநல்
வழியினட வாததுட்டன்
மாதவரை வைதுள்ள துட்டனா னாகலின்
வண்மையன் பைப்பெருக்கித்
தினமுநின் சேவடி யிருக்கவின் றாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 46

வந்தவரை வம்மினென் றழையாத துட்டனுயர்
மறையோரை வைததுட்டன்
மடவிதவை யைக்கூடி யுண்டாய கருவினை
மருந்தா லழித்ததுட்டன்
நந்தன மடந்தட மழித்திட்ட துட்டனன்
னட்பைப் பகைத்ததுட்டன்
நவிலுரையி லேதவறு காணினுஞ் சொன்னதே
ஞாயமென் றோதுதுட்டன்
சொந்தமில் லாததைச் சொந்தமது செயவெனத்
தொந்தரைகள் செய்ததுட்டன்
சோரர்தஞ் சொத்துண்ட துட்டனா னாகலிற்
றுகளிலன் பைப்பெருக்கிச்
சிந்தாத செல்வமது தந்தென்று மாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 47

ஞானநூ லின்படி நடக்கமன மில்லாமல்
ஞானமே தென்றதுட்டன்
நரசன்ம மாப்பிறந் தவரறிந் தாரெனா
நல்லவரை யெள்குதுட்டன்
ஞானவா னானவர்கள் சாகா திருந்தார்கொ
னவிலுவீ ரென்றதுட்டன்
நன்னருயர் தேவால யச்சொத்தை விற்றுண்டு
நல்குரவு நண்ணுதுட்டன்
ஞானமுனி போலவே பொய்வேட மிட்டன்பர்
நற்பொருள் கவர்ந்ததுட்டன்
நடையைக் குறைத்திட்ட துட்டனா னாகலி
னலங்கொளன் பைப்பெருக்கித்
தேனினு மினிக்குமமு தம்பகுத் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 48

முதலைக் கனாவினுங் காணாது முதலாளு
முதலாளி யென்றதுட்டன்
முன்னொன்று பின்னொன்று பேசியே சிக்கெட்ட
மூதேவி யாயதுட்டன்
உதவிபுரி கின்றவர்க் கவதிபுரி துட்டனுயு
முயிர்களை வதைத்ததுட்டன்
உற்றபிணி தீர்த்தவர்க் கோதிய படிக்கொன்று
முதவா தலைத்ததுட்டன்
இதவான நீதிக ளியம்புநூ லர்த்தத்தை
யேற்றபடி சொற்றதுட்டன்
எரிமூட்டி யிறுமாந்த துட்டனா னாகலி
னியாணரன் பைப்பெருக்கிச்
சிதமருவு நின்சரண வாழ்வளித் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 49

ஏசறு மனோநாச சகநிட்டை புரிவோ
ரிருக்கையை யழித்ததுட்டன்
இல்லாத விடயத்தை யுண்டென்னு முறுதிமுறி
யெழுதிக் கொடுத்ததுட்டன்
தேசிகனை வஞ்சித்த துட்டன்மனு வென்கின்ற
சீர்மையில் லாததுட்டன்
செய்வதெல் லாஞ்செய்து தெய்வமே யிப்படிச்
செய்தையே யென்றதுட்டன்
ஆசில்பதி விரதையை யடீயென்ற துட்டனின்
னருளைப் பழித்ததுட்டன்
ஆணிலும் பெண்ணிலுந் துட்டனா னாகலி
னகண்டவன் பைப்பெருக்கித்
தேசுடைய வுன்சரண வின்பளித் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 50

வந்தவழி யெந்தவழி யென்றுணர வோர்நிலையின்
மனநிற்ற லெக்காலமோ
மருளற்ற திருவரு ளலாதுநிலை யிலையென்ற
மதிபெறுவ தெக்காலமோ
சந்ததமு மனமடக் குஞ்சாத கங்கொடு
தவம்புரிவ தெக்காலமோ
சவிமன்று ளானந்த நடைகண்டு மகிழ்தொண்டர்
சார்புறுவ தெக்காலமோ
மந்தமதி யாளர்கட் கெட்டாத சிவசமய
வாழ்வடைவ தெக்காலமோ
வாய்த்தசன் மம்பழுது படுமோ வெனத்தின
மயங்குமென் முன்புவந்து
செந்திருக் கமலவடி யருணிறுவி யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 51

பகிர்முக மனத்தையுள் வலிக்கின்ற பூரகம்
பயிறலினி யெக்காலமோ
பாழாகு மனதையுட் பந்தகஞ் செய்புகும்
பகமேவ லெக்காலமோ
ககனகும் பகநின்று வெளிவிடு மிரேசகங்
கண்டுயர்வ தெக்காலமோ
கண்ணினுக் குக்கண் ணெனத்திகழு மறிவான
கண்பெறுவ தெக்காலமோ
மகிமையுள பெரியபொரு ளெங்கணு மிருக்கின்ற
மரபறிவ தெக்காலமோ
வாய்த்தசன் மம்பழுது படுமோ வெனத்தின
மயங்குமென் முன்புவந்து
திகிறபு திருச்சரண வருணிறுவி யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 52

தங்கா தெழுந்துநா லங்குலங் கழிவதைத்
தடைபுரிவ தெக்காலமோ
சலனமில் லாததீ பத்தையொத் துள்ளுளே
சாதிப்ப தெக்காலமோ
கங்கா ஜலம்போல வேயுருகி யென்னுருக்
கண்டறிவ தெக்காலமோ
கன்மமல மெல்லா மொரீஇயொரு திருவருட்
கன்மமுற லெக்காலமோ
மங்காத மதியமிழ்த முண்டுமற் றுண்பதை
மறந்தமர்வ தெக்காலமோ
வாய்த்தசன் மம்பழுது படுமோ வெனத்தின
மயங்குமென் முன்புவந்து
சிங்காத பெரியதிரு வருணிறுவி யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 53

சருவவல் லமையுடைத் தனியரு ளெனாதுசூர்
தடியவெழ லெக்காலமோ
தனியே யிருந்துவிழி மூடவோ ருறுதியெழு
தருகால மெக்காலமோ
பொருபுல னெலாமொருவி யறியாத புதுவிடம்
புக்கணைவ தெக்காலமோ
புரையற்ற சதுர்வேத முடிபாக நிற்குமொரு
பொருளறிவ தெக்காலமோ
வருதலும் போதலு மிலாதவொரு பெருவாழ்வு
மருவிடுவ தெக்காலமோ
வாய்த்தசன் மம்பழுது படுமோ வெனத்தின
மயங்குமென் முன்புவந்து
திருவளர் பரப்பிரம வருணிறுவி யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணிய தேவே. – 54

கைதவந் திமிரா தகந்தையை யடக்கக்
கருத்துறுவ தெக்காலமோ
கண்டவிட னெல்லா முனைத்தொழு திருக்குமொரு
களியெய்த லெக்காலமோ
ஐயுணர்வு மெற்குளே யைக்கியப் பட்டறிஞ
னாநிற்ப தெக்காலமோ
ஆசற்ற பரிபூர ணானந்த மாயுள்ள
வறிவறிவ தெக்காலமோ
மையிருண் மலக்கட் டறுத்தவடி யாருற்ற
வாழ்வடைவ தெக்காலமோ
வாய்த்தசன் மம்பழுது படுமோ வெனத்தின
மயங்குமென் முன்புவந்து
தெய்வங்கள் சூழ்தெய்வ வருணிறுவி யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 55

பேராசை யில்லாவொர் பேராசை கொண்டுற்ற
பேதெற்ற லெக்காலமோ
பெருமையில் லாதவொரு பெருமைகொண் டறிவற்ற
பெருமைவிட லெக்காலமோ
போராடு மறுவரைப் போராடி வென்றரிய
புகழ்பெறுவ தெக்காலமோ
பொறிமயங் காமலைம் பொறியையு மொடுக்கியுட்
போக்கறிவ தெக்கலாமோ
வாராத கம்பலைகள் வரினுமென் மனநனி
மகிழ்ந்துய்வ தெக்காலமோ
வாய்த்தசன் மம்பழுது படுமோ வெனத்தின
மயங்குமென் முன்புவந்து
சீராரு நிஜமோத வருணிறுவி யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 56

பாடும் படிக்குப் பதம்பெற வரும்பாடு
படநினைவ தெக்காலமோ
பாவையர்க ணேயமொரு போதுமுத வாதெனும்
பண்பணைவ தெக்காலமோ
ஆடுமர வைப்பிடித் தாடாது கூண்டிடை
யடைத்திடுவ தெக்காலமோ
அன்மேனி யந்தகன் செயலெனக் கயலென
வடங்கியுற லெக்காலமோ
மாடுதே டித்தேடி யலையாது நின்சரண
வாழ்வெய்த லெக்காலமோ
வாய்த்தசன் மம்பழுது படுமோ வெனத்தின
மயங்குமென் முன்புவந்து
தேடரிய சிற்ககன வருணிறுவி யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 57

காற்றுக் கயிற்றினின் றாடுமிப் பாவைபொய்க்
கனவாத லெக்காலமோ
காயகற் பங்குளிகை தேடியலை யாதுசிவ
கற்பமுண லெக்காலமோ
தோற்றங்கள் யாவையும் விரித்துச் சுருக்குகிற
சூதறிவ தெக்காலமோ
சொல்லரிய வாறத்து வாவுங் கடக்குமொரு
தொழிலேற லெக்காலமோ
மாற்றமி லதீதசிவ ஞானநிலை யாளரடி
வந்திப்ப தெக்காலமோ
வாய்த்தசன் மம்பழுது படுமோ வெனத்தின
மயங்குமென் முன்புவந்து
சீற்றமறு மன்பர்கரு தருணிறுவி யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 58

காமாதி களைவிட் டிருக்குமிய மத்திற்
கருத்துறுவ தெக்காலமோ
கருத்திலெழு வாசனை யடக்கலெனு நியமநிலை
கைக்கொள்வ தெக்காலமோ
பேமா முபாதியோ ரேழுமில் லாதனம்
பெற்றமர்வ தெக்காலமோ
பிராணபந் தனமாகு மனநிரோ தனநன்கு
பேணியுற லெக்காலமோ
மாமா சறும்படி பிரத்தியா காரநிலை
மன்னிடுவ தெக்காலமோ
வாய்த்தசன் மம்பழுது படுமோ வெனத்தின
மயங்குமென் முன்புவந்து
சீமே வதீதர்கரு தருணிறுவி யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 59

விடயவா தனைகெடுத் துன்னரிய தாரணையின்
மேவியிட லெக்காலமோ
மிளிர்கந்த தெய்வத்தை முன்னொரு தியானத்தில்
விரிகின்ற தெக்காலமோ
தடையற்ற சுகநிருவி கற்பச் சமாதியிற்
சயனிப்ப தெக்காலமோ
சைவசன் மார்க்கமுடி வுற்றோ மெனுங்களி
தலைக்கேற லெக்காலமோ
வடகயிலை தென்கயிலை யிறைவரா சீர்வாதம்
வந்தணைவ தெக்காலமோ
வாய்த்தசன் மம்பழுது படுமோ வெனத்தின
மயங்குமென் முன்புவந்து
திடஞான நிலையான வருணிறுவி யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 60

தாணுநிழல் கொண்டதிரு நந்திதரு நன்னெறி
தனக்குநா னியைவதென்றோ
சனற்குமர முனிசத்திய ஞானதரி சனிபரஞ்
சவியுண்மை யுணர்வதென்றோ
மாணுடைய மெய்கண்ட தேவர்பே ரருணந்தி
வளர்கருணை யெய்தலென்றோ
மறைஞான தேசிக ருமாபதி சிவாசாரி
மார்க்கமதி பெறுவதென்றோ
ஊணசை துறந்தரு ணமச்சிவா யப்பிரபு
வுற்றவழி நண்ணலென்றோ
உயரறி விலாவேழை யறிகிலே னுன்னையே
யுள்ளபடி நம்பினேனால்
சேணமுதர் பேணரிய தெய்வமே யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 61

சற்குணர் தொழுஞ்சிவப் பிரகாச சித்தரது
தண்ணளி பொருந்தலென்றோ
தகைநமச் சிவாயரரு ளுளசிவப் பிரகாசர்
தங்கிருபை சேர்வதென்றோ
நற்கலைச் சிறுமுனிவர் திருவருட்டுணையென்னு
ணலியாது நிமிர்வதென்றோ
ஞானவருண் ஞானசம் பந்தர்வா கீசர்பத
நாடிநனி நிற்பதென்றோ
உற்பவ மொழிந்தவன் றொண்டர்தங் கருணைக்
குரித்தாய் நிலைப்பதென்றோ
உயரறி விலாவேழை யறிகிலே னுன்னையே
யுள்ளபடி நம்பினேனால்
சிற்சபையி நிர்த்தமிடு தெய்வமே யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 62

பரமுத்த னானதிரு வாதவூ ரன்சென்ற
பாதையைத் தெரிவதென்றோ
பட்டினத் துப்பிள்ளை பத்திரகிரி யார்நின்ற
பண்பையினி துணர்வதென்றோ
திருவுளத் திற்கினிய வருணகிரி நக்கீரர்
சென்றநெறி சேர்வதென்றோ
சேக்கிழார் நம்பியதி ராவடிகள் கல்லாடர்
திருநெறியி னிற்பதென்றோ
உரவிளம் பெருமா னறுங்கபிலர் நற்பரண
ருற்றநடை பற்றலென்றோ
உயரறி விலாவேழை யறிகிலே னுன்னையே
யுள்ளபடி நம்பினேனால்
தெரிவரிய வறிவான தெய்வமே யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 63

வையந் துறந்தசிவ வாக்கியர் குறட்புலவர்
மாணருள் விரும்பலென்றோ
வண்மைகெழு தாயுமா னவரருட் கண்ணுடைய
வள்ளலருள் கொள்ளலென்றோ
சைவபா டியநீல கண்டரர தத்தரொரு
சம்புவரு ளுறுவதென்றோ
சாரா வளிக்குரு மணித்திரய தேசிகர்
தடங்கருணை மேவலென்றோ
உய்யுநெறி நின்றவடி யாரெவரு மென்னுடைய
வுள்ளத்து ளொளிர்வதென்றோ
உயரறி விலாவேழை யறிகிலே னுன்னையே
யுள்ளபடி நம்பினேனால்
தெய்வங்கள் புகழருட் தெய்வமே யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 64

சென்றதையும் வருவதையு முன்னாவொ ருறுதியென்
சிந்தையின் முளைப்பதென்றோ
தெய்வமெனு மொருபித் தனாரதங் கொண்டன்பர்
செயல்பேணி நிற்பதென்றோ
கன்றுகற் றாவகன் றாலென்ன நின்றுனைக்
கருதினா னழுவதென்றோ
கையைப் பிடித்துன்றன் மெய்ம்மைப் பதிக்குக்
கடத்திநீ போவதென்றோ
ஒன்றிற்கு மஞ்சற்க வென்றுநீ சொல்லுமோ
ருறுதியுரை கேட்பதென்றோ
உயரறி விலாவேழை யறிகிலே னுன்னையே
யுள்ளபடி நம்பினேனால்
சென்றுவரு மஞரிலார் தெய்வமே யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 65

மதபேத வம்புகளு மானாபி மானமு
மறந்தறிவை நேடலென்றோ
மனைவியுந் தமருமலை புனலிலெழு குமிழியென
மனதுறுதி கோடலென்றோ
இதயவெளி நடுவான பொருளைச் சதாகால
மிதயத்தில் வைப்பதென்றோ
இருவினைத் தொடர்பில்வரு முடலைக் கடந்தெண்ணு
மெணமற் றிருப்பதென்றோ
உததிபோன் மெய்ஞ்ஞான வெள்ளமது பொங்கவதி
னுழைமூழ்கி மகிழ்வதென்றோ
உயரறி விலாவேழை யறிகிலே னுன்னையே
யுள்ளபடி நம்பினேனால்
சிதடரறி யாதபர தெய்வமே யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 66

கோவில்வா விகணல்கு பலனுக்கு மேனல்கொர்
கோவிலுண் ணுழைவதென்றோ
கொடிசெடி மரத்தலர்கள் கொய்யாம லமைதியங்
குசுமமே கோடலென்றோ
சேவொளிரு நின்னடியி லதனையர்ச் சித்தெனது
சிந்தைகளி கூர்வதென்றோ
திருவாய் மலர்ந்தெமக் கடிமைநீ யென்றஙன்
செப்பியருள் புரிவதென்றோ
ஓவிய வுருப்போல வாயிடை யிருந்துநா
னுன்னொடு விராவலென்றோ
வுயரறி விலாவேழை யறிகிலே னுன்னையே
யுள்ளபடி நம்பினேனால்
சீவர்கள் பழிச்சுபர தெய்வமே யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 67

பொற்புறு சிவானந்த பூமியி லிருக்குமோர்
புதையலை யெடுப்பதென்றோ
புகரற்ற பூரணாதி லேகியஞ் செய்துமுப்
போதும் புசிப்பதென்றோ
விற்புருவ விழிசிவந் திடலகிரி யேறியவ்
விழிசெருகி நிற்பதென்றோ
விசமநின் மலசங்க ரகிதநிர்க் குணபரம்
வெளியிற் படுப்பதென்றோ
உற்பவப் பிணிதணந் திடையறா வானந்த
வுண்மையொ டளாவலென்றோ
உயரறி விலாவேழை யறிகிலே னுன்னையே
யுள்ளபடி நம்பினேனால்
சிற்பர விலாசகுக தெய்வமே யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 68

நாமரூ பங்களின் றெங்குநிறை யறிவையே
நாடிநா னழிவதென்றோ
நாற்றச் சரீரத்தை வாட்டித் தவத்தையே
நாளுநனி யீட்டலென்றோ
காமிகட் காகாத வத்துவித பூரணங்
கரிசற்று மிளிர்வதென்றோ
கருதிய படிக்குனது கருணைமுகி லென்னைக்
கவிந்துபொழி கின்றதென்றோ
ஊமர்போ லேயிருந் தெதிலுமது வென்றுகண்
டொன்றாக நிற்பதென்றோ
உயரறி விலாவேழை யறிகிலே னுன்னையே
யுள்ளபடி நம்பினேனால்
தேமலர்ச் சரணன்பர் தெய்வமே யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 69

ஆசற்ற சின்முத்தி ரைக்குறியி லொன்றிரண்
டாகாம னிற்பதென்றோ
அங்ஙன மனோநாச நிலைவந்து கைகூடி
யசைவற் றிருப்பதென்றோ
பாசவிரு ளாமிரவு பாறவெளி வருகின்ற
பரிதிதரி சிப்பதென்றோ
பகலிர விலாதசுய நிலைமையிது வாமெனும்
பரிசுநன் குணர்வதென்றோ
ஓசைமணி மண்டப நடுக்கணுற் றங்குள்ள
வுண்மைகண் டேறலென்றோ
உயரறி விலாவேழை யறிகிலே னுன்னையே
யுள்ளபடி நம்பினேனால்
தேசுமிக் குடையபர தெய்வமே யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 70

சிங்கலி லதீதசிவ சாதுசங் கத்தினைச்
சேரவருள் புரியொணாதோ
சிவயோக மன்றிமற் றெல்லா மயக்கென்று
தேறவருள் புரியொணாதோ
பங்கமில் லாதவொ ரருட்சத்தி யென்னுளே
பதியவருள் புரியொணாதோ
பார்க்குமிட னெல்லா நிறைந்தசத் தென்னவே
பார்க்கவருள் புரியொணாதோ
இங்கென்று மங்கென்று மில்லாம லெங்கணு
மிருக்கவருள் புரியொணாதோ
என்றுகரு திக்கலுழு மென்னெஞ்சு மகிழுமா
றிறைநீ கடைக்கணித்துத்
திங்கணிகர் போதநனி யுண்டென்னை யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 71

ஓவுத லிலாததுலை யொத்தசத் தினிபாத
முறவொரருள் புரியொணாதோ
ஓயாத கவலைகளு முதவாத செய்கைகளு
மோயவருள் புரியொணாதோ
சாவனோ வுய்வனோ வென்றுநினை சஞ்சலந்
தணியவருள் புரியொணாதோ
தத்துவ சமூகந் தணந்தென்னை யறிமதி
தழைக்கவருள் புரியொணாதோ
ஏவமி லெனக்கறிவ தாநிற்கு முன்னறிவை
யெய்தவருள் புரியொணாதோ
என்றுகரு திக்கலுழு மென்னெஞ்சு மகிழுமா
றிறைநீ கடைக்கணித்துத்
தீவிர மறுக்குநிலை வைத்தென்னை யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 72

கறைநெஞ் சுளார்சிறிது கருதுமா கருதாது
கருதவருள் புரியொணாதோ
கங்குல்பக லாகவந் நாட்டமா நின்றுனைக்
காணவருள் புரியொணாதோ
குறையாத பேரின்ப வெள்ளம் படிந்துளே
குளிரவருள் புரியொணாதோ
கூறரிய சுகநல்கு பெருவாழ்வை நான்கொள்ளை
கொள்ளவருள் புரியொணாதோ
இறைமைசால் கண்ணுடைய வள்ளல்குரு சொனவண
மிருக்கவருள் புரியொணாதோ
என்றுகரு திக்கலுழு மென்னெஞ்சு மகிழுமா
றிறைநீ கடைக்கணித்துச்
சிறுமையணு காநிலை நிறீஇயெனை யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 73

மிணுமிணு வெனாமணி யுருட்டலில் வராதென்று
மிஞ்சவருள் புரியொணாதோ
மேனாடி நினைதல்போ தாதென நிரோதனம்
விளைக்கவருள் புரியொணாதோ
துணியகல் சுழுத்தியிற் சுகமில்லை யெனவுனித்
துணியவருள் புரியொணாதோ
துலைதூர மோவென்று மலையாது வழிகண்டு
தொடரவருள் புரியொணாதோ
இணையற்ற துரியா திதத்திலே சும்மா
விருக்கவருள் புரியொணாதோ
என்றுகரு திக்கலுழு மென்னெஞ்சு மகிழுமா
றிறைநீ கடைக்கணித்துத்
திணியுச்ச வருணிலை நிறீஇயெனை யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 74

பத்திவயி ராக்கியப் பெட்டியா வென்னுளம்
படியவருள் புரியொணாதோ
பரமானு பூதிப்பிர வாகமென் முன்னரே
பாயவருள் புரியொணாதோ
சித்தர்க ளுலாவுநற் சதுரகிரி வெளியிலே
திரியவருள் புரியொணாதோ
தேசுமிக வுந்தரும் பொதியா சலத்துளே
செல்லவருள் புரியொணாதோ
எத்திசையு நின்றுனது சித்தையறி யும்படிக்
கேற்றியருள் புரியொணாதோ
என்றுகரு திக்கலுழு மென்னெஞ்சு மகிழுமா
றிறைநீ கடைக்கணித்துச்
செத்திலா முத்தியி னிறீஇ யெனை யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 75

சாமமறை வாக்கிய மதிற்றொம்ப தப்பொரு
டனைக்கொளருள் புரியொணாதோ
தகைமைசா றத்பதப் பொருணனி யுணர்ந்துணர்வு
தங்கவருள் புரியொணாதோ
மாமகிமை யுளவசி பதப்பொரு ளுணர்ந்துபயின்
மார்க்கமருள் புரியொணாதோ
வழுத்தந்த முத்திறமு நின்னருளி லாமென
மதிக்கவருள் புரியொணாதோ
ஈமநிலை சேர்முன்ன ரீமநிலை யைக்கண்
டிருக்கவருள் புரியொணாதோ
என்றுகரு திக்கலுழு மென்னெஞ்சு மகிழுமா
றிறைநீ கடைக்கணித்துச்
சேமநிலை யைக்கொடுத் தென்றுமெனை யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 76

தொம்பதந் தன்னிலா காமியத் தின்வலி
சுருங்கவருள் புரியொணாதோ
துகளற்ற தத்பதந் தன்னிலே சஞ்சிதந்
தொலையவருள் புரியொணாதோ
அம்பதத் தசியிற் பிராரத் துவப்பெருமை
யழியவருள் புரியொணாதோ
அதிர்த்தமுத னடுவிலே யாணவமு மாயையு
மடங்கவருள் புரியொணாதோ
இம்பர்விடு கிறகடையி லேகன்ம வன்மல
மிறக்கவருள் புரியொணாதோ
என்றுகரு திக்கலுழு மென்னெஞ்சு மகிழுமா
றிறைநீ கடைக்கணித்துச்
செம்பரம முத்தியி னிறீஇயெனை யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 77

ஆதியிற் சுத்தனா நிற்குநிலை தனிலிச்சை
யல்கவருள் புரியொணாதோ
அடுத்ததி லருட்செல்வ னாநிலையி லேயறி
வடங்கவருள் புரியொணாதோ
வாதனை யிலாதகடை யிற்கிரியை விடுகின்ற
மார்க்கமருள் புரியொணாதோ
மாண்புடைய வக்கடையி லொன்றிரண் டற்றசுக
மருவவருள் புரியொணாதோ
ஏதமில் லாதசிவ சாயுச்சிய மீதென
விருக்கவருள் புரியொணாதோ
என்றுகரு திக்கலுழு மென்னெஞ்சு மகிழுமா
றிறைநீ கடைக்கணித்துத்
தீதில்பதி ஞானகதி நல்கியெனை யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 78

ஒட்டாரு நட்டார்க ளாகும் படிக்கோ
ருபாயமருள் புரியொணாதோ
ஊனான பூதபரி ணாமவுட லிவ்வளவி
லொழியவருள் புரியொணாதோ
கிட்டிய வினைப்போக பூதசா ரமுமினிக்
கெடவொரருள் புரியொணாதோ
கேவல் மிலாதவொரு கேவல மெனக்குக்
கிடைக்கவருள் புரியொணாதோ
எட்டற்ற வக்கேவ லங்கொளசி பதமா
யிருக்கவருள் புரியொணாதோ
என்றுகரு திக்கலுழு மென்னெஞ்சு மகிழுமா
றிறைநீ கடைக்கணித்துச்
சிட்டரடை யுங்கதி யளித்தென்னை யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 79

கல்லினுங் கடியவென் னெஞ்சங் கரைந்துனைக்
கருதவருள் புரியொணாதோ
கதிதனை யவாவியே காந்தத் திருந்துளங்
கனியவருள் புரியொணாதோ
அல்லிலும் பகலிலுந் திருவருட் கடலிலே
யமிழவருள் புரியொணாதோ
அங்கணே யாழ்பழம் பூவண் டுறழ்ந்துபே
றண்ணவருள் புரியொணாதோ
எல்லாரு முன்றொண்ட னென்றெனைச் சொல்லுமுரை
யேறவருள் புரியொணாதோ
என்றுகரு திக்கலுழு மென்னெஞ்சு மகிழுமா
றிறைநீ கடைக்கணித்துச்
செல்லல்வர லில்லமுத நல்கியெனை யாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள்ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 80

தாயாய வானந்த ரூபிமா தேவியரு
டடையின்றி யென்னுள்வரவும்
தற்பரி வராகிமா சூலிமா குமரிமா
தங்கியரு ளென்னுள்வரவும்
தூயகுண வம்பிகை மனோன்மணி பவானியருள்
சொந்தமுட னென்னுள்வரவும்
சுந்தரி திகம்பரி பராசத்தி யின்பவரு
டோகமற வென்னுள்வரவும்
மாயமர கதவல்லி வாலைபரி பூரணி
வழங்குமரு ளென்னுள்வரவும்
மாசற்ற வாமியரு ணேசத்தொ டேயென்னுள்
வரவுநீ யருள்புரிந்து
தேயாத பேறெனுந் திருவளித் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 81

மனமா சறுக்கவல மாணிக்க வல்லியருண்
மளமளென வென்னுள்வரவும்
வரதமுடை யபிடேக வல்லியரு ளொல்லையின்
மயங்காம லென்னுள்வரவும்
கனயோக மல்கமுத வல்லிதன் போகவருள்
கரிசின்றி யென்னுள்வரவும்
கரும்பனைய மொழிதருங் கற்பகப் பெயர்வல்லி
கருணையரு ளென்னுள்வரவும்
அனகவொண் மைத்தரள வல்லிபே ரின்பவரு
ளட்டியின் றென்னுள்வரவும்
ஆனந்த வல்லியுடை யருளென்னுள் வரவுமென்
னையனீ யருள்புரிந்து
செனனமீ றில்லாத திருவளித் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 82

பஞ்சின்மெல் லடிவிழும வமிர்தகுண வல்லியின்
பரமவரு ளென்னுள்வரவும்
பங்கயன் பணிமகா மங்களே சுவரியின்
பசுமையரு ளென்னுள்வரவும்
விஞ்சைவரர் பரவுநல் வேனெடுங் கண்ணியின்
விகதவரு ளென்னுள்வரவும்
விட்டகுறை தொட்டகுறை கிட்டவர வேபுரியு
மெல்லியரு ளென்னுள்வரவும்
சஞ்சல வசஞ்சலப் பொருளெங்கு நிறையுமொரு
சத்தியரு ளென்னுள்வரவும்
தமபாவ சங்காரி யருளென்னுள் வரவுமென்
சாமிநீ யருள்புரிந்து
செஞ்சரோ சப்பதத் திருவளித் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள்ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 83

மின்னொளி யனந்தமுமிழ் வதனவழ
கம்மையின்
விமலவரு ளென்னுள்வரவும்
மிகைதெறுங் காவியங் கண்ணிமா கண்ணியின்
விளக்கவரு ளென்னுள்வரவும்
கன்னலின் கண்டுறழ மொழிமகா வாணிமுக்
கண்ணியரு ளென்னுள்வரவும்
கவினுள சகச்சிரகம லத்திடை யிருக்குமொரு
கன்னியரு ளென்னுள்வரவும்
இன்னலை யெருக்கியருள் சோமகலை நாயகியி
னேசிலரு ளென்னுள்வரவும்
ஏர்கொண்ட சிவயோக நாயகியி னருள்வரவு
மெந்தைநீ யருள்புரிந்து
தென்னிலகு மலரடித் திருவளித் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 84

அங்கயற் கண்ணியபி ராமிகா மக்கணி
யகண்டவரு ளென்னுள்வரவும்
அண்டபகி ரண்டங்க ளீன்றவென் னம்மையரு
ளன்புகொண் டென்னுள்வரவும்
சங்கடங் காதுசிவ சாம்பவி நிரந்தரி
சகாயவரு ளென்னுள்வரவும்
சருவபுவ னேசுரி தயாபரி யகாரியின்
சரதவரு ளென்னுள்வரவும்
துங்ககலி யாணிசரு வாணியயி ராணியரு
டுரிதமா வென்னுள்வரவும்
சுத்தசிவ சத்தியரு ளென்னுள்வர வும்பெரிய
சோதிநீ யருள்புரிந்து
சிங்கா நிரந்தரத் திருவளித் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 85

அட்டமா சித்திதரு முத்தமியி னல்லரு
ளகங்குளிர வென்னுள்வரவும்
ஆதிநடு வந்தமில் லாதகரு ணாகரியி
னமுதவரு ளென்னுள்வரவும்
இட்டநிமிர் தொண்டரக முற்றபெரு நாயகியி
னீரவரு ளென்னுள்வரவும்
எவ்வுயிரு மெம்மக்க ளென்பவளி னின்பவரு
ளீடின்றி யென்னுள்வரவும்
கட்டழ கெலாமுடைய பருவத வருத்தனிய
கண்டவரு ளென்னுள்வரவும்
கருதரு மிலக்குமியி னருளென்னுள் வரவுமெங்
கடவுணீ யருள்புரிந்து
திட்டமறு பூரணத் திருவளித் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 86

ஆற்றலுடை நித்திய சுகானந்தி பேரரு
ளளப்பின்றி யென்னுள்வரவும்
ஆனந்த வாரியென நிறையுநிட் களைவிமலை
யாணரரு ளென்னுள்வரவும்
கூற்றால் விளக்கரிய வாதிசிவ சத்தியின்
கோதிலரு ளென்னுள்வரவும்
குற்சித மெலாமடு மகோரநிர்த் தனியங்
குசத்தியரு ளென்னுள்வரவும்
ஊற்றமலி நின்மல நிராகார சத்தியரு
ளுரிமையோ டென்னுள்வரவும்
ஓங்கார சத்தியரு ளென்னுள்வர வும்பெரிய
வொருவனீ யருள்புரிந்து
தேற்றவுறழ் வோர்கருது திருவளித் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 87

ஒன்பது மணிப்பிரபை வீசுமுடி நாரணியி
னுசிதவரு ளென்னுள்வரவும்
உண்மைப் பரம்பொருளை யகலாத சிற்சத்தி
யொப்பிலரு ளென்னுள்வரவும்
நன்குகெழு புங்கவியொர் பகவதி பராபரைசெய்
நறியவரு ளென்னுள்வரவும்
ஞானவா னந்தமுகி லானபர தேவதையி
னலிவிலரு ளென்னுள்வரவும்
அன்பரு ணடிக்கின்ற வானந்த நிர்த்தனியி
னாணவரு ளென்னுள்வரவும்
அந்தரியி னருளென்னுள் வரவுமெம் பரமனா
யவிருநீ யருள்புரிந்து
தென்புல மிலாதவொரு திருவளித் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 88

துப்பிதழ்ச் சாரதை பழிச்சுருத் திரையுடைய
சுத்தவரு ளென்னுள்வரவும்
சோதிவடி வானசரு வேசுரி மகேசுரி
துளக்கவரு ளென்னுள்வரவும்
எப்பொழுது முள்ளதிரு மங்கைஜக தம்பிகையி
னேதிலரு ளென்னுள்வரவும்
எழில்பெருகு சங்கரி சகோதரி யெனுஞ்சிற்
றிடைச்சியரு ளென்னுள்வரவும்
ஒப்பின்மா லினிவடுகி நீலலோ சனியமலை
யோகையரு ளென்னுள்வரவும்
ஒளிமல்கு காந்திமதி யருளென்னுள் வரவுமுள்
ளுணருநீ யருள்புரிந்து
செப்பரிய வீடெனுந் திருவளித் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 89

சிந்தைதிக ழுஞ்சித்தர் கட்கருஞ் சித்துதவு
செல்வியரு ளென்னுள்வரவும்
தில்லையி னடம்புரியு மன்னைசிவ காமிதரு
தெய்வவரு ளென்னுள்வரவும்
இந்தவுல கின்பாசம் வெந்திட வுபாயமிடு
மிறைவியரு ளென்னுள்வரவும்
எவ்வுயிர்த் தொகையிலு மிருந்துவிளை யாடுமையி
னேமவரு ளென்னுள்வரவும்
கொந்தலர்க் குழலிசிவ சங்கரி சிவானந்தி
குடிலையரு ளென்னுள்வரவும்
கோதிறிரி புரைகௌரி யருளென்னுள் வரவுமெங்
குரவனீ யருள்புரிந்து
செந்தே சிகப்பதத் திருவளித் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 90

பித்தேறு பித்தம் பிடித்திடா தத்துவித
பித்தம் பிடித்தேகவும்
பேசாத பெருமையைப் பேணுதற் கெனதுவாய்
பேசாதென் வயமாகவும்
செத்தாலும் விட்டுவிடு வேனோ வெனச்சிந்தை
திடமாய் நிலைத்தேறவும்
தேடரு முனைப்புறந் தேடியலை யாதபடி
தேடியென் னுட்காணவும்
எத்தொழில் புரிந்திடினும் வைத்தகுறி பிறழா
திருந்தமுத மேசேரவும்
எண்ணினே னெண்ணக் குறிப்பினை யறிந்தென்று
மிவனமக் கடிமையெனவே
சித்தர்கள் பராவுனடி யருள்புரிந் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 91

பொருடேடி யுளமகிழு மிழுதையா காதபடி
பொருடேடி யுளமகிழவும்
போக்குவர வறியாத மூர்க்கனா காதபடி
போக்கோடு வரவறியவும்
அருவையுரு வென்கின்ற சிதடனா காதபடி
யருவையுரு வென்றறியவும்
அவனிவ னெனச்சொலுங் கரிசனா காதபடி
யவனிவனொ டென்றறியவும்
இருளையொளி யென்கின்ற குருடனா காதபடி
யிருளையொளி யென்றறியவும்
எண்ணினே னெண்ணக் குறிப்பினை யறிந்தென்று
மிவனமக் கடிமையெனவே
திருவளர் சிவானந்த வருள்புரிந் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 92

தீங்கா மவாநினைவு தீந்துநல் லுணர்வொன்று
தீயாது மிஞ்சியிடவும்
தெய்வவட நீழலிற் சொல்லாது சொன்னதைச்
சிந்தையு ணிறீஇயிடவும்
தூங்காது தூங்கித் திளைப்போர்கள் கொண்டவொரு
தூக்கமென் பதையெய்தவும்
சொப்பன மிலாதவொரு சொப்பன மெனுந்திவ்விய
சொப்பனங் கண்டுகொளவும்.
ஏங்காம லேங்குமோ ரேக்கமது கொண்டுநா
னேங்கியேங் கிக்கனியவும்
எண்ணினே னெண்ணக் குறிப்பினை யறிந்தென்று
மிவனமக் கடிமையெனவே
தேங்காலி னன்பர்கரு தருள்புரிந் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 93

மேலூர் வியோமா லயக்கோபு ரத்துடை
வெளிக்கடை கடப்பதற்கும்
விசித்தி ரமதானபிர காரத்தை வலம்வந்து
மெய்த்துதிகள் செய்வதற்கும்
நாலாறு திறமாகு நாதமணி மேடையினை
நண்ணிவந் திப்பதற்கும்
ஞானப்பிர காசம்பிர காசிக்கும் வத்துவை
நடுக்கண்டு கொள்வதற்கும்
ஏலாமை யின்றிநிட் களசங்க ரகிதவின்
பென்னுநிலை யுறுவதற்கும்
எண்ணினே னெண்ணக் குறிப்பினை யறிந்தென்று
மிவனமக் கடிமையெனவே
சீலாநல் கென்பவர்கொ ளருள்புரிந் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 94

சன்மமுற் சன்மங்கள் போலபல மாகாது
சபலமது பெற்றுய்யவும்
தத்துவா தீதமெனு மொருபெரிய தத்துவந்
தனையே யடைந்துய்யவும்
புன்மனப் புன்மையர்கள் புன்மொழி யவாவிடும்
புன்மையை வரைந்துய்யவும்
புனிறுமர பென்னீர்மை மருவா திருக்குமொரு
புதுமையை யுணர்ந்துய்யவும்
என்செய்கை நின்செய்கை நின்செய்கை யென்செய்கை
யென்னுநிலை யுற்றுய்யவும்
எண்ணினே னெண்ணக் குறிப்பினை யறிந்தென்று
மிவனமக் கடிமையெனவே
சின்மயா னந்தசிவ வருள்புரிந் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 95

தவறாய விளரிமுழு துந்தவிர வுங்கருத
றவிரா திருப்பதற்கும்
சத்தின்மு னெலாஞ்சூனி யங்கொலென் றறையுமா
தரிசித்து நிற்பதற்கும்
கவலைமா கடலிலே குடையாம னின்னருட்
கடலிலே குடைவதற்கும்
கருவூரை யின்னுமடை யாமலின் னமுதவார்
கலியூரை யடைவதற்கும்
இவனவ னெனுஞ்சிந்தை யிறையுமின் றலர்வண்டி
னியல்பாக வமர்வதற்கும்
எண்ணினே னெண்ணக் குறிப்பினை யறிந்தென்று
மிவனமக் கடிமையெனவே
சிவஞான கைவல்லிய வருள்புரிந் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 96

பாசநிட் டாபரர்கள் போலவே யந்நிட்டை
பண்ணா துளேசெல்லவும்
பசுஞான நிட்டையுந் திடமன் றெனாவதிற்
படியாது மேலேறவும்
மாசற்ற பதிநிட்டை தன்னிலே நானறிவு
மயமா யிருந்தவிரவும்
மறைஞான சம்பந்த முனிசொன்ன முடிவாக
மௌனமே கைக்கொள்ளவும்
ஏசிலா துள்ளவிந் நிலையன்றி வேறுநிலை
யிலையெதிலு மென்றமரவும்
எண்ணினே னெண்ணக் குறிப்பினை யறிந்தென்று
மிவனமக் கடிமையெனவே
தேசசு மலிந்தவடி யருள்புரிந் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 97

நெஞ்சம் பதைப்பற்ற நெஞ்சமா கத்தேறி
நெஞ்சையந் நெஞ்சறியவும்
நிலவுநன் மனவெளியி லொருநினைவு சலமின்றி
நிலையாக நின்றுன்னவும்
துஞ்சாத வெனையங்க ணேகண்டு திருவருட்
இணைவலியை நானுணரவும்
சுத்தவியல் பாமருளி லென்செயலு மறிவுஞ்
சுதந்திர மிழந்துறையவும்
எஞ்சிறுமை நூறிறைவ னாயவுன் னொடுநா
னிருந்தபடி யாநிற்கவும்
எண்ணினே னெண்ணக் குறிப்பினை யறிந்தென்று
மிவனமக் கடிமையெனவே
செஞ்சரண வன்பர்விழை யருள்புரிந் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 98

சளசள வெனப்பேசு நாவினை யடக்கிச்
சவம்போ லொடுங்கிடற்கும்
சகலகே வலம்வந்து தாக்காம லங்ஙனே
சாகாது செத்திடற்கும்
மளமள வெனக்கருணை மழையினா லபிடேக
மதிமகன் செய்திடற்கும்
மாசற்ற சுடலைதனி லுடன்முழுது மொருஞான
வன்னியா னீற்றிடற்கும்
இளவலெம் பிதிரா முனோடெனை யிணைப்பதற்
கேசில்பிண் டம்போடவும்
எண்ணினே னெண்ணக் குறிப்பினை யறிந்தென்று
மிவனமக் கடிமையெனவே
தெளிவுள சுகானந்த வருள்புரிந் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 99

சரியையுங் கிரியையும் புதுமணக் கோலச்
சடங்கென நினைந்துகொளவும்
சகயோக மணவறையுண் மணமகளு மகனுமுள
தரமென வறிந்துகொளவும்
அரியமெய்ஞ் ஞானமபி மானமச் சந்துறந்
தணைதலென வுய்த்துணரவும்
அங்கணுண் டாகுமின் பதையிருவ ருஞ்சொலா
வதிகுய்ய மெனவோரவும்
எரிநிரய யாதனையை நூறருண கிரிநிலையு
மிதுவே யெனத்தெளியவும்
எண்ணினே னெண்ணக் குறிப்பினை யறிந்தென்று
மிவனமக் கடிமையெனவே
திரிபுகே டில்லினிய வருள்புரிந் தாளரோ
தித்திக்கு முத்திமுதலே
தெள்ளறி வெனுஞ்சலதி பொங்குமுள் ளூரில்வளர்
சிவசுப்பிர மணியதேவே. – 100

பாம்பன் சுவாமி: முருகனிடம் பக்தி கொண்ட துறவி

தமிழ்நாட்டின் பாம்பனில் 1848 இல் பிறந்த பாம்பன் சுவாமி, முதலில் அப்பாவு என்று பெயரிடப்பட்டவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திறமை பெற்ற சைவக் குழந்தை. 13 வயதில், முருகப்பெருமானின் தரிசனம் அவருக்கு பக்தி கவிதைகள் எழுதத் தூண்டியது. ஆழ்ந்த ஆன்மிகத்திற்கு பெயர் பெற்ற அவர், திருமணத்திற்குப் பிறகும், பிரார்த்தனை மற்றும் பூஜைகளில் தன்னை அர்ப்பணித்து, புனிதமான வாழ்க்கை வாழ்ந்தார்.

சுவாமியின் அசைக்க முடியாத நம்பிக்கை பல அதிசய நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது. அவரது புகழ்பெற்ற பாடல் சண்முக கவசம் பக்தர்களை தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் அவரது பஞ்சாமிர்த வர்ணம் முருகனின் இருப்பை அழைக்கிறது. இரக்கமுள்ள துறவி, அவர் பக்தியைத் தூண்டினார் மற்றும் தன்னலமற்ற செயல்களைச் செய்தார், பெரும்பாலும் தெய்வீக தரிசனங்களால் வழிநடத்தப்பட்டார்.

பாம்பன் சுவாமி சவால்களை எதிர்கொண்டார், ஆனால் எப்போதும் முருகனின் அருளை நம்பியிருந்தார். நோய்வாய்ப்பட்டபோது, ​​அவர் ஜெபத்தின் மூலம் அற்புதமாக குணமடைந்தார். தனிப்பட்ட இழப்புகள் இருந்தபோதிலும், அவர் தனது ஆன்மீக பணியில் கவனம் செலுத்தி, தனிமையில் இருந்தார். ஒரு சிறந்த எழுத்தாளர், சுவாமி தமிழில் 6,666 கவிதைகள் மற்றும் பல படைப்புகளை இயற்றினார், முருகனை 130 க்கும் மேற்பட்ட வடிவங்களில் புகழ்ந்தார்.

அவர் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையே நல்லிணக்கத்தை வலியுறுத்தினார், அவற்றை புனித மொழிகளாகக் கருதினார். அடக்கத்திற்கு பெயர் பெற்ற அவர் எளிமையாக வாழ்ந்தார், அடிக்கடி மௌன வழிபாடு செய்தார். 1929 இல், சுவாமி சமாதியில் நுழைந்தார், பக்தி மற்றும் ஞானத்தின் பாரம்பரியத்தை விட்டுச் சென்றார்.

பாம்பன் சுவாமியின் வாழ்க்கை முருகன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது, எண்ணற்ற பக்தர்களை ஊக்குவிக்கிறது. அவரது போதனைகள் மற்றும் பாடல்கள் ஆன்மீக வழிகாட்டுதலையும் பாதுகாப்பையும் தொடர்ந்து வழங்குகின்றன, உண்மையான தேடுபவர்களுக்கு தெய்வீக அருள் எப்போதும் கிடைக்கும் என்பதை நிரூபிக்கிறது.

Pamban Swami: A Saint Devoted to Lord Murugan

Born in 1848 in Pamban, Tamil Nadu, Pamban Swami, originally named Appavu, was a Saivite child gifted in Tamil and English. At 13, he had a vision of Lord Murugan, inspiring him to write devotional poems. Known for his deep spirituality, he lived a saintly life even after marriage, dedicating himself to prayers and pujas.

Swami’s unwavering faith led to many miraculous events. His famous hymn Shanmuga Kavacam is believed to protect devotees from harm, and his Pancamrita Varnam invokes Lord Murugan’s presence. A compassionate saint, he inspired devotion and performed selfless acts, often guided by divine visions.

Pamban Swami faced challenges but always relied on Lord Murugan’s grace. When ill, he was miraculously cured through prayer. Despite personal losses, he remained detached, focusing on his spiritual mission. A prolific writer, Swami composed 6,666 poems and several works in Tamil, praising Murugan in over 130 forms.

He emphasized harmony between Tamil and Sanskrit, considering them sacred languages. Known for his humility, he lived simply, often performing silent worship. In 1929, Swami entered samadhi, leaving behind a legacy of devotion and wisdom.

Pamban Swami’s life exemplifies unwavering faith in Lord Murugan, inspiring countless devotees. His teachings and hymns continue to offer spiritual guidance and protection, proving that divine grace is always available to sincere seekers.