அறுசீர்க்கழிநெடிலடியான்வருவன – 01 (2-வது ஆசிரியவியல்)

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

விடையம் விழைந்து செலுமனத்தை மீட்டுள் வாங்கு பூரகமும்
தடையெவ் வளவு மிலாதுவெளி சரிக்க விடுமி ரேசகமும்
அடைய வகத்தே புரிகின்ற வனக கும்ப கமுமோங்கு
நடைமிக் குளரோ டுறவெனையு நடத்தி டாயோ நன்குகனே. – 32

மனமடங்கிச் சுகிக்கவென வளியடக்கு மடயோக மும்பற் றாகு
வினைதொடங்கு மனமடக்குஞ் சிவராச யோகமுநல் வினையா ளர்க்கே
தினமியங்கு மவற்றுளெனக் கியைபாய சிவராச யோகே மீக்கொண்
டுனையடைந்து வாழவருள் புரியாயோ தூவிமயி லுகைக்கு மெந்தாய். – 33

நாலொடிரு பத்தெனவி யம்புகிற தத்துவந வஞ்செய் பகுதி..
மூலமதன் மேலெனவி ளம்புபொருள் சீவனதன் முன்ன ழிவிலா
வேலனெனு மீசனிரு பத்தொடுறு மேழினில்வி லாச வெளியாய்
மேலுளது சுப்ரமணி யம்மெனநி னைத்துறல்வி வேகி நிலையே. – 34

வித்துளங் குரத்தைப் போலப் பிராணனில் விளைம னத்தைச்
சுத்தமா வடக்கின் மூச்சுந் தோன்றுமோ வம்மார்க் கத்தாஞ்
சித்திசேர் ஞான யோகர் சிந்தையு ணடனங் காட்டும்
சத்திவே லீசா வெற்கு மருளதைத் தயவி னன்றே. – (35)

தனதன தானா தன்னா தனதன தானா தனனா

மறுவறு வேலா மயின்மேல் வருமொரு தேவா மலநோய்
தெறுமதி வீரா சிவனே சிவகுரு நாதா திருவே
துறுமிய சேயோய் தொழுவோர் துதிவிழை காதா சுகமே
உறுசிவ யோகே யுயர்வா னுனுமெனை வாவா வுணவே. – (36)

எந்தக் கரும மிழைக்கினு மனமொன் றின்பது விளைநிலையிற்
பந்தித் துயரோர் சகசம தேசெய் பண்புடை யோர்கட்கே
இந்தச் சிவயோ குறுநனி யவரு ளின்பந டம்புரியுஞ்
சொந்தச் சிவனே துகளடு குகனே தொண்டெனை யுங்கொள்ளே. – (37)

தனதன தானா தன்னா தனதன தனதன தானதனா

உடலினு ளேயோ ருடலா யுளதிது வெனவறி யாவெளியார்
உடலினு ளேயோ ருயிரா யுளதறி யவும்வல ரோசொனவா
றுடலுயிர் காணா ருனையே யுறலறி யவும்வல ரோவருளால்
உடலுயி ரோடே யுனைநா னுணரவு முறவுமெ ணாய்குகனே. – (38)

பந்தம லிந்தவர் தம்மன மாலுரு வாமது பாறியகால்
நிந்தையி னெஞ்சரு வாயவிர் பேரருண் ஞானிக ணீர்மையையும்
அந்தவி ரண்டும கன்றொளிர் மாகதி யாளரி னீர்மையையும்
தந்தெனை யாள்கரு ணைக்கட லேநிறை சந்த்ரஷ டாநநனே. – (39)

ஐம்புல வாரிப டிந்தலை வீண்மன மானதின் வாசனைநீத்
திம்பருய் வாரிட நேரிய சாந்தமெ ழும்புமொர் சத்துவமாய்த்
தும்பறு ஞானம தாமென மாதவர் சொல்வண நீயதனை
வம்பற வென்கணு மன்பொடு செய்குற மங்கைம ணந்தவனே. – (40)

படரறு பரகதி தனையுற நினையினொர் பயனுமி னசைமுழுதுங்
கெடுமங் னலைவுடை மனம்வசம் வருமிது கிளருள முடையவர்கட்
கடைதல ருமையிலை யெனவுனி யொருநிலை யனுதின மவர்வுறவென்
கடவுள யிலிறைவ னடிமலர் தொழுவது கடமையி ரவுபகலே. – (41)

தானன தானன தந்தன தானன தந்தன தந்தானா

நோவடி யேன்மன வெந்துய ரோடநு வன்றுய ரன்பாலே
காவடி யார்பதி யென்றுள பூரண கந்தம கிழ்ந்தாடே
மாவடி வேறிய பங்கயன் மாலுமு வந்துதொ ழும்பீடார்
பூவடி மேவுச தங்கைவி டாதுபுல ம்புசி லம்போடே. – (42)

தனதன தத்த தனந்தானா தனதன தத்த தனந்தானா

மருவல ருட்க வருஞ்சேயோய் மலைகளி னித்த மிருந்தேமா
அரியத வத்தி னுயர்ந்தோரா லறிவரி யத்த னெனுஞ்சேவே
றொருவனும் வட்ட நெடுங்கார்கோ ளுணியுமு னக்கு மனம்போலே
பெரியவ ணக்க மயர்ந்தாரே பிழையன தைச்செய் தரந்தானோ. – (43)

அந்தத் தினையுமிடை தன்னையு மறிதற் குரியமதி யொன்றிலா
மந்தர்க் கணுகுபல னல்குமிம் மகியிற் பழமறைவி ளம்புமா
றைந்திற் கிரண்டுபழு தில்லையென் றறையப் படுமதனி லென்னைநீ
பந்திப் பொழியநனி பந்தியே பரமற் கினியகுக சம்புவே. – (44)

உனைய லாதொர் தேவரை யுவகை யோடு பரசுதல்
கனியு ணாது காயுணுங் கயமை மானு மெனவிறா
இனிய ஞான யோகின ரினிது காண்ப ரவர்நிலை
தனையெ நாளு நானுறத் தயவு கூர்தி மழவையா. – (45)

ஈடி லாவெழி லீடறு வல்லமை யீடறு கல்வியெலாம்
கூடி வாழவெ னாநினை நல்லவர் கூரயி லோயுனதோர்
ஈடி லாவுரு வானதை வேலுட னேரித யாசனமே
னாடி யோகினி லேயடை வாரருண் ஞானமு மங்ஙனமே. – (46)

பஞ்சபு லன்வழி யேபோந்து பாழ்படு மனமதை நுதனடுவில்
துஞ்சிட வைத்தது துஞ்சாது சொக்கிடு நேர்மையை யெற்கந்நாள்
அஞ்சய வங்குலி யாவணமா வருளிய நீயெனை முழுதுமினிச்
சஞ்சல மின்றிநி லைக்கவருள் சண்முக மாயொளிர் தண்ணளியே. – (47)

தனனாதன் தானன தானதனா, தனனாதன தானன தானதனா

வலிநீடெழின் மாசுசி தேசுநிரா மயமேயவு னோருரு மேவவவா
மலிநீருளர் யாவரு மேமனமா மலர்மீதயி லோடொளி சாலுருவே
நலியாமனி றீஇய தேதமதேர் நவைதீருரு வாமனு வேபுரிவார்
கலியாணகு ணாளகு கேசசதா கருதார்வலர் காணரு ணாயகனே. – (48)

சாந்தமெனுஞ் சத்துவந்தான் றாமதத்தைப்
பெருக்குகிற தசைமிசைத லானுங்
காந்தியறு பழஞ்சோறு கைதொடுத
லானுமிரா சதம்பெருக்குங் காரஞ்
சேர்ந்தனவெல் லாநுகர்த லானுநனி
கெடுமெனவே தெரிந்துநல மாக
மாந்திடுவார் மனமமர்ந்த மாமுருகா
வெனதகத்து மருவியருள் புரியாய். – (49)

ஊனுண்டி றத்தினர்ச தாவுன்னும் யோகெய்தி யோர்ஞான மேவினாலும்
ஈனந்த ணந்தவதி சுத்தமுள சத்துவம தெய்தார்க டாழ்வரென்றே
மானந்த விர்ந்தவுண வுண்டுகிளர் சாதுக்கண் மாசறும னத்தகத்தில்
ஆனந்த நிர்த்தனமி டுங்குமர குருவென்னு மரசென்னை யாளத்தனே. – (50)

மோகஞ் செய்யீ ருளியெண் ணெய்மீன் மூலங் கடுகணையாப்
பாகஞ் செவ்வாற் கோதும் பையரி பச்சைப் பயறுகுளம்
சாகம் பைங்காய் தேனெய் வெண்ணெய் ததிசுக் காகுமினும்
ஊகந் தருநன் பான்மே லென்றுண் ணுறுவர் பிரான்முருகோன். – (51)

சாத்து விகவுணவா மொழியுச்சி தனிலுப் புப்புளிகா ரமொழித்தேர்
பூத்த பச்சரிசி பசும்பயறும் புரையின் றொருசேரிற் குட்படவே
சேர்த்து நன்மிளகுத் துகளிட்டுச் செய்சா தத்துழியா னின்பானெய்
வார்த்த யின்றிரவிற் பால்பழமுண் மாண்பார் நினைசேயென் மனத்துளதே. – (52)

எண்ணெய் வீவு நாளில் வாதை யீயு மாநெயும்
வெண்ணெய் பாலு மிக்க வுண்ணின் விந்து வூறியே
பெண்ணை நேட நேரு மென்று பெட்பி லாதினி
துண்ணு சீரி யோர்பி ரானெ னொட்ப வேலனே. – (53)

( சதாக்கரம் (நூறெழுத்து.)]

சருமயத்தை யுடையதொக்கு ளுயிரிருக்கு
நிலைகுறித்த சனமே கொஞ்சம்
வருபசிக்கு நுகர்குணத்தர் மனமடக்கு
வகைப்படுப்பர் மயலா னையார்
அரிவையிச்சை துயின்மிகுத்த லெனுமவத்தை
களையறுப்ப ரருளாம் வாழ்வு
பிரிவறச்சின் மயமடுப்ப ரடிமையெற்கு
மருளுருத்ரர் பெருமானேயோ. – (54)

உணவின் றேலுட லாமாக்கை
யுளசத் துண்ணும் வயிற்றனலென்
றெணும்வல் லாருரை யொவ்விடுத
லெவர்கட் கென்னி னுயிர்ப்பசைவு
நணுகும் பேர்க்கது வின்றேலின்
றென்றோர் மெய்யர் நயம்படவே
பணிமந் தாகினி சுதமஞ்ஞைப்
பரியா வருளெற் கருளன்றே. – (55)

தன்னதன் தனனதன் தன்னதன் தன்னதன்
தன்னதன் தனனதனனா

நிறைவிலணு வறிவினசை வெனுமனது தனதுநிலை
நிலைகொளின துயர்மவுனமே
உறுமஙனம் வினைகளடி யுடனழியு மலமுமறு
முயிருமுய ரமுதடைமெனா
அறிபவர்கள் சனனமெனு நினைவினொடு மறதியெனு
மவதிலய விளிவுமிலராய்
இறைவனுனை யடைவரென திதயமலர் வதிதருமொ
ரிமயகிரி மகள்குமரனே. – (56)

தனனதன தந்தனன தனனதன தந்தனன
தனனதன தந்தனதனா.

விளரியையு டம்பெனவு டையமனத லைந்தவழி
விசையொடுமி யங்குவளிதான்
அளவதுக டந்துவெளி வருமுறுகண் விஞ்சிடும்வ
யதுமழியு மென்றுலகிலே
தெளிவுநவி லிந்தவுரு நலமடைய வென்றரிய
செபதபமு யன்றுமதையே
குளிர்கொளவ யர்ந்தசுகர் குழுவிடைவி ளங்குமொரு
குமரகுரு தொண்டனிவனே. – (57)

உண்டாகி வீயும் பலன்காண வேகோ ளுடம்பான தேதானெனக்
கொண்டாணை யின்றா டகங்கார நெஞ்சங் குழம்பாத டைந்தால்வரை
வண்டாத வண்டங் களுந்தம்வ யந்தா மயிர்ப்பின்றெ னாவவ்வழிக்
கண்டா ரகத்தே யுறுங்கந்த வேளென் கணுங்கூட லேசெய்யுமால். – (58)

யாவு மறிந்திடு போதமே நாளும் வளர்ந்தபல் காமரால்
ஈவு மிகுந்திழி பேய்மன மென்ன மருண்டலை யுந்தமை
மேவ நிரந்தரம் வைத்தெலா மிச்சை யெனத்தெரி வாருயர்
ஆவி நிறைந்தொளிர் சோதியே யன்பி னெனக்கருள் சாமியே. – (59)

தனதன தாந்தன தாந்தனா தனதன தந்தன தன்னனா

அகமன மாழ்ந்திடி னீண்டபே ரகிலம றைந்திடு மங்ஙனே
குகனொளி தோன்றிடும் வீம்பினே குலைமன முண்டெனி னின்னலீ
சகமது தோன்றிடு மாண்புசா றலைமைம றைந்திடு மென்னுநூல்
பகர்வர ராண்டவ னாம்பரா பரனெனி லங்கயி லண்ணலே. – (60)

பற்பல சூழ்மன மோய்க்கப் பைரவி சாம்பவி பண்பார்
பொற்புயர் கேசரி யுண்டோர் பூர்த்தித ராவிவை மேலாஞ்
சிற்பர முத்திரை தானே சேணிலை யென்றதி லானோர்
தற்பர மாயடை தேவே சண்முக மேயெனை யாளே. – (61)

தனதனந் தனதான தனதனந் தனதான, தனதனந் தனதானனா
[சதாக்கரம். (நூறெழுத்து.)]

இருதிறம் பகர்நாசி நுனிவிளங் கிலலாட
மெழிலுறுந் தலைமேலுமே
முருகிருந் தொளிர்பார்வை நனிபொருந் திடனாடன்
முதல்வனும் படர்வோனுமே
மருவிநின் றிடலாகு முனமொழிந் துளநாலு
மெனவறிந் தவிர்வாழ்வினார்
அருமருந் தெனுஞான முருகுவந் தெனைமேவி
னமலவின் புறுவேனரோ. – (62)

தானன தானன தானதனா தனதன தானா தன்னா

சேயவ னீடொளி நாடியொரே திடமுறு கான்மா தொனியே
மாயமெ னாநவின் மாவிருளே மலையென வாதா டுருவே
நேயமில் பேய்பல காணினுமார் நிறையயி லோனே யிவையாம்
ஓய்வடை யோமென வேயிழியா ருறுவது சேயோ னடியே. – (63)

தானந் தனனா தன்னா, தன்னா தனனா தனனா

தேவென் குகவே ணினையோர் செயலா லழன்மீ றிடுமேல்
மாவின் பமுதார் கலிபோல் வளைபா வனையே புரிவார்
வீவின் றெழுசீ தளமே மிகுமே லழல்போ னினைவார்
யாவுந் தெரிவே லவனால் யமனூ றுவெல்யோ குளரே. – 64

பாம்பன் சுவாமி: முருகனிடம் பக்தி கொண்ட துறவி

தமிழ்நாட்டின் பாம்பனில் 1848 இல் பிறந்த பாம்பன் சுவாமி, முதலில் அப்பாவு என்று பெயரிடப்பட்டவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திறமை பெற்ற சைவக் குழந்தை. 13 வயதில், முருகப்பெருமானின் தரிசனம் அவருக்கு பக்தி கவிதைகள் எழுதத் தூண்டியது. ஆழ்ந்த ஆன்மிகத்திற்கு பெயர் பெற்ற அவர், திருமணத்திற்குப் பிறகும், பிரார்த்தனை மற்றும் பூஜைகளில் தன்னை அர்ப்பணித்து, புனிதமான வாழ்க்கை வாழ்ந்தார்.

சுவாமியின் அசைக்க முடியாத நம்பிக்கை பல அதிசய நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது. அவரது புகழ்பெற்ற பாடல் சண்முக கவசம் பக்தர்களை தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் அவரது பஞ்சாமிர்த வர்ணம் முருகனின் இருப்பை அழைக்கிறது. இரக்கமுள்ள துறவி, அவர் பக்தியைத் தூண்டினார் மற்றும் தன்னலமற்ற செயல்களைச் செய்தார், பெரும்பாலும் தெய்வீக தரிசனங்களால் வழிநடத்தப்பட்டார்.

பாம்பன் சுவாமி சவால்களை எதிர்கொண்டார், ஆனால் எப்போதும் முருகனின் அருளை நம்பியிருந்தார். நோய்வாய்ப்பட்டபோது, ​​அவர் ஜெபத்தின் மூலம் அற்புதமாக குணமடைந்தார். தனிப்பட்ட இழப்புகள் இருந்தபோதிலும், அவர் தனது ஆன்மீக பணியில் கவனம் செலுத்தி, தனிமையில் இருந்தார். ஒரு சிறந்த எழுத்தாளர், சுவாமி தமிழில் 6,666 கவிதைகள் மற்றும் பல படைப்புகளை இயற்றினார், முருகனை 130 க்கும் மேற்பட்ட வடிவங்களில் புகழ்ந்தார்.

அவர் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையே நல்லிணக்கத்தை வலியுறுத்தினார், அவற்றை புனித மொழிகளாகக் கருதினார். அடக்கத்திற்கு பெயர் பெற்ற அவர் எளிமையாக வாழ்ந்தார், அடிக்கடி மௌன வழிபாடு செய்தார். 1929 இல், சுவாமி சமாதியில் நுழைந்தார், பக்தி மற்றும் ஞானத்தின் பாரம்பரியத்தை விட்டுச் சென்றார்.

பாம்பன் சுவாமியின் வாழ்க்கை முருகன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது, எண்ணற்ற பக்தர்களை ஊக்குவிக்கிறது. அவரது போதனைகள் மற்றும் பாடல்கள் ஆன்மீக வழிகாட்டுதலையும் பாதுகாப்பையும் தொடர்ந்து வழங்குகின்றன, உண்மையான தேடுபவர்களுக்கு தெய்வீக அருள் எப்போதும் கிடைக்கும் என்பதை நிரூபிக்கிறது.

Pamban Swami: A Saint Devoted to Lord Murugan

Born in 1848 in Pamban, Tamil Nadu, Pamban Swami, originally named Appavu, was a Saivite child gifted in Tamil and English. At 13, he had a vision of Lord Murugan, inspiring him to write devotional poems. Known for his deep spirituality, he lived a saintly life even after marriage, dedicating himself to prayers and pujas.

Swami’s unwavering faith led to many miraculous events. His famous hymn Shanmuga Kavacam is believed to protect devotees from harm, and his Pancamrita Varnam invokes Lord Murugan’s presence. A compassionate saint, he inspired devotion and performed selfless acts, often guided by divine visions.

Pamban Swami faced challenges but always relied on Lord Murugan’s grace. When ill, he was miraculously cured through prayer. Despite personal losses, he remained detached, focusing on his spiritual mission. A prolific writer, Swami composed 6,666 poems and several works in Tamil, praising Murugan in over 130 forms.

He emphasized harmony between Tamil and Sanskrit, considering them sacred languages. Known for his humility, he lived simply, often performing silent worship. In 1929, Swami entered samadhi, leaving behind a legacy of devotion and wisdom.

Pamban Swami’s life exemplifies unwavering faith in Lord Murugan, inspiring countless devotees. His teachings and hymns continue to offer spiritual guidance and protection, proving that divine grace is always available to sincere seekers.