மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளம்
தானதன தத்தனன தானதன தத்தன்ன
தானதன தத்தனன தானனா
(இதுமுதலிரண்டும், அட்டோத்தரசதாக்கரம்)
மூவிதம லத்துளொரு மூலமல மற்றுவிடின்
மூடவொர்ம றைப்பிலைபொ னாடுவாழ்
தேவரும்வ ழுத்திடுவர் மூவரும தித்திடுவர்
சீவனமு தத்திருவு மேவுமேல்
வீவொடுபி றப்புமிலை யேயெனும்வி திப்படிசெய்
மேதையரு ளத்தொளிர்கு கேசனே
தாவறவெ னக்குணனி கூடிடுநி னைத்தகதி
சார்தனிஜ மற்புடைய தாசரே. – (65)
1,3,5 ஆம் சீர்கள் : புளிமாங்காய்.
தனதான தத்தனன தனதான தத்தனன
தனதான தத்தனன தானனா
சிவயோக நிட்டைபுரி பொழுதீனர் பிச்சரெரி
திணிதோளு டைக்குறள்க ளாலுமே
கவரூறு கிட்டிடினு மசையாதி ருத்தலுமெய்
கலையார்ப டைப்புணலு மாழையால்
எவரோதி கழ்ச்சிமொழி களையேபொ றுத்திடலு
மெதிரூழ்ச கித்திடலு மேசதா
தவமாக வுற்றவர்கள் பெறுபேறெ னக்கருடி
தமியேனி னைப்புளகு கேசனே. – (66)
புளிமாங்காய் தேமா புளிமாங்காய் தேமா
புளிமாங்காய் தேமா புளிமா
வினையென்றி யம்பு பவசங்கம் யாவும் விரைவாயொ ழிந்து சுகவாழ்
வினை யொன்ற வென்று துறவேறி ஞான வெளியாவி ளங்கு நினையே
நினைநெஞ்சர் நன்கு புரிராச யோக நிறையும்ப டர்ந்த படியே
எனையன்ற றைந்த முடிவின்று தாவெ னிறையேகு மார குருவே. – (67)
தேமாங்காய் தேமா தேமாங்காய் தேமா தேமாங்காய் தேமா தேமா
தானான தான தானான தான தானான தான தானா.
தேவாதி தேவ யோகாதி யோக சேவேற னாதர் சேயே
மாவாதர் வாத மேலான மாசில் வாசாம கோச ரேசா
பாவாணர் கோவி சாகாம கேசை பாலாப கேச வேலா
காவாவெ னாமெ யாயோது தாசர் காசாசை மேவு வாரோ. – (68)
புளிமா
தனன தனன தனன தனன தனன தனன தனனா
ஒருவ னுருவு முமையி னுருவு மொருதி ருவுரு வினிலே
மருவ நெடிய சரண மயிலின் மலர றுமுக சிவமாய்
முருகு கமழ முருகு திகழ முருக னெனவும் வருவோய்
கருது னடியை யருளெ னடியர் கவலை வலையி னுழையார். – (69)
மா மா மா மா மா மா கூவிளம்
ஆனை யேறு கோவி லார ருட்கு ழந்தை யாண்மையால்
ஆனை யேறு போலு லாவு மாண வத்தை வென்றுளார்
பூனை போலு லாவு வார்கள் பூவின் மிக்க சூதுடைப்
பூனை போலு லாவி டார்கள் பூவு டம்பு போம்வரை. – (70)
நினைவி லாத நிஜசொ ரூப னார்க்கு முத்தி பந்தமென்
பனவெ நாளு மிலைபொ யாத பசுவின் கண்ண வேயெனா
நினையு நெஞ்சர் பந்தம் வீய நியதி செய்து னாணையால்
அனக வாழ்க்கை சேர்வ ரெனையு மாண்ம யூர தேவனே. – (71)
விளம் மா விளம் மா விளம் விளம் மா.
உலகினி லுளபஃறொழில்வழி யேயு
முயரதி சயமனைத் தினுக்கும்
பலமலி குருவின் வழிவரு மமல
பரமவித் தைபெரிதெ னாவோர்
நலமுளர் குருவின் வழியதைக் கொளவே
நவையறு வினைபல புரிவார்
தலமிசை யறியா ரெளிதென நினைவார்
தமியனுக் கருள்சிவ குருவே. – (72)
எக்குரு வினையுஞ் சிவமெனத் தாழ்த
லேசறு சிவகுரு வினுக்கே
தக்கவந் தனமாத் தழைக்குமென் றறியார்
சாத்திரத் திருந்ததைப் பிடித்தே
மிக்கவும் பழகி வெறுங்கைய ராவர்
மிகைதபு குருமொழி நிற்போர்
விக்கின மிலராப் பயனடை வாரெம்
மெய்யருட் கொடைமடக் குகனே. – (73)
யாவரு மறிந்தே வாழ்ந்திடு நிமித்தம்
யாவையுந் தெரியரன் சீட
பாவம தடைந்தே நினதெதிர் நின்ற
பாங்கினை யினிதுண ராதார்
ஆவலி னீன்றோர் வளர்த்தவ ரினுமே
லருட்குரு வெனவறி வாரோ
நாவலர் புகழ்நன் னறைமலர்ப் பாதா
நான்பணி யொருகுரு மணியே. – (74)
தங்குரு தமக்கிங் கெதுகுறை செயினுஞ்
சழக்கனென் றிகழவொர் ஞாயம்
எங்கணு மிலைதங் குருவினை மதியா
திருப்பவர் புரிதவ மவமாய்ப்
பொங்கழ னரகு மனுபவித் தலைவார்
பொறியிலர்க் கோதிய குருவுஞ்
சங்கடப் படுமே யெனக்கருள் புரியுந்
தனியிளம் பூரண குருவே. – (75)
மந்திரங் கருக்கள் பேய்சில யோக
வழிகளிற் சித்திக ளுண்டாம்
தந்திர பமன ரும்பல புரிந்தார்
தரணியி லவையரு ளாமோ
சிந்தனை குறைந்த திருவினர் வாக்கே
செய்திடு மருள்விளை யாடல்
அந்தமெய் வலியே யறிவென வுணர்வா
ரறுமுக நினைப்பணி வோரே. – (76)
மாந்தரை மயக்கு மாசையின் மீக்கொண்
மனத்தினர் செயல்பல நாளுங்
காந்தனல் கொடுபுக் கிடங்கொளுத் திடுவோன்
கருத்தழிந் தொருபொழு ததிலே
போந்திற முறழு மேயென வுணர்வோர்
புறநெறி போந்துழல் வாரோ
சாந்தநின் னறிவே தலைப்படு பெரியோர்
தவப்பொரு ளேகுக தேவே. – (77)
தன்மதி கெடுத்துப் பிறப்பிறப் பழுத்துந்
தனக்குள வாணவ மாயை
கன்மமிம் மூன்று மறுமெனிற் சிறிதுங்
களங்கமில் பொருளெனத் தன்னைச்
சின்மய மாய்க்காண் ஞானியை யினிதா
டேவநின் னடிதொழு நானுந்
தன்மய மாகத் தயவுசெய் யாயோ
சரவண பவமுரு கோனே. – (78)
தனதன தானா தனதன தானா தன்தன் தான்ன தானா
(ஒற்றிலாச் செய்யுள்)
சரவண சாதா சசிமக ணாதா சத்தள வாரிச பாதா
சிரவண ரீசா குறமக ணேசா சிவபத தாரக தேவா
அரவண வோரா கமுளவி ராசா வருளொரு ஞானவி னோதா
கரவண வாமே வருகென வேநீ கருணையி னாலழை யாயே. – (79)
தேமா கூவிளம் தேமா கூவிளம் தேமா கூவிளம் கூவிளம்
பெத்த நீத்துயிர் முத்தி நாடுயர் பெற்றி யோரென வேயிருந்
தித்த ராதல மூட ராசைகொ ளீன போகநு கர்ந்துசாம்
பித்த ரங்ஙன மூழி தென்பபி ணக்கி லாரிது சொல்வரோ
அத்த னேயயி லத்த னேயெனை யாள னின்கட னேயரோ. – (80)
மூன்றாஞ்சீர்: புளிமா
தன்னின் மேலறி பவன்ம காகதி சாரும் வேளையிலுள்ளவா
பின்ன மின்றமர் வுறினு டம்புயிர் போல வின்புபி றங்குவான்
அன்ன வேளையில் விலகின் வேறென வாவ னாகலி னீயெனை
நன்னர் மீக்கொளு நிலையில் வையொரு நைவி லாவயி லையனே. – (81)
புளிமா கூவிளம் புளிமா கூவிளம் புளிமா கூவிளம் கூவிளம்
தனன தத்தன தனன தத்தன, தனன தத்தன தானனா
இருள றைப்பொரு ளறியு மட்டுமொ ரெழில்வி ளக்கது தேவைபோல்
அருண்மு தற்பொரு ளினைய டுத்திடு மளவு நிட்டைய வாவுவோர்
மருவு முப்பொருண் மறைய நிற்பது மலர்சி வத்துவ மாமெனா
ஒருமு கப்படு வலியை யெற்கரு ளொளிய யிற்கும ரேசனே. – (82)
சீர்வாய்பாடு பேதிக்கினும், ஓசைகெடாது நடப்பது
உருவ மானவொர் குருவி னாலுணர் வுறுதல் போலரு ளுருவொடே
வருகு கேசனை வழிப டாதர மார்க்க மேயதி சீக்கிரம்
அருளு மேனல மதுவ னோனுய ரருவ மாநிலை யாமெனுந்
தெருளர் நாயக பிரிவுறாவருள் செய்தி நானினி துய்யவே. – (83)
தேமா கருவிளம் கருவிளம் புளிமா புளிமா புளிமா புளிமாங்காய்
தூமா பிரணவ நிலையுரு வருவாச் சுடரோர் சிவலிங் கமும்வீயாப்
பூமா ணயிலிறை யெனவழி படலாம் பொழிலார் மதுரா புரியாடல்
ஆமா றொருமன னசைஇய பொழுதே யயிலோ னவணஞ் செயலாலே
ஓமா யிடுதலி னெனவுண ருணர்வோ ருனையே விழைவார் குகதேவே. – (84)
மா விளம் மா விளம் மா விளம் காய்
சகமுஞ் சரவுயிர் பரமுந் தன்னளி சால்சன் னிதியென வேசததம்
திகழுந் திருவுள மொன்றுண் டெனவுணர் தீரர் பவஞ்செய வேதுணியார்
அகமும் புறணியு முணரா விழுதைக ளயருந் துரிதம பாரமெனப்
புகழுன் கருணையை மறவே னல்லருள் புரிமெய்ஞ் ஞானஷ டாநநனே. – (85)
தனனத் தனதன தனனத் தனதன, தனனத் தனதன தனதானா
[ சதாக்கரம் (நூறெழுத்து.)]
அறிவிற் பெரியவ னழகிற் பெரியவ னறனிற் பெரியவ னரசாண்மா
நெறியிற் பெரியவ னருளிற் பெரியவ னிலையிற் பெரியவ னிஜமாமோர்
செறிவிற் பெரியவ னிணையற் றுளபல செயலிற் பெரியவன் முருகோனே
பொறிபற் றவவனை நினையற் புடையவர் புகழெற் கினியவ ரெனலாமே. – (86)
தனனா தனதன தனனா தனதன, தனனா தனதன தனதானா
[சதாக்கரம். (ஒற்றிலாநூறெழுத்து.)]
பிரமா வுணரிறை மறைமா துணரிறை பெரியா ருணரிறை துளவேறோ
ருரமா லுணரிறை மகமா லுணரிறை யுரியோ ருணரிறை யளியாலே
கரமா வுணரிறை கடியா ருணரிறை கலையா ருணரிறை பெருமாயா
மரமா வகிரிறை யெனுநீ ளயிலனை மதியா தவரச டொழியாரே. – (87)
தன்ன தான்ன தன்ன தான்ன தன்ன தான்ன தானதானா
( இது முதலிரண்டுவிருத்தமும், ஒற்றிலாச்செய்யுள்)
குமர தாரக பரம போதக் குழக ஞானஷ டாநநாகா
சமர தானவ பகைவ பாவக சருவ காரண காரணாகா
அமர ராசறு பொருந காவயி லமல பூரண போதுமீதே
அமர ணாவளி யெனுந லோரிட ரடைவ ரோவுயி ரேகுநாளே. – (88)
ஏழாஞ்சீர்: தனனதானா
தொடலை சூடுர வழக வாவறு சுமுக வாவயி லரசுவாகா
விடலை வாசிகி யிறைவ வாநிறை விமல வாசிவ குமரவாகா
குடிலை வாகுற மகள வாவிடு கொழுந வாவென நவிலுநாவோ
ரடலை யேசெறி சுடலை கூடினு மணுவு மாகுல மடைகிலாரே. – (89)
கருவிளம் கூவிளம் கருவிளம் கூவிளம்
கருவிளம் தேமா புளிமாங்காய்.
கொடியப வங்கெட வுயர்துற வண்டிநல் குரவுளர் போலே பெரியோர்தாம்
இடுவவ ணிந்தடர் சடைமுடி முண்டித மெனமறை யேகூ றெதிலேனும்
சடிதியில் விஞ்சுபு வெறியுண லும்புணர் தனமுளர் மண்பொன் மறமாகுஞ்
சுடுவச னங்களு மிலரிறை யென்சிறு துதிமுத லாமோர் முருகோனே. – (90)
கருவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்
கருவிளம் கூவிளம் புளிமாங்காய்.
தனதன தந்தன தானன தந்தன தனதன தந்தன தனதானா
சிவதவ வங்கமெ னாநவி லஞ்சடை சிரமுறு முண்டித மிலையேல்வீண்
அவமுள சிந்தைய னேழையி வன்கலை யறிவில னென்றுல கினரேசா
அவதிபு ரிந்தறி வானதி றந்தழி வணவிவ ருந்துவ ரதனாலே
சிவதவ வங்கமெ *நாளும்வி ரும்புவர் திருநிறை யுங்குக னடியாரே. – (91)
கூவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம் தேமா
[ சதாக்கரம், (நூறெழுத்து.)]
போனதும் வருவதுங் கருதுத றவிர்ந்துகொள்
புசிப்பினுட் கிடைத்ததை மாந்தி
மேனியி லுடுத்துடை யருந்துத லிரண்டையும்
விருப்புள ரளித்திடி னேற்று
நானென தறுநெறி நனிநடந் துளக்கடி
நணுகிய துறவிக ணாடும்
வானவ ரரசென வருமொரு மழவனை
வணங்கடி யவர்க்கிலை மாலே. – (92)
கருவிளம்
தன்தன் தன்தன் தன்தன் தன்தன், தனதன தனதன தனந்தனா
அரிறபு தவநனி வளர்துற வுடைமையி லணிபணி நறுமண மணிந்திடா
துருவிழி மணியொடு தவளநி றவிசத முவகையு டனிதமு மணிந்துமா
பரிவுகெ ழுகுழவி குணமென வுலகினர் பணிவிடை முதலிய புரிந்தபோ
துரியப ரமடைக வெனுநலர் கதியிவ னுமடைய வருள்புரி கடம்பனே. – (93)
புளிமா கூவிளங்காய் புளிமா கூவிளங்காய் தேமா கூவிளங்காய் கூவிளம்.
தனன தந்தனன தனன தந்தனன, தான தந்தனன தந்தனா
பிறவி யென்றுபுகல் பிணியை வென்றுநிலை பேறெ னுஞ்சுகம்வ ழங்குமேல்
நறவி னும்பெரியு னருண்ம ருந்துதனை நாளு முண்டுலகி னிந்தையாம்
மறமெ னும்பெயரை யுடைய பண்டமணு மான முந்தொடுத லின்றுளே
துறுமு தொண்டரடை பலனு றும்படிசெய் சூழெ னெஞ்சிலுள கந்தனே. – (94)
விளம் மா மா காய் மா காய் கனி
ஒன்றொடி ரண்டு மூன்று காலங்கள் பூசைக்
குரியவென லென்கொலெனினோ
நன்றொடு தீது கூடு ஞாலநடை யாளர்
நலமாக நானாதிகள்
ஒன்றுத லருமை செய்யும் பாரணைமுன் னேனு
முடையானை யேத்தலியையும்
என்றதஃதென்பர் சித்த சுத்திகொடு சேயை
யெக்காலு நாடுபவரே. – (95)
பீடுடை யாதி யேழா மாதங்க டோன்று
பினுமுன்னு மெண்கடிகையும்
ஆடியின் றக்கி ணாய னாரம்ப முன்னு
மருமைத்தை யாரம்பமாந்
தோடமி லுத்த ராய ணத்தின்பி னுஞ்சீர்
துதைகின்ற கார்த்திகைநலங்
கூடுமா வணிதி றத்த வைகாசி யென்று
கூறுமதி தோன்றுமுனமும். – (96)
மார்கழி புரட்டை யானி பங்குனியென் மாதம்
வந்தபினு மேழொன்பது
சேர்கடி கையுமா தித்த னரவுதொடு வேளை
திகழ்கின்ற மதியையரவஞ்
சார்வழி நீங்கு வேளை யுங்கோளி லர்த்தோ
தயஞ்செம்ம கோதயமுமே
ஏர்வளர் புண்ய கால மிக்கால மூழ்கி
யிட்டெந்தை யேத்தனலமாம். – (97)
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளங்காய் கருவிளம் தேமா புளிமா
கார்த்திகை சட்டிவை காசிவி சாகமுநன் கடிதரு தைப்பூ சமுமா
கீர்த்திசெய் பங்குனி யுத்திர மாசறுசுக் கிரனது வாரங் குகுவை
நீத்தெழு நற்சிவ ராத்திரி யுங்குகனை நெடுவழி பாடு புரிவோர்
பூர்த்திசெய் மெய்யறி வுள்ளவர் சன்னிதியிற் புகுதுவர் வீடெய் துவரே. – (98)
சேயைமு னிட்டொரு காலொரு நூவளவே செயுமெத னுக்கு மனம்போ
லேயுத வுங்கட னுள்ளவ னென்றறிவே னிதவுடை யச்சே யினையே
நோயறு மாநுட ரேயத னாலஞரே நுகர்முன மின்பே நுகர்வீ
ராயநல் வத்துக ளாலுமு ளாலுமவற் ககமகிழ் வாமா பணியே. – (99)
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் தேமா.
தந்தனன தந்தனன தந்தனன தந்தனன, தந்தனன தந்தனன தானா
மண்டுதிரை யென்பதரு ளென்பதில டங்கவது
வண்பதிய டங்கவிரு ளேயீ
பண்டுமல மிஞ்சறிவ டங்கவது தண்கருணை
பம்பிறைய டங்கவரு ளாலே
கண்டவர றிந்தடைசி தம்பரந டஞ்செயொரு
கந்தகுக நின்கழல்கள் பாடோர்
தொண்டினிது தந்தமுறை யென்றனையு மிந்தவுட
றுஞ்சிடுமு னுண்டுகொள வாவே. – (100)
தேமாங்கனி கூவிளம் கூவிளம் கூவிளங்காய்
தேமாங்கனி கூவிளம் கூவிளங்காய்.
தாந்தாந்தன தந்தன தந்தன தந்தனனா
தாந்தாந்தன தந்தன தந்தனனா
[சதாக்கரம். (நூறெழுத்து.)]
தீங்காஞ்செய னன்கற னன்செய னன்குறவே
தேம்பாண்குழ கன்குக னங்குறவே
ளாங்காந்திமி குந்தவு டம்பிடி யன்றவமா
யாண்டூன்றிறை யென்றுபு கன்றவமா
யோங்கேண்டுய ரென்றறை கின்றபெ ருங்கடலே
யோம்போம்புணை கொண்டுக டந்திடலே
நாங்காண்பல னென்றுது ணிந்தவர் தம்பதியே
நான்சேர்ந்திடு மொண்பதி யென்பதியே.
எண்சீர்க்கழிநெடிலடியான்வருவன. – (101)
கருணையை உதவிட விரைவாய் வருக…!!!
கருமுகில் படிசிகி மலையாய் வருக…!!!
வளரும்

பாம்பன் சுவாமி: முருகனிடம் பக்தி கொண்ட துறவி
தமிழ்நாட்டின் பாம்பனில் 1848 இல் பிறந்த பாம்பன் சுவாமி, முதலில் அப்பாவு என்று பெயரிடப்பட்டவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திறமை பெற்ற சைவக் குழந்தை. 13 வயதில், முருகப்பெருமானின் தரிசனம் அவருக்கு பக்தி கவிதைகள் எழுதத் தூண்டியது. ஆழ்ந்த ஆன்மிகத்திற்கு பெயர் பெற்ற அவர், திருமணத்திற்குப் பிறகும், பிரார்த்தனை மற்றும் பூஜைகளில் தன்னை அர்ப்பணித்து, புனிதமான வாழ்க்கை வாழ்ந்தார்.
சுவாமியின் அசைக்க முடியாத நம்பிக்கை பல அதிசய நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது. அவரது புகழ்பெற்ற பாடல் சண்முக கவசம் பக்தர்களை தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் அவரது பஞ்சாமிர்த வர்ணம் முருகனின் இருப்பை அழைக்கிறது. இரக்கமுள்ள துறவி, அவர் பக்தியைத் தூண்டினார் மற்றும் தன்னலமற்ற செயல்களைச் செய்தார், பெரும்பாலும் தெய்வீக தரிசனங்களால் வழிநடத்தப்பட்டார்.
பாம்பன் சுவாமி சவால்களை எதிர்கொண்டார், ஆனால் எப்போதும் முருகனின் அருளை நம்பியிருந்தார். நோய்வாய்ப்பட்டபோது, அவர் ஜெபத்தின் மூலம் அற்புதமாக குணமடைந்தார். தனிப்பட்ட இழப்புகள் இருந்தபோதிலும், அவர் தனது ஆன்மீக பணியில் கவனம் செலுத்தி, தனிமையில் இருந்தார். ஒரு சிறந்த எழுத்தாளர், சுவாமி தமிழில் 6,666 கவிதைகள் மற்றும் பல படைப்புகளை இயற்றினார், முருகனை 130 க்கும் மேற்பட்ட வடிவங்களில் புகழ்ந்தார்.
அவர் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையே நல்லிணக்கத்தை வலியுறுத்தினார், அவற்றை புனித மொழிகளாகக் கருதினார். அடக்கத்திற்கு பெயர் பெற்ற அவர் எளிமையாக வாழ்ந்தார், அடிக்கடி மௌன வழிபாடு செய்தார். 1929 இல், சுவாமி சமாதியில் நுழைந்தார், பக்தி மற்றும் ஞானத்தின் பாரம்பரியத்தை விட்டுச் சென்றார்.
பாம்பன் சுவாமியின் வாழ்க்கை முருகன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது, எண்ணற்ற பக்தர்களை ஊக்குவிக்கிறது. அவரது போதனைகள் மற்றும் பாடல்கள் ஆன்மீக வழிகாட்டுதலையும் பாதுகாப்பையும் தொடர்ந்து வழங்குகின்றன, உண்மையான தேடுபவர்களுக்கு தெய்வீக அருள் எப்போதும் கிடைக்கும் என்பதை நிரூபிக்கிறது.
Pamban Swami: A Saint Devoted to Lord Murugan
Born in 1848 in Pamban, Tamil Nadu, Pamban Swami, originally named Appavu, was a Saivite child gifted in Tamil and English. At 13, he had a vision of Lord Murugan, inspiring him to write devotional poems. Known for his deep spirituality, he lived a saintly life even after marriage, dedicating himself to prayers and pujas.
Swami’s unwavering faith led to many miraculous events. His famous hymn Shanmuga Kavacam is believed to protect devotees from harm, and his Pancamrita Varnam invokes Lord Murugan’s presence. A compassionate saint, he inspired devotion and performed selfless acts, often guided by divine visions.
Pamban Swami faced challenges but always relied on Lord Murugan’s grace. When ill, he was miraculously cured through prayer. Despite personal losses, he remained detached, focusing on his spiritual mission. A prolific writer, Swami composed 6,666 poems and several works in Tamil, praising Murugan in over 130 forms.
He emphasized harmony between Tamil and Sanskrit, considering them sacred languages. Known for his humility, he lived simply, often performing silent worship. In 1929, Swami entered samadhi, leaving behind a legacy of devotion and wisdom.
Pamban Swami’s life exemplifies unwavering faith in Lord Murugan, inspiring countless devotees. His teachings and hymns continue to offer spiritual guidance and protection, proving that divine grace is always available to sincere seekers.