About us – Tamil

குன்றாத குடிவாழ்க்கை தந்தருளும்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா

“யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே.”
— கந்தர் அனுபூதி (பாடல் 17)

எங்கள் நோக்கம் எங்களின் இந்த ‘மயூரகிரி’ (Mayuragiri) இணையதளம் மற்றும் யூடியூப் சேனலானது, குன்றக்குடி மலையில் உறையும் சண்முகநாத பெருமானின் புகழை உலகெங்கும் பரப்புவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.

பெயர்க்காரணம் ‘மயூரம்’ என்றால் மயில்; ‘கிரி’ என்றால் மலை. மயிலையே மலையாகக் கொண்டு குன்றக்குடியில் சண்முகநாதர் எழுந்தருளியுள்ளார். வேலையும், மயிலையும் வணங்கினால் மயூரகிரிநாதனாம் குன்றக்குடி முருகப்பெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

அந்த மயூரகிரிநாதனின் அருளை அனைவரும் பெறும் வகையில், ஆன்மீகத் தகவல்களைப் பகிரவே இந்தத் தளத்திற்கு ‘மயூரகிரி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உங்கள் ஆதரவு தேவை முருகப்பெருமானின் புகழைப் பரப்பும் எங்களின் இந்த எளிய முயற்சிக்கு, பக்தர்களாகிய தாங்கள் ‘மயூரகிரி’ இணையதளம் மற்றும் யூடியூப் சேனலைப் பின்பற்றித் தங்களின் மேலான ஆதரவைத் தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துக்களம் உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் ஆன்மீகப் பாடல்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால், கீழே உள்ள பட்டனை (Button) கிளிக் செய்து பதிவிடவும்.

[உங்கள் கருத்துகளைப் பகிர இங்கே சொடுக்கவும்]

இணையதள நிர்வாகம்: திரு. சுப்பிரமணியன், தேவகோட்டை. தொடர்புக்கு: +91 95244 44664