Thiruppugal 1266 Makkalpirappukkul
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தத்தத் தனத்தத்த தத்தத் தனத்தத்த
தத்தத் தனத்தத்த – தனதான
மக்கட் பிறப்புக்கு ளொக்கப் பிறப்புற்ற
மட்டுற் றசுற்றத்தர் – மனையாளும்
மத்யத் தலத்துற்று நித்தப் பிணக்கிட்டு
வைத்துப் பொருட்பற்று – மிகநாட
நிக்ரித் திடுத்துட்டன் மட்டித் துயிர்பற்ற
நெட்டைக் கயிற்றிட்டு – வளையாமுன்
நெக்குக் குருப்பத்தி மிக்குக் கழற்செப்ப
நிற்றத் துவச்சொற்க – ளருள்வாயே
திக்கப் புறத்துக்குள் நிற்கப் புகழ்ப்பித்த
சித்ரத் தமிழ்க்கொற்ற – முடையோனே
சிப்பக் குடிற்கட்டு மற்பக் குறத்திச்சொல்
தித்திப் பையிச்சிக்கு – மணவாளா
முக்கட் சடைச்சித்த ருட்புக் கிருக்கைக்கு
முத்தித் துவக்குற்று – மொழிவோனே
முட்டச் சினத்திட்டு முற்பட் டிணர்க்கொக்கை
முட்டித் தொளைத்திட்ட – பெருமாளே.
பதம் பிரித்தது
தத்தத் தனத்தத்த தத்தத் தனத்தத்த
தத்தத் தனத்தத்த – தனதான
மக்கள் பிறப்புக்குள் ஒக்கப் பிறப்பு உற்ற
மட்டு உற்ற சுற்றத்தர் – மனையாளும்
மத்(தி)யத் தலத்து உற்று நித்தப் பிணக்கிட்டு
வைத்துப் பொருள் பற்று(ம்) – மிக நாட
நிக்(க)ரித்து இடு(ம்) துட்டன் மட்டித்து உயிர் பற்ற
நெட்டைக் கயிற்று இட்டு – வளையா முன்
நெக்குக் குருப் பத்தி மிக்குக் கழல் செப்ப
நில் தத்துவச் சொற்கள் – அருள்வாயே
திக்கு அப்புறத்துக்குள் நிற்கப் புகழ்ப்பித்த
சித்ரத் தமிழ்க் கொற்றம் – உடையோனே
சிப்ப(ம்) குடில் கட்டும் அற்பக் குறத்திச் சொல்
தத்திப்பை இச்சிக்கும் – மணவாளா
முக்கண் சடைச் சித்தர் உள் புக்கு இருக்கைக்கு
முத்தித் துவக்கு உற்று – மொழிவோனே
முட்டச் சினத்திட்டு முற்பட்டு இணர் கொக்கை
முட்டித் தொளைத்திட்ட – பெருமாளே.
English
makkat piRappukku Lokkap piRapputRa
mattut RasutRaththar – manaiyALum
mathyath thalaththutRu niththap piNakkittu
vaiththup porutpatRu – mikanAda
nikrith thiduththuttan mattith thuyirpatRa
nettaik kayitRittu – vaLaiyAmun
nekkuk kuruppaththi mikkuk kazhaRcheppa
nitRath thuvacchoRka – LaruLvAyE
thikkap puRaththukkuL niRkap pukazhppiththa
sithrath thamizhkkotRa – mudaiyOnE
sippak kudiRkattu maRpak kuRaththicchol
thiththip paiyicchikku – maNavALA
mukkat chadaicchiththa rutpuk kirukkaikku
muththith thuvakkutRu – mozhivOnE
muttac chinaththittu muRpat tiNarkkokkai
muttith thoLaiththitta – perumALE.
English Easy Version
makkaL piRappukkuL okkap piRappu utRa
mattu utRa sutRaththar – manaiyALum
math(thi)yath thalaththu utRu niththap piNakkittu
vaiththup poruL patRu(m) – mika nAda
nik(ka)riththu idu(m) thuttan mattiththu uyir patRa
nettaik kayitRu ittu – vaLaiyA mun
nekkuk kurup paththi mikkuk kazhal seppa
nil thaththuvac choRkaL – aruLvAyE
thikku appuRaththukkuL niRkap pukazhppiththa
sithrath thamizhk kotRam – udaiyOnE
sippa(m) kudil kattum aRpak kuRaththic chol
thiththippai icchikkum – maNavALA
mukkaN sadaic chiththar uL pukku irukkaikku
muththith thuvakku utRu – mozhivOnE
muttac chinaththittu muRpattu iNar kokkai
muttith thoLaiththitta – perumALE.