திருப்புகழ் 172 நெற்றி வெயர்த்துளி (பழநி)

Thirupugal 172 Netriveyarththuli (Pazhani)

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தன தத்தன தனத்த தானன
தத்தன தத்தன தனத்த தானன
தத்தன தத்தன தனத்த தானன – தனதான

நெற்றிவெ யர்த்துளி துளிக்க வேயிரு
குத்துமு லைக்குட மசைத்து வீதியி
னிற்பவர் மைப்படர் விழிக்க லாபியர் – மொழியாலே

நித்தம யக்கிகள் மணத்த பூமலர்
மெத்தையில் வைத்ததி விதத்தி லேயுட
னெட்டுவ ரத்தொழில் கொடுத்து மேவியு – முறவாடி

உற்றவ கைப்படி பொருட்கள் யாவையு
மெத்தவு நட்பொடு பறித்து நாடொறு
முற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்க – ளுறவாமோ

உச்சித மெய்ப்புற அனைத்த யாவுடன்
மெய்ப்படு பத்தியி னிணக்க மேபெற
வுட்குளிர் புத்தியை யெனக்கு நீதர – வருவாயே

கற்றத மிழ்ப்புல வனுக்கு மேமகிழ்
வுற்றொரு பொற்கொடி களிக்க வேபொரு
கற்பனை நெற்பல அளித்த காரண – னருள்பாலா

கற்பந கர்க்களி றளித்த மாதணை
பொற்புய மைப்புயல் நிறத்த வானவர்
கட்கிறை யுட்கிட அருட்க்ரு பாகர – எனநாளும்

நற்றவ ரர்ச்சனை யிடத்த யாபர
வஸ்துவெ னப்புவி யிடத்தி லேவளர்
நத்தணி செக்கரன் மகிழ்ச்சி கூர்தரு – மருகோனே

நட்டுவர் மத்தள முழக்க மாமென
மைக்குல மெத்தவு முழக்க மேதரு
நற்பழ நிப்பதி செழிக்க மேவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தன தத்தன தனத்த தானன
தத்தன தத்தன தனத்த தானன
தத்தன தத்தன தனத்த தானன – தனதான

நெற்றி வெயர்த் துளி துளிக்கவே இரு
குத்து முலைக் குடம் அசைத்து வீதியில்
நிற்பவர் மைப் படர் விழிக் கலாபியர் – மொழியாலே

நித்த(ம்) மயக்கிகள் மணத்த பூ மலர்
மெத்தையில் வைத்து அதி விதத்திலே உடல்
நெட்டு வரத் தொழில் கொடுத்து மேவியும் – உறவாடி

உற்ற வகைப்படி பொருட்கள் யாவையும்
மெத்தவு(ம்) நட்பொடு பறித்து நாள் தொறும்
உற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்கள் – உறவாமோ

உச்சித மெய்ப்பு உற அ(ன்)னை தயாவுடன்
மெய்ப்படு பத்தியின் இணக்கமே பெற
உள் குளிர் புத்தியை எனக்கு நீ தர – வருவாயே

கற்ற தமிழ்ப் புலவனுக்குமே மகிழ்வுற்று
ஒரு பொற் கொடி களிக்கவே பொரு
கற்பனை நெல் பல அளித்த காரணன் – அருள்பாலா

கற்ப நகர்க் களிறு அளித்த மாது அணை
பொன் புய மைப் புயல் நிறத்த வானவர்கட்கு
இறை உட்கிட அருள் க்ருபாகர – என நாளும்

நல் தவர் அர்ச்சனை இட தயாபர
வஸ்து எனப் புவியிடத்திலே வளர்
நத்து அணி செக்கரன் மகிழ்ச்சி கூர் தரு – மருகோனே

நட்டுவர் மத்தள முழக்கமாம் என
மைக் குலம் மெத்தவும் முழக்கமே தரு
நல் பழநிப் பதி செழிக்க மேவிய – பெருமாளே.

English

netRive yarththuLi thuLikka vEyiru
kuththumu laikkuda masaiththu veethiyi
niRpavar maippadar vizhikka lApiyar – mozhiyAlE

niththama yakkikaL maNaththa pUmalar
meththaiyil vaiththathi vithaththi lEyuda
nettuva raththozhil koduththu mEviyu – muRavAdi

utRava kaippadi porutkaL yAvaiyu
meththavu natpodu paRiththu nAdoRu
muRpana viththaikaL thodukku mAtharka – LuRavAmO

ucchitha meyppuRa anaiththa yAvudan
meyppadu paththiyi niNakka mEpeRa
vutkuLir puththiyai yenakku neethara – varuvAyE

katRatha mizhppula vanukku mEmakizh
vutRoru poRkodi kaLikka vEporu
kaRpanai neRpala aLiththa kAraNa – naruLbAlA

kaRpana karkkaLi RaLiththa mAthaNai
poRpuya maippuyal niRaththa vAnavar
katkiRai yutkida arutkru pAkara – enanALum

natRava rarcchanai yidaththa yApara
vasthuve nappuvi yidaththi lEvaLar
naththaNi sekkaran makizhcchi kUrtharu – marukOnE

nattuvar maththaLa muzhakka mAmena
maikkula meththavu muzhakka mEtharu
naRpazha nippathi sezhikka mEviya – perumALE.

English Easy Version

netRi veyarth thuLi thuLikkavE iru
kuththu mulaik kudam asaiththu veethiyil
niRpavar maip padar vizhik kalApiyar – mozhiyAlE

niththa(m) mayakkikaL maNaththa pU malar
meththaiyil vaiththu athi vithaththilE udal
nettu varath thozhil koduththu mEviyum – uRavAdi

utRa vakaippadi porutkaL yAvaiyum
meththavu(m) natpodu paRiththu nAL thoRum
uRpana viththaikaL thodukku mAtharkaL – uRavAmO

ucchitha meyppu uRa a(n)nai thayAvudan
meyppadu paththiyin iNakkamE peRa
uL kuLir puththiyai enakku nee thara – varuvAyE

katRa thamizhp pulavanukkumE makizhvutRu
oru poR kodi kaLikkavE poru
kaRpanai nel pala aLiththa kAraNan – aruLbAlA

kaRpa nakark kaLiRu aLiththa mAthu aNai
pon puya maip puyal niRaththa vAnavarkatku
iRai utkida aruL krupAkara – ena nALum

nal thavar arcchanai ida thayApara
vaSthu enap puviyidaththilE vaLar
naththu aNi sekkaran makizhcchi kUr tharu – marukOnE

nattuvar maththaLa muzhakkamAm ena
maik kulam meththavum muzhakkamE tharu
nal pazhanip pathi sezhikka mEviya – perumALE.