திருப்புகழ் 194 வரதா மணி நீ (பழநி)

Thirupugal 194 Varadhamaninee

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனா தனனா -தனதான
தனனா தனனா -தனதான

வரதா மணிநீ -யெனவோரில்
வருகா தெதுதா -னதில்வாரா

திரதா திகளால் -நவலோக
மிடவே கரியா -மிதிலேது

சரதா மறையோ -தயன்மாலும்
சகலா கமநூ -லறியாத

பரதே வதையாள் -தருசேயே
பழனா புரிவாழ் -பெருமாளே.

பதம் பிரித்தது

தனனா தனனா -தனதான
தனனா தனனா -தனதான

வரதா மணிநீயென – ஓரில்
வருகா தெது எதுதான் – அதில் வாரா(து)

இரதாதிகளால் – நவலோகம்
இடவே கரியாம் – இதில் ஏது

சரதா மறையோது – அயன்மாலும்
சகலாகமநூல் – அறியாத

பரதே வதையாள் – தருசேயே
பழனா புரிவாழ் – பெருமாளே.

English

varadhA maNi nee – ena Oril
varugAdhedhu thAn – adhil vArA

dhiradhAdhigaLAl – navalOkam
idavE kariyAm – idhilEdhu

saradhA maRai – Odhayan mAlum
sakalAgama nUl – aRiyAdha

paradhEvathaiyAL – tharu sEyE
pazhaNApuri vAzh – perumALE.

English Easy Version

varadhA maNi nee – ena Oril
varugAdhedhu (edhu) thAn – adhil vArA

adhiradhAdhigaLAl – navalOkam
idavE kariyAm – idhilEdhu

saradhA maRai Odhayan – mAlum
sakalAgama nUl – aRiyAdha

paradhEvathaiyAL – tharu sEyE
pazhaNApuri vAzh – perumALE.