திருப்புகழ் 22 அந்தகன் வருந்தினம் (திருச்செந்தூர்)

Thiruppugazh 22 Andhagan Varundh

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்தன தனந்தனந் தனதனத்
தந்தன தனந்தனந் தனதனத்
தந்தன தனந்தனந் தனதனத் – தனதான

அந்தகன் வருந்தினம் பிறகிடச்
சந்தத மும்வந்துகண் டரிவையர்க்
கன்புரு குசங்கதந் தவிரமுக் – குணமாள

அந்திப கலென்றிரண் டையுமொழித்
திந்திரி யசஞ்சலங் களையறுத்
தம்புய பதங்களின் பெருமையைக் – கவிபாடிச்

செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக்
கந்தனை யறிந்தறிந் தறிவினிற்
சென்றுசெ ருகுந்தடந் தெளிதரத் – தணியாத

சிந்தையு மவிழ்ந்தவிழ்ந் துரையொழித்
தென்செய லழிந்தழிந் தழியமெய்ச்
சிந்தைவ ரஎன்றுநின் தெரிசனைப் – படுவேனோ

கொந்தவிழ் சரண்சரண் சரணெனக்
கும்பிடு புரந்தரன் பதிபெறக்
குஞ்சரி குயம்புயம் பெறஅரக் – கருமாளக்

குன்றிடி யஅம்பொனின் திருவரைக்
கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
குண்டல மசைந்திளங் குழைகளிற் – ப்ரபைவீசத்

தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
தண்டைகள் கலின்கலின் கலினெனத் – திருவான

சங்கரி மனங்குழைந் துருகமுத்
தந்தர வருஞ்செழுந் தளர்நடைச்
சந்ததி சகந்தொழுஞ் சரவணப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்தன தனந்தனந் தனதனத்
தந்தன தனந்தனந் தனதனத்
தந்தன தனந்தனந் தனதனத் – தனதான

அந்தகன் வருந்தினம் பிறகிட
சந்ததமும் வந்துகண்டு அரிவையர்க்கு
அன்புருகு சங்கதம் தவிர முக் – குணம் மாள

அந்திபகலென்றிரண்டையுமொழித்து
இந்திரிய சஞ்சலங் களையறுத்து
அம்புய பதங்களின் பெருமையைக் – கவிபாடி

செந்திலை உணர்ந்து உணர்ந்து உணர்வுற
கந்தனை அறிந்து அறிந்து அறிவினில்
சென்று செருகுந் தடந் தெளிதர – தணியாத

சிந்தையும் அவிழ்ந்து அவிழ்ந்து உரையொழித்து
என்செயல் அழிந்தழிந்து அழிய மெய்ச்சிந்தைவ
ரஎன்றுநின் தெரிசனைப் – படுவேனோ

கொந்தவிழ் சரண்சரண் சரணென
கும்பிடு புரந்தரன் பதிபெற
குஞ்சரி குயம்புயம் பெற – அரக்கரும் மாள

குன்றிடிய அம்பொனின் திருவரைக்
கிண்கிணி கிணின்கிணின் கிணினென
குண்டலம் அசைந்திளங் குழைகளிற் – ப்ரபைவீச

தந்தன தனந்தனந் தனவென
செஞ்சிறு சதங்கைகொஞ்சிட மணித்
தண்டைகள் கலின்கலின் கலினென – திருவான

சங்கரி மனங்குழைந்துருக
முத்தந்தர வருஞ்செழுந் தளர்நடைச்
சந்ததி சகந்தொழுஞ் சரவணப் – பெருமாளே.

English

andhakan varun dhinam piRagida
santhatha mumvandhukaN darivaiyark
anburu gusangathan thaviramuk – guNamALa

andhipa galendriraN daiyumozhith
indhiri yasanchalan gaLaiyaRuth
ambuya padhangaLin perumaiyai – kavipAdi

chendhilai uNarndhuNarn dhuNarvuRak
kandhanai aRindhaRin dhaRivinil
chendruche rugunthadan theLithara – thaNiyAdha

chindhaiyu mavizhndhavizhindh uraiyozhith
enseyal azhindhazhin dhazhiyameyc
chinthaiva raendrunin dherisanaip – paduvEnO

kondhavizh charaNsaraN saraNena
kumbidu purandharan padhipeRa
kunjari kuyambuyam peRaarak – karumALa

kundridi yaamponin thiruvaraik
kiNkiNi kiNinkiNin kiNinena
kuNdala masaindhiLang kuzhaikaLiR – prabaiveesath

thananthanan thanan thanavena
chenchiRu chadhangaikon jidamaNith
thaNdaigaL galingalin galinena – thiruvAna

sankari manangkuzhain dhurugamuth
thanthara varumchezhun thaLarnadai
sandhathi jaganthozhum saravaNa – perumALE.

English Easy Version

andhakan varun dhinam piRagida
santhathamum vandhukaN darivaiyarkku
anburugu sangatham thavira muk – guNamALa

andhipagal endr iraNdaiyum ozhiththu
indhiriya sanchalangaLai aRuththu
ambuya padhangaLin perumaiyai – kavipAdi

chendhilai uNarndh uNarndh uNarvuRa
kandhanai aRindhaRindh dhaRivinil
chendru cherugun thadan theLithara – thaNiyAdha

chindhaiyum avizhndh avizhindhu uraiyozhith
enseyal azhindh azhindh azhiya meychin
Thaivara endru nin dherisanai – paduvEnO

kondhavizh charaN saraN saraNena
kumbidu purandharan padhipeRa
kunjari kuyambuyam peRa arak – karu mALa

Kundridiya amponin thiruvarai
kiNkiNi kiNinkiNin kiNinena
kuNdalam asaindhiLang kuzhaikaLiR – prabaiveesa

thananthanan thanan thanavena
chenchiRu chadhangai konjida maNi
thaNdaigaL galin galin galinena – thiruvAna

sankari manang kuzhaindh urugamuth
thanthara varum chezhun thaLarnadai
Sandhathi jaganthozhum saravaNa – perumALE.