074 – திருவுருமலைக்கோமகன்

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

திருமலி தாரணி சீர்முரு காவடர்
சேனைய னேயொளிர் சேயவ னேமாவொண்
டெருளர தீதா வரதா திருவே பரிவே
திடமுடை மயில்வரு சேவகனே
திகழ்மறை பாடிடு தேமுத லேயதி
தீரமு ளோயறு தேசுரு வாவேதன்
செயல்புரி தேவா விமலா செனியா தவனே
சிறுமையில் பிரதம சேகரனே
சிதலையின் மாசுரர் சேதன னேசுக
தீபக மேயறு சீலமு ளோய்காலஞ்
செடிதபு காலா சிவனே செழுமா மணியே
சிவகண பதியிளை யோய்திணியா
சிலைவலர் சீய ம தீவிர வேண் மணி
சேரணி யோயுயர் தேகமு ளோய்போர்வெஞ்
சிலைவகிர் சேடா பொருநா திரிசூ லதரா
சிகிவரை யொலிமுனி தேசிகனே.

தருமமே யாரணர் சார்முனி யேகிளர்
தானைய னேநல தாயனை யாய்தூவின்
சருவரர் தாழ்தாய் துணையே சருவே சுரனே
தடநில வயவறு தாரகனே
சகவுயிர் நாடக சாமிச தாசிவ
தாரணி வோய்தொழு தாசர ணாடுநீதந்
தயவுளர் தாதா நிபுணா தனிவா னவனே
தறுகணர் கருதலர் சார்பிலனே
சதமுனை வாசவர் சாதப தீயொரு
தாபமி லோய்விரி சாலமு ளோய்வாலஞ்
சடுவரி வாழ்வே சதுரா 6தழன்மா மகனே
சவணர்கண் முதியர்கள் சார்புளனே
சலமறு தூயவ சாவிலி யேமிகு
சாரிய னேகுண சாகர மேசார்திண்
டலைமையர் மீளீ சனதா சருவா பரணா
தகைகெழு புலிமுனி தாழ்பெரியோய்

செருமலி யாரயில் சேர்கர னேநிறை
தேனைய னேகமழ் தேயமு ளோய்பாவின்
றெரியல தீசா பரமா திருமான் மருகா
திடகுக செயிரறு சீடர்கணா
சிகலறு பாடகர் சேமமு தாலுயர்
தேரமர் வோய்பல தேசம னாகாதுஞ்
செயமுனி சேயே கழலோய் தினைமா வுணியே
சிறுகறு மருமறை தேடிறையே
சிதடுறு பாசகர் தீதடு கோபர
சீபதி யேபுகழ் சீலர ணாலாலுஞ்
செடிநகையாளீ திதியோய் செழியோ னிறைவா
சிவைசுத நதிசுத தேமமுதே
சிலதர்க ணாயக சீவனி யேதுதி
தேரது லாவறு சேகர னேசீர்வண்
டிலகவு லாசா திமிசோய் திருநீ றணிவோய்
திகில்வெலும் வலியருள் சீறடிதா

குருமலி நாரருள் கூர்மதி யோயொரு
கோனைய னேபல கோயிலு ளோய்கூவுங்
குருகில கோர்மா துகிலோய் குருசூழ் குமரா
குடமுனி வியனிலை கூறரசே
குகைதொறு மாடிடு கோமுரு கேயிடர்
கூரமி லோய்சுடர் கோசிக னேபோதங்
குயினிச போதா குழையோய் குனிசா னகனே
குறமகள் சுரமகள் கூடருளோய்
குதலையென் மாசுகொல் கோதிலி யேநிமிர்
கோபதி யேயெணில் கோலமு ளோய்சீலங்
கொடு கொடு சீர்வா குதியே குழகா புலவா
குவிபகை மதியினர் கோளரியே
குலமிலி மாயமில் கோவண னேயிழி
கோரமி லோயொரு கோகருள் கோனார்வங்
குலைமருள் கோலா வனகா குரவார் புயனே
குகையுரு மலைவளர் கோமகனே. – (1)

திருமலி தாரணி சீர்முருகா
தருமமெ யாரணர் சார்முனியே
செருமலி யாரயில் சேர்கரனே
குருமலி நாரருள் கூர்மதியோய். – (2)

திகழ்மறை பாடிடு தேமுதலே
சகவுயிர் நாடக சாமிசதா
சிகலறு பாடகர் சேமமுதால்
குகைதொறு மாடிடு கோமுருகே. – (3)

சிதலையின் மாசுரர் சேதனனே
சதமுனை வாசவர் சாதபதீ
சிதடுறு பாசகர் தீதடுகோ
குதலையென் மாசுகொல் கோதிலியே. – (4)

சிலைவலர் சீயம தீவிரவேள்
சலமறு தூயவ சாவிலியே
சிலதர்க ணாயக சீவனியே
குலமிலி மாயமில் கோவணனே. – (5)

திடமுடை மயில்வரு சேவகனே
| தடநில வயவறு தாரகனே
திடகுக செயிரறு சீடர்கணா
குடமுனி வியனிலை கூறரசே. – (6)

சிறுமையில் பிரதம சேகரனே
தறுகணர் கருதலர் சார்பிலனே
சிறுகறு மருமறை தேடிறையே
குறமகள் சுரமகள் கூடருளோய். – (7)

சிவகண பதியிளை யோய்திணியா
சவணர்கண் முதியர்கள் சார்புளனே
சிவைசுத நதிசுத தேமமுதே
குவிபகை மதியினர் கோளரியே. – (8)

சிகிவரை யொலிமுனி தேசிகனே
தகைகெழு புலிமுனி தாழ்பெரியோய்
திகில்வெலும் வலியருள் சீறடிதா
குகையுரு மலைவளர் கோமகனே. – (9)

சேனைய னேயொளிர் சேயவனே
தானைய னேநல தாயனையாய்
தேனைய னேகமழ் தேயமுளோய்
கோனைய னேபல கோயிலுளோய். – (10)

தீரமு ளோயறு தேசுருவா
தாரணி வோய்தொழு தாசரணா
தேரமர் வோய்பல தேசமனா
கூரமி லோய்சுடர் கோசிகனே. – (11)

தீபக மேயறு சீலமுளோய்
தாபமி லோய்விரி சாலமுளோய்
சீபதி யேபுகழ் சீலரணால்
கோபதி யேயெணில் கோலமுளோய். – (12)

சேரணி யோயுயர் தேகமுளோய்
சாரிய னேகுண சாகரமே
தேரது லாவறு சேகரனே
கோரமி லோயொரு கோகருள்கோன். – (13)

சீர்முரு காவடர் சேனையனே
சார்முனி யேகிளர் தானையனே
சேர்கர னேநிறை தேனையனே
கூர்மதி யோயொரு கோனையனே. – (14)

தேமுத லேயதி தீரமுளோய்
சாமிச தாசிவ தாரணிவோய்
சேமமு தாலுயர் தேரமர்வோய்
கோமுரு கேயிடர் கூரமிலோய். – (15)

சேதன னேசுக தீபகமே
சாதப தீயொரு தாபமிலோய்
தீதடு கோபர சீபதியே
கோதிலி யேநிமிர் கோபதியே. – (16)

தீவிர வேண்மணி சேரணியோய்
சாவிலி யேமிகு சாரியனே
சீவனி யேதுதி தேரதுலா
கோவண னேயிழி கோரமிலோய். – (17)

திருவே பரிவே சேவகனே
சருவே சுரனே தாரகனே
திருமான் மருகா சீடர்கணா
குருசூழ் குமரா கூறரசே. – (18)

தெருளர தீதா வரதா
சருவரர் தாழ்தாய் துணையே
தெரியல தீசா பரமா
குருகில கோர்மா துகிலோய். – (19)

செயல்புரி தேவா விமலா
தயவுளர் தாதா நிபுணா
செயமுனி சேயே கழலோய்
குயினிச போதா குழையோய். – (20)

செடிதபு காலா சிவனே
சடுவரி வாழ்வே சதுரா
செடிநகை யாளீ திதியோய்
கொடுகொடு சீர்வா குதியே. – (21)

சிலைவகிர் சேடா பொருநா
தலைமையர் மீளீ சனதா
திலகவு லாசா திமிசோய்
குலைமருள் கோலா வனகா. – (22)

சேனையனே சேயவனே
தானையனே தாயனையாய்
தேனையனே தேயமுளோய்
கோனையனே கோயிலுளோய். – (23)

தீரமுளோய் தேசுருவா
தாரணிவோய் தாசரணா
தேரமர்வோய் தேசமனா
கூரமிலோய் கோசிகனே. – (24)

தீபகமே சீலமுளோய்
தாபமிலோய் சாலமுளோய்
சீபதியே சீலரணால்
கோபதியே கோலமுளோய். – (25)

சேரணியோய் தேகமுளோய்
சாரியனே சாகரமே
தேரதுலா சேகரனே
கோரமிலோய் கோகருள்கோன். – (26)

சீர்முருகாசே னையனே
சார்முனியேதா னையனே
சேர்கரனேதே னையனே
கூர்மதியோய்கோ னையனே. – (27)

தேமுதலேதீ ரமுளோய்
சாமிசதாதா ரணிவோய்
சேமமுதால்தே ரமர்வோய்
கோமுருகேகூ ரமிலோய். – (28)

சேதனனேதீ பகமே
சாதபதீதா பமிலோய்
தீதடுகோசீ பதியே
கோதிலியேகோ பதியே. – (29)

தீவிரவேள்சே ரணியோய்
சாவிலியேசா ரியனே
சீவனியேதே ரதுலா
கோவணனேகோ ரமிலோய். – (30)

தாரணி சீர்முருகா
ஆரணர் சார்முனியே
ஆரயில் சேர்கரனே
நாரருள் கூர்மதியோய். – (31)

பாடிடு தேமுதலே
நாடக சாமிசதா
பாடகர் சேமமுதால்
ஆடிடு கோமுருகே. – (32)

மாசுரர்சே தனனே
வாசவர்சா தபதீ
பாசகர்தீ தடுகோ
மாசுகொல்கோ திலியே. – (33)

சீயமதீ விரவேள்
தூயவசா விலியே
நாயகசீ வனியே
மாயமில்கோ வணனே. – (34)

மயில்வருசே வகனே
வயவறுதா ரகனே
செயிரறுசீ டர்கணா
வியனிலைகூ றரசே. – (35)

பிரதமசே கரனே
கருதலர்சார் பிலனே
அருமறைதே டிறையே
சுரமகள்கூ டருளோய். – (36)

பதியிளை யோய்திணியா
முதியர்கள் சார்புளனே
நதிசுத தேமமுதே
மதியினர் கோளரியே. – (37)

ஒலிமுனி தேசிகனே
புலிமுனி தாழ்பெரியோய்
வலியருள் சீறடிதா
மலைவளர் கோமகனே. – (38)

தெருளர தீதா
சருவரர் தாழ்தாய்
தெரியல தீசா
குருகில கோர்மா. – (39)

செயல்புரி தேவா
தயவுளர் தாதா
செயமுனி சேயே
குயினிச போதா. – (40)

செடிதபு காலா
சடுவரி வாழ்வே
செடிநகை யாளீ
கொடுகொடு சீர்வா. – (41)

சிலைவகிர் சேடா
தலைமையர் மீk
திலகவு லாசா
குலைமருள் கோலா. – (42)

திருவே பரிவே
சருவே சுரனே
திருமான் மருகா
குருசூழ் குமரா. – (43)

செனியா தவனே
தனிவா னவனே
தினைமா வுணியே
குனிசா னகனே. – (44)

செழுமா மணியே
தழன்மா மகனே
செழியோ னிறைவா
குழகா புலவா. – (45)

திரிசூ லதரா
சருவா பரணா
திருநீ றணிவோய்
குரவார் புயனே. – (46)

சேயவனே மாவொண் டெருளரதீ தாவரதா
தாயனையாய் தூவின் சருவரர்தாழ் தாய்துணையே
தேயமுளோய் பாவின் றெரியலதீ சாபரமா
கோயிலுளோய் கூவுங் குருகிலகோர் மாதுகிலோய். – (47)

தேசுருவா வேதன் செயல்புரிதே வாவிமலா
தாசரணா நீதந் தயவுளர்தா தாநிபுணா
தேசமனா காதுஞ் செயமுனிசே யேகழலோய்
கோசிகனே போதங் குயினிசபோ தாகுழையோய். – (48)

சீலமுளோய் காலஞ் செடிதபுகா லாசிவனே
சாலமுளோய் வாலஞ் சடுவரிவாழ் வேசதுரா
சீலரணா லாலுஞ் செடிநகையா ளீதிதியோய்
கோலமுளோய் சீலங் கொடுகொடுசீர் வாகுதியே. – (49)

மாவொண் டெருளர தீதா வரதா
தூவின் சருவரர் தாழ்தாய் துணையே
பாவின் றெரியல தீசா பரமா
கூவுங் குருகில கோர்மா துகிலோய். – (50)

வேதன் செயல்புரி தேவா விமலா
நீதந் தயவுளர் தாதா நிபுணா
காதுஞ் செயமுனி சேயே கழலோய்
போதங் குயினிச போதா குழையோய். – (51)

காலஞ் செடிதபு காலா சிவனே
வாலஞ் சடுவரி வாழ்வே சதுரா
ஆலுஞ் செடிநகை யாளீ திதியோய்
சீலங் கொடுகொடு சீர்வா குதியே. – (52)

போர்வெஞ் சிலைவகிர் சேடா பொருநா
சார்திண் டலைமையர் மீளீ சனதா
சீர்வண் டிலகவு லாசா திமிசோய்
ஆர்வங் குலைமருள் கோலா வனகா. – (53)

திடமுடை மயில்வரு சேவகனே தேமுதலே
தடநில வயவறு தாரகனே சாமிசதா
திடகுக செயிரறு சீடர்கணா சேமமுதால்
குடமுனி வியனிலை கூறரசே கோமுருகே. – (54)

சிறுமையில் பிரதம சேகரனே சேதனனே
தறுகணர் கருதலர் சார்பிலனே சாதபதீ
சிறுகறு மருமறை தேடிறையே தீதடுகோ
குறமகள் சுரமகள் கூடருளோய் கோதிலியே. – (55)

சிவகண பதியிளை யோய்திணியாதீ விரவேள்
சவணர்கண் முதியர்கள் சார்புளனேசா விலியே
சிவைசுத நதிசுத தேமமுதேசீ வனியே
குவிபகை மதியினர் கோளரியேகோ வணனே. – (56)

சிகிவரை யொலிமுனி தேசிகனேசார் முனியே
தகைகெழு புலிமுனி தாழ்பெரியோய்சேர் கரனே
திகில்வெலும் வலியருள் சீறடிதாகூர் மதியோய்
குகையுரு மலைவளர் கோமகனேசீர் முருகா. – (57)

சேயவனே மாவொண் டெருளர தீதா
தாயனையாய் தூவின் சருவரர் தாழ்தாய்
தேயமுளோய் பாவின் றெரியல தீசா
கோயிலுளோய் கூவுங் குருகில கோர்மா. – (58)

தேசுருவா வேதன் செயல்புரி தேவா
தாசரணா நீதந் தயவுளர் தாதா
தேசமனா காதுஞ் செயமுனி சேயே
கோசிகனே போதங் குயினிச போதா. – (59)

சீலமுளோய் காலஞ் செடிதபு காலா
சாலமுளோய் வாலஞ் சடுவரி வாழ்வே
சீலரணா லாலுஞ் செடிநகை யாளீ
கோலமுளோய் சீலங் கொடுகொடு சீர்வா. – (60)

தேகமுளோய் போர்வெஞ் சிலைவகிர் சேடா
சாகரமே சார்திண் டலைமையர் மீளீ
சேகரனே சீர்வண் டிலகவு லாசா
கோகருள்கோ னார்வங் குலைமருள் கோலா. – (61)

திருவே பரிவே செனியா தவனே
சருவே சுரனே தனிவா னவனே
திருமான் மருகா தினைமா வுணியே
குருசூழ் குமரா குனிசா னகனே. – (62)

செழுமா மணியே திரிசூ லதரா
தழன்மா மகனே சருவா பரணா
செழியோ னிறைவா திருநீ றணிவோய்
குழகா புலவா குரவார் புயனே. – (63)

திருவே பரிவே திடமுடை மயில்வரு சேவகனே
சருவே சுரனே தடநில வயவறு தாரகனே
திருமான் மருகா திடகுக செயிரறு சீடர்கணா
குருசூழ் குமரா குடமுனி வியனிலை கூறரசே. – (64)

செனியா தவனே சிறுமையில் பிரதம சேகரனே
தனிவா னவனே தறுகணர் கருதலர் சார்பிலனே
தினைமா வுணியே சிறுகறு மருமறை தேடிறையே
குனிசா னகனே குறமகள் சுரமகள் கூடருளோய். – (65)

செழுமா மணியே சிவகண பதியிளை யோய்திணியா
தழன்மா மகனே சவணர்கண் முதியர்கள் சார்புளனே
செழியோ னிறைவா சிவைசுத நதிசுத தேமமுதே
குழகா புலவா குவிபகை மதியினர் கோளரியே. – (66)

திரிசூ லதரா சிகிவரை யொலிமுனி தேசிகனே
சருவா பரணா தகைகெழு புலிமுனி தாழ்பெரியோய்
திருநீ றணிவோய் திகில்வெலும் வலியருள் சீறடிதா
குரவார் புயனே குகையுரு மலைவளர் கோமகனே. – (67)

தெருளர தீதா வரதா திருவே பரிவே
சருவரர் தாழ்தாய் துணையே சருவே சுரனே
தெரியல தீசா பரமா திருமான் மருகா
குருகில கோர்மா துகிலோய் குருசூழ் குமரா. – (68)

செயல்புரி தேவா விமலா செனியா தவனே
தயவுளர் தாதா நிபுணா தனிவா னவனே
செயமுனி சேயே கழலோய் தினைமா வுணியே
குயினிச போதா குழையோய் குனிசா னகனே. – (69)

செடிதபு காலா சிவனே செழுமா மணியே
சடுவரி வாழ்வே சதுரா தழன்மா மகனே
செடிநகை யாளீ திதியோய் செழியோ னிறைவா
கொடுகொடு சீர்வா குதியே குழகா புலவா. – (70)

சிலைவகிர் சேடா பொருநா திரிசூ லதரா
தலைமையர் மீளீ சனதா சருவா பரணா
திலகவு லாசா திமிசோய் திருநீ றணிவோய்
குலைமருள் கோலா வனகா குரவார் புயனே. – (71)

தேகமு ளோய்போர் வெஞ்சிலை வகிர்சே டாபொருநா
சாகர மேசார் திண்டலை மையர்மீ ளீசனதா
சேகர னேசீர் வண்டில கவுலா சாதிமிசோய்
கோகருள் கோனார் வங்குலை மருள்கோ லாவனகா. – (72)

திகழ்மறை பாடிடு தேமுத லேயதி தீரமுளோய்
சகவுயிர் நாடக சாமிச தாசிவ தாரணிவோய்
சிகலறு பாடகர் சேமமு தாலுயர் தேரமர்’ வாய்
குகைதொறு மாடிடு கோமுரு கேயிடர் கூரமிலோய். – (73)

சிலைவலர் சீயம தீவிர வேண்மணி சேரணியோய்
சலமறு தூயவ சாவிலி யேமிகு சாரியனே
சிலதர்க ணாயக சீவனி யேதுதி தேரதுலா
குலமிலி மாயமில் கோவண னேயிழி கோரமிலோய். – (74)

சீர்முரு காவடர் சேனைய னேயொளிர் சேயவனே
சார்முனி யேகிளர் தானையனேநல தாயனையாய்
சேர்கர னேநிறை தேனைய னேகமழ் தேயமுளோய்
கூர்மதி யோயொரு கோனைய னேபல கோயிலுளோய். – (75)

சேதன னேசுக தீபக் மேயறு சீலமுளோய்
சாதப தீயொரு தாபமி லோய்விரி சாலமுளோய்
தீதடு கோபர சீபதி யேபுகழ் சீலரணால்
கோதிலி யேநிமிர் கோபதி யேயெணில் கோலமுளோய். – (76)

தீவி ரவேண்மணி சேர ணியோயுயர் தேகமுளோய்
சாவி லியேமிகு சாரிய னேகுண சாகரமே
சீவ னியேதுதி தேர துலாவறு சேகரனே
கோவ ணனேயிழி கோர மிலோயொரு கோகருள்கோன் – (77)

திருமலி தாரணி சீர்மு ருகாவடர் சேனையனே
தருமமெ யாரணர் சார்மு னியேகிளர் தானையனே
செருமலி யாரயில் சேர்க ரனேநிறை தேனையனே
குருமலி நாரருள் கூர்ம தியோயொரு கோனையனே. – (78)

சிதலையின் மாசுரர் சேத னனேசுக தீபகமே
சதமுனை வாசவர் சாத பதீயொரு தாபமிலோய்
சிதடுறு பாசகர் தீத டுகோபர சீபதியே
குதலையென் மாசுகொல் கோதி லியேநிமிர் கோபதியே. – (79)

தேமு தலேயதி தீரமு ளோயறு தேசுருவா
சாமி சதாசிவ தாரணி வோய்தொழு தாசரணா
சேம முதாலுயர் தேரர் வோய்பல தேசமனா
கோமு ருகேயிடர் கூரமி லோய்சுடர் கோசிகனே. – (80)

சேயவனே மாவொண் டெருளரதீ தாவரதா
தாயனையாய் தூவின் சருவரர்தாழ்-தாய்துணையே
தேயமுளோய் பாவின் றெரியலதீ சாபரமா
கோயிலுளோய் கூவுங் குரு. – (81)

தேசுருவா வேதன் செயல்புரிதே வாவிமலா
தாசரணா நீதந் தயவுளர்தா தாநிபுணா
தேசமனா காதுஞ் செயமுனிசே யேகழலோய்
கோசிகனே போதங் குயில். – (82)

சீலமுளோய் காலஞ் செடிதபுகா லாசிவனே
சாலமுளோய் வாலஞ் சடுவரிவாழ் வேசதுரா
சீலரணா லாலுஞ் செடிநகையா ளீதிதியோய்
கோலமுளோய் சீலங் கொடு. – (83)

தேகமுளோய் போர்வெஞ் சிலைவகிர்சே டாபொருநா
சாகரமே சார்திண் டலைமையர்மீ ளீசனதா
சேகரனே சீர்வண் டிலகவுலா சாதிமிசோய்
கோகருள்கோ னார்வங் குலை. – (84)

திருவே பரிவே செனியா தவனே
செழுமா மணியே திரிசூ லதரா
சருவே சுரனே தனிவா னவனே
தழன்மா மகனே சருவா பரணா
திருமான் மருகா தினைமா வுணியே
செழியோ னிறைவா திருநீ றணிவோய்
குருசூழ் குமரா குனிசா னகனே.
குழகா புலவா குரவார் புயனே. – (85)

திருமலி தாரணி சீர்முருகா சேனைய னேயொளிர் சேயவனே
தருமமெ யாரணர் சார்முனியே தானையனேநல தாயனையாய்
செருமலி யாரயில் சேர்கரனே தேனைய னேகமழ் தேயமுளோய்
குருமலி நாரருள் கூர்மதியோய் கோனைய னேபல கோயிலுளோய். – (86)

திகழ்மறை பாடிடு தேமுதலே தீரமு ளோயறு தேசுருவா
சகவுயிர் நாடக சாமிசதா தாரணி வோய்தொழு தாசரணா
சிகலறு பாடகர் சேமமுதால் தேரர் வோய்பல தேசமனா
குகைதொறு மாடிடு கோமுருகே கூரமி லோய்சுடர் கோசிகனே. – (87)

சிதலையின் மாசுரர் சேதனனே தீபக மேயறு சீலமுளோய்
சதமுனை வாசவர் சாதபதீ தாபமி லோய்விரி சாலமுளோய்
சிதடுறு பாசகர் தீதடுகோ சீபதி யேபுகழ் சீலரணால்
குதலையென் மாசுகொல் கோதிலியே கோபதி யேயெணில் கோலமுளோய். – (88)

திருவே பரிவே செனியா தவனே
செழுமா மணியே திரிசூ லதரா
சருவே சுரனே தனிவா னவனே
தழன்மா மகனே சருவா பரணா
திருமான் மருகா தினைமா வுணியே
செழியோ னிறைவா திருநீ றணிவோய்
குருசூழ் குமரா குனிசா னகனே.
குழகா புலவா குரவார் புயனே. – (85)

திருமலி தாரணி சீர்முருகா சேனைய னேயொளிர் சேயவனே
தருமமெ யாரணர் சார்முனியே தானைய னேநல தாயனையாய்
செருமலி யாரயில் சேர்கரனே தேனைய னேகமழ் தேயமுளோய்
குருமலி நாரருள் கூர்மதியோய் கோனைய னேபல கோயிலுளோய். – (86)

திகழ்மறை பாடிடு தேமுதலே தீரமு ளோயறு தேசுருவா
சகவுயிர் நாடக சாமிசதா தாரணி வோய்தொழு தாசரணா
சிகலறு பாடகர் சேமமுதால் தேரர் வோய்பல தேசமனா
குகைதொறு மாடிடு கோமுருகே கூரமி லோய்சுடர் கோசிகனே. – (87)

சிதலையின் மாசுரர் சேதனனே தீபக மேயறு சீலமுளோய்
சதமுனை வாசவர் சாதபதீ தாபமி லோய்விரி சாலமுளோய்
சிதடுறு பாசகர் தீதடுகோ சீபதி யேபுகழ் சீலரணால்
குதலையென் மாசுகொல் கோதிலியே கோபதி யேயெணில் கோலமுளோய். –

சிலைவலர் சீயம தீவிரவேள் சேரணி யோயுயர் தேகமுளோய்
சலமறு தூயவ சாவிலியே சாரிய னேகுண சாகரமே
சிலதர்க ணாயக சீவனியே தேரது லாவறு சேகரனே
குலமிலி மாயமில் கோவணனே கோரமி லோயொரு கோகருள்கோன். – (89)

தெருளர தீதா வரதா திடமுடை மயில்வரு சேவகனே
சருவரர் தாழ்தாய் துணையே தடநில வயவறு தாரகனே
தெரியல தீசா பரமா திடகுக செயிரறு சீடர்கணா
குருகில கோர்மா துகிலோய் குடமுனி வியனிலை கூறரசே. – (91)

செயல்புரி தேவா விமலா சிறுமையில் பிரதம சேகரனே
தயவுளர் தாதா நிபுணா தறுகணர் கருதலர் சார்பிலனே
செயமுனி சேயே கழலோய் சிறுகறு மருமறை தேடிறையே
குயினிச போதா குழையோய் குறமகள் சுரமகள் கூடருளோய். – (91)

செடிதபு காலா சிவனே சிவகண பதியிளை யோய்திணியா
சடுவரி வாழ்வே சதுரா சவணர்கண் முதியர்கள் சார்புளனே
செடிநகை யாளீ திதியோய் சிவைசுத நதிசுத தேமமுதே
கொடுகொடு சீர்வா குதியே குவிபகை மதியினர் கோளரியே. – (92)

சிலைவகிர் சேடா பொருநா சிகிவரை யொலிமுனி தேசிகனே
தலைமையர் மீளீ சனதா தகைகெழு புலிமுனி தாழ்பெரியோய்
திலகவு லாசா திமிசோய் திகில்வெலும் வலியருள் சீறடிதா
குலைமருள் கோலா வனகா குகையுரு மலைவளர் கோமகனே. – (93)

தெருளர தீதா வரதா செயல்புரி தேவா விமலா
சருவரர் தாழ்தாய் துணையே தயவுளர் தாதா நிபுணா
தெரியல தீசா பரமா செயமுனி சேயே கழலோய்
குருகில கோர்மா துகிலோய் குயினிச போதா குழையோய். – (94)

செயல்புரி தேவா விமலா செடிதபு காலா சிவனே
தயவுளர் தாதா நிபுணா சடுவரி வாழ்வே சதுரா
செயமுனி சேயே கழலோய் செடிநகை யாளீ திதியோய்
குயினிச போதா குழையோய் கொடுகொடு சீர்வா குதியே. – (95)

செடிதபு காலா சிவனே சிலைவகிர் சேடா பொருநா
சடுவரி வாழ்வே சதுரா தலைமையர் மீளீ சனதா
செடிநகை யாளீ திதியோய் திலகவு லாசா திமிசோய்
கொடுகொடு சீர்வா குதியே குலைமருள் கோலா வனகா. – (96)

சேனைய னேயொளிர் சேயவனே தெருளர தீதா வரதா
தானைய னேநல தாயனையாய் சருவரர் தாழ்தாய் துணையே
தேனைய னேகமழ் தேயமுளோய் தெரியல தீசா பரமா
கோனைய னேபல கோயிலுளோய் குருகில கோர்மா துகிலோய். – (97)

தீரமு ளோயறு தேசுருவா செயல்புரி தேவா விமலா
தாரணி வோய்தொழு தாசரணா தயவுளர் தாதா நிபுணா
தேரமர் வோய்பல தேசமனா செயமுனி சேயே கழலோய்
கூரமி லோய்சுடர் கோசிகனே குயினிச போதா குழையோய். – (98)

தீபக மேயறு சீலமுளோய் செடிதபு காலா சிவனே
தாபமி லோய்விரி சாலமுளோய் சடுவரி வாழ்வே சதுரா
சீபதி யேபுகழ் சீலரணால் செடிநகை யாளீ திதியோய்
கோபதி யேயெணில் கோலமுளோய் கொடுகொடு சீர்வா குதியே. – (99)

சேரணி யோயுயர் தேகமுளோய் சிலைவகிர் சேடா பொருநா
சாரிய னேகுண சாகரமே தலைமையர் மீளீ சனதா
தேரது லாவறு சேகரனே திலகவு லாசா திமிசோய்
கோரமி லோயொரு கோகருள்கோ குலைமருள் கோலா வனகா. – (100)

மாவொண் டெருளர தீதா வரதா திருவே பரிவே
தூவின் சருவரர் தாழ்தாய் துணையே சருவே சுரனே
பாவின் றெரியல தீசா பரமா திருமான் மருகா
கூவுங் குருகில கோர்மா துகிலோய் குருசூழ் குமரா. – (101)

வேதன் செயல்புரி தேவா விமலா செனியா தவனே
நீதந் தயவுளர் தாதா நிபுணா தனிவா னவனே
காதுஞ் செயமுனி சேயே கழலோய் தினைமா வுணியே
போதங் குயினிச போதா குழையோய் குனிசா னகனே. – (102)

காலஞ் செடிதபு காலா சிவனே செழுமா மணியே
வாலஞ் சடுவரி வாழ்வே சதுரா தழன்மா மகனே
ஆலுஞ் செடிநகை யாளீ திதியோய் செழியோ னிறைவா
சீலங் கொடுகொடு சீர்வா குதியே குழகா புலவா. – (103)

போர்வெஞ் சிலைவகிர் சேடா பொருநா திரிசூ லதரா
சார்திண் டலைமையர் மீளீ சனதா சருவா பரணா
சீர்வண் டிலகவு லாசா திமிசோய் திருநீ றணிவோய்
ஆர்வங் குலைமருள் கோலா வனகா குரவார் புயனே. – (104)

திருமலி தாரணி சீர்முருகா திகழ்மறை பாடிடு தேமுதலே
தருமமெ யாரணர் சார்முனியே சகவுயிர் நாடக சாமிசதா
செருமலி யாரயில் சேர்கரனே சிகலறு பாடகர் சேமமுதால்
குருமலி நாரருள் கூர்மதியோய் குகைதொறு மாடிடு கோமுருகே. – (105)

திகழ்மறை பாடிடு தேமுதலே சிதலையின் மாசுரர் சேதனனே
சகவுயிர் நாடக சாமிசதா சதமுனை வாசவர் சாதபதீ
சிகலறு பாடகர் சேமமுதால் சிதடுறு பாசகர் தீதடுகோ
குகைதொறு மாடிடு கோமுருகே குதலையென் மாசுகொல் கோதிலியே. – (106)

சிதலையின் மாசுரர் சேதனனே சிலைவலர் சீயம தீவிரவேள்
சதமுனை வாசவர் சாதபதீ சலமறு தூயவ சாவிலியே
சிதடுறு பாசகர் தீதடுகோ சிலதர்க ணாயக சீவனியே
குதலையென் மாசுகொல் கோதிலியே குலமிலி மாயமில் கோவணனே. – (107)

திருமலி தாரணி சீர்முரு காவடர் சேனைய னேயொளிர் சேயவனே
தருமமெ யாரணர் சார்முனி யேகிளர் தாயனைய னேநல தாயனையாய்
செருமலி யாரயில் சேர்கர னேநிறை தேனைய னேகமழ் தேயமுளோய்
குருமலி நாரருள் கூர்மதி யோயொரு கோனைய னேபல கோயிலுளோய். – (108)

திகழ்மறை பாடிடு தேமுத லேயதி தீரமு ளோயறு தேசுருவா
சகவுயிர் நாடக சாமிச தாசிவ தாரணி வோய்தொழு தாசரணா
சிகலறு பாடகர் சேமமு தாலுயர் தேரமர் வோய்பல தேசமனா
குகைதொறு மாடிடு கோமுரு கேயிடர் கூரமி லோய்சுடர் கோசிகனே. – (109)

சிதலையின் மாசுரர் சேதன னேசுக தீபக மேயறு சீலமுளோய்
சதமுனை வாசவர் சாதப தீயொரு தாபமி லோய்விரி சாலமுளோய்
சிதடுறு பாசகர் தீதடு கோபர சீபதி யேபுகழ் சீலரணால்
குதலையென் மாசுகொல் கோதிலி யேநிமிர் கோபதி யேயெணில் கோலமுளோய். – (110)

சிலைவலர் சீயம் தீவிர வேண்மணி சேரணி யோயுயர் தேகமுளோய்
சலமறு தூயவ சாவிலி யேமிகு சாரிய னேகுண சாகரமே
சிலதர்க ணாயக சீவனி யேதுதி தேரது லாவறு சேகரனே
குலமிலி மாயமில் கோவண னேயிழி கோரமி லோயொரு கோகருள்கோன். – (111)

சேனைய னேயொளி சேயவ னேமாவொண் டெருளர தீதா வரதா
தானைய னேநல தாயனை யாய்தூவின் சருவரர் தாழ்தாய் துணை யே
தேனைய னேகமழ் தேயமு ளோய்பாவின் றெரியல தீசா பரமா
கோனைய னேபல கோயிலு ளோய்கூவுங் குருகில கோர்மா துகிலோய். – (112)

தீரமு ளோயறு தேசுரு வாவேதன் செயல்புரி தேவா விமலா
தாரணி வோய் தொழு தாசர ணாநீதந் தயவுளர் தாதா நிபுணா
தேரமர் வோய்பல தேசம னாகாதுஞ் செயமுனி சேயே கழலோய்
கூரமி லோய்சுடர் கோசிக னேபோதங் குயினிச போதா குழையோய். – (113)

தீபக மேயறு சீலமு ளோய்காலஞ் செடிதபு காலா சிவனே
தாபமி லோய்விரி சாலமு ளோய்வாலஞ் சடுவரி வாழ்வே சதுரா
சீபதி யேபுகழ் சீலர ணாலாலுஞ் செடிநகை யாளீ திதியோய்
கோபதி யேயெணில் கோலமு ளோய்சீலங் கொடுகொடு சீர்வா குதியே. – (114)

சேரணி யோயுயர் தேகமு ளோய்போர்வெஞ் சிலைவகிர் சேடாபொருநா
சாரிய னேகுண சாகர மேசார்திண் டலைமையர் மீளீ சனதா
தேரது லாவறு சேகர னேசீர்வண் டிலகவு லாசா திமிசோய்
கோரமி லோயொரு கோகருள் கோனார்வங் குலைமருள் கோலா வனகா. – (115)

சேயவ னேமாவொண் டெருளர தீதா வரதா திருவே பரிவே
தாயனை யாய்தூவின் சருவரர் தாழ்தாய் துணையே சருவே சுரனே
தேயமு ளோய்பாவின் றெரியல தீசா பரமா திருமான் மருகா
கோயிலு ளோய்கூவுங் குருகில கோர்மா துகிலோய் குருசூழ் குமரா. – (116)

தேசுரு வாவேதன் செயல்புரி தேவா விமலா செனியா தவனே
தாசர ணாநீதந் தயவுளர் தாதா நிபுணா தனிவா னவனே
தேசம னாகாதுஞ் செயமுனி சேயே கழலோய் தினைமா வுணியே
கோசிக னேபோதங் குயினிச போதா குழையோய் குனிசா னகனே. – (117)

லமு ளோய்காலஞ் செடிதபு காலா சிவனே செழுமா மணியே
சாலமு ளோய்வாலஞ் சடுவரி வாழ்வே சதுரா தழன்மா மகனே
சீலர ணாலாலுஞ் செடிநகை யாளீ திதியோய் செழியோ னிறைவா
கோலமு ளோய்சீலங் கொடுகொடு சீர்வா குதியே குழகா புலவா. – (118)

தேகமு ளோய்போர்வெஞ் சிலைவகிர் சேடா பொருநா திரிசூ லதரா
சாகர மேசார்திண் டலைமையர் மீளீ சனதா சருவா பரணா
சேகர னேசீர்வண் டிலகவு லாசா திமிசோய் திருநீ றணிவோய்
கோகருள் கோனார்வங் குலைமருள் கோலா வனகா குரவார் புயனே. – (119)

தெருளர தீதா வரதா திருவே பரிவே திடமுடை மயில்வரு சேவகனே
சருவரர் தாழ்தாய் துணையே சருவே சுரனே தடநில வயவறு தாரகனே
தெரியல தீசா பரமா திருமான் மருகா திடகுக செயிரறு சீடர்கணா
குருகில கோர்மா துகிலோய் குருசூழ் குமரா குடமுனி வியனிலை கூறரசே. – (120)

செயல்புரி தேவா விமலா செனியா தவனே சிறுமையில் பிரதம சேகரனே
தயவுளர் தாதா நிபுணா தனிவா னவனே தறுகணர் கருதலர்சார்பிலனே
செயமுனி சேயே கழலோய் தினைமா வுணியே சிறுகறு மருமறை தேடிறையே
குயினிச போதா குழையோய் குனிசா னகனே குறமகள் சுரமகள் கூடருளோய். – (121)

செடிதபு காலா சிவனே செழுமா மணியே சிவகண பதியிளை யோய்திணியா
சடுவரி வாழ்வே சதுரா தழன்மா மகனே சவணர்கண் முதியர்கள் சார்புளனே
செடிநகை யாளீ திதியோய் செழியோ னிறைவா சிவைசுத நதிசுத தேமமுதே
கொடுகொடு சீர்வா குதியே குழகா புலவா குவிபகை மதியினர் கோளரியே. – (122)

சிலைவகிர் சேடா பொருநா திரிசூ லதரா சிகிவரை யொலிமுனி தேசிகனே
தலைமையர் மீளீ சனதா சருவா பரணா தகைகெழு புலிமுனி தாழ்பெரியோய்
திலகவு லாசா திமிசோய் திருநீ றணிவோய் திகில்வெலும் வலியருள்சீறடிதா
குலைமருள் கோலா வனகா குரவார் புயனே குகையுரு மலைவளர் கோமகனே! – (123)

சேனைய னேயொளிர் சேயவ னேமாவொண்
டிருவே பரிவே திடமுடை மயில்வரு சேவகனே
தானைய னேநல தாயனை யாய்தூவின்
சருவே சுரனே தடநில வயவறு தாரகனே
தேனைய னேகமழ் தேயமு ளோய்பாவின்
றிருமான் மருகா திடகுக செயிரறு சீடர்கணா
கோனைய னேபல கோயிலு ளோய்கூவுங்
குருசூழ் குமரா குடமுனி வியனிலை கூறரசே. – (124)

பாம்பன் சுவாமி: முருகனிடம் பக்தி கொண்ட துறவி

தமிழ்நாட்டின் பாம்பனில் 1848 இல் பிறந்த பாம்பன் சுவாமி, முதலில் அப்பாவு என்று பெயரிடப்பட்டவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திறமை பெற்ற சைவக் குழந்தை. 13 வயதில், முருகப்பெருமானின் தரிசனம் அவருக்கு பக்தி கவிதைகள் எழுதத் தூண்டியது. ஆழ்ந்த ஆன்மிகத்திற்கு பெயர் பெற்ற அவர், திருமணத்திற்குப் பிறகும், பிரார்த்தனை மற்றும் பூஜைகளில் தன்னை அர்ப்பணித்து, புனிதமான வாழ்க்கை வாழ்ந்தார்.

சுவாமியின் அசைக்க முடியாத நம்பிக்கை பல அதிசய நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது. அவரது புகழ்பெற்ற பாடல் சண்முக கவசம் பக்தர்களை தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் அவரது பஞ்சாமிர்த வர்ணம் முருகனின் இருப்பை அழைக்கிறது. இரக்கமுள்ள துறவி, அவர் பக்தியைத் தூண்டினார் மற்றும் தன்னலமற்ற செயல்களைச் செய்தார், பெரும்பாலும் தெய்வீக தரிசனங்களால் வழிநடத்தப்பட்டார்.

பாம்பன் சுவாமி சவால்களை எதிர்கொண்டார், ஆனால் எப்போதும் முருகனின் அருளை நம்பியிருந்தார். நோய்வாய்ப்பட்டபோது, ​​அவர் ஜெபத்தின் மூலம் அற்புதமாக குணமடைந்தார். தனிப்பட்ட இழப்புகள் இருந்தபோதிலும், அவர் தனது ஆன்மீக பணியில் கவனம் செலுத்தி, தனிமையில் இருந்தார். ஒரு சிறந்த எழுத்தாளர், சுவாமி தமிழில் 6,666 கவிதைகள் மற்றும் பல படைப்புகளை இயற்றினார், முருகனை 130 க்கும் மேற்பட்ட வடிவங்களில் புகழ்ந்தார்.

அவர் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையே நல்லிணக்கத்தை வலியுறுத்தினார், அவற்றை புனித மொழிகளாகக் கருதினார். அடக்கத்திற்கு பெயர் பெற்ற அவர் எளிமையாக வாழ்ந்தார், அடிக்கடி மௌன வழிபாடு செய்தார். 1929 இல், சுவாமி சமாதியில் நுழைந்தார், பக்தி மற்றும் ஞானத்தின் பாரம்பரியத்தை விட்டுச் சென்றார்.

பாம்பன் சுவாமியின் வாழ்க்கை முருகன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது, எண்ணற்ற பக்தர்களை ஊக்குவிக்கிறது. அவரது போதனைகள் மற்றும் பாடல்கள் ஆன்மீக வழிகாட்டுதலையும் பாதுகாப்பையும் தொடர்ந்து வழங்குகின்றன, உண்மையான தேடுபவர்களுக்கு தெய்வீக அருள் எப்போதும் கிடைக்கும் என்பதை நிரூபிக்கிறது.

Pamban Swami: A Saint Devoted to Lord Murugan

Born in 1848 in Pamban, Tamil Nadu, Pamban Swami, originally named Appavu, was a Saivite child gifted in Tamil and English. At 13, he had a vision of Lord Murugan, inspiring him to write devotional poems. Known for his deep spirituality, he lived a saintly life even after marriage, dedicating himself to prayers and pujas.

Swami’s unwavering faith led to many miraculous events. His famous hymn Shanmuga Kavacam is believed to protect devotees from harm, and his Pancamrita Varnam invokes Lord Murugan’s presence. A compassionate saint, he inspired devotion and performed selfless acts, often guided by divine visions.

Pamban Swami faced challenges but always relied on Lord Murugan’s grace. When ill, he was miraculously cured through prayer. Despite personal losses, he remained detached, focusing on his spiritual mission. A prolific writer, Swami composed 6,666 poems and several works in Tamil, praising Murugan in over 130 forms.

He emphasized harmony between Tamil and Sanskrit, considering them sacred languages. Known for his humility, he lived simply, often performing silent worship. In 1929, Swami entered samadhi, leaving behind a legacy of devotion and wisdom.

Pamban Swami’s life exemplifies unwavering faith in Lord Murugan, inspiring countless devotees. His teachings and hymns continue to offer spiritual guidance and protection, proving that divine grace is always available to sincere seekers.