அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்-திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு :சோழநாடு காவிரித் தென்கரை
தலம் : வலஞ்சுழி
சுவாமி : கற்பகநாதேஸ்வரர்;
அம்பாள் : பெரிய நாயகி
திருச்சிற்றம்பலம்
அலையார் புனற்கங்கை நங்கை காண
அம்பலத்தில் அருநட்ட மாடி வேடந்
தொலையாத வென்றியார் நின்றி யூரும்
நெடுங்களமும் மேவிவிடை யைமேற் கொண்டு
இலையார் படைகையி லேந்தி யெங்கும்
இமையவரும் உமையவளும் இறைஞ்சி யேத்த
மலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்த
வலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே.
திருச்சிற்றம்பலம்